அம்மம்மா
Posted: Sun Jul 05, 2020 10:56 am
அம்ம(அ)ம்மா
உயரத் தூக்கி முடிந்த வெண் பட்டு நிறக் கொண்டையும்,
நெற்றியில் நிலவு போல பெரிய குங்குமமும்,
முகத்தில் குழந்தை போல் கள்ளமறியாச் சிரிப்பும்
எனப் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றும் அறுபது வயது அழகி என் அம்மம்மா...!!!
அம்மம்மாவின் மடியில் அமர்ந்து அவ பிசைந்து கொடுக்கும் சோற்று உருண்டையை விக்க விக்க விழுங்கி...
"நல்ல ருசி அம்மம்மா" என்று நான் வாக்கு கொடுத்தால் தான் ஒரு சின்னச் சிரிப்புடன் அடுத்த உருண்டையைத் தன் வாயில் வைப்பா...
அம்மம்மாவின் சேலைக்கு நானும் தங்கச்சியும் அடித்துப் பிடித்துக் கொள்வதும் உண்டு...
அப்போதெல்லாம் அம்மம்மாவின் சேலை தான் எனக்குப் பட்டு மெத்தை...
அம்மம்மா அவிக்கும் கீரைப்புட்டின் ருசி போல ஒன்றை எங்கும் அறிந்ததில்லை...
சில வேளைகளில் அம்மா அவிக்கும் புட்டைக் கிண்டல் செய்து தலையில் கொட்டு வாங்கிய காலங்களும் உண்டு...
சித்திமார் "நீ அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா?" என்று கேட்கும் போதெல்லாம்
"நான் அம்மம்மா பிள்ளை" என்று சொல்லி அம்மம்மாவைக் கட்டியணைத்து முத்தமிட்ட நாட்கள் இன்றும் நெஞ்சில் நீங்காத நினைவுகளாக...
✒பானுரதி✒