போற போக்கில் ஒரு காதல் 11

Post Reply
Kirthika
Moderators
Posts: 18
Joined: Fri Jul 17, 2020 5:18 pm
Has thanked: 2 times
Been thanked: 4 times

போற போக்கில் ஒரு காதல் 11

Post by Kirthika »

அத்தியாயம் 11

காய்ப்பு முடிந்து தேங்காயைகளை பறிக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. அத்தோடு இளநீரையும் சேர்த்து பறித்து தந்தைமார்கள் கொடுக்க பருகி கொண்டிருந்தாள் தாக்ஷி.
அவளுக்கோ இளநீர் மற்றும் அதனில் உள்ள தேங்காய் என்றால் அலாதி பிரியம், அதற்காகவே அவளது காலை தூக்கத்தை தியாகம் செய்து தயாராகி வந்திருந்தாள்.

இளநீர் சீவி கொடுத்துக்கொண்டிருந்த இருவரின் திடீர் முக மாற்றத்தில் வியந்தவள், .
கூடவே "வாங்க.. வாங்க மாப்பிளை " என இருவரும் அழைக்கவும் யாரென திரும்பி பார்த்து ஆச்சிரியமாகி குடித்து கொண்டிருந்த இளநீர் பொறை ஏற அதை அடக்கி முழுங்கினாள்.

அவர்களுக்கு தலையசைத்து பதில் அளித்தவனோ, தாக்ஷியின் மேல் நங்கூரமென பதிந்த அவனின் பார்வையை விலக்காமலே அவர்களின் அருகே வந்தான் அமிழன்.

ஒன்றும் சொல்லாமல் வரவேற்கவுமில்லாமல் நின்றவளை,
"என்ன தாக்ஷிம்மா வாங்கனு சொல்லாம அப்படியே நிக்குற.. முதல்ல மாப்பிள்ளைட்ட இருந்து பையை வாங்கு.."
என தந்தையாக அவர் கடிந்து கொள்ளவும் அதில் உணர்வு பெற்றவள் என்ன செய்கிறோம் என் புரியாமல் குடித்து கொண்டிருந்த இளநீரை அவன் கையில் திணித்து விட்டு அவனிடம் இருந்த மடிக்கணினி பையை வாங்கி கொண்டாள்.

இப்போது கடிந்து கொள்வது அவளின் சிறிய தந்தையின் முறை ஆகிற்று..
"தாக்ஷிம்மா இப்படி தான் வரவேற்க்கறதா..
ரா பூரா முழிச்சு வண்டி ஓட்டி வந்திருக்காங்க.., நீ வா அமிழா"
என அவனை அருகே அழைத்து இளநீரை சீவி அவனுக்கு கொடுத்து கொண்டிருந்தனர்.

அவனின் இந்த திடீர் வருகையில் முதலில் விழித்து கொண்டிருந்தவள் அதன் பிறகு அங்கு நடந்தவற்றில் சிறிது சிறிதாக காண்டு ஆனாள்.

"தம்பி இந்தாங்க ரொம்ப இலசான தேங்காய் நல்லாயிருக்கும் பிடிங்க " என ஊட்டாத குறையாக நீட்டிய தந்தையை முறைத்தவள், அதன் தாக்கத்தோடு அமிழனை பார்த்தாள்,
அவளை மறந்து அவர்களின் வீட்டு மாப்பிள்ளையை கவனிக்க ஆரம்பித்ததில் கோபம் கொண்ட தாக்ஷி.

நேற்று முதல் சாப்பிடாமல் களைப்பில் வந்த அமிழனும் அவர்கள் விருந்தோம்பலில் நனைந்து கொண்டிருந்தவன் தன்னவளை திரும்பி பார்த்து விழித்தான்.
' என்னடா இது, இப்ப ஏன் இப்படி பாசமா பார்த்து வைக்குறா ' என தனக்குள் ஜெர்க் ஆனான்.

இங்கு தாக்ஷியும் அறியவில்லை இவ்வளவு நாள் வரை அவனிடம் தனியியல்பான மனநிலையில் வெளிக்கொண்டு இல்லாமல் இறுகி இருந்து வந்தவள், அதனை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி கொண்டிருந்தாள் என்பதினை.

தாக்ஷியின் தந்தைகளின் அலப்பறையை தொடர்ந்து வேணும்மா அப்பத்தாவின் அலப்பறைகள் தொடர்ந்தது. இதில் அவளின் அப்பத்தா வார்த்தைக்கு வார்த்தை அவளை வேலை ஏவி கொண்டிருந்தார்.
ஏற்கனவே தன் முதல் முன்னிருமை ( first priority ) பறிபோனதில் வருத்தம் கொண்டவள் இதில் மேலும் கடுமைகள் கொண்டாள்.

"பாட்டி.... பருப்பு பாயசம் சூப்பரோ சூப்பர், நான் இப்படி சாப்பிட்டதே இல்ல.. செம டேஸ்ட் "

"என்ன கண்ணு நீ இதை போய் பெருசா சொல்லிக்கிட்டு...
உனக்கு எப்ப வேணுனாலும் கேளு நான் பண்ணித்தாறேன்"

"அப்பதாவும் பண்ணுவாங்க ஆனா பருப்பு இந்த அளவுக்கு மெருவா இருக்காது..
வாயில் வச்சதுமே கரையுது.. வாவ்.."

"அவ கிடக்கா, அவ கல்யாணம் ஆனா புதுசுல கறி குழம்புக்கு புளிய கரைச்சு ஊத்தி எங்க சின்னம்மா கிட்ட இடி வாங்குனவ தான..
நா உனக்கு நாளைக்கு இதுலயே கருப்பட்டி போட்டு பண்ணித்தறேன் கண்ணு "

"என்னது நாளைக்குமா……." என ஒரு சேர கூவி அதிரிந்தார்கள் , தள்ளி உட்கார்ந்து இவர்களின் அலப்பறையை முறைத்து பார்த்து கொண்டிருந்த அக்கா தம்பி இருவரும்.

ஏனென்றால் இன்றைய காலை மட்டுமில்லாமல் இப்போது மதிய சமையல் மெனுவும் இருவருக்கும் அல்லாமல் அமிழனுக்கு ஏற்றார்படி அமைந்து நடந்து கொண்டிருந்தது.
அதில் அவர்கள் இருவருக்கும் அறவே பிடிக்காத பருப்பு பாயசம் வேறு, அது இன்று மட்டுமில்லாமல் நாளைக்கும் தொடரும் என்பதில் வெகுண்டார்கள் அவர்களின் அப்பத்தா மீதும் அதை ரசித்து உண்டு கொண்டிருந்த அவர்கள் மாமா மீதும்.
ஆனால் அவர்களை கவனிப்பார்கள் தான் யாரும் இல்லை.

இப்போதும் தன் அப்பதாவின் உந்துதலால் கையில் கிண்ணத்தோடு அறைவாசலில் நின்று கொண்டிருந்தவளை கண்ணாடி வழியாக தன் தலையை சரி செய்தபடியே ரசித்து கொண்டிருந்தான் அவளின் கோபம் எதனால் என்று இங்கு வந்த சில நேரங்களிலே உணர்ந்து கொண்ட அமிழன்.

திரும்பாமல் இன்னும் கண்ணாடி முன் நிற்கும் அமிழனிடம்,
"ம்ம்க்கும்.... பாலாஜி கடை ஜாங்கிரி சூடா போட்டாங்கலாம்.. அப்பா உங்களுக்காக வாங்கிட்டு வந்துருக்காங்க, இந்தாங்க.."
என அவனை நேர் கொண்டு பார்க்காமல் வேறு பக்கம் பார்த்து கொண்டு சொன்னவளை எப்போதும் போல் ரசித்தான்.

"மேடம் காலையில இருந்து கோவமா இருக்கீங்க போல…."

"இல்ல... இல்லையே... அப்படிலாம் ஒன்னும் இல்ல" என வேகமாக ஆரம்பித்தவள் தன்னையே கைகட்டி பார்த்து கொண்டிருந்தவனின் பார்வையில் தன்னுள் வார்த்தைகளை விழுங்கினாள் .

" இல்லையா.... " என அவளை நோக்கி நெருங்கி வந்தான்.

"ஆ.. மா.. " என்றவள் அவன் தன்னருகே நெருங்கி வரவும் தன்னிச்சையாக இரண்டு அடி பின்னே நகர்ந்து கதவோடு ஓட்டி நின்றாள்.

ஓரு கையால் அவளின் தோளை உரசிகொண்டு கதவில் மூட்டு கொடுத்தவன், மற்றொரு கையால் அவள் கையில் உள்ள ஜாங்கிரியை சிறிது எடுத்து அவளுக்கு கொடுக்கும் பொருட்டு அவள் இதழ்கள் அருகே கொண்டு சென்றான்.

அவனை இவ்வளவு நெருக்கத்தில் கண்டதில் படபடப்புடன் நின்றவள் அவன் கொடுத்ததை தன்னிச்சையாக இதழ் விரித்து தனக்குள் சேர்த்து கொண்டாள்.

அவள் சாப்பிட்ட மிச்சத்தை தன்னில் சேர்த்து கொண்டவன்,
அவளின் காதருகே குனிந்து " இந்த ஸ்பெஸல் கவனிப்பு எல்லாம் அமிழனுக்கு இல்ல டுக்கு...
இது எல்லாமே தாக்ஷியோட அமிழனுக்கானது " என மென் வார்த்தைகளாக அவளிடம் சேர்த்து விட்டு நகர்ந்து சென்றான்.

அவன் விலகவுமே சீராக மூச்சு விட்டவள் செல்லும் அவனயே யோசனையோடு பார்த்து கொண்டிருந்தாள். இதுவரை அவன் அருகாமையில் மூச்சு முட்டுவது போல் இருந்தவளுக்கு அவன் விலகி செல்லவும் எதையோ இழந்தது போல், அது என்னவென்றும் புரியாமல் செல்லும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

மாடிப்படி அருகே சென்றவன் திரும்பி பார்த்து தன்னையே பார்த்து கொண்டிருந்தவளை என்னவென்று தலை உயர்த்தி வினவவும் ஒன்றுமில்லை என்பதாக இவள் தலையசைத்து தேங்கி நின்றாள்.

அவளை தன்னுள் உள்வாங்கியவன் " தாக்ஷி பர்சேஸ் இருக்கு, கடைக்கு போகனும் நீயும் வரியா "
என்ற கேள்வி வந்த நொடி வேகமாக தலையாட்டி சம்மதம் தெரிவித்தாள்.

முகம் பிரகாசித்து வேகமாக வருகிறேன் என்பதாய் தலையசைத்தவளை இனம் கண்டு மகிழ்ந்தவன்
" ரெடியாகிட்டு வா, கீழ நானும் பிரபுவும் வெய்ட் பண்ணுறோம்"
என கீழே சென்று அவளுக்காக காத்து கொண்டிருந்தான்.

************

கடையை வேடிக்கை பார்த்து கொண்டே வந்தவள்,
"என்ன மாமா வாங்கனும்…."

"ஃபார்மல்ஸ் கேசுவல்ஸ் ரெண்டுமே வாங்கனும் தாக்ஷி..”

அவன் பதிலில் சற்றே யோசித்தவள் அப்போதே ஒரு விஷயத்தை உணர்ந்து கொண்டாள்
அமிழன் மடிக்கணினி பையை தவிர வேற எதுவும் கொண்டுவரவில்லை என்பதனை.

"மாமா.. நீங்க ட்ரெஸ் எதுவும் எடுத்துட்டு வரலையா…!! "

' எவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிச்சருக்கா ' என நினைத்து கொண்டவன் இல்லை என்பதாக தலை அசைத்து
" எனக்காக ட்ரெஸ் செலக்ட் பண்ணுறியா… " என வினவினான்.

"நானா.. " என சிலநொடிகள் யோசித்தவள் சரியென்று அவன் உடைகள் இருக்கும் பகுதிக்குள் சென்று தேர்வு செய்ய தொடங்கினாள்.

தனக்காக உடைகள் தேர்வு செய்துகொண்டிருந்தவளை தள்ளி நின்று ரசித்து
கொண்டிருந்தவனிடம் வந்த பிரபு,
" ஏன் மாம்ஸ் அக்கா போற ஸ்பீட் பாத்து ஷாக் ஆகாம, ரசிச்சிட்டு இருக்க??..."
என்றவனுக்கு ஒரு பார்வையை கொடுத்து விட்டு திரும்ப தன்னவளை கைகளை கட்டிக்கொண்டு ரசிக்க ஆரம்பித்து விட்டான் அமிழன்.

"இப்ப தான் நீங்க ட்ரெஸ் லக்கேஜ் இல்லாம வந்ததே கண்டுபிடிச்சுருக்குறா....
இப்பக்கூட ட்ரெஸ் எடுக்காம ஏன் சீக்கிரம் வந்தீங்கன்னு டாபிக் குள்ள போகவே இல்ல..
என் அக்கா எப்ப அதை மெதுவா தேடி.. எப்ப கண்டுபிடிச்சு, எப்ப புரிஞ்சுகறது...
எனக்கு என்னமோ நான் தாய்மாமா’வா ஆகுறதுக்கு முன்னாடி அப்பா ஆகிடுவேனு நினைக்கிறேன்..
என்ன மாம்ஸ் சரி தான நான் சொல்றது..."

"என்னடா நக்கலா... வீட்டுக்கு ஒரு விவேகானந்தர் உருவாக்க சொல்லிருக்காங்க..
நம்ம வீட்டுக்கு உன்னதான் ஆக்கலாம்னு முடிவு பண்ணிருகோம்..
சோ இந்த கவலை உனக்கு தேவையே இல்லாததுடா அமுலியா ... "

"ஏது.. ஏது.. யோவ் மாமா…. நீ என் அக்காவோட செட்டில் ஆகுறதுக்கு காரணமே நான்தான்,
இப்ப என்னைய சிங்கிள் ஆக்க பிளான் பண்ணறீங்களோ…
என் அக்காவ கரெக்ட் பண்ண என்கிட்டயே கேட்டதுலாம் மறந்து போச்சா மாம்ஸ் உனக்கு ... "

"அடச்சே என்னடா பேசுற... கரெக்ட் அது இதுனு... ஷி ஸ் மை வைஃப் "...

"என் அக்கா உங்க வைஃப் ஆகுறதுக்கே நான் தான் காரணம்... அது எப்பவும் ஞாபகம் இருக்கட்டும் மாம்ஸ்…"

அதற்குள் தாக்ஷி இவர்களை பார்த்து அழைத்து, அருகே வந்த அமிழனின் கையில் தேர்வு செய்த உடைகளை திணித்து ட்ரையல் பார்த்து வரும்படி சொன்னாள்.

"நோ நீட் தாக்ஷி.. உனக்கு ஓகே'ன்னா எடுத்துடலாம் "

' பாற்ரா... ரொம்பத்தான் ஓவர் சீன்னு ' என தனுக்குள் அவனுக்கு ஒரு கொட்டு வைத்தவள்,
மீதமுள்ள ஷர்ட்'டை பிரபு கையில் திணித்து
"ஓவர் பொங்கல நிறுத்த சொல்லிட்டு ட்ரையல் பாத்துட்டு வர சொல்லு உன் மாம்ஸ "

" இல்ல தாக்ஷி.. உனக்கு பிடிச்துருந்தா " என ஆரம்பித்த அமிழனிடம்

" ட்ரையல் பாத்தா தான் எனக்கு ஓகே’வா இல்லையான்னு நான் சொல்ல முடியும் "
என முடித்த தாக்ஷியை மறுக்க முடியாமல் சென்றான்.

முதல்கட்ட ட்ரையல் பார்த்து வந்தவனிடம் மேலும் சில ஆடைகளை திணித்து அவற்றையும் மாற்றி மாற்றி போட்டு பார்க்க வைத்தே திருப்தி ஆனாள்.

சோர்ந்து போய் வந்தவனிடம் அடுத்து கேஸூவல்ஸ் கொடுக்கவும் பயந்து விட்டான்
" ஹையோ தாக்ஷி இங்க இருக்கிறப்ப போடுறதுக்கு தான்..
இதுக்கு ட்ரையல் எல்லாம் வேண்டாமே சும்மா ஒரு மூணு நாலு செட் எடுத்துக்கலாம் "
என்றவனை தாக்ஷி மறுக்கவும் ஏதாவது உதிவகள் கிடைக்குமா என பிரபுவை பரிதாபமாக பார்த்தான் அமிழன்.

பிரபுவோ வாகாக வேறு பக்கம் திரும்பி கொண்டு சிரிப்பை அடக்கி கொண்டிருந்தான்.
' பெட்டரமாஸ் லைட்'டே தான் வேணும்னு அடம் பிடிச்சில... அனுபவி மாம்ஸ் அனுபவி....'
என அவனுக்குள் நினைத்து அடக்கிக் கொண்டான்.

ஒருவழியாக பல ஆடைகளை அமிழனை போட்டு பார்க்க வைத்து திருப்தி ஆனவள் பில் பண்ணசொல்லவும் அவளின் அருகே வந்த அமிழன்,
"தாக்ஷி.... எல்லாம் ஓகே.. இந்த ரெட் கலர் ஷர்ட் எடுக்கணுமா "
என அவனை பார்த்து வெளிர் வெளிரென என சிரித்து கொண்டிருந்த சிவப்பு சட்டையை சுட்டி காட்டி கேட்டான்.

"கண்டிப்பா மாமா, ஜெய் மேரேஜ்க்கு போடனும்ல " என பெரிய குண்டாக தூக்கி போட்டாள்.

அந்த அதிர்வில் விழித்தவனிடம் " ஏன் மாமா இதை போட மாட்டீங்களா.. அப்போ இந்த ஷர்ட் வேணாமா " என முகத்தை சுருக்கி கேட்கவும்... அவனவளிடம் விழுந்த அமிழன் தேர்வு செய்ததை பில் போட கொடுத்து விட்டு,

"உனக்கும் வாங்கிக்கோ தாக்ஷி… "

"எனக்கா... இப்ப எதுக்கு மாமா, வேணாம்... " என யோசித்து மறுத்தவளை அவளின் ஆடைகள் இருக்கும் பகுதிக்கு அழைத்து சென்று தேர்வு செய்ய வைத்தான்.

தனக்காக இரண்டு ஆடைகளை தேர்வு செய்தவள் அதை எடுத்து கொண்டு வந்து அவனிடம் காண்பித்தாள்.

தனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியில் கவனம் கொண்டிருந்த அமிழனோ தாக்ஷியின் கையில் உள்ள உடைகளை பார்த்து " இந்த மஸ்டர்டு யெல்லோ ஓகே தாக்ஷி, இதை பில் பண்ணிடுங்க"
என கடை ஊழியரிடம் கொடுத்த பிறகே அவளை நிமிர்ந்து பார்த்தான்.

தன் கையில் மீதமுள்ள ஆடையை பார்த்தவள் அவனை முகம் சுருக்கி முறைத்துவிட்டு அந்த ஆடையை கீழே வைத்து விட்டாள்.

அமிழனுக்கு அப்போதே அவன் செய்த மடத்தனம் புரிந்தது...
ரெண்டில் ஒன்றை தேர்வு செய்யும்படி தன்னிடம் வரவில்லை, அவள் தேர்வு செய்த இரண்டு ஆடைகளோடு வந்தாள் எனபதை தாமதமாக புரிந்து
' இன்னைக்கு சோதப்புறடா அமிழா ' என நொந்தவன் அவள் கீழே வைத்த ஆடையை கையில் எடுத்து கொண்டான்.

அவனின் செய்கையை பார்த்தவள் " இவர் மட்டும் கடையை புரட்டி போட்டு வங்குவாராம்,
நான் எஸ்ட்ரா ஒன்னு வாங்க கூடாதாம்" என முனுமுனுத்துக் கொண்டு பில் கவுண்டர் அருகே சென்று நின்று கொண்டாள்.

உரிமை பாராட்டாமல் தான் தான் இத்தனை நாள் தனித்து நின்றோம் என்பதை அந்நேரம் வசதியாக மறந்துவிட்டாள். அவனிடம் இயல்பாக வெளிப்படையாக இருக்க தொடங்கினாள் பழைய தாக்ஷியாக.

************

அமிழன் வந்திருப்பதை அறிந்த ஜெய்மியின் பெற்றோர் அவர்கள் சார்பாகவும் அவனை திருமணத்திற்கு அழைத்து அவனை பார்த்து விட்டு சென்றிருந்தனர் .

ஜெய்மியின் திருமணத்திற்கான முதல் நாள், ஜெய்மியின் வீடு...

தாக்ஷி, அமிழன் இவர்கள் இருவரும் ஜெய்மியின் வீட்டில் உள்நுழையவும் இளவயது பட்டாளம் தாக்ஷியை உள்வாங்கி கொண்டது, அமிழன் தான் தனித்து விடப்பட்டான் .

வெளியே அமர்ந்திருந்த அமிழனுக்கு சில நிமிடங்கள் மேல் இருக்க முடியவில்லை..
ஜெய்மியின் தந்தையும் இல்லாததால் அங்கு இருந்த உறவினர்களோடு ஓர் அளவுக்கு மேல் என்ன உரையாடுவது என நெளிந்தான்..
இதில் தாக்ஷி ஜெய்மியின் உறவினர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனதால் அவளின் கணவனை காணும் பொருட்டு ஒருவர் பின் ஒருவராக அவனை வந்து பார்த்து விட்டு செல்லவும் அவஸ்த்தையாக உணர்ந்தான்.

அதனை கண்டுகொண்ட ஜெய்மியின் அன்னை உள்ளே சென்று தாக்ஷியை அழைத்து ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்து வந்து அமிழனிடம் கொடுக்குமாறு பணிக்கவும்,

" ம்மா.. இப்ப தான ஜூஸ் குடிச்சாங்க.. அதுக்குள்ள தண்ணி குடிக்க மாட்டாங்கம்மா "
என திரும்ப உள்ளே செல்ல முயன்ற தாக்ஷியை இழுத்து பிடித்து
" இதை மாப்பிளைகிட்ட கொடு " என அவள் கையில் தண்ணீர் தட்டை வைத்தவர் அவன் அவஸ்த்தையாக அமர்ந்திருப்பதை சுட்டி காட்டினார்.

அங்கு ஜெய்மியின் உறவினர் ஒருவரிடம் அமிழன் மாட்டிக்கொண்டு விழிப்பதை கண்டு தன்னுள் வந்த சிரிப்பினை அடக்கி கொண்டு அவனின் அருகே சென்று தண்ணீர் குவலையை ஏந்திய தட்டை நீட்டினாள்.

நிமிர்ந்து தாக்ஷியை பார்த்தவன் ஒரு விடுப்பட்ட உணர்வோடு அவள் கையில் இருந்த குவலையை எடுத்து கொண்டு வெளியே செல்லவும் இவளும் பின்னோடு சென்றாள்.

இதுவரை தன் இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டிருந்தவள் இதழ் விரித்து சத்தமாக சிரிக்கவும், தன்னை கண்டு கொண்டே அவள் நகைப்பதை உணர்ந்த அமிழன் முறைத்தான்.

அவன் முறைப்பை கண்டு மேலும் நகைத்தாலும்,
" ஓகே பஸ் பஸ்.. சிரிக்கல போதுமா.... “ என நிறுத்தியவள்
“ நீங்க வீட்டுக்கு போங்க மாமா... "

"ஹே தாக்ஷி... அப்ப நான் போகட்டா…"

ஆம் என்பதாக தலையசைத்து
" ஈவினிங் பிரபுவோட மஹாலுக்கு வந்துடுங்க .."

" நீ... " என அவன் இழுக்கவும்,

" நான் ஜெய் கூட இருக்கனும்ல அவ கூட இங்கயிருந்து வந்திருவேன்.."

" அப்போ ஓகே " என அவள் கையில் குவலையை திணித்து விட்டு விடை பெற்று செல்ல முயன்றவனை நிறுத்தியவள் ,
" மாமா.. ஈவினிங் அந்த ரெட் கலர் ஷர்ட் போட்டுட்டு வந்துடுங்க…"

" அதையா .... தாக்ஷி அப்போ ஜெய்மி வீட்ல எடுத்து கொடுத்த கிரீம் கலர் ஷிர்ட்.. "
அவனுக்கோ அந்த சிகப்பு சட்டையை விட்டு தப்பிக்க முடியாத என்ற அவா.
ஆனால் அவனின் பதிலில் முகம் சுருக்கி அவனை பரத்தவளிடம் அவனால் மறுக்க முடியவில்லை.

" ஓகே .. டன்.. அதையே போடுறேன்... இப்ப ஓகே வா "
என அவன் கூறியது மகிழ்ந்த அவனவளின் முகத்தை பார்த்து புன்னகையோடு அவளிடம் தலையசைத்து விடை பெற்றான்.

அவன் தலையசைத்தலோடு அவள் அகமும் அசைந்தது.
தன் அகம் பார்த்து நடப்பவனை கொண்டு சினுங்கிய அவள் இதயம், மெல்ல மெல்ல
அவளை அறியாமல் அவனை தன்னுள் வாங்கியவள் கண்ணங்களில் செம்மையையும் வாங்கி கொண்டாள்.

........................

டிஸ்கி - அங்க அங்க எழுதி வச்சதா ஒண்ணா சேத்து பாக்கும்போதுதான் தெரிஞ்சது,
( மீ டு மீ : அடியே இதைதான் ஒரு வாரமா ஒட்டிக்கிட்டு இருந்திய நீ )' என்ற மொமெண்ட்.

லாக்டவுன் தளர்க்கப்பட்டதால் நெஸ்ட் ஏபி வித் ஜெய்மி - எய்டன் மேரேஜ்....

.........................

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்
கீர்த்தி 😍



Post Reply

Return to “போற போக்கில் ஒரு காதல்”