போற போக்கில் ஒரு காதல் 17

Post Reply
Kirthika
Moderators
Posts: 18
Joined: Fri Jul 17, 2020 5:18 pm
Has thanked: 2 times
Been thanked: 4 times

போற போக்கில் ஒரு காதல் 17

Post by Kirthika »


"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 17 பதிந்து விட்டேன் பிரெண்ட்ஸ் ,

அத்தியாயம் 17


"அப்போ இருந்து இப்ப வர இந்த கண்ணு தாண்டி என்னை உன்கிட்ட மொத்தமா இழுத்தது..
என்ன பார்வைடி இது... இப்படி என்னை போட்டு சாய்க்குது "
என தான் காதல் இல்லை என்று கூறி குழப்பவும் விழி உயர்த்தி அவனை பார்த்தவளை கண்டு
கரகரப்பாக வந்தது அவனின் குரல்.

" உனக்கு ஞாபகம் இருக்கா டுக்கு உன்னை சின்ன வயசுல டக் டக் னு கொஞ்சம் கிண்டல் பண்ணவோம்.. ஆனா அப்ப கூட இந்த கண்ணு கோபமோ அழுகையோ காட்டினதில்லை.."

" ஹலோ மாமா... அது உங்களுக்கு கொஞ்சமா .... " என இடையிட்டு முறைத்த தாக்ஷியை அடக்கினான்.

அவளின் இதழ்களை தன் விரல்கள் கொண்டு தடுத்தவன்
" ஸ்ஷ்ஷ்... நீ தான கதை கேட்ட, நடுல பேச கூடாது... 'உம்' மட்டும் தான் நீ சொல்லனும்.. சரியா.. "
என்றவனின் கூற்றுக்கு சம்மதமாக மண்டைய ஆட்டி கை கட்டி கதை கேட்க சிந்தையாக அமர்ந்திருந்தவளின் தோற்ற பாவனையை பார்த்தவன் அவனுக்குள் உதித்த சிரிப்பை அடக்கி அவர்களின் சீறார் பருவத்தை நினைவு கோர்ந்தான்.

சிறு வயது முதலே அமிழன் அவனின் அத்தையான வேணுவிசாலாட்சிக்கு செல்லம். அவரின் திருமணத்திற்கு பின் தாக்ஷி அமிழனின் இடத்தை பிடித்து விட்டாள். இதுவரை தான் மட்டும் ஸ்பெஸலாக இருந்த அவன் அத்தைக்கு தாக்ஷியின் வரவு போட்டி உணர்வை மட்டுமே அமிழனுக்கு கொடுத்தன மாறாக அதில் கோபமோ பொறமையோ இல்லை.
அந்த போட்டி உணர்வில் அவன் கொடுக்கும் சீண்டல்கள் கிண்டல்களை கண்டு தாக்ஷி சிணுங்கினாளும் அவளின் கண்கள் கோபமோ அழுகையயோ பிரிதிபலித்ததில்லை.
எதுனாலும் விழிகளை அகற்றி விரித்து அவனிடம் உரையாடுகையில் அந்த கண்கள் காட்டும் பாவனைகள் அவன் ரசிக்கும் படியாக இருக்கும்.

ஆனால் முதன் முதலாக அவனுக்குள் வந்த தாக்கம் அவள் கண்களில் கண்ட வெறுமையில் தான்.
அவளின் அன்னையின் இழப்பினால் உண்டான தாக்கத்தில் அவள் மூழ்க, அவள் கண்கள் பிரிதிபலித்த வெறுமையில் அவன் மூழ்கினான். அதற்காக அப்போதே நேசம் என்றெல்லாம் இல்லை, ஏனோ அந்த வெறுமை அவனையும் அடைத்தது.

அவள் அன்னையின் இழப்பின் பின் பகலவன் சந்திரன் என யவர் ஆட்சி செய்தாலும் அவள் காணப்படுவது அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் தின்றில் மட்டுமே.
அதுவே அவளின் இருப்பிடமாக மாற தொடங்கியது. கிணற்றடியில் தூரத்தில் எதையோ தேடி வெறித்து அமர்வதை வழக்கமாக்கி கொண்டாள். அவளின் சித்தி அவளை தேடி வீட்டினுள் அழைத்து சென்றாலும் திரும்பவும் கிணற்றடிக்கே வந்து அவற்றையே இருப்பிடமாக கொள்ள தொடங்கினாள்.

பலமுறை அவளை அங்கே கண்ட அமிழன், அவள் முன் சென்று நின்றாலும் கூட கருத்தில் கொள்ளாமல் எங்கோ இலக்கில்லாமல் வெறித்து கொண்டிருந்த அவள் கண்கள் அவளை விட அமிழனை அழுத்தியது. எல்லாம் சில காலம் தான் பிறகு அவள் அன்னை இழப்பில் இருந்து மீண்டு விடுவாள் என நிதர்சனம் உணர்ந்தாலும் அதையும் தாண்டிய அவளுக்கான தவிப்பு அமிழனுள் எழுந்தது.

அவளின் செய்கையை உணர்ந்த வீட்டினர், பிரபு, அமிழன் முதற்கொண்டு அனைவரும் கொஞ்ச கொஞ்சமாய் அவளை மாற்ற முயற்சித்தினர்.

விளையாட்டில் சேர்த்து கொண்டு அவளின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்தார்கள் பிரபுவும் அமிழனும்.
தன்னை அழைத்து செல்லும் பிரபுவுடன் சென்று அனைவருடன் சேர்ந்து விளையாடினாலும் அதில் உயிர்ப்பே இல்லாமல் பங்குகொண்டாள்.

அன்றும் அவ்வாறே விளையாட்டில் அடிப்பட்டும் தோற்று விட்டும் கூட எந்த உணர்வையும் பிரிதிபலிக்காமல் ஓரமாக சென்று அமர்ந்தவளை பார்த்த அமிழன், அவளுக்கு அடிபட்டதை கூட உணராமல் இருப்பவளை கண்டு ஒரு முடிவுடன் அவளின் அருகே சென்று அமரந்தவன்,

" தாக்ஷி... " என உரக்க அழைத்து அவளின் கவனத்தை ஈர்த்தான்,
" ஏன் அழுகாம இருக்க....பாரு எப்படி அடி பற்றுக்கு.... உனக்கு வலிக்கலயா....
அழுதுடு .. மொத்தமா எல்லாம் கரையுற வர அழுதுடு.. ஆனா இது தான் கடைசி தடவயாய் இருக்கனும்.. "

என திடிரென அதிரடியாகவும் கட்டளையாகவும் அழுது விடு என உரைத்தவனின் முன் அவளின் கருவிழிகள் இரண்டும் சத்தமில்லாமல் அவள் அனுமதியில்லாமல் நிறைந்து புவியிர்ப்புதிசை விதியின் படி கீழ் நோக்கி சென்றன.

அவளது அன்னை தவறிய அன்று மட்டும் வாய் விட்டு கதறியவள் அதன் பின் அவளுள்ளே இறுகி கொண்டாள்.
இதோ இன்று திடிரென வந்த அவனின் அதட்டலில் எங்கோ வெறித்த கொண்டிருந்த அவளின் விழிகள் அவனில் நிலைத்து நீர் கொண்டு நிறைந்தன.
தாக்ஷி அழுது முடித்து ஓயவும் அவள் சித்தி பாட்டி பிரபு என அனைவரும் வந்து என்ன எதுவென்று அரவனைத்து அவளின் காயத்தை கவனிக்க ஆர்ம்பித்தனர்.

அதன் பின்னர் வந்த நாட்களில் அவளின் நிர்மலான பழைய முகம் அவனுள் இதுவரை என்னென்று தெரியாமல் எழுந்த தவிப்புக்கு விடை கொடுத்து.

அந்த வயதில் அவனுக்கு இருந்த முதிர்ச்சி அவனுக்கு உரைத்தது ஒன்றையே அவளின் அகம் கொண்ட சந்தோஷம் மட்டுமே அவனின் நெஞ்சை நிறைக்க முடியும் என்பதே ஆகும்.

அது ஏன் என்ற கேள்விக்கும் அவன் அப்போது விடை தேட முயற்ச்சிக்கவில்லை.

அன்று அவனால் அவனுள் அமுக்கப்பட்ட கேள்விக்கு அவன் கல்லூரி முடிக்கும் தருவாயில் பதிலை உணர ஆரம்பித்தான்.
கேள்வியை ஒதுக்கினாலும் அந்நாள் வரை அவனின் அனுமதியே இல்லாமல் அவனை முழுவதும் ஆக்கிரமித்திருந்தாள்.
அப்போதும் கூட அவனுள் எழுந்த உணர்வலைகளுக்கு அவன் பெயர் வைக்கவில்லை.

"காரணமே இல்லாம, அமைதியா எனக்குள்ள நீ முழுசா நிரஞ்சுருந்த தாக்ஷி, அது ஏன் எப்படிலாம் தெரியாது,
இதோ இந்த ரிங் வாங்கும் போது கூட எனக்கு தோணுன உணர்வுக்கு பெயர் என்னனு தெரியாது.
ப்ர்ஸ்ட் மன்த் சலாரில சாமிக்கு எடுத்து வச்சிட்டு அப்புறம் செலவு பண்ணுனு அம்மா சொல்லும் போது, என் முத செலவு உனக்காக தான் இருக்கணும்னு தோணிச்சு, அதுக்கு மேல வேற எதுவும் யோசிக்காம நேரா போய் இந்த ரிங் வாங்கிட்டு வந்தட்டேன்.
வாங்கிட்டு வந்ததும் என் சிந்தனை ஃபுல்லா நீ தான் இருந்த தாக்ஷி, நிறையா விடை தேடும் கேள்விகளோட...
இத நீ ஏன் இப்போ வாங்குன, எதுக்காக வாங்குன, என்ன நினைச்சு வாங்குனனு இப்படி அடுகடுக்கா நிறைய கேள்விகள் எனக்குள்ள....
அப்போ ஒரு எண்ணம் எழுந்து என்னயவே எனக்கு க்ளியரா உணர்த்தினது..
என் தாக்ஷியா என்னால மட்டும் தான் சந்தோசமா வச்சுக்க முடியும்னு, அதுக்கு வாழ்க்கை ஃபுல்லா நான் உன் கூட இருக்கணும்ங்கிற முடிவுக்கு என்னை கொண்டு வந்தது....

எனக்கே என்னைய உணர்த்தின இந்த ரிங் எனக்கு எப்பவும் ஸ்பெஸல்"
என தன் அருகே வாகாக தன் தோள் சாய்ந்து தான் சொல்வதை இமைக்க மறந்து கேட்டு கொண்டிருந்தவள் அணிந்திருந்த மோதிரத்தை சுட்டி காட்டியவன்,

" இதுக்கு இது தானு பெயர் வைக்கலாம் எனக்கு தெரில தாக்ஷி..
என்னால மட்டும் தான் உன்னை ஹாப்பியா வச்சுக்க முடியும்னு ஏன் தோணுச்சுன்ற கேள்விக்குலாம் என்கிட்ட பதில் இல்ல...
எனக்குள்ள இருக்குறதுக்கு பெயர் லவ்'ன்னா அது அப்படியே இருந்துட்டு போகுட்டும்.. அத நான் உன்கிட்ட வாய் வார்த்தையா சொல்லணும்னு நீ விரும்புன நான் சொல்லுறேன்...."

என நீண்ட கால அவளின் பால் அவன் கொண்ட நேசத்தை விளக்கி அவளுக்காக மட்டுமே அவள் கேட்ட காதலை வாய் வார்த்தையாக கூற தயாராகிருந்தவனை கண்டு உள்ளம் பொங்க அவன் தோளில் இருந்து எழுந்தவள்.

" வேணாம் மாமா... அந்த ஒரு வார்த்தை மட்டும் நிறைவை கொடுத்துடாது.. அதான் என்னை ஒவ்வொரு நிமிசமும் உணர வைக்கிறீங்களே... இத விடவா அந்த ஒரு வார்த்தை எனக்கு உணர்த்தபோகுது... " என அழகாக அவன் கொண்ட நேசத்தின் கனத்தை உணர்ந்து மறுத்தாள்.

" மாமா.......
அப்போ கல்யாண பேச்சு வீட்ல அவங்களா ஆரம்பிச்சது இல்லயா.... "
என தொடர்ந்து கேள்வி எழுப்பியவளிடம்

" மீஹிம்..... இது முழுக்க முழுக்க நம்ம வீட்ல அவங்களாவே பேசி
கல்யாணம் வர ப்ரோஸிட் பண்ணுன அரேஜ்ட் மேரேஜ்...
நான் இதுல எங்கேயும் வரல...
வீட்ல ஆரம்பிச்ச பேச்சை நான் முடிச்சு வச்சேன்னு வேணும்னா சொல்லலாம்... " என கண்ணடித்தவன்,

" நம்ம வீட்ல மதி, பிரபுக்கு மட்டும் என் டுக்கு'க்கான என்னோட ஆபக்ஷன் பத்தி தெரியும்.. அவங்க மூலமா ஐயா இரண்டு வீட்லயும் காயின் மூவ் பண்ணி என் டுக்கு'வோட அமிழனா ரைட் ராயலா சீக்கிரமே மாறிட்டேன்.."
என நகைக்க அவளோ விழித்தாள்..

" என்ன பிரபுக்கா... அப்போ பிரபு தான் என்னை பத்தி எல்லாத்தையும் உங்ககிட்ட சொன்னான.... " என இன்னும் லேசாக தயக்கமிருந்தது அவள் வார்த்தைகளில்.

"நீங்களே எனக்கு எல்லாமுமா அமைஞ்சது இட்ஸ் மை ட்ரெசர் மாமா...
ஆனா நா... நான்.. உங்களுக்கு பொருத்தமானவ..... " என தடுமாறிய இதழ்களுக்கு நிறுத்தம் கொடுத்தவன்,

" நீ என்னோட சந்தோசம் தாக்ஷி, மீதியுள்ள என் மொத்த வாழ்க்கையும் நீ மட்டும் தான்.
எனக்கு ரொம்ப நாள் உன் கூட வாழனும், சந்தோஷமா வாழனும், உன் சந்தோஷமா நான் இருக்கணும் .....

என்னால மட்டும் தான் உன்னை சந்தோஷமா வச்சுக்க முடியும்னு ஆரம்பிச்ச நேசம்,
என் டுக்கு'னால மட்டும் தான் எனக்கு ஒரு ஃபுல் ஃபில் லைஃப் கொடுக்க முடியும்னு புரிய வச்சருக்கு...
நீ தான் என்னை முழுமையாய் ஆக்கிருக்க தாக்ஷி..."

என அவள் முகத்தை கைகளில் தாங்கி கூறியவனை இத்தனை நேரங்களாக அவன் மேல் பதிந்த கண்களை அகற்றாமல் அவனையே பார்த்தவள் அவனை மறுத்து,

" இல்ல மாமா உங்களால நான் தான் ஃபுல் ஃபில் ஆகிருக்கேன் ..."

" சரி நம்மளால மட்டும் தான் நம்ம லைஃப் ஃபுல் ஃபில் ஆகிருக்கு.. இனி நோ மோர் ஆர்ஃக்யுமென்ட்ஸ் ஓகே'வா "

அதற்கு தலையசைத்து பேச முயற்சித்தவளை தன் தோளிலே திரும்ப சாய்த்து கொண்டவன் " இட்ஸ் பிக் டே, ... ரொம்ப அழகான நேரத்தை சைலெண்ட்டா கண்ணை மூடி ரசிக்கலாம் டுக்கு..
இனி பேச்சுக்கு தடா ..." என்றவனிடம்


"மாமா... " என மென்மையாக இழுத்து
"நான் ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லுறேனே...
நாளைக்கு புதுக்கோட்டை வர போய்ட்டு வரலாமா " என வாகாக அவன் தோளில் சாய்ந்து கூறியவள் ஏனென்று அவன் கேட்கும் முன் அவளாகவே உரைத்த பதிலில் சிலையாகி போனான்.


*****************

அடுத்த நாள் மாலை,

ஆதவன் இறங்கி வீடு திரும்பியவர்களுக்கு அமைதியான யாருமில்லாத வீடே வரவேற்றது.
ஊரில் அனைவரும் கோவிலில் கூடியிருந்தனர்,
இன்று அமிழன் வீட்டு மண்டகபடி என்பதனால் அவனின் வீட்டினரும் விரைவாகவே சென்று விட்டிருந்தனர்.

புதுக்கோட்டைக்கு சென்று வீடு திரும்பிய தாக்ஷி அமிழன் இருவரும் விரைந்து தங்களை சுத்த படுத்தி கொண்டு அவர்களும் கோவிலுக்கு செல்ல தயாராகினர்.

கிளம்பி தெருவில் இறங்கி நடக்க முயன்ற தாக்ஷியை தடுத்து வண்டியில் ஏறுமாறு பணித்தான்.

" மாமா பக்கத்து தெரு'ல இருக்குற கோவிலுக்கு காரா... ரொம்ப ஓவரு மாமா" என மறுக்க பார்த்த தாக்ஷி அவனின் பார்வையில் அடங்கி ஏறினாள்.

வண்டியை இயக்கியவன் "இனி நீ வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்'பும் ரொம்ப முக்கியம் தாக்ஷி "
என பாடம் எடுத்தவனை கண்டு இன்னும் என்ன என்ன நடக்க போகுதோ என சலித்து கொண்டாலும்
அதில் அவளுக்கும் உவகையே, அதின் மகிழ்ச்சி கொடுத்த நிறைவோடே கோவிலுக்கு சென்று இறங்கினர்.

தீபாராதனை, அர்ச்சனைகள் முடிந்து கோவிலின் சுற்றில் அமர்ந்து பேச ஆரம்பித்த வேணுவிசாலட்சியும்
அமிழனின் அன்னையும் இவர்களின் வருகையை கண்டு அமிழன் தாக்ஷியின் அருகே வந்தார்கள்.

வேணுவிசாலட்சி " இவ்வளவு நேரம் கழிச்சா வருரது... போய் சீக்கிரம் சாமி கும்பிட்டுட்டு வாங்க "
என அனுப்பி வைத்தார். இவர்களும் சித்தமே என ஈசனை தருசிக்க சென்றனர்.

மனம் நிறைந்த, மனம் ஒத்த தம்பதிகளாக ஈசனின் முன் நின்றவர்களுக்கு
வேண்டுதல் என்பதாக பெரிதாக ஏதுமில்லை.
கண்மூடி ஐயனை மனதில் நிறைத்தவர்கள் அவர்களுக்காக காத்து கொண்திருந்த
இரு அன்னைகளிடம் சென்றனர்.

ஈசனை தருசித்து வந்தவர்களிடம் அன்றைய பிரசாதமான சக்கரை பொங்கலை நீட்டினார் அமிழனின் அன்னை.

சிறிது எடுத்து கொண்டவன் இரு அன்னைகளுக்கும் பொங்கலை சிறிதாக பிட்டு ஊட்டினான்.
அவனின் திடீர் செய்கையில் விழித்தாலும் இருவருமே வாங்கி கொண்டனர்.
செயலில் பொங்கலை அளித்து அதன் இனிப்பு அவர்களின் தொண்டையில் இறங்குவதற்கு முன்,
அவனின் கூற்றில் இருவரின் மனதில் அதனை விட அதிகமான இனிப்பை சொட்டு சொட்டாய் இறக்கினான்.

" நாங்க உங்களுக்கு ஸ்வீட் நியூஸ் சொல்ல வந்தா, நீங்க அதுக்கு முன்னாடி ஸ்வீட்டோட ரெடியா இருக்கீங்க " என ஆரம்பித்து அவர்கள் அவசரமாக புதுக்கோட்டை சென்று வந்த காரணியை கூறவும் இரு அன்னைகள் கொண்ட மகிழ்ச்சியின் அளவு கோலை எந்த கருவி கொண்டும் அளக்க முடியாத அளவிற்கு ஆர்ப்பாட்டமாக அலைகளித்தது.

ஆம்,அவர்களின் அழகான சின்ன கூட்டில் புதிதாக அழகிய சிட்டு ஒன்று குடிபெயரவிற்கிறது.
அதனின் பொருட்டே புதுக்கோட்டை சென்று மகப்பேறு மருத்துவரை சந்தித்து உறுதிபடுத்தி வந்திருந்தனர்.

பெங்களூரில் அவள் இருந்த மனநிலையில் சரியாக தன்னை உணராதவள்,
இங்கு நெய்யூலிக்கு வந்த பிறகு அவளில் உண்டான மாற்றங்கள் அவளுக்கு மெல்ல மெல்ல புரிப்பட்டன.

அதனை உறுதிபடுத்தி தன் எண்ணங்களை அவளவனிடம் மட்டுமே முதலில் பகிர வேண்டும் என்று அவள் கொண்ட பேராவள் தான் நெய்யூலி வந்த நான்கே நாளில் அமிழனிடம் செல்ல வேண்டும் என்று அவளின் அப்பத்தாவிடம் சண்டையிட வைத்தது.

அது முடியாமல் போகவே வருந்தியவளுக்கு அன்றிரவே அவள் முன் வந்து இன்பத்தை அளித்தான் என்றால் அவள் அவனுக்கு பதிலுக்கு இச்செய்தியை கூறி அதனை விட அதிகமான இன்பத்தினை திருப்பி அளித்தாள்.

இருபெண்மணிகளையும் தூரத்தில் கண்ட இரு வீட்டு பாட்டிமார்கள் வர அவர்களை தொடர்ந்து வீட்டு ஆண்களும் வர செய்தி அறிந்த மொத்த குடும்பமும் சத்தமில்லாமல் மீண்டும் ஈசனை தரிசித்து பேரானத்தோடு வீடு திரும்பினர்.

அமிழனின் மனைவியாய் அழகாக மெருகேறியவள் தான் கொண்ட தாய்மையில் தன்னிறைவு அடைந்தாள்.

........................

Thank you makalae... ❣❣
பைனல் எபி நாளைக்கு ஈவினிங் இல்லனா டே ஆஃப்டர் டுமாரோ போட்டுருறேன்..
எனக்கு சப்போர்ட் செய்த அனைத்து அழகான உள்ளங்களுக்கும் மிக மிக நன்றிகள்..
. ❣❣😍

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.
நன்றிகள்

கீர்த்தி😍



Post Reply

Return to “போற போக்கில் ஒரு காதல்”