போற போக்கில் ஒரு காதல் 7

Post Reply
Kirthika
Moderators
Posts: 18
Joined: Fri Jul 17, 2020 5:18 pm
Has thanked: 2 times
Been thanked: 4 times

போற போக்கில் ஒரு காதல் 7

Post by Kirthika »

அத்தியாயம் 7

வேளச்சேரியில் உள்ள மேகனாவின் வீட்டின் அழைப்பு மணி அடிக்கப்பட்ட விதத்திலே அது யார் என்று புரிந்தது மேகனாவிற்கு.

“ வரேன் வரேன் ” என குரல் கொடுத்தும் அழைப்பு மணி இன்னும் வித விதமான பண்பேற்றத்தில் பாடிக் கொண்டிருந்தது.

“ஹாய் மேக் “ என கதவை திறந்ததும் உள்ளே வந்தவள் மூச்சை உள்ளேயிலுத்து வாசம் பிடித்தாள் .

"வாவ் என்ன ஒரு வாசனை, அட.. அட... மேக் அதுக்குள்ள ஆர்டர் பண்ணி வாங்கி வச்சாச்சா, ஏதோ நான் கரெக்டா வந்துட்டேன்.. அதுனால ஓகே.. சூடு ஆறுறதுக்குள்ள சாப்பிற்றலாம், லேட்டா வந்தருந்தேனா என்ன ஆகுறது???, எதுக்கும் நான் வந்ததும் ஆர்டர் பண்ணிருக்கலாம் நீங்க"

"ஹலோ மேடம் செல்ஃப் குக்கிங்"

" ஓ காட், அப்போ ஆர்.ஐ.பி எனக்கா !!!!"

மேகனா இடுப்பில் கை வைத்து முறைக்கவும் " ஓகேய்…. சரண்டர் " என கையை தூக்கிய தாக்ஷி

“ஹே பிரியாணி நா வந்துட்டேன்” என உள்ளே செல்ல முயன்றவளை குளியலறை பக்கம் திருப்பிய மேகனா

"போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா, போ "

"மேக், நான் ஃப்ரஷ் ஆகி தான வந்திருக்கேன்"

"சரி அப்போ ரெஃப்ரஷ் ஆகிட்டு வா…போ”

“இதுலாம் கொடுமை மேக் " என்றவளுக்கு முறைப்பே பரிசாக கிடைத்தது..

“சரி சரி போறேன் போறேன்” என உள்ளே சென்று தன்னை சுத்தப்படுத்தி வந்தவள் பிரியாணியோடு ஐக்கியமாகிவிட்டாள் .

சாப்பாடு முடிந்ததும் நீள் சாய்விருக்கையில் நறுக்கப்பட்ட பழம் கலவைகளோடு அமர்ந்து வீட்டை சுற்றி பார்த்த தாக்ஷி

" வாவ்… மேக் ஒயிட் தீம்ல இன்டீரியர்… எப்படி மைய்டைன் பண்றீங்க இவ்வளவு பளிச்'னு… சூப்பர்…” என அவளின் வீட்டின் அழகை வியந்து கொண்டிருந்தாள்.. தனது வியப்புக்கு எந்த பிரதிபலிப்பும் இல்லாததால் திரும்பி மேகனாவை பார்த்தாள்.

மேகனாவோ மிக தீவிரமாக தனது கிண்ணத்திலிருந்த பழவகைகளில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

" ஒய் மேக்…. என்ன அப்படி தேடுறீங்க, மே ஐ ஹெல்ப் யு…"

பெருமூச்சு விட்டு தலை ஆட்டி மென்மையாக புன்னகைத்து கொண்ட மேகனா
"நீ அன்னைக்கு என் பக்கத்தில இருக்கனும்னு நினைச்சேன் தாக்ஷி…. ஏன் சொல்லாம போயிட்ட"

இதற்கு தன்னால் இப்போது என்ன பதில் சொல்ல முடியும் என முழித்து கொண்டிருந்தாள் தாக்ஷி. அவளுக்கு சிரமம் கொடுக்காமல் மேகனாவே தொடர்ந்தாள்.

"தீப்தி சொன்ன, அவ தான் உன்னையும் ஜெய்மியையும் கூட்டிட்டு போனதா, அவளும் அவளோட ஸ்டுபிட் ஐடியாவும்……… ச்ச…………
அவ கூட்டிட்டு போனாலும் நீ என்ன விட்டு போகாம இருந்திருக்கலாம்……” என்றுவிட்டு தொடரந்தாள்

"இளமதியன் உன் ரிலேஷனா தாக்ஷி "

‘ஹான் என்னடா இது இதுக்கு மேல என்ன என்ன வருமோ’ என நினைத்து
"ஆ… ஆமா மேக் "

"ம்ம், அன்னைக்கு ஈவினிங் நீ என் பக்கத்துல இருக்கனும்னு தோனுச்சு,
யு ஆர் சம்திங் வெரி ஸ்பெஷல் டு மீ ,
நீ என் பக்கத்துல இருந்தா நா எனெர்ஜிடிக்கா ஃபீல் பண்றேன் தாக்ஷி."

“மேக் ரொம்ப ஓவரா இல்ல….. உங்க லவ்வரரரரர மீட் பண்ண என்னை துணைக்கு கூப்பிட்ற உங்கள என்ன சொல்றது, ….
நல்ல வேல உங்க பிரெண்ட் கரெக்ட்டா ரியாக்ட் செய்ஞ்சு எங்கள கிளீயர் பண்ணிருக்காங்க" என பேச்சை மாற்ற தாக்ஷி முயற்சிக்கவும்

"லவ்வர்சா... உலறாத தாக்ஷி " என பதில் கூறி தாக்ஷியை குழப்பினாள் மேகனா.

என்னடா இந்த மேக் இப்படி குழப்புறாங்க என நொந்த தாக்ஷி, ‘இப்படி பிட் பிட்டா சொன்ன சரியா வராது’ என முடிவுக்கு வந்தவள் மேகனாவை சாலட்டில் இருந்து தன் பக்கம் திருப்பியவள்.

"அன்னைக்கு இந்த ரெண்டு ஐஸ்லயும் பார்த்தேன் மேக் எவ்வளவு லவ் இருந்ததுனு, ப்ப்பா படத்துல கூட இந்த மாதிரி சீன் பாத்ததுல நானு, "

அதில் சிரித்து மீண்டவள் " சும்மா ஓட்டாத தாக்ஷி, வி ஆர் நாட் லவ்வர்ஸ்…… எனக்கும் ஷேர் பண்னனும் தாக்ஷி, யூ நோ… யூ ஆர் மை பெட்டர் சாய்ஸ் உன்னை விட்டா எனக்கு யாரும் இல்லை” என கிண்ணத்தை கீழே வைத்து விட்டு எழுந்து பால்கனியில் சென்று நின்று கொண்டாள்.

" இளமதியன், என்னோட காலேஜ் சீனியர்…
எனக்கு அவங்கள பிடிச்சது தாக்ஷி, தெளிவா சொல்லனும்னா எனக்கு மட்டும் தான் பிடிச்சது"

"மேக்… என்ன உனக்கு மட்டும்மா ?... ஆனா ..."

" ம்ம் எனக்கு மட்டும் தான்… காலேஜ்ல எல்லார்க்கும் இளமதியன் தான் ஐடியல் ஹீரோ அண்ட் என்னோட கைய்டரும் அவங்க தான்.
இளமதியன் இம்ப்ரெஸ்ட் மீ அலாட் தாக்ஷி, அவர் கண்ணுல எனக்கான பார்வையை உணர்ந்து தான் நான் ப்ரொபோஸ் பண்ணுனேன்”.

தாக்ஷியோ ,'எவ்வளவு நேரம் தான் நானும் வலிக்காத மாதிரியே இருக்குறது, எனக்கும் எங்கோ லைட்டா வலிக்குதே, மேக் வேற வானத்தை வெறிச்சு வெறிச்சு பாத்திட்டு சொல்றதுக்குள்ள நான் ஒரு வலி ஆகிடுவேன் போல, இந்த லவ் பண்ணறவங்கலாம் அது ஏன் வானத்தையே வெறிச்சு பாக்குறாங்க,??’ என தனக்குளே கேள்விகள் கேட்டு தன்னில் உண்டான வலியில் இருந்து தன்னை தானே திசை திருப்பினாள். மெல்லிய வலி ஒன்று இடையேற முயற்சித்தாலும், ஒரு நொடியில் அதனை ஒதுக்கி மொத்தமாக மீண்டு வந்துவிட்டாள்.

“பதில் என்னவாயிருக்கும் தெரிஞ்சே தான் லவ் சொன்னேன்.. இளமதியன் ஒரு பக்கா பேமிலி ஓரியன்டட் பெர்ஸன்,,
என்னோட வீட்ல கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்கன்னு எனக்கு நல்லா தெரியும், அது இளமதியனுக்கும் தெரியும். அத சொல்லி தான் மறுத்தாங்க, அவர பொருத்த வரைக்கும் மேரெஜ்ன்னா அது இரண்டு குடும்பங்களோட பாண்டிங்… என் பேமிலி ஒத்துக்கமாட்டாங்கனும், இளமதியன் வீட்ல ஒத்துக்கிட்டாலும் இரண்டு குடும்பத்துக்கும் செட் ஆகாதுங்கிறது அவரோட ஒப்பீனியன் “

"ஆனா மேக், இந்த ரீசன்க்காகலாம் பிரேக் அப் ?????"

"நீ கேக்க வரனு புரியுது, அப்போ எனக்கும் கூட என் வீட்டை விட மதியன் தான் பெருசா தெரிஞ்சாங்க, ஆனா அதுக்கு இளமதியன் ஒரு அரை மணிநேரம் ஃபேமிலி வால்வியூ பத்தி பிரீ லெக்ச்சர் கொடுத்தது தான் மிச்சம், எனக்கான ஸ்பெஷல் அஃபக்ஷன் இருக்காம் ஆனா அது லவ் இல்லையாம்" என அன்று நடந்ததை நினைத்து இன்று பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

தாக்ஷிக்கு கடுப்பாக இருந்தது ‘சரியான லூசு மேக்… நீ வேல பாக்குற ஆஃபீஸ் பெயரை கேட்டதுக்கே ஐயா அப்டியே பறந்தாரு, அவர் லவ் இல்லனு சொன்னாங்களாம், அத நம்பிகிட்டு இத்தனை வருஷமா இருக்காங்கலாம்’ என நினைத்து கொண்டவள் அதை மேக்னாவிடம் கேட்டும் விட்டாள்.

" நானும் அதை ஃபீல் பண்ணினேன் தாக்ஷி, ஆனா அத லவ்னு ஒத்துக்கவோ சொல்லவோ மாட்டாங்க,..
ஆனாலும் ஏதோ ஒன்னு இத்தனை நாளா என்னை வெயிட் பண்ண வச்சது, அன்னைக்கு கூட அவர பாக்க போறேன்னு எனக்கு தெரியாது, திடிர்னு தீப்தி சொல்ற அங்க சீனியர்ஸ் கெட் டு கெதர் நடக்குது
அதுக்கு இளமதியனும் வந்துருக்காங்கனு,
அப்போ எனக்கு ரொம்ப படபடப்பா இருந்தது இளமதியன என்னால தைரியமா ஃபேஸ் பண்ண முடியுமானே தெரியல,
எனக்கு பிடிச்சுக்க கை தேவ பட்டது தாக்ஷி, அது உன்னோட கைனு மனசு சொன்னது.,"

இன்னும் ஏதோ மீதம் இருப்பதாகவே பட்டது தாக்ஷி.

" உப்ப்ப் எப்படியோ என்னோட வெயிட்டும் ஒரு முடிவுக்கு வந்துடுச்சு"

என்னவென்று கேள்வியாக பார்த்தவளிடம்

"யெஸ், இளமதியனுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிருக்காம்… இப்போ இந்தியா வந்ததே அவரோட மேரேஜ்க்கு தான், மேரேஜ் முடிஞ்சது திரும்ப கனடா போற பிளானாம், பொண்ணு கூட அவங்க ரிலேடிவ்னு மதியே சொன்னாங்க,"

"என்ன ......" என மொத்தமாக அதிர்ந்து எழுந்து விட்டாள் தாக்ஷி..

*********************

வீட்டுக்கு திரும்ப வந்ததிலிருந்தே கோபத்தின் உச்சத்தில் இருந்தவள், அதை ஜெய்மியிடம் காட்டிக்கொண்டிருந்தாள்.

பொருத்து பார்த்த ஜெய்மியோ "மவளே என்னனு சொல்லிட்டு கத்து இல்ல மொத்தமா கிளோஸ் பண்ணிடுவேன்" என தாக்ஷியின் கழுத்தில் கைவைத்து நெறிப்பது போல் செய்தாள்.

ஜெய்மியின் கையை தட்டிவிட்டு "என்ன ஜெய் நினைச்சுகிட்டு இருக்காங்க ரெண்டு பேரும்.… இவங்க தியாகி பட்டம் வாங்க நான் தான் கிடைச்சேனா"

"இன்னும் நீ புரியுற மாதிரி சொல்லல, யார் அந்த இரண்டு பேரு "

"எல்லாம் மதி மாமாவும், மக்கு மேக்'கும் தான் "

"என்னடி சொல்ற?... .."

"ஆமா சொல்றாங்க இத விட தெளிவா.." என சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்.

"இந்த மதி மாமா என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க லவ் பண்ணுன சொல்லணும்…
ஆனா இவரு சொல்லவும் மாட்டாராம், லவ் சொன்ன பெண்ணையும் அட்வைஸ் பண்ணி ஓட விடுவாராம்……
ஆனா லுக் மட்டும் நல்லா விடுவாராம்,
அவருக்காக இவ்வளவு வருஷம் வெயிட் பண்ண பொண்ணகிட்ட போய் எனக்கு மேரேஜ் வந்துருனு இன்வைட்டும் பண்ணுவாராம்…..
ஜெய் அன்னைக்கு நம்மள வச்சுக்கிட்டே எப்படி பாத்தாரு மேக்'க, இதுல என்னய மேரேஜ் பண்ண போறேன்னு சொல்லிருக்காரு"

"ஹேய் உன்ன தான் மேரேஜ் பண்ண போறேன்னு மேகனாட்ட சொல்லிட்டாங்களா"

திரும்பி ஜெய்மியை பார்த்து முறைத்த தாக்ஷியிடம் " ஹி .. ஹி .. நீ தான் அவங்களுக்கு பாத்துருக்கிற பொண்ணுனு சொல்லிட்டாங்களானு கேக்கவந்தேன்"

"இல்ல ... ரிலேட்டிவ் பொண்னுனு தெரியும் மேக்'க்கு "

"என்ன தாண்டி நடந்துச்சு முழுசா சொல்லித்தொலை,….
இங்கயே இவ்வளவு பொங்குற, அங்க எவ்வளவு பொங்கிட்டு வந்தியோ "

***************
அங்கே மேகனா வீட்டில் அதிர்ச்சியில் எழுந்து விட்டவள்..
"மேக் நீ என்ன லூசா,
அவர் மேரேஜ்னு சொல்வாராம், இவங்க சரி சரினு மண்டை ஆட்டிட்டு வருவாங்கலாம், இன்விட்டேஷன் அனுப்ப சொல்லிட்டியா,
வந்ததும் போய் மொய் வச்சிட்டு நல்லா சாப்பிட்டுட்டு வா என்ன "
என பொரிந்தாள் .

"ஹே தாக்ஷி கூல் கூல்,…
ஏன் இப்போ டென்ஷன்….
இது இப்படித்தான் முடியும்னு எனக்கு தெரியும்,
இருந்தும் ஒரு சின்ன ஆசை இருந்துச்சு அவ்வளவுதான், எனக்கு பெரிய ஏமாற்றம்லாம் இல்ல தாக்ஷி " என்றவள் அவளின் கையை பிடித்து தன்னருகில் அமர்த்தி “இப்போ உன்கிட்ட சொன்னதும் எனக்கு ரொம்ப ரிலாக்ஸ இருக்கு தெரியுமா, சொல்ல போன இப்ப ரொம்ப பெட்டரா ஃபீல் பண்ணறேன்.. "

" மேக் நீ .. " என திரும்ப பொங்க ஆரம்பித்தவளை நிறுத்தியவள்

"தாக்ஷி இளமதியன் ஒன்னும் எனக்கு ஹோப் கொடுத்து ஏமாத்தல, நல்லா பத்து பக்கத்துக்கு அட்வைஸ் தான் கொடுத்தார் அதுவே போதும்.. இனியும் எனக்கு ஃபேமிலி வேல்வியூ பத்தி லெக்ச்சர் வேணாம்ப்பா" என சிரித்தாள்.

அந்த சிரிப்பின் பின்னே உள்ள வலியை தாக்ஷிக்கு உணர முடிந்தது… ஒரு முடிவுக்கு வந்தவள்.

" மதி மாமா மேரேஜ் நடக்காது மேக், பொண்ணு ஒதுக்காம எப்படி மேரேஜ் நடக்கும்"

என்ன உளறுறா இவ என புரியாமல் தாக்ஷியை பார்த்த மேக்னாவிடம்
"ஆமா மேக் ஐ க்நோ , இந்த மேரேஜ் நடக்காது….. அவ ஒத்துக்கமாட்டா'

"எப்படி அந்த பொண்ணுகிட்ட சொல்ல போறியா ?"

ஒரு நிமிடம் விழித்தவள் " ஆமாம், எனக்கும் ரிலேட்டிவ்வா தான இருக்கும்,
நா… நான் போய் சொல்லுவேன், அப்புறம் எப்படி இந்த மேரேஜ் நடக்குமாம்".

"தாக்ஷி இங்க பாரு, என்னய பாருனு சொல்றேன்ல " என அவளின் பக்கம் திருப்பியவள் "இதுல நீ என்னை மட்டும் பார்க்கிற, அந்த பெண்ணை நினைச்சு பாரு என் லவ் சக்சஸ் ஆகாதுன்னு தெரிஞ்சு லவ் பண்ணுன எனக்கே வலிக்குதுனா, மேரேஜ் வர போன அந்த பெண்ணுக்கு வலிக்காதா,
மேரேஜ் நிக்குறதுலாம் கொடுமை தாக்ஷி, அந்த கொடுமையான விசயத்தை நீ செய்ய நான் அலோவ் பண்ண மாட்டேன்"
என திட்டவட்டமாக சொன்னாள்.. அவளுக்கோ தன் மீது கொண்ட அன்பால், இப்படி லூசு தனமாக தனக்காக ஒரு கல்யாணத்தை நிறுத்தும் அளவுக்கு செல்ல போன தாக்ஷியை வியப்பதா இல்லை தான் செய்ய போவதாக சொல்லும் காரியம் எவ்வளவு வீரிய மிக்கது என்பது புரியாமல் நிற்பவளை கண்டு அழுவதா என்று புரியாமல் நின்றாள்.

"அப்போ மதி மாமா பண்ணினது சரினு சொல்றியா மேக் "

" இப்போ மதி என்ன தப்பு பண்ணிட்டாங்க,
என்னய லவ் பண்ணி கழட்டி விட்டுட்டாரா என்ன...
இரு இரு திரும்ப நீ என்ன கேக்க வரேன்னு தெரியுது, என் மேல கொஞ்சம் ஆபக்ஷன் இருக்கு, என் மேல ஆபக்ஷன் வச்சுக்கிட்டு அந்த பெண்ணை மேரேஜ் பண்றது தப்புன்னு சொல்ல வர அதானா "

இன்னும் கைகளை கட்டிக்கொண்ட நிலையிலே ஆம் என்பது போல் பார்த்தாள்.

"மதி உறவுகளுக்கு மதிப்பு கொடுக்குறவர் தாக்ஷி, குடும்பம் தான் எல்லாம் அவர்க்கு . அப்படி இருக்கிறவர் அவருக்கு வரப்போற மனைவியை எவ்வளவு கேர் பண்ணி பாத்துப்பாரு, நீயே சொல்லு…..,
கண்டிப்பா நல்லா.., ரொம்ப நல்லாவே பாத்துப்பாரு,
யூ க்நோ அந்த பொண்ணு ரொம்ப லக்கி தாக்ஷி "

அய்யோவென்று இருந்தது தாக்ஷிக்கு.

"தாக்ஷி, ஐம் ஓகே, நிஜமா நான் ஓகே, நீ இப்படி லூசு தனமா கல்யாணத்தை நிறுத்தறேன்னு கிளம்புவணு தெரிஞ்ருந்தா உன்கிட்ட சொல்லிருக்கவே மாட்டேன்,, எல்லாமே சரியாகிடும் ஓகே… லெட் எண்ட் திஸ்..
வா உனக்கு ஸ்பெஸிலா டெஸர்ட் வச்சிருக்கேன், வந்து டேஸ்ட் பண்ணு வா .. உள்ள போகலாம்"……

என மேகனா முற்றுப்புள்ளி வைத்தாலும், தாக்ஷியால் முடியவில்லை.

********************

"ஹோ இதுதான் தியாகிகள் உருவான கதையா " என்றாள் இவ்வளவு நேரம் கதை கேட்டு கொண்டிருந்த ஜெய்.

"வாங்க போற பாரு, நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்"

"சரி சரி விடு.. இப்போ மேடம் என்ன செய்ய போறீங்களாம், ஐ மீன்…. " என இழுத்தவளிடம்

" டவுட்டே வேணாம், நீ நினைக்கிறதே தான், கல்யாண பேச்சை என்கிட்ட இருந்து தான ஆரம்பிக்கனும் அன்னைக்கு வச்சிக்கிறேன்" என உறுதி பூண்டாள்.

என்ன அந்த உறுதியை செயல் படுத்தும் நாள் தான் வரவில்லை, அதற்குள் மேகனா கல்யாண நிச்சய பத்திரிகை தான் வந்தது.

அவள் வீட்டில் பார்த்த அவர்களின் நண்பர் குடும்பத்தின் மகனையே திருமணம் செய்து கொள்ள நிச்சயித்து அதுவும் பத்திரிக்கை வரை வந்து விட்டது..

நடுவில் முயன்ற தாக்ஷியிடம் மேகனா தெளிவாக இருந்தாள், “இது தான் ரியாலிட்டி எனவும், தன்னால் இந்த புதிய வாழ்கையில் அடாப்ட் பண்ணி கொள்ள முடியும் எனவும்” தெளிவுற தனக்காக வருந்திய தாக்ஷியிடம் உரைத்தாள்..

மேகனாவின் திருமணமும் நடந்து முடிந்தது, சரியாக ஒரு மாதம் பிறகு தாக்ஷியின் வீட்டில் அவளின் திருமணம் பேச்சு தொடங்கியதும்.. தாக்ஷி மறுத்து விட்டாள்..

ஜெய்மி கூட ஒரு தடவை " தாக்ஷி இப்ப தான் எல்லா பிரச்சனையும் சரியாகிடுச்சே,
மேகனா கூட ஹாப்பியா லைஃப் லீட் பண்ணறாங்க, இன்னும் என்ன….
நீ ஏன் உன் மதி மாமாவையே கல்யாணம் பண்ண கூடாது"

"ஜெய் ஆர் யூ மேட் "

"நோ தாக்ஷி, நீ கொஞ்சம் யோசிச்சு பாரு, எல்லாருக்கும் முதல் லவ் சக்சஸ் ஆகுமா என்ன, பி பிரடிக்கல்….
உன் பிளான் என்ன வீட்ல சொல்ற மாப்பிள்ளையவே…. அவங்களுக்கு யாரை பிடிக்குதோ அவங்கள தான மேரேஜ் பண்ணிபேணு இருந்த….

அப்புறம் எனக்கும் மதி மாமா பாயிண்ட் ஆப் வியூ சரினு படுது,
அவர் குடும்பம் உறவுகள்னு முக்கியத்துவம் கொடுக்கிறதுல என்ன தப்பு..”

"நோ ஜெய், நீ சொல்றது யாரோ ஒரு பெண்ணுக்கு ஓகேவா இருக்கலாம், ஆனா என்னால முடியாது… முன்னாடி எனக்கு விருப்பம் இருந்தது, ஆனா இப்போ சுத்தமா இல்ல.. எதுவுமே இல்ல,
என்னால மதி மாமாவ மேக்'கோட லவ்வரா தான் பாக்க முடியுது,
அதை விட மதி மாமா மேல எனக்கு இப்போ எந்த பிரதிபலிப்பும் இல்ல ஜெய், உனக்கு சொல்ல வருறது புரியும்னு நினைக்கிறேன்"

"தாக்ஷி இது வேணும்மா ஆசை இல்லையா, அவங்க அண்ணன் வீட்டுக்கே உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்குறது"

“என்னால வேணும்மா நினைச்ச மாதிரி அவங்க அண்ணன் பையனையே கல்யாணம் பண்ணிக்க முடியாது ஜெய், முடியவே முடியாது" என உணர்ச்சிவசப்பட்டாள்.. எது முடியாது முடியாது என சொல்கிறாளோ அதுவே நடக்க போகிறது என்று தெரியாமல்...



இங்கு நம் எல்லாருக்கும் பிடித்து கொள்ள ஒரு பற்று தேவைப்படுகிறது.
நாம் இறைவனை சரணடைவதும் அவ்வாறே, ஒப்புதலாக அவனிடம் பிராதிப்பதும் அவ்வாறே.. பிராத்தனை என்பதற்கு சக்தி வாய்ந்த எண்ணம் என்பதே பொருளாகும். எண்ணங்கள் அழகானால் அனைத்துமே அழகாகும்.. நல்ல எண்ணங்களோடு பிராத்தனை என்பது நம்மில் தூய ஆரா'வை ( நம் உடம்பை சுற்றிய ஒளிவட்டம்) ஏற்படுத்தும். ஆற்றல் மிக்க மின் காந்த ஒளி நமக்கு மட்டுமில்ல நம் சுற்றுப்புறதிலும் மாற்றம் ஏற்படுத்தும் .இதை சுயஅனுபவத்தில் அனைவரும் உணரலாம்.

இதை இங்கு சேர்த்து கொடுக்க வேண்டும் என்று தோன்றிட்டே இருந்தது. என்னையை சுயஅலசலில் அமிழ்த்திய விஷயங்களாகும்..

எண்ணம் தான் வாழ்க்கை.... எண்ணம் போலவே வாழ்க்கை.... Be Happy :love: Stay Happy:love::love: and Make Others Happy :love::love::love:…..

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்
கீர்த்தி::love:



Post Reply

Return to “போற போக்கில் ஒரு காதல்”