மாலை சூடும் வேளை 44

Post Reply
laxmidevi
Moderators
Posts: 47
Joined: Thu Aug 20, 2020 2:14 pm
Has thanked: 1 time
Been thanked: 4 times

மாலை சூடும் வேளை 44

Post by laxmidevi »

மாலை-44

பாடல் வரிகள்
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா....

விக்ரம் தன் மனைவி கூறியதைக் கேட்டு அதிர்ந்தான்.

பின் சரிம்மா மங்கை உனக்கு எப்போது அங்கு வரத் தோன்றுகிறதோ அப்போது வந்தால் போதும்.உன் பிள்ளைகள் பள்ளி செல்லும் போது தான் வருவேன் என்றாலும் சரி என்று இலகுவாகவே கூறினான் விக்ரம்.


இல்லை நான் எப்போதுமே வர மாட்டேன் என்றாள் அவன் மனைவி உறுதியாக.

என்னம்மா என்னாச்சு என்று அவளுடைய கைகளை மென்மையாகப் பற்றினான் விக்ரம்.

எனக்கு உங்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. உங்களை பிடிக்கவில்லை என்றால் கோபமாக?

என்னை பிடிக்காமல் தான் என் குழந்தைகள் உன் வயிற்றில் வளர்கிறதா?அப்புறமென்ன என்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாதவள் தான் இந்த ஒருமாத காலமும் என்னை ஒட்டிக் கொண்டு அலைந்தாயா ?சரி
எல்லாம் போகட்டும் விட்டு விடு. என்னை பிடிக்கவில்லை என்னுடன் வாழ விருப்பமில்லை என்று என்னுடைய முகம் பார்த்து கண்களை நேருக்கு நேராக பார்த்து சொல் பார்க்கலாம் எந்தன் சவாலாக?

தன் கணவனின் கண்களை நேருக்கு நேராக பார்த்தவளின் கண்களில் காதல் தான் நிறைந்திருந்தது.

ஒத்துக் கொள்கிறேன் .என்னுடைய மனதில் மட்டுமல்ல என் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் உங்கள் மீதான காதல் நிரம்பி வழிகிறது. ஆனால் உங்கள் மனதில் நான் இல்லையே? மனதில் ஒருத்தியை வைத்துக் கொண்டு என்னுடன் குடும்பம் நடத்தும் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்.நீங்கள் உங்கள் மனதுக்கு பிடித்தவருடன் மகிழ்ச்சியாக வாழுங்கள். யாரேனும் கேட்டால் நான் தான் பிரிந்து போய் விட்டேன் என்று சொல்லி விடுங்கள் .எனக்கு உங்கள் நினைவுகளும் உங்கள் உயிரில் உருவான பிள்ளைகளும் போதும். ஒவ்வொரு முறையும் நீங்கள் அன்பும் அக்கறையும் காட்டும் போதும் முழுமனதாக ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் ரமுடியாமல் நான் என்னுடனே ஒவ்வொரு நிமிடமும் போராடி களைத்துக் கொண்டிருக்கிறேன் .என்னால் முடியவில்லை என்று அப்படியே படுக்கையில் சாய்ந்து அழுது விட்டாள்.

தன் மனைவியின் அருகில் சென்று அவளை தன் இடுப்போடு சேர்த்து அணைத்து அழுகை குறையும் மட்டும் அவளுடைய முதுகை தடவிக்கொடுத்தான். அழுது முடித்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீரைக் கொடுத்து பருக வைத்தான்.

இப்பொழுது நான் என்ன சொன்னாலும் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நீ இல்லை. நான் இங்கே இருந்து செல்வது தான் உனக்கு அமைதியையும் நிம்மதியையும் தரும் என்றால் நான் இங்க இருந்து கிளம்புகிறேன் .

தன்னுடைய துணிகளை எடுத்து வைத்துவிட்டு சரிமா நான் வருகிறேன் உன்னுடைய உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு நொடியும் தாமதிக்காமல் கிளம்பிவிட்டான் விக்ரம்.

தன் மாமனாரிடம் மாமா எனக்கு ஒரு முக்கிய வேலையாக அழைப்பு வந்திருக்கிறது. என்னுடைய காரை டிரைவர் வந்து எடுத்துக்கொள்ளட்டும். நான் ப்ளைட் டில் செல்கிறேன்  என்று கூறிவிட்டு மாதவனிடம் வந்து அக்காவைப் பத்திரமாக பார்த்துக்கொள். அடுத்த முறை உங்கள் இருவரையும் அழைத்து செல்கிறேன் என்று கூறி கிளம்பி விட்டான்.

விக்ரமின் வேலைகளில் இது எல்லாம் சகஜம் என்பதால் ராமனாதன் எதையும் உன்னிப்பாக கவனிக்க வில்லை.

விக்ரம் கிளம்பியதில் இருந்து கவலையான முகத்துடன் இருந்த மங்கையைக் கண்ட அவளின் பெற்றோரை தன் கணவன் கிளம்பி விட்ட வருத்தத்தில் இருக்கிறாள் என்று மேலும் எதுவும் கேட்டு தொந்தரவு செய்யவில்லை.

ஆனால் மாதவனுக்கு ஏதோ தவறாக தோன்றியது. கிளம்பும்போது அக்காவுடன் தன்னையும் அழைத்துச் செல்வதாய் கூறிய மாமா திடீரென கிளம்பியது அவர் முகத்தில் இருந்த இறுக்கம் மாதவனுக்கு சிறு சந்தேகத்தை கிளப்பியது .அதை உறுதிப்படுத்தும் விதமாக மங்கையின் முகமும் வாடிப்போய் இருந்தது.

அவன் இருக்கும் மனநிலையில் கார் ஓட்ட முடியாது என்று தான் ப்ளைட் டில் செல்ல நினைத்தான்.அங்கு ஏர்போர்ட்டில் அமர்ந்து இருந்த விக்ரமின் மனமோ உலைக்களமென துடித்துக் கொண்டிருந்தது. அவன் ப்ளைட்க்கு இன்னும் முழுதாக இரண்டு மணி நேரம் இருந்தது .அங்கேயே இருந்தால் தன் வார்த்தைகளால் தன் மனைவியை ஏதேனும் காயப்படுத்தி விடுவோமோ என்று அஞ்சியே அங்கிருந்து விரைவாக கிளம்பி விட்டான். என்ன வார்த்தை சொல்லிவிட்டால் அவனைப் பார்த்து மனதில் ஒருத்தியை வைத்துக்கொண்டு என்னுடன் குடும்பம் நடத்த வேண்டாம். நான் மனதில் ஒருத்தியை வைத்துக்கொண்டு இன்னொரு பெண்ணுடன் வாழ்பவனா? என் மனதில் காதல் இல்லாமலா நான் அவளுடன் கலந்தேன். அவள் விருப்பம் இல்லை என்று கூறியிருந்தால் ஏன் கண்பார்வையில் மறுத்திருந்தால் கூட என் விரல் நகம் கூட அவள் மேல் பட்டு இருக்காதே. மங்கை தன் காதலை உரைக்காமல் இருந்தால் கூட விக்ரம் இவ்வளவு வருத்தப்பட்டிருக்க மாட்டான்  .தன்னை உயிர்க்குயிராய் நேசிப்பவள் தன்னை நம்பாமல் போய்விட்டாளே என்ற ஆதிக்கமே அவன் மனதில் நிறைந்திருந்தது. நம்பிக்கையை கேட்டு பெற முடியாது  அது தானாகவே வர வேண்டும் என்பது அவனுடைய எண்ணம்.

பிளைட்டில் ஏறி  வீடு வந்து சேர்ந்தான் விக்ரம்.

மங்கையை பற்றி வீட்டில் இருந்தவர்கள் கேட்டதற்கு நலமாய் உள்ளதாய் ஒரே வரியில் பதில் கொடுத்தான்.

நாட்கள் அதன் போக்கில் சென்றன.

விக்ரமும் மங்கையும் சாதாரணமாக இருப்பது போல காட்டிக்கொண்டாலும் வீட்டில் உள்ளவர்களின் கண்களுக்கு அவர்களின் வருத்தம் தெரியாமல் இல்லை காரணம் கேட்டதற்கு ஏதேதோ  சொல்லி மழுப்பினர்.

மாதவன் தன்னுடைய சந்தேகத்தை மருமகளை பார்க்க வந்த முரளிதரனிடம் மட்டும் கூறினான்.


என்னப்பா உனக்கு மருமகளுக்கும் ஏதேனும் பிரச்சனையா என்று கேட்ட முரளிதரனிடம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி புன்னகைத்தான். விக்ரமின் உதடுகள் புன்னகைத்ததே தவிர அது அவன் கண்களை எட்டவில்லை என்பதை முரளிதரன் கவனித்து கார்த்திக்கிடம் கூறினார்.

அதை பற்றி கார்த்திக் விசாரித்த போதும் தன் நண்பனே ஆனாலும் தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள பிணைக்கைப் பற்றி கூற விக்ரமின் மனம் இடம் தரவில்லை.

பிரச்சனையெல்லாம் ஒன்றுமில்லை கார்த்தி என்று முடித்து விட்டான். மங்கையிடம் விசாரித்தபோதும் அவளிடம் இருந்தும் அதே பதில் தான் வந்தது.

கணவன் மனைவி இருவருக்கும் இதில் மட்டும் ஒற்றுமை நிறைந்திருந்தது.

ஒருநாள் சாருவினை வீடியோ காலில் அழைத்து  இந்தியா வரச்சொல்லி மற்ற பிரச்சினைகளை தான் பார்த்துக் கொள்வதாக கூறினான் விக்ரம்.

அவளிடம் கூறியபடியே சாருவின் அம்மா அப்பாவிடம் ஈசியாக சாருவின் காதலுக்கு சம்மதம் வாங்கினான். ஆனால் அவன் என்ன முயன்றும் சாருவின் பாட்டியின் மனதை மாற்ற முடியவில்லை .அப்போது எதிர்பாராத விதமாக சாருவின் அண்ணன் அதற்கு உதவினான்.

சாருவின் அண்ணன் சாய் அவர்களின் பாட்டியிடம் உங்களின் வார்த்தைக்காக தான் என் மனதில் இருப்பவளை மறந்து நீங்கள் சொன்ன பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் ஒரு மிகப்பெரிய குடிகாரி.அதுமட்டுமல்ல அவளின் உடை, நடவடிக்கை கொஞ்சம் கூட நல்ல குடும்பத்திற்கு ஒத்துவராது இதையெல்லாம் பார்த்து நீங்கள் வருந்துவீர்கள் என்றுதான் அவளை கூட்டிக் கொண்டு நான் டெல்லிக்கு சென்று விட்டேன். இப்போது எங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. நீங்கள் பார்த்த பெண்ணிடம் நம்மினம் எந்த ஒரு தகுதியைத் தவிர வேறு எந்தத் தகுதியும் இல்லை. ப்ளீஸ் பாட்டி இனிமேலாவது நம் இனமா என்று பாராமல் நல்ல குணமா என்று பாருங்கள். நான் சாரு விரும்பிய பையனுக்கு  அவளை திருமணம் செய்து வையுங்கள் என்று கூறவில்லை . அந்த பையனை அவன் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கலாம் பிறகு மற்றதை யோசிக்கலாம் என்று கூறினான்.

தன் பேரனின் கூறியதைக் கேட்ட  பாட்டி அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தார். பின் மருத்துவர் வந்து பரிசோதனை செய்து ஒன்றும் இல்லை அதிர்ச்சியில் ப்ரஷர் கூடி விட்டது என்று ஒரு சில மருந்துகள் தந்துவிட்டு சென்றார்.

தன் அம்மாவிடம் வந்த சாருவின் அப்பா உங்களுக்கு விருப்பம் இல்லாத எதையும் நான் செய்யமாட்டேன். வீணாக மனதை போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள் என்றார்.

அந்த பையன் அதான் கிஷோர் குடும்பம் நல்ல மாதிரியா என்றார் சாருவின் பாட்டி.

ஆமாம் அம்மா நம்ம முயற்சியே விசாரித்து பார்த்துவிட்டு நல்ல குடும்பம் நம்பி பெண்ணை கொடுக்கலாம் என்று கூறினான் என்றார் .

அப்ப சரிப்பா நம் சாருவை கிஷோருக்கே கட்டி வைத்து விடலாம்

முரளிதரனே இரு வீட்டிலும் பேசி திருமண நிச்சயத்திற்கு நாள் கொடுத்தார் .

விக்ரம் மங்கையிடம் தினமும் போன் செய்து பேசினாலும் அவள் உடல் நிலை பற்றி மட்டும் தான் கேட்பான்.  அதனால் இந்த விஷயம் பற்றி எதுவும் அவளிடம் கூறவில்லை.

வெளிநாட்டிலிருந்து சாரு கோவை வந்தாள். இதற்கெல்லாம் காரணம் விக்ரம் தான் என் அறிந்து தன் நண்பனுக்கு மனமார்ந்த நன்றி கூறினாள்.

இது என் கடமை சாருமா இதற்கு போய் நீ எனக்கு நன்றி கூறலாமா என்று முடித்து விட்டான் விக்ரம்.

சாரு தன்னுடைய ஃபேஸ்புக்கில் சாரு நடுவிலும் கிஷோர் விக்ரம் இருபுறமும் இருக்கும் போட்டோவை போட்டு கோயிங் டோ கெட் மேரிட் சூன்.தேங்க் யூ சோ மச் மை ப்ரெண்ட் என்று பதிவிட்டிருந்தாள்.

தற்செயலாக இதைப்பார்த்த மங்கை சாருவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொல்லிவிட்டாரா என்று நினைத்தாள்.

தானே அவனுக்கு பிடித்த வாழ்வை அமைத்துக் கொள்ள சொல்லியிருந்தாலும் அது நடக்கும்போது ஏற்றுக் கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. அதனால் ஏற்பட்ட வருத்தத்திலும் அந்த செய்தி தந்த அழுத்தத்திலும் மங்கைக்கு கொடுக்கப்பட்டிருந்த தேதிக்கு 10 நாட்கள் முன்னதாகவே பிரசவ வலி வந்து விட்டது.

விஷயம் கேள்விப்பட்ட விக்ரம், கார்த்திக்கும் உடனே தனி ஹெலிகாப்டரில் மங்கை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். மறறவர்கள் ப்ளைட் டில் வந்தனர்.

ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாலும் இரட்டைகுழந்தைகள் என்பதாலும் பிரசவம் சிக்கலாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைக்கேட்ட மொத்தக் குடும்பமும் ஆடிப்போனது...

மாலை தொடுக்கப்படும்...


வணக்கம் நண்பர்களே

கதையை உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்..

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

என்றும் அன்புடன்
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.



Post Reply

Return to “மாலை சூடும் வேளை”