மாலை சூடும் வேளை 46

Post Reply
laxmidevi
Moderators
Posts: 47
Joined: Thu Aug 20, 2020 2:14 pm
Has thanked: 1 time
Been thanked: 4 times

மாலை சூடும் வேளை 46

Post by laxmidevi »

மாலை-19

பாடல் வரிகள்

நான் தாண்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
படஉன்னோட கேங்கு
நான் தாண்டா லீடு
பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பலபேரு
உன்னோட பேட்டைக்கு
நான் தாண்டா லார்டு

மங்கை குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதற்கு அம்பிகா உதவிக் கொண்டு இருந்தார்.குழந்தைகள் தூங்கவும் இரு குழந்தைகளையும் தொட்டிலில் போட்டு லேசாகப் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தனர் அம்பிகாவும் மகாலட்சுமியும்.

குழந்தைகள் தூங்கவும் மங்கையின் கண் பார்வை வாயிலை சென்று வந்தது.

தன் மருமகளின் எண்ணத்தை அறிந்து கொண்ட அம்பிகா வெளியே வந்து விக்கிக்கு போன் பண்ணி கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லு விஜய் மருமகள் வாசலையே பார்த்து கொண்டு இருக்கு என்றார்.

அபிம்மா  நான் இப்போதுதான் போன் செய்தேன் .கமிஷனர் ஆபீஸில் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன் சொன்னாங்க என்றான் விஜய்.

இப்பவும் வேலையா என்னமோ போங்கடா என்று அலுத்து கொண்டு தன் மருமகளிடம் போய் விஜய் கூறியதை சொன்னார்.

அதை கேட்ட மங்கையின் மனம் வாடினாலும் அவர் வேலையே அப்படித்தானே வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று அமைதியானாள் .

விஜயின் குரலும் அவன் முகபாவம் ஏதோ தவறு என்பதை முரளிதரனுக்கு உணர்த்தியது.

விஜயை தனியாக அழைத்து சென்று முரளிதரன் என்ன ஆச்சு விஜய் உன் முகமே சரியில்லையே ? என்னாயிற்று சொல் என்றார்.

இல்லப்பா நான் அரைமணி நேரமா விக்ரமுக்கும் கார்த்திக்கும் போன் பண்ணிட்டு இருக்கேன். போன் சுவிட்ச் ஆப்னு வருது என்னென்ன தெரியல ஆனா ஏதோ தப்பா நடந்திருக்குனு மட்டும் புரியுது.

சரி கமிஷனர் ஆபீஸ் போய் பார்க்கலாம் நினைக்கும் போது அம்மா விகரமுக்கு போன் பண்ண சொன்னாங்க அதான் என்ன செய்யறதுன்னு தெரியாம அப்படி சொன்னேன் .

சரி நீ அப்படி சொன்னது  நல்லது தான். நான் இப்போதே கமிஷனருடன் பேசுகிறேன் என்றார் முரளிதரன்.

இரவு நேரத்தில்  ஹாஸ்பிடலில் இருவர் மட்டுமே தங்க அனுமதிக்க பட்டதால் மங்கையுடன் மகாலட்சுமி அம்பிகாவும் தங்கிக் கொள்வதாகக் கூறினர்.

மற்றவர்கள் அனைவரும் மங்கையின் வீட்டிற்கு சென்று விட்டனர். விஜயும் முரளிதரனும் சின்ன வேலை இருப்பதாக கூறி அதை கமிஷனர் அலுவலகம் சென்று விட்டனர்.

விக்ரமும் கார்த்திக்கும் அழகர்மலை செல்லும் வழியில் உள்ள ஒரு  தோட்டத்து வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்தனர்.

விக்ரமையும் கார்த்திகையும் காரில் கடத்தி கொண்டு வரும்போதே அவர்களிடம் இருந்து செல்போனை பறித்து  எதிரில் வந்து கொண்டிருந்த இருவேறு வாகனங்களில் போட்டுவிட்டனர். அவர்கள் நம்பரை செய்தாலும் இருவேறு இடங்களை காட்டட்டும் என்று எண்ணி அவ்வாறு செய்தனர்.பின் அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளையும் பறித்துக்கொண்டனர் .

விக்ரமும் கார்த்திக்கும் இத்தனைக்கும் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை. தோட்டத்து வீட்டில் கொண்டு வந்து கட்டி வைக்கும் போதும் சரி அவர்கள் முகத்தில் கோபமோ  பயமோ எதுவும் இல்லை. அவர்களை கடத்தி வந்தவர்களுக்கு தான் ஏதோ சந்தேகம் தோன்றியது. நாம் சரியான ஆளைதான் கடத்தியிருக்கோமா என்று.ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறிவுரை அப்படி. மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ளுமாறு கூறியிருந்தனர். எது எப்படியோ அவர்கள் சொன்னபடி கடத்தி வந்தாயிற்று இனி அவர்கள்பாடு என்று கண்காணிக்கத் தொடங்கினர்.

அந்த வீட்டிற்கே கருப்பு நிற காரில் வந்திறங்கினான் ஒருவன். விக்ரமும் கார்த்திக்கும் இருக்குமிடம் வந்தான்.

தமிழ்நாடு சிறப்பு போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் விக்ரம் கார்த்திக் இருவரையும் எங்கள் இடத்திற்கு வரவேற்கிறேன் என்று கூறி சிரித்தான் அவன்.அவன் பெயர் ஜோஸ்வா பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்.

நான் கூட உங்களை பிடிப்பது மிகவும் கஷ்டம் என்று நினைத்தேன் பரவாயில்லை வேலை எளிதாக முடிந்து விட்டது .எனக்கு  நீங்கள் கைப்பற்றிய போதை பொருட்கள் வேண்டும் என்றான் ஜோஸ்வா.


எல்லாவற்றையும் கோர்ட்டில் சப்மிட் செய்து அழித்தாயிற்று என்றான் கார்த்திக் .

இல்லை நீங்கள் பாதியைத் தான்  அழித்துள்ளீர்கள் மீதி உங்களிடம்தான் இருக்கிறது என்று எனக்கு தகவல் வந்தது என்றான் ஜோஸ்வா.

ஓ அப்படியா அப்ப எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கிறாய் என்று கேட்டான் விக்ரம்?

ஏன் எனக்கு தெரியாது நினைச்சிங்களா முட்டாள்களே சரி அதை விடுங்கள் அது எங்க இருக்கு என்று சொல்லிவிட்டால் உங்கள் இருவரையும் உயிரோடு விட முயற்சிக்கிறேன் இல்லை என்றால் உங்கள் இருவருக்கும் இதே இடத்தில் சமாதி கட்டி விடுவேன்.

நீ சினிமாக்காரன் இல்ல அதான் டயலாக் எல்லாம் பேசுற என்று கூறி சிரித்தான் விக்ரம்.

இந்த நிலைமையிலேயே உன்னால எப்படிடா சிரிக்க முடியுது என்று கத்தினான் அவன்.

ஏன்னா இந்த இடம் முழுவதும் போலீஸ் கண்ட்ரோல் வந்து ரொம்ப நேரம் ஆச்சு நீ வெளியில போயி பார்த்திட்டு வா என்றான் விக்ரம்.

ஜோஸ்வா  வெளியில் போய் பார்த்துவிட்டு வந்தான். வந்தவன் முகம் பயத்தில் வெளிறியது.

இது எப்படி நடந்தது என்று வார்த்தைகள் திக்கி திக்கி வந்தது அவனுக்கு.

சரி ஒரு குட்டி பிளாஸ் பேக் போயிட்டு வரலாமா அப்பதான் உனக்கு என்ன நடந்ததுன்னு புரியும் என்று கூறி சிரித்தான் கார்த்திக் .

விக்ரமும் கார்த்திக்கும் மங்கையின் வீட்டிற்கு சென்று  ரெப்ரெஷாகி விட்டு வரும்போது விக்ரம் கார்த்திடம் நம்மை இரண்டு கார்கள் பாலோ செய்து நோட் பண்ணியா கார்த்திக் என்றான்.

நீ மங்கையை பத்தின கவலையில் இருந்ததால ஹாஸ்பிடல்ல எதையும் கவனிக்கவில்லை. ஆனால் அந்த காரில் இருப்பவர்கள் நம்மை ஹாஸ்பிடலில் இருந்து பின் தொடர்கிறார்கள் .அதனால ஹாஸ்பிடல் வைத்து ஏதும் பிரச்சனையாக வேண்டாம் என்று உன்னை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தேன்.நான் நினைத்தது சரிதான் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மை பின் தொடர்கிறார்கள் .கொல்வது தான் நோக்கம் என்றால் எப்போதோ முயற்சித்து இருப்பார்கள். அவர்களின் போக்கில் போய்தான் பார்ப்போமே என்றான் கார்த்திக்.

இன்னும் நான் என் பிள்ளையை கூட முழுசா பாக்கல அதுக்குள்ளே இவனுக வேற என்று சலித்தான் விக்ரம்.

விடு விக்கி நாம ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடி ரொம்ப நாளாச்சு. நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு மிஸ் பண்ணலாமா?

இருவரும் தங்களின் வாட்சிலுள்ள எமர்ஜென்சி சிக்னல் மூலம் தகவல் கொடுத்தனர். அவர்கள் வாட்சின் ஜிபிஸ் டிரேஷ் செய்து இந்த இடம் முழுவதையும் போலீஸ் தங்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தது.

கார்த்திக் அங்கிருந்தவர்களை எச்சரித்தான் .நீங்களாக சரணடைந்து விட்டால் நீங்கள் வெறும் ஆட்கடத்தல் அடிதடி வழக்கு மட்டும்தான் பாயும் இவருடன் மேலும் சேர்ந்து கொண்டிருந்தால் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைதாகி எப்போது வெளியே வருவீர்கள் என்று சொல்ல முடியாது . யோசித்துக் கொள்ளுங்கள் இங்கிருந்து தப்பிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை அந்த இடம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது என்றான் கார்த்திக்.

அங்கிருந்து அடியாட்கள் நமக்கு எதுக்கு வம்பு நம் தொழில் கடத்தல்  செய்வதுதான் என்று சரணடைய முடிவு செய்து கார்த்திக்கையும் விக்ரமின் கைகளின் கட்டை அவிழ்த்து விட்டனர்.

ஜோஸ்வா விக்ரமையும் கார்த்திக்கையும் தாக்க முயற்சித்தான். இருவரும் சேர்ந்து அவனை அடி வெளுத்து விட்டனர்.

உண்மையிலேயே எங்களுக்கு வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வாங்கி சப்ளை செய்யும் நபர் யார் என்று தெரியாமல் இருந்தது. அதற்காகவே பாதி பொருட்களை  எங்களுடைய கண்காணிப்பில் வைத்துக்கொண்டு அந்த தகவலை லேசாக வெளியே பரவ வைத்தோம்.அதன் மதிப்பு பல கோடி எப்படியும் யாராவது அதை தேடி வருவார்கள் என்று எண்ணித்தான் வைத்திருந்தோம். சரியாக அந்த வலையில் வந்து நீயே மாட்டிக்கொண்டாய் ஜோஸ்வா. வெளியுலகத்திற்கு தான்  திரைப்பட தயாரிப்பாளர் உள்ளே டிரக் டீலர். இனி காலம் முழுவதும் மாமியாரின் வீட்டிலேயே இரு என்று அவனை அரெஸ்ட்  செய்து மதுரை கமிஷனரிடம் ஒப்படைத்தனர்.

இனிமேல் ஹாஸ்பிடலில் விசிஸ்டர்ஸ்கு அனுமதி கிடையாது என்பதால் வீட்டுக்கு வந்து விட்டனர் விக்ரமும் கார்த்திக்கும்.

முரளிதரன் மதுரை கமிஷனரிடம் பேசும்போதே  அவரிடம் உண்மையை கூறி விட்டார் கமிஷனர்.

விக்ரம் கார்த்திக்கும் வீட்டிற்கு வந்து முரளிதரனிடம் நடந்ததைக் கூறும்போது தான் முன்னரே கமிஷனரிடம் கேட்டு அறிந்து கொண்டதாக கூறினார்.

எப்படி மாமா இப்படி எல்லாம்  என்று கேட்டான் கார்த்திக்.

நீங்க எல்லாம் ஐபிஎஸ் ஆனால் அந்தக் கால ஐஏஎஸ் மாப்பிள்ளை என்று கூறினார் கெத்தாக.

இது எல்லாம் நமக்கு தேவையா என்று சின்ன சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்து விட்டனர்.

வீட்டில் அனைவரும் தூங்கி விட்டனர். விக்ரமிற்கோ  தூக்கம் வருவேனா என்று ஆட்டம் காண்பித்துக் கொண்டிருந்தது. எப்போது விடியும் தன் மனைவியையும் குழந்தைகளையும் பார்ப்போம் என்று விடியலுக்காய் காத்துக் கொண்டிருந்தான் அரசியின் ஆதவன்.

அந்த விடியல் விக்ரமின் வாழ்விற்கு ஓளி  கொடுக்குமா?

பார்க்கலாம்.

மாலை தொடுக்கப்படும்.

வணக்கம் நண்பர்களே

கதையை உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்..

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

என்றும் அன்புடன்
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.



Post Reply

Return to “மாலை சூடும் வேளை”