மாலை சூடும் வேளை 49

Post Reply
laxmidevi
Moderators
Posts: 47
Joined: Thu Aug 20, 2020 2:14 pm
Has thanked: 1 time
Been thanked: 4 times

மாலை சூடும் வேளை 49

Post by laxmidevi »

மாலை-49

பாடல் வரிகள்

வாராமல் வந்த செல்வம்
வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாழம்பூச்சரம்
ரெண்டு தாய்க்கொரு பிள்ளை
என்று வாழ்ந்திடும் முல்லை
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீ அறிவாயோ
உன்னை நினைத்து உருகிடும் மாது
உன்னை பிரிய மனம் துணியாது
பூவே பனிப்பூவே நீதான் இல்லாது
பார்வை எங்கள் பார்வை தூக்கம் கொள்ளாது.....

கனி ஆரத்தி எடுத்து முடித்ததும் மாப்பிள்ளை வீட்டினரை மரியாதையாக உள்ளே அழைத்து சென்றனர்.

நிச்சயத்திற்கு சரியாக அரை மணி நேரம் முன்னதாக தான் விக்ரமும் கார்த்திக்கும் சென்னையிலிருந்து வந்தனர்.

வந்ததும் நேராக தத்தம் காதல் மனைவியை பார்க்க சென்ற விட்டனர் இருவரும்.

பெட்டில் அமர்ந்து தன் இரு குழந்தைகளையும் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் மங்கை .விக்ரம் சத்தமில்லாமல் உள்ளே வந்து தன் மனைவியையும் தூங்கும் தனது மகன்களையும்  ரசித்துக்கொண்டிருந்தான். தன்னை யாரோ பார்ப்பதை நான் உணர்ந்த மங்கை பிள்ளைகளிடமிருந்து தன் பார்வையை திரும்பினாள்.அவள் பார்க்கவும் விக்ரம் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டான். ஏதோ சத்தம் கேட்பது போல் தோன்றவே வெளியே எட்டிப் பார்க்க வந்தவளை பின்னிருந்த அணைத்துக்கொண்டான். கணவனின் ஸ்பரிசத்தை உணர்ந்தவளோ அவனின் அணைப்பிலே உருகி நின்றாள்.

என்னடி சத்தத்தையே காணாம் நான் தான்  கண்டுபிடிச்சிட்டியா என்றான் விக்ரம்.

பின்ன ஏசிபி விக்ரம் பொண்டாட்டிய கட்டி பிடிக்க யாருக்கு தைரியம் வரும் என்றால் கெத்தாக.

பரவாயில்லை நல்ல பேச பழகிட்ட என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு அழகா இருக்கடி குட்டிமா என்றான்.

மங்கையவளோ தன் மன்னனின் இதழில் தன் முத்தத்தினை பதித்தாள். ஆரம்பித்தது என்னவோ மங்கையாக இருந்தாலும் முடிவில்லாமல் நீட்டித்துக்கொண்டிருந்தவன் விக்ரம்.

தன் பிள்ளைகளின் சத்தத்தில் நிகழ்வுக்கு திரும்பினர் இருவரும்.

இதற்க்கு மேலும் இங்கு இருந்தால் எதுவும் சரிவராது. நாம் கிளம்பி நிச்சய வேலையை பார்க்கலாம் என்று தன் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு வந்தனர் இருவரும்.

ஜானகிக்கு கொடுக்கவேண்டிய சீர்வரிசைகள் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொண்டிருந்தால் மணிமேகலை.

அங்க வந்த கார்த்திக் அவளின் முன்னே போய் நின்று அவளை கண் எடுக்காமல் பார்த்தான்.

தன்னவனின் பார்வையில் நாணம் கொண்டவள் என்ன புதுசா பாக்குற மாதிரி பார்க்குறீங்க?

எப்பவுமே நீ எனக்கு புதுசா தான் தெரியிற கலை என்று அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

வந்து கல்யாண வேலைய பார்க்காமல் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ?

நீதான் உங்க அண்ணன் கல்யாணத்தப்ப என்ன கவனிக்கவே இல்லைனு கவலைப்பட்ட ?அதான் உன்னை கவனிக்கலாம் வந்துட்டேன் என்ற ஒரு மார்க்கமாக.

நீங்கள் கவனிச்ச வரைக்கும் போதும் போய் வேலையை பாருங்க என்று அவனிடம் இருந்து விடுபட போராடினால் மணி.

ஆனால் அவன் விட்டால்தானே அழகாய் இருந்து  என்னை படுத்திறடி சரி ஒரே ஒரு கிஸ் ஆவது கொடு நான் போகிறேன் என்று கெஞ்சினான்.

கண்ணத்தில் முத்தமிட சென்றவளை இல்லை நெற்றியில் தான் வேணும் என்றான்.

சரி குனியுங்கள் என்றதற்கு இல்லை  எங்கள் பரம்பரைக்கே தலை குனிந்து பழக்கமில்லை. நான் வேண்டுமானால் உன்னை தூக்கி கொள்கிரேன் என்றான்.

தன் மனைவியை இடையில் கையை வைத்து தூக்கினான். அவன் நெற்றியில் மணி முத்தமிடும் போது கார்த்திக் அவளின் இடையில் தன் இதழினை பதித்தான்.

தன்னவனின் இதழ் தீண்டலில் மெய்மறந்து நின்றவள் பின் சிறுது நேரத்தில் சுதாரித்து அவனை அடிக்கத் தொடங்கினாள்

நான் எவ்வளவு பெரிய போலீஸ் ஆபிசர் என்னையவே அடிக்கிறியாடி.

பண்றதெல்லாம் பிராடுத்தனம் இதுல பெரிய போலீஸ் ஆபீஸர்னு பேரு வேற. முதலில் என்னை இறக்கி விடுங்கள் என்றால் மணி.

தன்னவளை இறக்கி விட்டு  அவளின் கண்களில் முத்தமிட்டு சரி வருகிறேன் என்று கிளம்பினான்.

கணவனைப் பிரிய மனம் இல்லாமல் நானும் வருகிறேன் என்று அவனுடன் கைகளைக் கோர்த்துக் கொண்டு நிச்சயம் நடக்கும் இடத்திற்கு வந்து விட்டாள் மணி.

அங்கே மணமகள் அறையில் ஜானு தன் தோழிகளுடன்  தயாராகிக் கொண்டிருக்க அதனுள்ளே இருந்த மற்றொரு படுக்கையறையில் விஜய் ப்ளீஸ் இந்த மாதுளை ஜூஸை மட்டும் குடித்து விடுமா நல்ல பிள்ளை இல்லை என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் தன் மனைவி மலரிடம்.

வேணாம்பா எது குடித்தாலும் வாமிடா வர்றது என்று அவனிடம் மறுத்துக் கொண்டிருந்தால்  மலர்.

பரவாயில்லைமா ஆனால் கொஞ்சமாவது குடி என்றான் விஜய்.

ஒருவழியாக அவள் உடன் போராடி பாதி ஜூஸை குடிக்க வைத்தான்.

சரி நீ ரெஸ்ட் எடு நான் போறேன் நிச்சயம் செய்யும் போது நான் வந்து உன்னை அழைத்து செல்கிறேன் சரியா என்றவனை
ஆனந்த் இங்கே வா என்றழைத்தாள் மலர்.

என்னம்மா என்று அருகில் வந்தவனை தன் அருகில் அமர வைத்து அவன் மடியில் ஏறி அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டு லவ் யூ விஜய் என்றால்.

மீ டு பேபி என்று மலரின் தலையில் முத்தமிட்டான்.

வெளியில் கார்த்திக்கின் சத்தம் கேட்கவும் இதோ வந்து விடுகிறேன் என்று கார்த்திகை பார்க்க விரைந்து வந்தான் விஜய்.

கார்த்திக் தன் மனைவி மகளுடன் இருந்தான். விக்ரம் தன் மனைவி இரு மகன்களுடன் இருருந்தான். அப்போது அங்கு வந்த சுந்தர் ,வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுவிகங்கனு பார்த்தா அவங்கவங்க ஆளுங்களோட ரொமன்ஸ் பணண போய்ட்டீங்களாடா என்றான் கடுப்புடன்.

மணியும் மங்கையும் நைசாக அங்கிருந்து நழுவி விட்டனர்.

நீயும் உன் ஆளுடன் கொஞ்ச வேண்டியது தானே.உனக்கு எங்களைப் பார்த்து பொறாமை என்றான் விஜய் .

லைட்டா என்று வடிவேலுவைப் போல் கூறினான் சுந்தர்.

அவன் கூறிய விதத்தில் அனைவரும் சிரித்து விட்டனர்.

நிச்சயத்திற்கு நேரமாகிவிட்டது எல்லோரும் வாருங்கள் என்று அழைத்தார் முரளிதரன்.

சங்கரும் ஜானுவும்  மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். நிச்சயப் பத்திரிக்கையும் வாசித்து முடித்தனர்.

அப்போதும் கூட மாப்பிள்ளை வீட்டினரின் பார்வை அவ்வப்போது கனி ,சம்முவின் மேலும் படிந்து மீண்டது.விஜய்யும் அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

எல்லோரும் சாப்பிட சென்றனர் அப்போது மாப்பிள்ளையின் அக்கா லாவண்யா கனியிடம்  இருந்த சம்முவிடம் வந்து என்னுடன் சாப்பிட வருகிறாயா குட்டி என்று கேட்டாள்.

கொஞ்சம் வேலையாக இருந்ததால்  கனி சரி அவங்களோட போய் சாப்பிட்டு வா என்று விட்டாள்.

சரிம்மா என்று சந்தோஷமாக அவளுடன் போனால் சம்மு.

அப்போது அங்கு வந்த விஜய் சம்முவிற்கு மாப்பிள்ளையின் அக்கா ஊட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு சம்மு சாப்பிட்டு முடித்தவுடன் அவர்களிடம் சொல்லி விட்டு அவளை தூக்கிக் கொண்டு வந்து விட்டான்.

பெண் வீட்டினர் இருந்த அறைக்கு வந்து கனியை லெப்ட் ரைட் வாங்கினான் விஜய்.

உனக்கு வேலை இருந்தால் எங்கள் யாரையாவது பார்த்துக்கொள்ள சொல்லி இருக்க வேண்டியதுதானே அவர்களிடம் போய் நம் பிள்ளையை கொடுப்பாயா என்றான் கோபமாக.

இல்ல அவங்க தான் என்று இழுத்தாள் கனி.

இனி இப்படி நடக்கக் கூடாது என்றான் விஜய் கண்டிப்பாக.

விக்ரம் கார்த்தியும் விஜயை சமாதானப்படுத்தி வேறு ஒரு அறைக்கு அழைத்து சென்றனர்.

கார்த்திக் நேராக விஜய்யிடம் என்ன நடந்தது விஜய். ஒரு சாதாரண விஷயத்திற்கு இவ்வளவு கோபப்படும் ஆள் இல்லை நீ? என்ன தான் நடந்தது என்று கேட்டான்.

விஜய்யும் தன்னுடைய சந்தேகத்தை அவர்களிடம் வெளியிட்டான்.

இதைப்பற்றி இனி நாம் யோசித்துப் பார்த்துக் கொண்டிருக்க நேரமில்லை.மாப்பிள்ளையிடமே கேட்டு விடலாம் என்றான் கார்த்திக்.

இல்ல நாளைக்கு கல்யாணத்த வச்சு இன்னைக்கு நாம ஏதாவது கேட்க போய் பிரச்சனை ஆயிடுச்சுனா என்றான் விக்ரம்.

பரவாயில்லை விக்ரம்.ஒருவேளை திருமணத்திற்கு பின் ஏதேனும் தவறாக தெரிய வந்தால் என்ன செய்வது ? என்று கேள்வி எழுப்பினான் கார்த்திக்.

அப்போது விஜய் நாம் நன்றாக விசாரித்துவிட்டு நம் வீட்டு பெரியவர்களும் சரிபார்த்து கூறிய பின்பு தான் இந்த சம்மந்தத்திற்கு ஒத்துக்கொண்டோம்.பின் எங்கே தவறானது என்று கேட்டான்.

சங்கரை அழைத்து பேசி விடலாம் அப்போதுதான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று முடிவெடுத்தனர்.

எல்லோரும் தூங்கியபின் சங்கரை தனியாக அழைத்துக் கொண்டு வந்து விஷயம் என்னவென்று கேட்டனர்.

சார் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். சம்மு அப்படியே என் அக்கா சிறு வயதிலிருந்தது  போலவே இருக்கிறாள். எங்க அக்கா லாவண்யாக்கு குழந்தை பிறந்து ஆறு மாசத்துல ஒரு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அத்தானுக்கும் அக்காவுக்கு ரொம்ப அடி .அவங்க மயக்கமா இருந்த போது பக்கத்துல இருந்த குழந்தையைக் காணோம். பின்னர் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.ஆனால் அதற்குப் பின்னால் அவள் அனுபவித்த வேதனைகள் ஏராளம். அந்த விபத்தில் அவளுடைய வயிற்றில் லேசாக அடிபட்டு விட்டது.அதனால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு என்று கூறிவிட்டனர். அத்தான் வீட்டில் குழந்தையை பற்றி பேச்சு வந்தது. குழந்தையை தத்து எடுத்துக்கொள்ள அத்தானின் பெற்றோர்களை ஒத்துக்கொள்ளவில்லை. டெஸ்ட் பேபி
முயற்சி செய்து பார்க்கலாம் என்பதற்கு என் குழந்தை என் மனைவியின் வயிற்றில் தான் வளர வேண்டும் என்று முடிவாக கூறிவிட்டார் அத்தான். இதனால் அத்தானின் பெற்றோர் அக்காவை மறைமுகமாக குற்றம்சாட்டினர். இதையறிந்த அத்தான் அங்கிருந்து மொத்தமாக இங்கே எங்கள் வீட்டுக்கு அக்காவுடன் வந்துவிட்டார்.இதையெல்லாம் நினைத்து அக்கா தினமும் அக்கா கண்ணீரிலே கரைந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்காக தான் வெளியில் சிரித்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறார். தொலைந்து போன அக்காவின் குழந்தைக்கு இப்போது சம்முவின் வயதுதான்  இருக்கும். அதே வயதில் அக்காவைப் போலவே குழந்தை பார்த்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியிலும் அதிர்ச்சியிலும் தான் நாங்கள் அப்படி பார்த்தோம் வேறொன்றுமில்லை என்றான் சங்கர்.

அப்போ அதற்காகத்தான் ஜானுவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினாயா என்றான் கார்த்திக்.

ஐயோ சார் என்ன சொல்றீங்க நானே சம்முவை போன வாரம்  ஜானு கூட வீடியோ காலில் பேசும்போதுதான் பார்த்தேன். ஆனால் எனக்கு ஹனியை மிகவும் பிடித்திருந்தது. அதனால் தான் வீட்டில் சொல்லி பெண் கேட்க சொன்னேன். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நீ கூறுவதை நம்பலாமா? பொய் ஏதும் இல்லையே என்று கேட்டான் சந்தேகமாக வி‌ஜய்.

மச்சானாக போறீங்க உங்களிடம் போய் பொய் சொல்வேனா ?அதுவும் இரண்டு போலிஸ் ஆபிசர் உடன் இருக்கும் போது.

விக்ரம் விஜயிடம் அவன் கூறியதில்  உண்மை இருக்கிறது.சம்மு சங்கரின் அக்கா மகளாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று சுருக்கமாகக் நடந்ததைக் கூறினான்

உடனே கார்த்திக் குறுக்கிட்டு சரி இப்போது நமக்குத் தெரிந்த விஷயத்தை வேறு யாரிடமும் கூற வேண்டாம் . சங்கர் முக்கியமாக நீ உன் வீட்டில் இது பற்றி எதுவும் கூற வேண்டாம் நாங்கள் கனியிடமும் சுந்தரிடமும் இது பற்றி பேசி விட்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். இப்பொழுது திருமண வேலைகளை பார்ப்போம் . சங்கர்  நீ உன்னுடைய அறைக்குப் போ முடித்து விட்டான்.

திருமணம் நல்லபடியாக முடியட்டும் அதன் பின் சுந்தரிடம் கனியிடம் இந்த விஷயத்தைப் பற்றி மெதுவாக கூறலாம் என்றான் விக்ரம்.

அவன் கூறுவது அனைவருக்கும் சரி எனப்பட்டது.

மறுநாள் காலையில் நல்ல முகூர்த்தத்தில் சங்கர் ஜானவியை தன் மனைவியாக்கிக் கொண்டான்.

திருமண சடங்குகளின் போது நம்முடைய ஹீரோக்கள் மூவரும் தன்னுடைய மனைவியிடம் கண்களாலே காதலை பகிர்ந்து கொண்டனர்.

சுந்தர் தான் இவர்களைப் பார்த்து உங்கள் அலப்பறை தாங்க முடியல டா சாமி  என்றான்.

இப்படியாக கேலியும் கிண்டலும், ஆனந்தக் கண்ணீர் ,பிரிவின் வலி என  திருமணம் நல்லபடியாக முடிந்து சங்கருடன் ஜானு தன் புகுந்த வீட்டிற்கு கிளம்பினாள்.

விஜய் மலரிடம் விஷயத்தை கூறி கனியிடம் அது பற்றிப் பேசுமாறு கூறினான்.

எல்லா வேலைகளும் முடிந்து ஓய்வாக அமர்ந்திருந்த கனியிடம் வந்த மலர் அக்கா தோட்டத்தில் சும்மா ஒரு வாக் போகலாமா என்று கேட்டாள்.

சரி என்று இருவரும் தோட்டத்தில் நடந்தனர்.

அப்போது மலர் விஜய் கூறிய அனைத்து விஷயங்களையும் கூறினாள்.

கனியோ அப்போ சமூவை அவங்க  கூட்டிட்டு போய் விடுவார்களா என்றால் பயமும் வருத்தமுமாக.

இல்லேக்கா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ,வருத்தப்படாதே .நீ உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று தான் உன்னிடம் கூறினேன்.

அப்பாடா இப்பதான் எனக்கு நிம்மதியாக இருக்கு என்றாள் கனி.

ஆனா அவங்க நிம்மதியா இல்லையே அக்கா.

என்ன சொல்கிறாய் மலர்.

தவமிருந்து ஒரு குழந்தையை பெற்று , தன் உயிராய் நினைத்து வளர்த்து முழுதாக ஆறு மாதம் கூட முடியாமல் அவளைத் தொலைத்து விட்டு இன்றளவும் அமைதியும் நிம்மதியும் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றாள் வருத்தமாக.

இதைக்கேட்ட கனியின் மனம் கலங்கியது. இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறாய் நம்ம சம்மூவை அவர்களிடம் கொடுத்துவிட வேண்டுமா என்றாள் சோர்வான குரலில்.

இல்லேக்கா. நான் அப்படிக் கூற வரவில்லை ஆனால் எல்லாவற்றையும் யோசித்து ஒரு நல்ல முடிவு எடுங்கள். மங்கையின் வளைகாப்பில் என்ன நடந்தது என்று உனக்கு ஞாபகமிருக்கிறதா நமக்கு தெரிந்து ஒரு சரோஜா அத்தை .இன்னும் அவரைப் போல் எத்தனை பேரோ. அவர்களைப்  போன்றோர் சம்மு வளர்ந்த பின் அவளை பற்றி ஏதேனும் தவறாக கூறினால் என்ன செய்வது. சம்மு அவளுக்கு உரிமையான உரிய இடத்தில் இருந்தால் இதுபோன்ற சிக்கல்கள் அவளுக்கு வராமல் இருக்கும். எல்லாவற்றையும் விட பிள்ளையை தொலைத்துவிட்டு வாழும் ஒரு தாயின் மன நிலையையும் மனதில் வைத்து முடிவெடு. எதுவாக இருந்தாலும் சுந்தரிடம்  பேசி என்ன செய்வது என்று யோசி என்று கூறி விட்டு கனிக்கு யோசிக்க தனிமையளித்து வீட்டுக்கு வந்து விட்டாள் மலர்.

நன்றாக யோசித்து  ஒரு தெளிவான மனநிலையில் சுந்தரை காணச் சென்றால் கனி.

என்ன அதிசயம் பார். என்னுடைய ராணி என்னைப் பார்க்க இந்த பக்கம் வந்திருக்கிறாள். ஏன் பார்க்காமல் இருக்க முடியவில்லையா என்றான் கேலியாக சுந்தர்.

தான் கூற வந்ததை எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று தயங்கி தயங்கி ஒருவாறு விஷயத்தை சுந்தரிடம் சொல்லி முடித்தாள் கனி.

சுந்தர் நம்முடைய சம்முவை அவர்களிடமே கொடுத்து விடலாம் என்றாள் மனதில் வலியோடு . அது அவளின் குரலிலும் வெளிப்பட்டது.

என்ன பேசுகிறோம் என்று யோசித்தான் பேசுகிறாயா கனி. நீ மட்டுமல்ல . யார் சொன்னாலும் என் மகளை யாருக்காகவும் எதற்காகவும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது.

நாளை வளர்ந்தபின் என் பெண்ணை பற்றி யாரவது தவறாக ஒரு வார்த்தை கூறினால் என்னால் அதை தாங்கி கொள்ளவே முடியாது. அதனால் அவள் அவளுக்குரிய  இடத்திலே வளரட்டும். மேலும் தெரிந்தே ஒரு தாயையும் பிள்ளையையும் பிரித்த பாவம் நமக்கு வேண்டாம் சுந்தர் என்றால் கண்ணில் நீருடன்.

அப்பொழுது நீ அவளின் அம்மா இல்லையா ? குழந்தையை பெற்றால் மட்டும் போதாது கனி.  உன் உயிரின் மேலாக அம்முவை வளர்த்த நீ அவளின் அம்மா இல்லையா?

அப்படித்தானே எல்லோரும் கூறுகிறார்கள் என்று சுந்தரின் மேல் விழுந்து கதறினாள் கனி.

யார் என்ன கூறினாலும் பரவாயில்லை சம்முவை யாரிடமும் கொடுக்க வேண்டாம் .தைரியமாக இரு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டான் சுந்தர்.

விஜய்யும் விக்ரமும் எவ்வளவு கூறியும் சம்முவை அவர்களிடம் தர சுந்தர் ஒத்துக் கொள்ளவே இல்லை.

கார்த்திக் தான் கொஞ்ச நாட்கள் கழித்து பேசலாம். உடனே ஏற்றுக் கொள்வது அவர்களுக்குச்  ‌கஷ்டமாக இருக்கும் என்று விட்டான்.

சில நாட்களுக்கு பின் சுந்தரை அழைத்து விக்ரம் பேசிய போது அதைப் பற்றி இனிமேல் பேச வேண்டாம் விக்ரம் என்று முடித்து விட்டான்.

சரி சுந்தர் நான் அதை பற்றி பேசவில்லை இப்பொழுது நான் உன்னிடம் ஒன்று கேட்கிறேன். நீ உனது மனதை மறைக்காமல் உண்மையை மட்டும் கூற வேண்டும். இப்பொழுது மங்கையின் பிள்ளை காணாமல் போகிறது என்று வைத்துக் கொள்வோம். சில மாதம் கழித்து அவன் இருக்குமிடம் தெரிந்து அங்கு போய் கேட்கும்போது அவர்கள் நாங்கள் எங்கள் பிள்ளை போல் வளர்த்து விட்டோம் . அதனால் அவனை  உங்களிடம்  தர முடியாது என்று கூறினால் அவர்கள் சொல்வது தான் சரி.இப்பிள்ளை தொலைத்தது உங்கள் தவறு. இப்போது அவர்கள் தம் பிள்ளையாக நினைத்து வளர்க்கும்போது அதை திருப்பிக் கேட்க கூடாது என்று மங்கையிடம் கூறுவாயா இல்லை பிள்ளை தொலைத்துவிட்டு தவிக்கிறாள் எங்கள் வீட்டுப்பெண் தயவு செய்து அவளிடம் அவள் பிள்ளையை கொடுத்து விடுங்கள் என்று அவர்களிடம் கேட்பாயா என்று கேட்டான்.

அது வந்து என்று தடுமாறினான் சுந்தர்.

சுந்தர் மகாபாரதத்தில் ஐந்துபிள்ளைகள் இருந்தும் தான் தொலைத்து விட்ட கர்ணனை நினைத்து குந்திதேவி மிகவும் ஏங்கினார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கோ அவர்களுக்கு  பிள்ளையே இல்லை எனும் போது அவர்களின் நிலையை எண்ணிப்பார். அவர்களுக்கு வேறு குழந்தை இருந்தால் கூட நான் இதைப்பற்றி பேசி இருக்கவே மாட்டேன். நீ மனது வைத்தால் அவர்களுக்கு குழந்தை என்னும் வரத்தை கொடுக்கலாம்.
நீ ஒன்றுக்கு  மூன்று பெண் பிள்ளைகளை பெற்று கொள். நாம் அவர்களில் நம் சம்முவை பார்த்து மகிழலாம் என்று தன் கருத்தைக் கூறினான்.

நீ கூறுவதையெல்லாம் மூளை ஏற்றுக் கொண்டாலும் மனது ஏற்க மறுக்கிறது விக்ரம் நான் என்ன செய்ய என்றான் சுந்தர்.

தன் நண்பனை தழுவிக் கொண்டான் விக்ரம் நீ சீக்கிரம் திருமணம் செய்து கொள் பின் பிள்ளைகள் வந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும்.அவர்களும் கோவையில் தான இருக்க போகிறார்கள் நாம் அடிக்கடி போய் சம்முவைப் பார்த்துக் கொள்ளலாம் என்றான்.

ஒரு வழியாக இருவரையும் சம்முவை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்க சம்மதிக்க வைத்து விட்டனர்.

இதைக் கேட்ட அனைவரும் மகிழ்ந்தனர் .முக்கியமாக லாவண்யா கனியிடம் மனமார நன்றி கூறினாள்.

இப்படியே இருந்தால் இருவரும் அதைப் பற்றிய சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் என்று அடுத்த வாரத்திலேயே இருவருக்கும் திருமணத்திற்கு நாள் குறித்தனர் பெரியவர்கள்.

திருமணத்திற்குப் பிறகும் சம்முவை அவள் குடும்பத்தினருடன் அனுப்பலாம் என்று பேசி முடிவு செய்தனர். அதுவரை சம்முவை அங்கே அவர்களுடன் இருக்கவும் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கினார்கள்.

ஏன் என்று கேட்ட சம்முவிடம் உனக்கு நான் கூறிய கதைகளில் வரும் குட்டி கிருஷ்ணனை போல் இரண்டு அம்மா நானும் லாவண்யாவும் என்று எளிமையாக புரிய வைத்தார் கனி.

சம்மு சிறு குழந்தை என்பதால் எளிதாகவே லாவண்யாவை ஏற்றுக்கொண்டது.கனி மனம் கவலைப்படக் கூடாது என்பதற்காக லாவண்யா  கனியின் வீட்டிற்கு அருகிலேயே தன்னுடைய வீட்டினை
மாற்றிக் கொண்டாள்.

தான் ஒரேடியாக சம்முவை விட்டு பிரிந்திருக்க தேவையில்லை என்ற மகிழ்ச்சியுடனேயே திருமணத்திற்கு தயாராகினாள் கனி

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த கனி சுந்தரின் திருமண நாளும் வந்தது.

அன்று அவர்களுக்கு ஒரு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது.

என்ன நடந்தது.

பார்க்கலாம்.

மாலை தொடுக்கப்படும்.

வணக்கம் நண்பர்களே

கதையை படித்துவிட்டு எப்படி இருக்கிறதுஎன்று கூறுங்கள்.உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கும்

உங்கள் தோழி
லக்ஷ்மி தேவி



Post Reply

Return to “மாலை சூடும் வேளை”