மாலை சூடும் வேளை-11

Post Reply
laxmidevi
Moderators
Posts: 47
Joined: Thu Aug 20, 2020 2:14 pm
Has thanked: 1 time
Been thanked: 4 times

மாலை சூடும் வேளை-11

Post by laxmidevi »

மாலை-11

பாடல் வரிகள்.

உன்னுடைய வரவை எண்ணி 
உள்ளவரை காத்திருப்பேன் 
என்னை விட்டு விலகி 
சென்றால் மறுபடி 
தீக் குளிப்பேன்

நான் விரும்பும் காதலனே 
நீ என்னை ஏற்றுக்கொண்டாள் 
நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்.



விக்ரமின் இடது கை தோளில் தோட்டா பாய்ந்ததில் செங்குருதி புனலாய் வெளியேறியது.அவன் போட்டிருந்த கருப்பு நிற சட்டை கருஞ்சிவப்பு நிறமாக மாற தொடங்கியது.மயங்கும் நிலையில் இருந்த விக்ரமினை,மங்கை தாங்கிக் கொண்டாள் .

சற்று நேரத்திற்கு முன்

விக்ரமின் நெற்றியில் குறி வைத்தான் ஒருவன். அரை மணி நேரமாக தன்னுடைய காரை தொடர்ந்து வந்த 2 கார்களை கவனித்த விக்ரம் பாலாவிற்கு இன்னும் அவனுடைய டீமில் இருக்கும் இருவருக்கும் ஏற்கனவே எமர்ஜென்சி சிக்னல் கொடுத்திருந்தான். ஆனால் அந்த காரை கவனிக்காதது போல் காண்பித்துக் கொண்டான். தன் கையிலிருந்த ஜிபிஎஸ் ட்ராக்கர் வாட்ச் மூலமாக  எமர்ஜென்சி சிக்னல் கொடுத்தான். செல்போன் யூஸ் பண்ண  முடியாதா நிலையில் கூட யாருக்கும் தெரியாமல் இதன் மூலம் சிக்னல் அனுப்ப இயலும். விக்ரம் அவன்  டீமில்  உள்ளவர்களுக்கு இதை தனியாக வடிவமைத்து இருந்தான் . அவர்கள் டிராக் செய்து வரும்வரை இவர்களை சமாளிக்க வேண்டும். இவர்கள் இப்படி நவீன ரக துப்பாக்கியுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை, இல்லை எனில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருப்பான். சரி சமாளிப்போம் என்று எண்ணினான்.

நீங்கள் இப்பொழுது என்னை சுடுவதில் பயன் ஒன்றும் இல்லை. எனக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் இதுவரை சேகரித்து வைத்துள்ள ஆதாரம் முழுவதும் நமது வெளியுறவுத் துறைக்கும் தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சருக்கும் பிரபல மீடியாவிற்க்கும் சென்றுவிடும் ? நான் உயிருடன் இருந்தால் தான் உங்கள் பாஸ் வெளியில் இருக்க முடியும்.
எப்படி வசதி, உங்களை அனுப்பியவரிடம் இதைப் பற்றி கூறி என்ன செய்யலாம் என்று கேளுங்கள். உண்மையில் விக்ரமிடம் அந்த மாதிரி எந்த ஆதாரமும் இல்லை அவர்களை சமாளிப்பதற்காகவே அப்படி கூறினான்.

என்ன தப்பிக்கலாம் என்று பார்க்கிறாயா? என்றான் அவர்களில் ஒருவன்.

நீங்கள் கைகளில்  துப்பாக்கி வைத்திருக்கிறீர்கள்  அதுவும் நான்கு பேர்.நானோ ஒருவன் அதுவும் நிராயுதபாணியாக இருக்கிறேன் என்னால் எப்படி தப்பிக்க முடியும்.

இவன் கூறியபடி ஏதாவது ஆகிவிட்டால் பாஸ் நம்மளை தான் திட்டுவார் .எதற்கும் அவரிடம் கூப்பிட்டு கேட்டு விடலாம் என்று அவர்கள் போன் செய்தனர்.

அந்த ஒரு நொடியை பயன்படுத்தி தப்பித்த விக்ரம் காட்டில் ஓடி மறைந்தான் . நால்வரும் விக்ரமைக் காட்டில் தேடத் தொடங்கினார்கள்.

அவர்களுக்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் விக்ரம் 3 வரை சுட்டு விட்டான் .விக்ரமின் தோளிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது ஒருவரையாவது உயிருடன் பிடிக்க வேண்டுமென்று ஒருவனை மட்டும் கால்களிலும் கைகளிலும் சுட்டான் மற்றவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை .

பாலா வருவதற்குல் விக்ரமின் உடல்நிலை மோசமடைந்தது கொண்டு இருந்தது. அதனால் ஹெல்ப் என்று தன்னால் முடிந்தவரை கத்தினான்.

ப்ராஜெக்ட் வேலையாக மதியுடன் வெளியே வந்தாள் மங்கை. மதி அவள் அத்தை வீட்டிற்கு செல்லவே  மங்கை தனியாக விடுதிக்கு வந்து கொண்டு இருந்தாள். சத்தம் கேட்டு அங்கு வந்து மங்கை பார்த்தாள் .அப்போதுதான் விக்ரம் மயங்கவும் தன் மடிமீது ஏந்திக் கொண்டாள்.

விக்ரமை அந்த நிலையில் பார்த்ததும் மங்கைக்கு அதிர்ச்சியில் மயக்கமே வந்துவிட்டது இது அதற்கான நேரம் இல்லை என்று தன்னைத் தானே தைரிய படுத்திக்கொண்டு சார் என்ன ஆயிற்று கண்ணை திறந்து பாருங்கள் என்று கன்னத்தில் தட்டினாள். குண்டு பட்ட இடத்தில்  தன்னுடைய துப்பட்டாவை கொண்டு கட்டினாள். அவளுடைய மஞ்சள் நிற துப்பட்டா சிவப்பு நிறமாக மாற ஆரம்பித்தது. தண்ணீரை எடுத்து பருக வைத்தாள் அவள் மொபைலை எடுத்துப் பார்த்தால் சிக்னல் கிடைக்கவில்லை

விக்ரம் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு இழந்து கொண்டிருந்தான் .அவனை தூக்கிக் கொண்டு அவளால் நடக்க இயலவில்லை.

விக்ரமினை தன் மடியில் சாய்வாக வைத்து பிடித்தபடி இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் நிற்கவில்லை.

அழாதே மங்கை ஒன்றும் ஆகாது இப்போது பாலா வந்துவிடுவார் பயப்படாதே என்றான் விக்ரம்.

அப்போது மீதமிருந்த ஒருவன் விக்ரமமை சுடுவதற்கு குறி பார்த்தான் ஏற்கனவே அந்த அடியாளின் கை காலில் தோட்டா பாய்ந்ததில் சரியாக நிற்க முடியவில்லை. இதைப்பார்த்த மங்கை விக்ரமை காப்பாற்ற அவனை மறைத்து நின்றாள். இவ்வளவு நேரம் தைரியமாக இருந்த அந்த காவலன் மங்கையவளை நோக்கி துப்பாக்கியை நீட்டப்படவும் கொஞ்சம் பதட்டம் அடைந்தான். உடனே தன்னுடைய இடது கையினால் மங்கையை இழுத்து வலது கையில் இருந்த துப்பாக்கியால் அந்த அடியாளின் வயிற்றின் மேற்பகுதியில் சுட்டு விட்டான் .அவன் அங்கேயே சுருண்டு விழுந்துவிட்டான்.


அதற்குள் அங்கு வந்த பாலா விக்ரமமையும் மங்கையும் பார்த்து சார் என்று விக்ரமிடம் வந்தார்
பாலாவின் குரல் கேட்டு கண்விழித்த விக்ரம் பாலாவிடம்

பாலா அண்ணா முதலில் இவளை இங்கிருந்து யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்று விடுங்கள். இதில் இவளை சம்பந்தப்படுத்த வேண்டாம்
யாராவது பார்த்தால் அது வேற ஒரு பிரச்சினை.பின்பு மற்றததைப் பார்க்கலாம் என்றான்.

முதலில் உங்களை பார்க்கவேண்டும் ரத்தம் நிறைய போய் இருக்கும் போல.

நான் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டேன்.நானும் உங்களுடனே வருவேன் என்றாள் மங்கை கண்ணீர் குரலில்.

பின்பு பாலா சமாதான படுத்தி மங்கையை மறைவாக அமர வைத்துவிட்டு விக்ரமை தங்கள் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் .அந்த நால்வரில் மூவர் இறந்துவிட்டிருந்தனர் .
மற்றோருவனின் நிலை கவலைக்கிடமாக இருந்தது.

அவர்கள் சென்ற பின் ,மங்கை தானும் விக்ரமை பார்க்க வருவதாக கூறினாள் பாலாவிடம்.

வேண்டாம் மேம்  என்று மறுத்தார் .

இல்லை நானும் வருகிறேன் என்ன ஆனாலும் பரவாயில்லை அவர் கண்விழிப்பதை பார்த்தால் தான் எனக்கு  நிம்மதியாக இருக்கும். நானும் வருவேன் என்று அடம் பிடித்தாள்.

சரி மேம் நான் முதலில் அங்கு நிலைமை எப்படி உள்ளது என்று தெரிந்து கொண்டு உங்களை காலையில் வந்து அழைத்துச் செல்கிறேன் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்  என்றார் பாலா.

காலையில் கண்டிப்பாக வந்து அழைத்துச் செல்ல வேண்டும் இல்லை நானே வந்து விடுவேன் என்றாள் மங்கை.

பாலா மங்கையை அவளின் விடுதியில் விட்டுவிட்டு வந்தார். மங்கையிடம் உடை முழுவதும் இரத்தமாக இருந்தது.

யாராவது கேட்டால் விபத்தில் அடிபட்டவருக்கு உதவி செய்தேன் என்று மட்டும் கூறுங்கள் வேறு எதுவும் சொல்லவேண்டாம் என்றார் பாலா.

  சரி சார் .

கவியும் ஊருக்கு சென்றிருந்ததால் இரவு முழுவதும் தேற்றுவார் யாருமின்றி அழுதுகொண்டு எப்போதடா விடியும் என்று காத்துக் கொண்டிருந்தாள் மங்கை. அப்போது தான் விக்ரமின் மீது இருப்பது அக்கறையோ, ஈர்ப்போ அல்ல அதை எல்லாம் தாண்டிய உயிர்நேசம் என்பதை உணர்ந்தாள். எதிர்காலமே இல்லாத இந்த நேசம் எப்போது உருவானது என்று அவளுக்கே தெரியவில்லை.நடக்காத ஒன்றை பற்றி நினைக்கக்கூடாது என்று தனக்குள்ளேயே தன் நேசத்தை மறைத்துக் கொள்ள முடிவு செய்தாள் பெண்ணவள்.

தன் வீட்டில் சுந்தருக்கும் எனக்கும் திருமணம் பேச்சு நடந்து கொண்டிருப்பது அவளுக்குத் தெரியும். தந்தையின் பேச்சுக்கு மறுத்துப் பேசுவது என்பது கனவில் கூட நடக்காத ஒன்று .அப்படியே தந்தையிடம் பேசினாலும் விக்ரமின் பதவிக்கும் அவன் வீட்டின் வளத்திற்கும் தன்னை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே. இது எல்லாவற்றையும் தாண்டி விக்ரமிற்கு தன் மீது நேசம் இருக்கிறதா என்றே தெரியவில்லை அவளுக்கு.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் விக்ரமிற்காகவும், தன் காதல் பயிர் தளிர் விடும் போதே,அதை தடை செய்ய வேண்டிய தன்னுடைய நிலைமையை எண்ணியும் அழுது தீர்த்தாள் காவலன் மீது காதல் கொண்ட கன்னி.

தன் காதலை உணர்ந்த பின் விக்ரமை பார்த்தால் சாதாரணமாக அவனுடன் பேச முடியுமா என்று சந்தேகமாக இருந்தது மங்கைக்கு.இருந்தாலும் அவர் நலமாக இருக்கிறார் என்று ஒரு முறை நேரில் பார்த்து விட்டு அதற்கு பின் விக்ரமை பார்க்க என்ன நினைக்க கூட கூடாது என்று முடிவெடுத்தாள் மங்கை.

நினைப்பதெல்லாம் நடந்து விடுமா ?

பார்ப்போம்.

மாலை தொடுக்கப்படும்.



Post Reply

Return to “மாலை சூடும் வேளை”