Page 1 of 1

மாலை சூடும் வேளை-12

Posted: Wed Sep 23, 2020 12:17 am
by laxmidevi
மாலை 12

பாடல் வரிகள்

அக்கம் பக்கம் யாருமில்லை
அப்போதும் நான் சொல்லவில்லை
தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன்
நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை
விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை!உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்!!!

அங்கே மருத்துவமனையில் விக்ரமின் கையிலிருந்து தோட்டாவினை நீக்கி விட்டு விக்ரமிற்கு  டிரிப்ஸ் ஏற்றினார்கள். விக்ரம் மயக்கத்தில் இருந்தான் .

பாலா விக்ரமின் தந்தை முரளிதரனுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லி விட்டான்.

அதைக்கேட்டதும்  விக்ரமின் அம்மாவும், அப்பாவும் மருத்துவமனைக்கு வந்து விட்டனர். அம்பிகா விக்ரமை கட்டுடன்  பார்க்கவும்  மயங்கி விட்டார். அவரை எழுப்பி சமாதானப்படுத்தி தூங்கச் சொன்னார்கள் .அவர் ஒரேயடியாக மறுத்து விட்டு விக்ரமின் அருகிலேயே அமர்ந்திருந்தார்.  அம்பிகா குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து அம்பிகாவை தூங்க வைத்தனர்.

எல்லோரையும் பயமுறுத்தி விட்டு காலை 4 மணியளவில் விக்ரம் கண் திறந்தான்.அம்பிகாவும் முரளிதரனும் வந்து பார்த்தனர். அம்பிகாவிற்கு மகனை பார்க்கும் போது கண்கள் கலங்கியது. இருந்தும் கட்டுப்படுத்திக்கொண்டு மகனிடம் பேசினார்.

விக்ரம் இருவரையும் வீட்டிற்கு சென்று பிரஷ் ஆகிவிட்டு காலையில் வருமாறு கூறினான்.இருவரும் இங்கே இருப்பதாக கூறினார்கள்.இருவரையும் வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான் விக்ரம்.


அவர்கள் சென்றபின் உள்ளே வந்த பாலா சார் நேற்று இரவிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை போன் செய்து மேம் உங்களை பற்றி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் உங்களை பார்க்க வர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள் என்ன செய்யலாம் என்றார் பாலா.

மேம் னா யார் பாலாண்ணா என்றான் விக்ரம்.

மங்கை மேம் தான் சார்.

என்ன திடீரென்று மேம் என்கிறீர்கள் பாலாண்ணா.

சும்மா தான் சார்.

பின்னே அவர் உங்கள்  மனைவியாக போகிறவர்.அதனால் மரியாதை கொடுக்கிறேன் என்று வெளிப்படையாகவா சொல்ல முடியும்.

பாலாவை பொருத்தவரை இருவரும் சேர்ந்து வரும்போது தாக்குதல் நடந்ததாகத்தான் நினைத்தார் .மேலும் மங்கையை விக்ரம் தன் காரில் அனுப்பி வைத்தது ,அன்று பூங்காவில் நடந்தது, அடிபட்ட நிலையிலும் மங்கையின்  மீதான அக்கறை,மங்கையின் பரிதவிப்பு எல்லாவற்றையும் இணைத்து அவர்கள் இருவரும் விரும்புவதாக நினைத்தார்.

சரி கூட்டி வாருங்கள் ஆனால் என்னை பார்க்க வருவதாக யாருக்கும் தெரிய வேண்டாம். புரிகிறது தானே அண்ணா.

சரி சார் அப்படியே செய்கிறேன்.

பாலா மங்கையின் ஹாஸ்டல் சென்று  வார்டனிடம் பேசி மங்கையைத் தன் தங்கை எனவும் முக்கியமான விசயமாக அழைத்து போக வந்திருப்பதாகக் கூறினார் .

அவருடைய அடையாள அட்டையை பார்த்த வார்டன் ஒரு லெட்டர் எழுதி வாங்கிக்கொண்டு மங்கையை பாலா உடன் அனுப்பி வைத்தார் .

வண்டியில் ஏறிய உடன் அவர் எப்படி இருக்கிறார் கண்விழித்து விட்டாரா என்று வினவினாள். 

என்ன இரவெல்லாம் தூங்கவே இல்லை போல மேம் கண்ணெல்லாம் ஒரே சிவப்பாக இருக்கு?

தூக்கம் வரவில்லை சார் .

இருவரும் மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.

விக்ரமின் பாதுகாப்புக்கு இருந்தவர்களிடம் மங்கையை தன் தங்கை எனவும் வீட்டிற்கு கூட்டி செல்லும் போதும் அப்படியே சாரை பார்த்து விட்டு போவதாக வந்ததாக கூறினார் .

மங்கையே விக்ரமின் அறையில் விட்டுவிட்டு பேசிக் கொண்டிருங்கள் வந்துவிடுகிறேன் என்று வெளியேறிவிட்டார் பாலா.

அசதியில்  விக்ரம் கண்களை மூடி படுத்திருந்தான். அறை திறக்கும் சத்தம் கேட்டு கண்களைத் திறந்து பார்த்தான்.

எப்பொழுதும் கம்பீரத்துடன் கலையாக இருக்கும் முகம் வாடி களைத்துப் போய் இருந்தது. அந்த நிலையில் விக்ரமை பார்த்த மங்கையின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

இதை பார்த்த விக்ரம் காலையிலேயே அழுகையா? இப்படி அழுவதற்கு தான் அடம்பிடித்து என்னை பார்க்க வந்தாயா என்றான்.

எப்படி இருக்கீங்க இப்ப பரவாயில்லையா என்றாள் அழுகையோடு.

நான் நல்லா இருக்கேன் கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளவுதான்.
தயவுசெஞ்சு அழாதேம்மா .

கொஞ்சம் கவனமாக  ஆக இருந்திருக்ககூடாதா?

இனிமேல் கவனமாக இருப்பேன்.

காஃபி சாப்பிடுகிறாயா மங்கை?

இல்லை சார் வேண்டாம்.

ஆனால் எனக்கு வேண்டுமே.

காஃபி  எல்லாம் சாப்பிடக்கூடாது வேணும்னா டாக்டர்ட்ட கேட்டுட்டு பால் சாப்பிடுங்க என்று மிரட்டினாள் அவள்.

அவனும் அப்படியே ஆகட்டும் ஏதாவது கொடு நேற்று மதியத்தில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லை என்றான் அவன் பதிலுக்கு .

அதன்படி பாலா மருத்துவரிடம் கேட்டு விட்டு மங்கைக்கு காபியும் விக்ரமிற்கு பாலும் கொண்டு வந்து கொடுத்து விட்டு போனார்.

விக்ரமின் வலது கையில் ட்ரிப் செய்து கொண்டிருந்தது இடது கையிலும் தோட்டாவை நீக்கிவிட்டு கடு போட்டிருந்தனர். டிரிப்ஸ் போட்டிருந்த கையில் பால் டம்ளரை எடுக்கவும் வலியில் முகம் சுருங்கியது விக்ரமிற்கு .

என்ன சார் நீங்க நான் கொடுக்க மாட்டனா என்று விக்ரமை கொஞ்சம் கொஞ்சமாக பாலை பருக வைத்தாள்.

மங்கையின் அக்கறையான செய்கையில் தன் அன்னையை கண்டான் விக்ரம்.

மங்கையும் தன் காப்பி குடித்துவிட்டு விக்ரமிடம் எவ்ளோ ஹாஸ்பிடல் இருக்கும்னு சொல்லி இருக்காங்க வேற ஏதும் பிரச்சினை இல்லையே என்று கேட்டாள்.

தெரியல காலையில் தான் கேட்கணும்.

உடனே வேலைக்கு கிளம்பிடதீங்க சார். ரெஸ்ட் எடுங்க.கைகளில் காயம் எல்லாம் நன்றாக ஆறட்டும். பிறகு வேலையை போகலாம்.பார்த்து பத்திரமா இருங்க என்றாள் மங்கை.

அதற்கு ஒரு புன்னகையையே பதிலாக அவன்.
மங்கையின் அக்கறையும் அவனுக்கான பரிதவிப்பும் காவலன் கண்களில் மலர்ச்சியையும் இதழ்களில் புன்னகையும்  தந்தது.

புன்னகையை கண்டு மெய்மறந்து நின்றாள் அவள் .

கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இரவு அறுவை சிகிச்சை  செய்திருக்கிறார்கள். 8 மணி நேரமாக மயக்கத்தில் இருக்கிறான்.அவன் முகத்தில் அந்த வலி சிறிதும் இல்லை. மாறாக அவன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது மங்கையவளை கண்டதால்.

இருவரும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்த போதும கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார் பாலா.

சார் டைம் ஆச்சு இனி எல்லாரும் வந்துடுவாங்க என்றார்.

சரி மங்கையும் நீ கிளம்பு  பத்திரமாக இரு ஏதேனும் தேவை ஏற்பட்டால் பாலாவிற்கு கூப்பிடு என்றான் விக்ரம்.

அதைக்கேட்டதும் மங்கையின் முகம் வாடியது.என்னை தொந்தரவு செய்யாதே என்று மறைமுகமாக சொல்கிறாரோ என்று எண்ணினாள் அவள்.

உண்மையில் தன்னால் அவளுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று விக்ரம் அவ்வாறு கூறினான். அவனுடைய எதிரிகள் விக்ரமை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு அவளை ஏதேனும் செய்து விடக்கூடாது என்றெண்ணினான்.

சரி சார்.நீங்களும் உங்க உடம்பு பத்திரமா பாத்துக்கோங்க இப்பதான் ஆபரேஷன் பண்ணி இருக்கு இன்னைக்கு ஃபுல்லா நல்லா ரெஸ்ட் எடுங்க. வருகிறேன் என்று சொல்லும் போதே ,இனி அவனை பார்க்க முடியாதே என்று எண்ணி கலங்கினாள் பெண்ணவள்.

அதை கவனித்த அவளவன் என்னவென்று ஒற்றை புருவம் தூக்கி கண்ணால் கேட்டான்.

தன் கண்ணை மூடித்திறந்து ஒன்றுமில்லை என்று பதிலளித்தாள் அவள்.

இருவரும் வார்த்தைகளின்றி மனதாலேயே பேசிக்கொண்டனர்.

பாலா மங்கையை கொண்டு போய் அவளுடைய விடுதியில் விட்டுவிட்டு வந்தார்.

அவரிடம் மங்கை சார் நீங்க கொஞ்சம் அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றாள்.

கண்டிப்பாக என்று பதிலளித்தார் பாலா.

விக்ரம் இரண்டு நாட்கள் மட்டும் மருத்துவமனையில் இருந்தான் பின்பு வீட்டிற்கு சென்றுவிட்டான்.
அவன் தங்கை மணிமேகலை, மலர் மற்றும் மலரின் குடும்பத்தினர் அனைவரும் வந்து விக்ரமை பார்த்து விட்டு சென்றனர்.திருமணம் பேசும் போது இப்படி நடந்து விட்டதே என்று மலரின் தந்தை ராகவனுக்கு கொஞ்சம் கலக்கமாக இருந்தது .இதை கவனித்த முரளிதரன் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் ராகவா விக்ரம் உடல் நலம் பெறவும் மற்றதை பற்றி பேசலாம் என்று விட்டார் . அவனுடைய வேலையில் இதெல்லாம் சகஜம் தானே.இதையெல்லாம் சகுன தடையாக யாரும் என்று எண்ண வேண்டாம் என்று ஆறுதல் கூறினார்.

மங்கைக்கும் விக்ரமை பார்க்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால் எங்கே அவனை பார்த்தால் அவளின் மன உறுதி குலைந்து விடுமோ என்று அஞ்சி பார்க்க முயலவில்லை .
பாலாவின் மொபைலுக்கு அழைத்து விக்ரமின் உடல்நிலை பற்றி தெரிந்து.
கொண்டாள்.

துப்பாக்கி குண்டு கையின் மேல் சதையில் பட்டிருந்ததால் ரத்த இழப்பைத் தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை விக்ரமிற்கு.தன் அன்னை மற்றும் தந்தையின் கவனிப்பில் விக்ரமின் உடல்நிலை நன்றாக தேறி வந்தது.

வீட்டிலிருந்த விக்ரமை பார்க்க வந்த பாலா சார் மேம் போன் பண்ணாங்க உங்களை பற்றித்தான் கேட்டாங்க ?

மேம் ஆ இவர் யாரை சொல்கிறார் என்று குழம்பியவாறே யார் பாலா அண்ணா?

சார் மங்கை என்று இழுத்தார் பாலா.

மங்கையா ? என் நம்பர் அவளிடம் இல்லை அதனால் உங்களுக்கு அழைத்து இருப்பாள் சரி எதற்காக அழைத்தாள்?

உங்கள் உடல்நிலை பற்றி தான் விசாரித்தார் சார் என்று கூறி விட்டு
குழப்பத்துடன் விக்ரமை பார்த்தார்.

பாலாவை பொருத்தவரை விக்ரமும் மங்ககையும் சேர்ந்து செல்லும் போதும் தாக்குதல் நடந்து இருக்கிறது என்று நினைத்தார் .மேலும் அவர் விக்ரம் மங்கையை தன் காரில் கொண்டு போய்விட சொன்னது, அவளுக்கு எந்த பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ள சொன்னது எல்லாத்தையும் சேர்த்து இருவரும் விரும்புகிறார்கள் என்று எண்ணினார் .

ஆனால் என்னுடைய நம்பர் அவளிடம் இல்லை என்று விக்ரம் கூறியதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவருக்கு தெரியவில்லை. தனது மேலதிகாரியிடம் இதற்கு மேலும் கேட்க விரும்பவில்லை அவர்.

பின்பு வேலை சம்பந்தமாக பேசிவிட்டு கிளம்பும்போது முரளிதரன் பாலாவை அழைத்தார்.

பாலா அன்று விக்ரமிற்கு அடிபட்ட போது உடன் இருந்த பெண் யார்? என்று வினாவினார் முரளிதரன்.

அப்படி யாரும் இல்லை என்று பதில் கூறினார் பாலா.

சரி அன்று என்ன நடந்தது?

சார் ஆபத்தில் மாட்டிக் கொள்ளவும் எப்போதும்போல எங்களுக்கும எமர்ஜென்சி சிக்னல் அளித்தார். நாங்கள் போய் அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு உங்களுக்கு தகவல் அளித்தோம்.

சரி அப்படியே இருக்கட்டும் விக்ரமின் கை காயத்தில் கட்டி இருந்த துப்பட்டா யாருடையது? எனக்கு தெரியும் தமிழ்நாடு காவலர் சீருடையில் துப்பட்டா இருப்பதாக எனக்கு தெரியவில்லை அதுவும் பாசிகளோடு ?
என்று மடக்கினார் முரளிதரன் .

என்ன பதில் சொல்வது என்று பாலாவுக்கு தெரியவில்லை. விக்ரம் மங்கையை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் இதனால் அவளுக்கு ஏதும் பிரச்சினை வரக்கூடாது என்று விட்டான்.

இப்பொழுது முரளிதரன் கேட்கவும் தயங்குகினார் பாலா.

உண்மை மட்டும் வேண்டும் பாலா என்றார் முரளிதரன் .

சார் இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?

நான் உங்கள் சாருக்கே அப்பா பாலா மறந்துவிட்டீர்களா? வித்தை கற்றுக் கொடுத்தவனிடமே உங்கள் வித்தையை காண்பிக்கிறீர்களா?


சாரி சார் என்று விட்டு பாலா தனக்கு தெரிந்தவற்றை கூறினார் .

விக்ரம் அந்த பெண் மங்கையை விரும்புகிறானா ?

தெரியல சார் என்றார் பாலா .

சரி நான் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு இந்த விஷயம் தெரியும் என்று விக்ரமிற்கு தெரியவேண்டாம் என்று கூறிவிட்டார் முரளிதரன்.

சரி சார் என்று பாலா ஸ்டேஷன் கிளம்பி சென்றார்.

முரளிதரனின் முடிவு என்னவாக இருக்கும்.

பார்ப்போம்.

மாலை தொடுக்கப்படும்.

Hi friends,

Please share your valuable comments.its helps me a lot.
Thank you.

Regards
Laxmidevi.