மாலை சூடும் வேளை-17
Posted: Sun Oct 04, 2020 12:53 am
மாலை -17
பாடல் வரிகள்
வேணா வேணாண்ணு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்தநெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாலும்வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்காதல் அதிகரிக்கும்...
பெங்களூர்.
அம்முவை பார்ப்பதற்காக சுந்தர் கனியின் இல்லத்திற்கு வந்திருந்தான் அப்போது அம்மு தூங்கி விடவே உறங்கும் குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தான்.
அம்மு ரொம்ப கியூட் இல்ல கனி என்றான்.
அதைக்கேட்டதும் கனியின்
கண்கள் கலங்கியது.
என்னம்மா என்ன ஆச்சு ஏன் கண்ணு கலங்குது?
அதெல்லாம் ஒன்றுமில்லை.
நீ ரொம்ப டயர்டா இருக்குற மாதிரி இருக்கு சுந்தர்?
கொஞ்சம் வேலை அதிகம் .ஊருக்கு போலாம்னு இருக்கேன். நான்கு நாள் லீவ் அதான் இப்பவே வேலையெல்லாம் முடித்து வைக்கிறேன். நீ பத்திரமா இருந்து கொள்வாய் தானே?
என்னாச்சு நாலு நாள் லீவு ?என்று கேட்டுவிட்டு ஏதோ தவறு செய்த குழந்தையை போல் தன் நாக்கை கடித்தாள் கனி.
இப்படி உரிமையாக நீ என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன் உனக்கு தயக்கம் ஏதும் தேவையில்லை நீ என்னிடம் எதையும் கேட்கலாம்.
எல்லாம் நம்முடைய திருமண விஷயமாக தான் நம் வீட்டில் பேசவேண்டும் அதற்காகத்தான்.இது போனில் பேசுகின்ற விஷயம் இல்லை அதனால நேர்ல போய் மாமா கிட்ட பேசி அப்புறமா அம்மா அப்பா கிட்ட சம்மதம் வாங்கனும். மாமா சொன்னா கண்டிப்பா அம்மாவும் அப்பாவும் கேட்பாங்க .
நீ என்னை கல்யாணம் பண்ணிக்கறதில உறுதியா இருக்கியா சுந்தர்.
கண்டிப்பா .ஒரு முடிவை எடுத்ததற்கு அப்புறம் அதுல இருந்து நான் பின்வாங்குவது, விலகுவதோ இல்லை கனி என்றான் உறுதியாக
நான் கூட முன்னாடி அப்படித்தான் சுந்தர் இருந்தேன். நீ இவ்வளவு உறுதியாக இருக்கும்போது நான் என்னை பற்றிய விஷயங்களை உன்கிட்ட முழுசா சொல்லனும்.
நீ வீட்ல சொல்லு அவங்களுக்கு ஓகேனா. மத்தத அப்பறம் பேசலாம்.
நான் எப்பவும் சொல்றது தான் உன்னோட பாஸ்ட் பத்தி எனக்கு பிரச்சனை இல்லை
இல்ல சுந்தர் சும்மா இரு உனக்கு தேவைப்படாமல் இருக்கலாம் ஆனால் வீட்டில் இருப்பவர்களுக்கு என்னைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் இன்னொரு ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை .
தன்னைப் பற்றிய விவரங்களை கூறினாள் கனிமொழி .
அதைக்கேட்டு அதிர்ச்சியானான் சுந்தர்.
உனக்கு பின்னால் இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவில்லை . உண்மையிலேயே இப்போது தான் உன்னை நான் அதிகமாக விரும்புகிறேன். எல்லோருமே வாழ்க்கையில் ஒரு சில இடங்களில் தவறுவது இயல்புதான் ஆனால் அதைகடந்து எத்தனை பேர் தன் வாழ்வை சரியாக அமைத்துக் கொள்கிறார்கள் சொல்லு பெரும்பாலானோர் அதை விட்டு வெளியேற முயற்சிப்பதே இல்லை . ஆனால் நீ உன்னுடைய கருப்பு பக்கங்களையும் வண்ணமயமாக மாற்றிக்கொண்டுள்ளாய் .உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் கண்டிப்பாக என் வீட்டிலும் ஒத்துக்கொள்வார்கள்.
சுந்தர் ஒரே ஒரு விஷயம் எப்பொழுதும் சம்மூ என்னுடைய மகளாகத் தான் உலகிற்கு அடையாளம் காட்டப்பட வேண்டும் .அதில் நான் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள மாட்டேன் எதற்காகவும் புரிகிறது தானே இல்லை ?
இல்லை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்றான் சுந்தர்.
என்ன என்று கேட்டு அதிர்ச்சியானாள் கனி.
சுந்தர் சிரித்துக்கொண்டே அம்மு உன்னுடைய மகளாக அல்ல நம்முடைய மகளாக அடையாளம் காட்டப்படுவாள் சரிதானா என்றான்.
சரி கனி. நம் திருமணத்திற்கு வைதேகி அம்மாவிடம் அனுமதி வாங்கினால் போதும் என்று எண்ணியிருந்தேன் இப்பொழுது உன்னுடைய பெற்றோரிடமும் அனுமதி வாங்க வேண்டும் தானே விவரம் கூறினால் நான் அவர்களுடன் பேசுகிறேன்.
உன்னுடைய வீட்டில் பேசி சம்மதம் வாங்கிய பிறகு என் வீட்டில் பேசலாம். ஏற்கனவே என்னால் அவர்கள் அடைந்த துன்பம் போதும் .இப்போது உன் வீட்டில் ஒத்துக் கொண்டால் நாம் இருவரும் அவர்களிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கலாம் .இல்லையெனில் அவர்கள் எப்போதும் போல நான் எங்கேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளட்டும்.
அப்போ என் மீது நம்பிக்கை இல்லையா இல்லையா கனி?
சுந்தர் உன் மீது நம்பிக்கை இருப்பதால் தான் என் பெற்றோர்களிடம் கூட கூறாததை உன்னிடம் கூறியிருக்கிறேன் .
கண்டிப்பாக உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன் கனி.
அப்புறம் இன்னொரு விஷயம் உன் வீட்டில் ஒத்துக் கொண்டால்தான் நான் திருமணத்திற்கு சம்மதிப்பேன் சரிதானா இல்லையெனில் நீ வேறு நல்ல பெண்ணை பார்த்து என்று சொல்லும்போதே கனியின் குரல் உடைந்து அழுகை எட்டிப்பார்த்தது .
கனியை இழுத்து அணைத்துக் கொண்டான் . பைத்தியமாடி நீ? நான் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உன்னால் சொல்லக் கூட முடியவில்லை அவ்வாறு இருக்க நான் திருமணம் செய்து கொண்டால் உன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா ?எப்போது உன்னை அந்தமானில் பார்த்தேனோ அப்போதே முடிவு செய்துவிட்டேன் நீதான் என் மனைவி என்று.நானெல்லாம் ஸ்ரீராமர் வாரிசாக்கும். ஒரு சொல் ஒரு பானம் ஒரு தாரம் என்றான் கேலியாக அவன்.
அதற்கு உன் வீட்டில் சம்மதிக்க வேண்டுமே என்றாள் கனி கவலையாக.
கண்டிப்பாக சம்மதிக்க வைப்பேன் என்ன கொஞ்ச நாட்கள் ஆகலாம் அவ்வளவுதான்.சரி நான் கிளம்புகிறேன் நான்கு நாட்கள் பத்திரமா இருந்து கொள்வாய் தானே.
நானும் சம்முவும் வைதேகி அம்மாவை பார்ப்பதற்காக சென்னை போகலாம் என்று இருக்கிறோம்.
உன்னை அழைத்து செல்லலாம் என்று தான் நினைத்திருந்தோம் பரவாயில்லை .நீ ஊருக்கு போய்ட்டு வா என்று பதில் கூறினால் கனி.
ஆமாம் சுந்தர் கேட்க மறந்து போய் உன் சொந்த ஊர் எது ?
சுந்தர் வாய்விட்டு சிரித்தான் எந்த ஊர் என்ன என்று தெரியாமலேயே திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டாயா நல்ல பெண் கனி ?
நான் சுந்தர் என்ற மனிதனை தான் விரும்பினேன் மற்ற விவரங்கள் நினைக்கத் தேவையில்லை .
அப்பா ஒரு வழியாக விரும்பினேன் என்பதை ஒத்துக் கொள்கிறாயே அதற்காக இவ்வளவு பேச வேண்டியுள்ளது என்று கேலி செய்தான் சுந்தர்.
என் அப்பாவின் சொந்த ஊர் திண்டுக்கல் .என் அம்மா பிறந்தது மதுரை .
திண்டுக்கல் என்ற பெயரைக் கேட்டதும் கணியின் முகம் அதிர்ந்தது .அதை சுந்தருக்கு தெரியாமல் புன்னகையில் மறைத்துக் கொண்டாள்.
அவ்வளவுதானா நான்கு நாட்கள் பிரிந்திருக்க போகிறோம் வேறு ஒன்றும் இல்லையா என்றான் சுந்தர் ஏக்கமாக.
ஒன்றுமில்லை சுந்தர் கிளம்பு நேரம் ஆகிவிட்டது என்றவளை சேர்த்து அணைத்து அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.
சரி சரி பத்திரமாக போய்விட்டு வாருங்கள் என்று கூறி விடுவித்தான் .
இருவரும் தத்தமது பயணத்தை தொடங்கினர்.
இருவரின் பயணம் வெற்றி பெறுமா?
முரளிதரன் விக்ரமிடம் கூறியவாறு விஜய்ஆனந்தை பற்றி ராகவனிடம் பேசினார் .அவரும் முரளிதரன் சொன்னவுடன் நீங்கள் பார்த்து விட்டால் நான் விசாரிப்பதற்கு என்ன இருக்கிறது மாமா அந்த வரனையே முடித்து விடலாம் என்றார் .
நீ விஜயிடம் ஒரு முறை பேசிவிடு ராகவா . அதன்படி விஜய் அங்கிருந்து தன் வருங்கால மாமனாருடன் போனில் உரையாடினான் .அவர்களுக்கும் விஜயை பிடித்துவிட்டது .
முரளிதரன் முன்னெச்சரிக்கையாக விஜயை பற்றிய விவரங்கள் அடங்கிய குறிப்பை மட்டும் அவரிடம் கொடுத்தார் மலருக்கும் வீட்டிலும் காண்பிப்பதற்காக.
மலரிடம் மாப்பிள்ளை விவரம் காண்பிக்கப்பட்டது .அந்தக் கவரை திறந்து பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிந்தது .
இது எப்படி சாத்தியம் என்ற எண்ணியவாறு தன் தந்தையிடம் சம்மதம் என்று மட்டும் கூறினாள் .
விஜயை நிராகரிப்பதற்கு எந்த ஒரு குறையும் இல்லை .எனவே பூரணியும் முழுமனதுடன் அந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். தன் அறைக்கு சென்ற மலர் விக்ரமிற்கு அழைத்து பேசினாள்.
என்னம்மா என்னை கழட்டி விட்டுவிட்டு உன் அப்பா பார்த்த பையனை திருமணம் செய்து கொள்ளப் போகிறாயமே நான் பாவமில்லையா என்று கிண்டலடித்தான் விக்ரம்.
இது எப்படி சாத்தியமாயிற்று மாமா? அப்பா எப்படி ஒத்துக் கொண்டார்?
அதைப்பற்றி எல்லாம் நீ கவலை படாதே மலர்குட்டி, கல்யாணப்பெண்ணாக கலர் கலராக கனவு கொண்டு இரு.மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் சரிதானா?
போங்க மாமா என்று சிணுங்கினால் மலர்.
அப்பா நீங்கள் யாரையோ விரும்புவதாக கூறினார் அது உண்மையா இல்லை எனக்காக கூறினீர்களா?
இப்போதுதானே கூறினேன் கனவு காண்பது மட்டும்தான் உன் வேலை சரிதானா? என்று கூறி சிரித்தபடியே போனை கட் செய்துவிட்டான் விக்ரம்.
மலருக்கு அப்பொழுது விஜயுடன் பேச வேண்டியிருந்ததால் ரொம்பவும் துருவாமல் அத்துடன் விட்டு விட்டாள். மலர் விஜய்க்கு அழைத்த போது அவளுடைய அழைப்பை ஏற்கவில்லை விஜய்.
இந்த மூன்று வருடங்களில் அவன் அழைத்தபோது ஒரு முறை கூட அவனுடைய அழைப்பை மலர் ஏற்கவில்லை. இப்பொழுது அவள் அழைத்தால் மட்டும் உடனே பேசி விட வேண்டுமா என்று ஊடல் கொண்டு அவளூடைய அழைப்பை ஏற்க மறுத்தான்.
பூரணியும் ராகவனும் தங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு வரலாம் என்று எண்ணினார்கள்.
திண்டுக்கல்லில்
வேடசந்தூரில் உள்ள வேலப்பர் தான் அவர்களின் குலதெய்வம். பூஜைக்கு ராகவன் அம்பிகாவையும் முரளிதரனையும் அழைத்தார்.
குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் அபி,அஜயும் ,மணியும்உடன் சென்றனர்.
விக்ரம்தான் புலம்பினான் எல்லோரும் பிக்னிக் போறீங்க நான் மட்டும் எப்படி தனியாக வீட்டில் இருப்பேன்?
நீயும் வர வேண்டியதுதானே என்றார் அம்பிகா .
எங்கமா வேலை இருக்கு நான்கு நாள் லீவ் எல்லாம் சாத்தியமே இல்லை. நீங்க போயிட்டு வாங்க அடுத்த முறை நான் வர பார்க்கிறேன் என்றான் விக்ரம்.
விக்ரமின் வீட்டில் அனைவரும் திண்டுக்கல்லுக்கு கிளம்பினார்.
இவர்களின் பயணத்தில் வேலப்பர் அவர்களுக்கு வைத்திருப்பது என்ன?
பார்ப்போம்...
மாலை தொடுக்கப்படும்...