மாலை சூடும் வேளை-19
Posted: Thu Oct 08, 2020 12:32 am
மாலை-19
பாடல் வரிகள்
என்ன நடந்ததால்உந்தன் முகம் சிவந்தது
எந்த நினைவிலே சோகம்எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கமேனடி
மனசுக்கேத்த மாப்பிள்ளைய உன்மனசு போல மனம்முடிப்பேன்
சீமந்தமும் நடத்தி வெப்பேன் உன்குழந்தைகள நான் சுமப்பேன்
பதினாறுகளும் பெற்று நீ வாழணும் அதபார்த்து நான் தினம் தினம் மகிழணும் நம்ம ஊரும்உறவும் உனது வாழ்வை மகிழ்ந்து பாடணும்...
சுந்தர் பெங்களூரில் இருந்து தன் வீட்டிற்கு கூட செல்லாமல் தன் அம்மாவிடம் சொல்லி விட்டு மாமா வீட்டிற்கு வந்தான்.
அவனைப் பார்த்ததும் சந்தோஷத்தில் ராமநாதன் நானே உன்னை வர சொல்லலாம் என்று நினைத்திருந்தேன் சுந்தர், நல்லவேளை நீயே வந்து விட்டாய் என்றார்.
பார்த்தீர்களா நீங்கள் நினைத்த உடனே நான் வந்து விட்டேன் மாமா என்று கூறி சிரித்தான் சுந்தர்.
சரிடா , நீ குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு வா உன்னிடம் சற்று பேச வேண்டும் .
என்ன வரப்போகிறதோ என்ற பயத்துடனேயே வேகமாக குளித்து அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு வந்து சொல்லுங்கள் மாமா என்ன விஷயம் என்றான் சுந்தர்.
ராமநாதன் சுந்தரிடம் மங்கைக்கு வரன் அமைந்த விஷயத்தைப் பற்றி சொன்னார்.
அவர்கள் கேட்டதும் நானும் சரி என்று விட்டேன் தம்பி ஆனால் இவ்வளவு அவசரமாக செய்ய வேண்டுமா என்று தோன்றுகிறது .அதனால் உன்னை அழைத்து உன்னிடம் இது பற்றி யோசனை கேட்கலாம் என்று இருந்தேன்.
சரி மாமா கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.
சுந்தர் மாப்பிள்ளை வீட்டினரை பற்றிய விவரங்களை வாங்கி தன் நண்பர்கள் மூலமாக விசாரித்துப் பார்த்தான் விசாரித்த அளவில் அவனுக்கு முழு திருப்தியே.
மாமா மாப்பிள்ளையும் சரி மாப்பிள்ளையின் குடும்பமும் சரி தங்கமானவர்கள் .அதில் எந்த சந்தேகமும் இல்லை .அதனால் நாம் பெண்ணை நம்பி கொடுக்கலாம் திருமண ஏற்பாட்டை கவனியுங்கள். அது சரி மங்கையிடம் பேசி விட்டீர்களா ? அவளுக்கு சம்மதம் தானா?
உங்கள் விருப்பம் தான் என்னுடைய விருப்பம் என்றதாக பெருமையுடன் கூறினார் ராமநாதன்.
என்றுமே என் மகள் என் பேச்சை மீற மாட்டாள் என்று சொன்னார் கர்வத்துடன்.இன்னும் பத்து நாட்களில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று கேட்கிறார்கள் நீதான் எனக்கு கூடமாட இருந்து எல்லா உதவியும் செய்ய வேண்டும் .
கண்டிப்பாக மாமா .
இப்போதைக்கு தன்னுடைய விஷயத்தை பேச இது நேரமில்லை என்று உணர்ந்து மங்கையின் திருமணம் நன்றாக முடிந்ததும் தன் விருப்பத்தைப்பற்றி வீட்டில் கூறலாம் என்று நினைத்தான்.
மங்கையின் சம்மதத்தை அறிய வேண்டி அவளின் அறைக்கு சென்றான் சுந்தர்.
என்ன கல்யாண பொண்ணு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று அவளை வம்பிழுத்தான்.
சுந்தர் கேட்டதும் அவன் மடியிலே படுத்து அழ தொடங்கினாள் மங்கை.
மாமா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் எப்படியாவது அப்பாவிடம் பேசி இதை நிறுத்தி விடுங்கள்.
சரி மங்கை நான் மாமாவிடம் பேசுகிறேன் .ஏன் உனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லையா ? முதல மாப்பிள ஃபோட்டோவாது நீ பார்த்தாயா என்று கேட்டான்.
இல்லை மாமா .
என்ன உன் அப்பா உன்னிடம் மாப்பிள்ளை ஃபோட்டோவை கூட காட்டவில்லையா ?
இல்லை மாமா .அம்மாவின் மொபைலில் இருக்கிறது பார்த்துக்கொள்ள சொன்னார். நான் தான் பார்க்கவில்லை என்றாள் வருத்தமாக .
சரி நீ முதலில் மாப்பிள்ளையை பார். பிறகு உனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் மாமாவிடம் பேசுகிறேன் சரிதானா மாப்பிள்ளை பார்ப்பதற்கு சும்மா ஹிரோ போல இருக்கிறார். பார்ப்பதற்கு மட்டுமல்ல அவர் உண்மையிலேயே ஹீரோதான் என்று கூறினான். வேண்டாம் என்று மறுத்தவள். சுந்தரின் வற்புறுத்திலினால் அவன் மொபைலில் இருந்த மாப்பிள்ளையின் போட்டோவை பார்த்தாள். போட்டோவை பார்த்த மங்கைக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.
அதற்குள் ராமநாதன் சுந்தரை அழைக்கவே மாமாவிடம் என்னவென்று கேட்டு விட்டு வந்து விடுகிறேன் என்று வெளியில் சென்றான் சுந்தர்
பேங்க் வரைக்கும் போகணும் வர்றியா என்றான் ராமநாதன்.
ராமநாதன் அவ்வாறு கேட்டதும் சுந்தர் மங்கையுடன் பேசிக்கொண்டிருந்ததை மறந்துவிட்டு
சரி மாமா போகலாம் என்றான்.
அம்மாவிடம் சொல்லி விட்டீர்களா?
இல்லடா இனிமேல்தான் சொல்ல வேண்டும். இரண்டு நாட்களில் எல்லாம் முடிவாகிவிட்டது .எனக்கே நம்ப முடியவில்லை .
பின் தங்கை அழைத்து விஷயத்தைக் கூறினார் .சுந்தருக்குத்தான் முதலில் பெண் பார்த்தேன் .ஆனால் எதிர்பார்க்காமல் மங்கையின் திருமணம் முடிவாகிவிட்டது. மங்கையின் திருமணத்திற்கு பிறகு சுந்தருக்கு ஏற்ற நல்ல பெண்ணாய் பார்க்கலாம் சரிதானா .தவறாக எடுத்துக் கொள்ளாதே பத்மா. நீயும் மாப்பிள்ளையும் முன் நின்றுதான் எல்லாம் செய்ய வேண்டும் என்றார் ராமநாதன்.
தவறாக நினைக்க என்ன இருக்கிறது அண்ணா. எப்போது எது நடக்க வேண்டுமோ அது தானே நடக்கும் . எனக்கு மங்கையும் மகள் போல தான்.முதலில் நல்லபடியாக மங்கை திருமணத்தை முடிப்போம் . நானும் அவரும் இன்னும் இரண்டு நாட்களில் மதுரை வருகிறோம். எல்லோரும் சேர்ந்து கல்யாண வேலையை பார்ப்போம்.
சுந்தர் மாமாவுடன் வங்கிக்கு சென்று விட்டு வந்து கனிக்கு அழைத்து மங்கையின் திருமணம் பற்றி கூறினான்.
முதலில் மங்கையின் திருமணத்தை நல்லபடியாக முடியுங்கள் பிறகு நம்முடைய விஷயத்தைப் பற்றி பார்க்கலாம் .ஒன்னும் அவசரம் இல்லை என்றாள் கனி சிரித்தவாறே.
நான் எதுவும் கூறாமலேயே என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடக்கும் இப்படி ஒரு பெண் மனைவியாக கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தான் சுந்தர்.
பின் அம்முவிடம் பேசி விட்டு பத்திரமாக இருங்கள் நான் வர இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஆகும் என்று கூறினான்.
சரி பத்திரமாக இருக்கோம். வேலையெல்லாம் முடிச்சிட்டு வா என்று பதில் கூறினார்கள் கனி. தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து தன்னுடைய விடுமுறையை இன்னும் பத்து நாட்களுக்கு நீட்டித்தான் சுந்தர்.மங்கையிடம் மாப்பிள்ளையின் போட்டோவை காட்டி அவளின் முடிவை கேட்க நினைத்ததை மறந்தே போனான்
இவ்வாறாக எல்லோரும் மங்கையின் திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.
விக்ரம் தன் தந்தையிடமிருந்து வரும் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
தந்தையின் பதிலை பொறுத்துதான் மங்கையிடம் பேச முடியும் . அவள் வேறு என்ன செய்து கொண்டிருக்கிறளோ என்ற கவலை வேறு அவனை வாட்டியது.மங்கையின் அழுகுரலலே தன் காதுகளில் மீண்டும் ஒலிப்பது போல் இருந்தால் விக்ரமிற்கு இரவில் பொட்டுத் தூக்கம் இல்லை.மங்கை அழும்போது விக்ரமிற்கு உயிர் வரை சென்று வலித்தது. உடனே மதுரைக்குச் சென்று அவளை அணைத்து ஆறுதல் படுத்த வேண்டும் என மனம் பரபரத்தது.
அதை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தவன் தந்தையிடம் இருந்து தகவல்கள் ஏதும் வராமல் போகவே விக்ரமமே தந்தைக்கு அழைத்து பேசினான்
அப்பா என்ன மங்கை வீட்ல பேசுனிங்களா? என்ன சொன்னாங்க?
இல்லப்பா நான் பேசல அங்கு ஏதோ கல்யாணம் உறுதி பண்ணி இருப்பாங்கனு நினைச்சா அங்க திருமண ஏற்பாடே பண்ணி கொண்டு இருக்கிறார்கள். இப்போது எப்படி கல்யாணத்தை நிறுத்துங்க என் பையனுக்கு உங்க பொண்ண குடுங்கன்னு கேட்கமுடியும்?
அப்பா என்ன பேசுறீங்க, அவங்க இவ்வளவு அவசரமா திருமண ஏற்பாடு செய்வாங்கனு நமக்கு எப்படி தெரியும். தெரிஞ்சதுக்கப்புறம் கேட்காம இருக்கு முடியுமா?
நீ சொல்றது சரி தான் தம்பி அப்படியே நான் போய் பேசினாலும் இப்ப கல்யாணத்தை நிறுத்துங்க
உங்க பொண்ணு படிப்பு முடிக்கவும் என் பையனுக்கு மங்கையை கட்டி வைக்கிறோம் சொன்னா ஒத்துக்குவாங்களா நீயே சொல்லு விக்ரம் ?
விக்ரம் தந்தை பேசியதில் சற்று கலங்கித்தான் போனான். அப்ப என்னுடைய அரசி எனக்கு இல்லையா? முடியாது அவளை யாருக்காவும் விட்டுத்தர முடியாது . கலக்கம் எல்லாம் ஒரு நொடி தான் பின் பழைய விக்ரமாக தந்தையிடம் பேசினான்.
இல்லப்பா நீங்க போய் மங்கை அப்பா கிட்ட பேசுங்க அவர் முடியாதுன்னு சொன்னா நான் அவளை தூக்கிட்டு வர கூட யோசிக்க மாட்டேன் . பொண்ணு இருந்தா தானே கல்யாணம் பண்ணுவாங்க.
என்னடா ஒரு போலீஸ்காரன் மாதிரியா பேசுற?
என்னப்பா போலீஸ்காரனா, நாங்களும் மனுஷங்கதானே எங்களுக்கும் உணர்வுகள் இருக்கும் இல்ல . அவளுக்கு என்னை பிடிக்காமல் இருந்திருந்தால் நானே விலகி போய் இருப்பேன். அவளுக்கு என்ன பிடித்திருக்கும் போது எனக்கும் அவளை பிடித்து இருக்கும் போது நான் இதை கூட செய்யலைன்னா எப்படி?
சரி வேணும்னா ஒண்ணு பண்ணலாம் நான் மங்கை அப்பா கிட்ட போய் பேசுறேன். அவங்க முடிவு பண்ண அதே முகூர்த்தத்தில் நீ மங்கையே கல்யாணம் பண்ணிக்கோ .என்ன இப்படி பண்ணலாமா? உனக்கு ஓகே தானே?
பத்து நாள் எப்படிப்பா கல்யாணம்?
அது என்னோட பிரச்சினை கல்யாணம் சிம்பிளாக நடக்கட்டும் .பிறகு கோயம்புத்தூர்ல நல்ல கிராண்டா ரிசப்ஷன் வைத்து விடலாம் என்ன சரிதானா? அவள் படிப்பு முடியட்டும். இந்த கேஸ் முடியட்டும்னு ஏதாவது சொல்லிட்டே இருந்தேனா என்னால ஒண்ணும் பண்ண முடியாது விக்ரம் யோசித்துச் சொல் என்றார் முரளிதரன்.
யோசிக்க என்ன இருக்கு, எனக்கு ஓகே தான் பா . வீட்ல எல்லோரிடமும் பேசி முடிவு பண்ணுங்க .நான் எப்ப அங்க வரணும்னு மட்டும் சொல்லுங்க நான் வரேன்.
மங்கையின் அப்பா முரளிதரன் கூறியதற்கு ஒத்துக் கொள்வாரா?
இல்லை காவலனாய் இருக்கும் விக்ரம் கள்வனாய் மாறி தன்னுடைய அரசியை சிறை எடுப்பானா?
பார்ப்போம்.
மாலை தொடுக்கப்படும்......
Hi friends,
Please share valuable comments...
I am eagerly waiting for that..
Thank u..
Regards,
Laxmidevi.