மாலை-27
பாடல் வரிகள்
காஞ்சி பட்டு ஒன்னு நான் கொடுப்பேனே காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
மாமன் உன்னை கண்டு ஏங்கும் அல்லி தண்டு
தோளில் என்னை அள்ளி கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று
என் கண்ணில் நீ தானம்மா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணியின்—நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுரது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் புரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
பெங்களுர்
தன் மடியில் தூங்கிய அம்முவை தூக்கி சென்று மெத்தையில் படுக்க வைத்து விட்டு வந்தான் சுந்தர்.
மடியில் தூங்க வைத்து பழக்காதே என்று எத்தனை தடவை சொல்றது என்று கோபித்தாள் கனி.
என் அம்முவை நான் தூங்க வைக்கிறேன். உனக்கு பொறாமையாக இருக்கிறதா கனி உன்னையும் மடியில் தூங்க வைக்க வேண்டுமா என்று அவளை கேலி செய்தான்.
நாளைக்கு எத்தனை மணிக்கு பிளைட் என்று பேச்சை மாற்றினார் கனி .
காலை 6:00 மணிக்கு பிளைட் அங்கே ஏழு டு எட்டு மணிக்கெல்லாம் போய் சேர்ந்து விடுவேன்.
எனக்கு பயமாயிருக்கு சுந்தர் என்று கூறும் போதே கனியின் குரல் உள்ளே சென்று விட்டிருந்தது
கனியை தன்னுடன் சேர்த்து அணைத்து ஆறுதல் படுத்தினான் சுந்தர்.
இங்கே பார் கனி நானே நம் விசயத்தை எப்படி பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இப்ப மாமாவே பெண் பார்க்க வேண்டும் வா என்று கூறியுள்ளார் இப்போது போய் நம் வீட்டினரிடம் நம் விஷயம் பற்றி சொல்லிவிடுகிறேன். அம்மா கொஞ்சம் கோபப் படலாம்.கொஞ்சம் பிடிவாதமும் அதிகம். ஆனாலும் கண்டிப்பாக ஒத்துக்கொள்வார்கள் .அவர்களுடைய பிடிவாதத்தை விட என் மீது கொண்டிருக்கும் பாசம் அதிகம். அதனால் கண்டிப்பாக நம்முடைய திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள் பயப்படாதே கனி.
சுந்தர் பேசிக் கொண்டிருக்கும் போது கனியின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சுந்தரின் சட்டையை நனைத்தது.
சுந்தர் கனியின் இதழில் அழுத்தமான முத்தமிட்டான். இங்கே பார் கனி உன்னை அணைத்த இந்த கைகள் இன்னோருத்தியை அணைக்காது. சரியா.எதை நினைத்தும் கலங்காதே ...
என்னை பொருத்தமட்டில் எனக்கு மனைவி என்றால் என் கனி மட்டும் தான்.வேறு யாருக்கும் என் மனதில் இடமில்லை.
ம்மம் எனக்கு காலை 6 மணிக்கு தான் ஃப்ளைட் நான் இங்கயே தங்கிக் கொள்ளவா என்று கூறி அவளை பார்த்து கண்ணடித்தான் .
ஒன்றும் வேண்டாம். நீங்கள் மதுரை சென்றவுடன் எனக்கு போன் செய்யுங்கள் என்று கூறி சுந்தரை அனுப்பி வைத்தாள் கணி.ஒரு வழியாக கனியை சீண்டி அவளை இயல்பாக்கி விட்டு தன் அறைக்கு வந்தான் சுந்தர்.
பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரையில் உள்ள தன் மாமா ராமநாதன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சுந்தர்.
அவனுக்கு முன்னரே அவன் அப்பா கஜபதி அம்மா பத்மாவும் வந்திருந்நனர் பெண் பார்க்கும் படலத்திற்காக.
ராமநாதன் சுந்தரிடம் காலையிலேயே சென்று விடலாமா இல்லை மாலை சென்று வரலாமா என்று கேட்டார்.
மாமா அம்மாவையும் அப்பாவையும் வர சொல்லுங்கள் . உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறினான்.
அனைவரும் வரவும் தன்னுடைய காதலை பற்றியும் கனிமொழியை பற்றியும் அனைவரிடமும் கூறுகிறான்.
அங்கே குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது .அவனது காதலை ஆதரித்தோ இல்லை எதிர்த்தோ யாரும் பேசவில்லை.
அண்ணா அவன் கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும் இதை பற்றி எல்லாம் யோசித்து முடிவெடுக்க. அதுவரை என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறினார் பத்மா
அம்மா எனக்கு அந்த பெண்ணை பிடித்து இருக்கிறது தான் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் தான்
ஆனால் உங்களுடைய சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்காது. உங்களுடைய விருப்பமில்லாமல் நான் எனக்கென ஒரு குடும்பத்தை அமைத்து கொள்ள மாட்டேன். நான் அவளைத் திருமணம் செய்து கொள்வதாக கூறியிருக்கிறேன் ஒருவேளை நூற்றில் ஒரு வாய்ப்பாக உங்களுக்கு கனிமொழியை பிடிக்கவில்லை எனில் என் காலம் முழுவதும் உங்கள் மகனாக உங்களுடன் இருப்பேன் , என்னை இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துக்கூடாது ஏனெனில் ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து விட்டு அதை மீறி இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னை நீங்கள் வளர்க்கவில்லை என்று கூறினார்.
சுந்தர்
புரிகிறது சுந்தர்.உன் மேல் எனக்கு கோபம் எல்லாம் எதுவும் இல்லை திடீர்னு இப்படி ஒரு விஷயத்தை கூறவும் அதை ஏற்றுக் கொள்வதற்கு எனக்கு கொஞ்சம் நேரம் ஆகும் அல்லவா நானே ஒரு தெளிவான நிலையில் இல்லாதபோது உன்னை வருத்தி விட்டால் என்ன செய்வது? அதற்குத்தான் கொஞ்ச நேரம் வேண்டும் என்று கேட்கிறேன் என்று கூறினார் பத்மா.
அதன்பின் சுந்தர் எதுவும் மறுத்து பேசவில்லை .
பத்மா தன் கணவரை அழைத்துக் கொண்டு அவர்களுடைய அறைக்கு சென்றுவிட்டார்.
தன் மாமாவிடம் வந்த சுந்தர் நீங்களாவது என்னை புரிந்து கொள்வீர்கள். என்னுடைய விருப்பத்திற்காக அம்மா பேசுவீர்கள் என்று நினைத்திருந்தேன் .ஆனால் நீங்களும் என்னை புரிந்து கொள்ளவில்லை எனில் நான் என்ன செய்வது என்றான் சுந்தர் கவலையாக.
இப்பொழுது நான் உனக்கு ஆதரவாக பேசினால் அது உனக்கு எதிராக தான் திரும்பும். ஆனால் இப்போது உன் அம்மா யோசித்து சொல்கிறேன் என்று கூறிவிட்டார்.இல்லையெனில் மறுத்து இருப்பார்கள்.கவலைப்படாதே நீ விரூம்பிபடியே உன் வாழ்வை இந்த மாமன் அமைத்து தருவான் என்று கூறி சுந்தரின் தலையை ஆதரவாக வருடினார் ராமநாதன்.
மறுநாள் காலை தன் மகன் சுந்தரிடம் வந்த பத்மா எனக்கு சம்மதம் .நான் அந்த பெண்ணினை பார்க்க வேண்டும் வீடியோ கால் போட்டுத் தருகிறாயா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கேட்டார் .
சுந்தருக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. கண்டிப்பாக தன் அம்மாவிடம் சம்மதம் வாங்க போராட வேண்டும் என்று எண்ணியிருந்தான். தற்போது எளிதாக கிடைக்கவும் அவன் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது அதை அப்படியே கனிமொழியிடமும் பகிர்ந்து கொண்டான்.
கோவை
ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டு மலரை விருந்துக்கு அழைப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தாள் மங்கை. மிதமான அலங்காரத்திலும் தேவதையாய் ஜொலிக்கும் தன்னவளைக் கண்ட விக்ரமின் இறுக்கம் சற்றே தளர்ந்தது.
கடந்த இரண்டு நாட்களாக மங்கையின் முகத்தில் இருந்த குழப்ப மேகங்கள் சற்றே கலைந்தாற் போல் இருந்தது. அந்த இரண்டு நாட்களும் தனக்குள்ளேயே யோசித்தாள் மங்கை.முதலில் நாம் அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை கேட்டிருக்க வேண்டும்.மலர் அக்கா தான் சாருவை அவர் விரும்புவதாக கூறினார் உண்மை என்னவென்று நமக்குத் தெரியாது ஒருவேளை அவங்க விரும்பி இருந்தாலும் அது அவரது கடந்த காலம் .அதைப் பற்றி அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை நான் கேட்டிருக்க வேண்டும் அதை விடுத்து நான் எதையோ எண்ணிக் கொண்டு கவலைப்படுவதில் அர்த்தமில்லை. அவர் மனதில் என்ன உள்ளது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் .எது எப்படி இருந்தாலும் நான் இப்பொழுது அவருடைய மனைவி. அவருடனான என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும் என்று தெளிந்திருந்தாள். அதனால் முகத்தில் இருந்த கவலை அகன்று சற்று மகிழ்ச்சியாகவே உணர்ந்தால் மங்கையற்கரசி.
இத்தனை நாட்களில் தன் மனைவியிடம் பேசி தன் காதலை புரிய வைத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான் விக்ரம். ஆனால் அவனுடைய ஸ்டேஷன் பக்கத்தில் ஒரு வடமாநிலத்தை சேர்ந்த ஒருவன் கொலை செய்யப்பட்டிருந்தான். விசாரணையில் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த மாநிலத்தை தொடர்பு கொண்டபோது அவன் அங்கு வரும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவன் .இதை அறிந்த போது இந்த வழக்கு கொஞ்சம் உனக்கு சிக்கலாக இருக்குமோ என்று தோன்றியது .இங்கு விசாரித்த வரையில் அவன் கூலி தொழில் செய்வதற்காக வந்திருந்தான் என்று கூறப்பட்டுள்ளது.அங்கு ஏதேனும் தவறான காரியங்கள் நடக்கின்றனவா என்று விசாரித்துக் கொண்டிருந்தான். இதுவரையில் அவர்களுக்கு உருப்படியான எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் இந்த வழக்கிற்கான அழுத்தம் சற்று அதிகமாக இருந்தது .அதில் தன் மனைவியுடன் பேச வேண்டிய விஷயம் சற்று பின்னுக்கு தள்ளப்பட்டது. இந்த வழக்கினால் ஏற்பட்ட இறுக்கமும் அழுத்தமும் அழகிய மலரென இருக்கும் தன் மனைவியின் முகம் கண்டவுடன் தளர்ந்து சந்தோஷக்கீற்று விக்ரமின் முகத்தில் தோன்றியது. இருவரும் ஒருவரை ஒருவர் ரசித்துக்கொண்டு மலரின் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
தன் அத்தையிடமும் மாமாவிடம் சொல்லி விட்டு மங்கையும் விக்ரமும் கிளம்பினர்.
விக்ரம் காரைக் கிளப்பினான் மங்கையர்க்கரசி அவனருகில் அமர்ந்து இருந்தாள்.உன்னை விஜயின் வீட்டிற்கு சென்று அழைத்து விட்டு சற்று நேரத்தில் கிளம்ப வேண்டும். எனக்கு கொஞ்சம் ஸ்டேஷனில் வேலை இருக்கிறது சரிதானா.
சரி அப்படியே செய்வோம் என்று பதிலளித்தாள் அவன் மனைவி மங்கை.
ஆணழகனாக அவள் அருகில் அமர்ந்து ஸ்டியரிங்கில் தாளமிட்டவாறே காரை ஓட்டிக்கொண்டிருந்தான் மங்கையின் மன்னவன்.அதைப்பார்த்த மங்கைக்கு இவன் என்னவன் என்ற கர்வம் வந்தது மனதில்.மங்கையின் முகமோ மல்லிகையாய் மலர்ந்திருந்து.அவன் பார்க்காத போது அவனைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
தன்னருகில் கன்னத்தில் குடை ஜிமிக்கி ரகசியம் பேச , தோளில் சந்தனமுல்லை சரம் தவழ அழகில் அப்சரஸாய் இருந்தவளை விழியால் பருகிக்கொண்டிருந்தான் மங்கையின் மணாளன்.அழகோவியாய் இருந்த மனைவியை அணைத்து முத்தமிட எழுந்த ஆவலை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தான்.
விக்ரமிற்கு அன்றைய நாளைக்கு பிறகு அவளை விட்டு விலகி இருப்பது பெரும்பாடாக இருந்தது.இப்படி அழகாய் இருந்தால் நான் எப்படி விலகி இருப்பது.என்னை கொல்றடி என் ஆசை பொண்டாட்டி.உன் மையிட்ட அந்த கருவிழியின் ஆழத்தில் முழ்க ஆசை கொண்டேனடி ஆருயிரே என்று மனதினுள் புலம்பிக் கொண்டே வந்தான் விக்ரம்.
மங்கையும் ஒரவிழிப்பார்வையில் தன் காவலனை, தன் உள்ளம் கவர்ந்த கள்வனை பார்த்தாள்.
மங்கை பார்ப்பதை கண்டு கொண்டான் விக்ரம்.பின்னே காவலனின் கண்களுக்கு கள்ளத்தனம் தப்புமா?
என்ன மங்கைஅப்படி பார்க்குற ஏதாவது தேறுவேனா என்று அவளை கேலியாக வினாவினான்.
அது வந்து என்று தடுமாறினாள்.
அவளின் தடுமாற்றத்தை ரசித்தான்.அப்போது ஒலித்த பாடல் இருவரின் கவனத்தை ஈர்த்தது
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி அன்பே ஓடி வா... அன்பால் கூடவா... ஓ.. பைங்கிளி
நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
சொந்தம் பந்தம் உன்னைத் தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னைச் சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித்தர தானாக வந்துவிடு
என்னுயிரைத் தீயாக்கும் மன்மத பாணத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றித் தந்துவிடு அன்பே ஓடி வா...
அன்பால் கூடவா... அன்பே ஓடி வா... அன்பால் கூடவா... ஓ.. பைங்கிளி நிதமும் என்னைத் தொட்டு....என்னைத் தொட்டு.... நெஞ்சைத் தொட்டு என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி ஆ... ஆ.. ஆ....மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டிவிட்டு கண்சிரிக்கும் சுந்தரியே
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணை கட்டி வைத்த பைங்கிளியே
என்னில் நீயடி... உன்னில் நானடி...என்னில் நீயடி...
உன்னில் நானடி... ஓ.. பைங்கிளி
நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி அன்பே ஓடி வா... அன்பால் கூடவா... ஓ.. பைங்கிளி
நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடிஎனக்குச்சொல்லடி விஷயம் என்னடி....
அந்தத் இசையையும் பாடல் வரிகளும் தந்த இதத்தில் மங்கை தன் கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் ஆதரவிற்கு ஏங்கும் குழந்தையென.
விக்ரம் அவள் கன்னத்தை கையால் வருடி அவளை பார்த்து புன்னகைத்தான் . ஆயிரம் வார்த்தைகள் தராத அமைதியை அவனின் ஸ்பரிசம் தந்தது பெண்களுக்கு.
ரம்மியமான காலை பொழுது இருபுறமும் பசுமையான வயல்வெளிகள் .
மனம் மயக்கும் மிதமான இசை அருகில் தனக்கு பிடித்தவருடனான இந்த அழகிய பயணத்தை இருவருமே ரசித்தனர் . இந்த பயணம் அப்படியே வாழ்நாள் முழுவதும் நீளாதா என்று மனதில் எண்ணினர்.
இவர்களின் இந்த பயணம் தொடரட்டும்.
மாலை தொடுக்கப்படும்...
தயவுசெய்து தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.
இப்படிக்கு
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.
மாலை சூடும் வேளை-27
Jump to
- Tamil Novels
- ↳ Madhumathi Bharath
- ↳ சதிராடும் திமிரே (காதல் கதகளி பார்ட் 2)
- ↳ கந்தகமாய் அவன் காதல்
- ↳ நெருஞ்சியின் நேசம்
- ↳ எனை மீட்பாயோ காதலியே
- ↳ காதலே நீ கானலா
- ↳ Kindle EBook links
- ↳ Story Reviews
- ↳ Books
- ↳ Audio Novels
- ↳ நிலவே உந்தன் நிழல் நானே
- ↳ Kavi Sowmi
- ↳ காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி
- ↳ Sabareeshwari (SSK)
- ↳ நெயிர்ச்சியின் முழுவல் நீ
- ↳ RS Novels
- ↳ எதிர் துருவங்கள்
- ↳ Sutheeksha Eswar
- ↳ Enai Nanaikum Sarale
- ↳ திசை அறியா பயணமிது
- ↳ Iniya
- ↳ மின்னல் விழியே குட்டித் திமிரே
- ↳ இசையின் மலரானவன்
- ↳ Janani Prasanna
- ↳ காதல் கருவறை
- ↳ Malarvizhi
- ↳ விழி மொழியாள்
- ↳ Kirthika Balan
- ↳ போற போக்கில் ஒரு காதல்
- ↳ Laxmi devi
- ↳ மாலை சூடும் வேளை
- குறு நாவல்
- ↳ Abi Nethra
- ↳ என் கோடையில் மழையானவள்
- ↳ Kavi Sowmi
- ↳ Kanchana Malai
- ↳ காதல் மட்டும் புரிவதில்லை
- ↳ Karthika Maran
- ↳ உயிரே என் உலகமே
- ↳ நல்லவனின் கிறுக்கி
- ↳ Gowry Vicky
- ↳ Chandrika Krishnan
- ↳ மந்திரமென்ன மங்கையே
- ↳ Sahana Harish
- ↳ Malarvizhi
- ↳ உயிரானவளே
- ↳ Rajasekaran Bose
- ↳ காமனின் காதல்
- ↳ Raju Gayu
- ↳ தேன்மொழி
- ↳ Manosha
- ↳ கண்ணாளனின் கண்மணியே
- தமிழ் சிறுகதைகள்
- ↳ Archana Nithyanantham
- ↳ Inba Muthuraj
- ↳ Kanchana Malai
- ↳ Gowry Vicky
- ↳ Sethupathi Viswanathan
- ↳ Nan Ungal Kathiravan
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ பாவை கதைகள்
- ↳ Raju Gayu
- ↳ Renuka Mary
- ↳ Kaayaampoo
- ↳ Venba Ilanthalir
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Kavi Sowmi
- ↳ Saha
- ↳ Sahana Harish
- ↳ Sivaranjani Sivalingam
- ↳ Bhagi
- ↳ Muthu Saraswathi
- ↳ Jothi Ramar
- ↳ Sankari Dayalan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ Bhanurathy Thurairajasingam
- Completed Novel Links
- இருமுனைப் பேனா
- ↳ மாங்கல்யம் தந்துனானே
- ↳ தாய்மையிலும் விஷமுண்டு
- கவிதைகள்
- ↳ Bharathi Kannamma
- ↳ Preethi
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ Raji Prema
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Abi Nethra
- ↳ Archana Nithyanantham
- ↳ Kanchana Malai
- ↳ Saha
- ↳ Sethupathi Viswanathan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ காயாம்பூ
- ↳ Bhanurathy Thurairajasingam
- ↳ சித்துவின் வரிகள்
- சமையலறை
- ↳ Anjali Suresh
- பொது அறிவுத் தகவல்கள்
- படித்ததில் பிடித்த கதைகள்
- மருத்துவம்
- மனதோடு
- ↳ மறுபாதி
- ↳ நீயின்றி நானும் இல்லை
- ↳ மாயவனம்
- ↳ அ(இ)வளுக்கென
- ↳ உன்மத்தம் கொண்டேனடி உன்னால்
- ↳ Zaki
- ↳ காதல் போதையடா நீ எனக்கு