மாலை சூடும் வேளை -38
Posted: Sat Jun 05, 2021 10:56 pm
மாலை-38
பாடல் வரிகள்
தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த
நாடே இருக்குது தம்பி....
ஆராய்ச்சியாளர் ஜெகன் கூறிய விஷயத்தைக் கேட்டு அதிர்ந்தனர் விக்ரமும் பாலாவும்.
ஆம் இது ஒரு வகையான போதை இலை தான்.ஆனால் போதை தாவரத்துடன் இன்னோரு தாவரத்தினை மரபணு கலப்பு செய்துள்ளனர். அதனால் இது பார்ப்பதற்கு மற்ற சாதாரண செடிகொடிகள் போல் உள்ளது.ஆனால் இதில் உள்ள போதை தன்மை மிகவும் அதிகம்.எவ்வளவு என்றால் இதன் நான்கு இலைகளை கொடுத்து ஒருவருக்கு அறுவை சிகிச்சையே செய்யலாம்.அவருக்கு வலி ஏதும் இராது. இதை சீக்கிரமாகவே கண்டுபிடித்து அழிக்க வேண்டும் சார் என்றார் ஜெகன்.(இதில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் கற்பனையே)
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து விக்ரம் சீக்கிரமாகவே அதை அழித்து விடுவதாக உறுதியளித்தான்.
அங்கிருந்து நேராக கமிஷனர் அலுவலகம் சென்று அவரிடம் இது பற்றி ஆலோசித்து விட்டு விஜய்க்கு அழைத்துப் பேசினான்.அவனிடம் ஒரு சில விஷயங்களை செய்ய சொல்லி விட்டு கார்த்திக்கு அழைத்து பேசினான்.
நினைத்தேன் விக்ரம் இப்பிடி ஏதாவது அந்த வேனில் இருக்கும் என்று. ஆனால் இதை எதிர்பார்க்கவில்லை. ஆமாம் அந்த இலையை சோதிக்க வேண்டும் என்று உனக்கு எப்படி தோன்றியது?
அந்த இலை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.ஏதேனும் மூலிகை செடியாக இருக்குமோ என்று சந்தேகித்தேன். ஆனால் இது முற்றிலும் புதிய செய்தி.கமிஷனர் நம்மை இப்போதே பதவியேற்க சொல்லி விட்டார் கார்த்திக்.நீ சொல் நாம் இப்போது என்ன செய்யலாம்?
வேண்டாம் விக்ரம்.நாம் இப்பொழுது பொறுப்பேற்று கொண்டால் சம்பந்தப்பட்டவர்கள் சுதாரித்து கொண்டு விடுவார்கள்.நாம் வெளியில் இருந்தவாறே மற்ற தகவல்களை சேகரிப்போம்.
அப்படி தான் நானும் நினைத்தேன். விஜய் தோட்டத்தின் அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் முன்பு ஒரு கொலை நடந்தது.எனக்கு என்னவோ அதற்கும் இந்த பிரச்சினைக்கும் சம்பந்தம் இருக்குமோ என்று தோன்றுகிறது. அதனால் அவனை அங்கு சென்று பார்க்க சொல்லி இருக்கிறேன். மங்கையை கடத்தியவர்களிடம் இருந்து ஏதும் தகவல் தெரிந்ததா கார்த்திக்?
இல்லை விக்ரம்.எழிலரசன் என்பவன் தான் கடத்தி இருக்கிறேன்.அவன் தங்கையின் மருத்துவத்திற்கு பணம் தேவைப்படுவது தெரிந்த ஒருவன் மங்கையை கடத்தி இரண்டு நாட்களில் விட்டு விட்டால் பத்து இலட்சம் தருவதாக கூறி உள்ளான். சொன்னபடியே பணத்தை வீட்டு வாசலில் போட்டுள்ளான்.இவனும் அதற்காக நம் பெண்ணை கடத்தியிருக்கிறான்.ஆனாலும் நம் பெண்ணை நல்ல படியாக தான் பார்த்து கொண்டு உள்ளான்.அதற்காக தான் அவர்களை உயிருடன் விட்டேன்.அவர்களுக்கும் இதை செய்ய சொன்னது யார் என்று தெரியவில்லை .
இவ்வளவு தூரம் வந்து விட்டோம்.அதை கண்டிபிடிக்க மாட்டோமா? அவர் கேம் ஸ்டார்ட் நவ் .
இவர்கள் தேடிக்கொண்டு இருப்பவனோ இந்த விக்ரம் எப்படி அவன் மனைவியை கண்டுபிடித்தான். அவன் கோவையை விட்டு வெளியே செல்லவில்லை.அவனுடைய போலிஸ் சகாக்கள் அனைவரின் நம்பரையும் ட்ரேஸ் செய்தோம்.பின் எப்படி இது நடந்தது.நல்ல வேளை நான் இதில் நேரிடையாக தலையிடவில்லை. என்னை பற்றியோ, நான் இங்கு செய்வதை பற்றியோ அவனால் கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணினான்.
விக்ரமும் கார்த்திக்கும் இன்னொரு வழியில் அந்த குற்றவாளியை பிடிக்க வியூகம் அமைத்தனர்.
வியூகம் வெற்றி பெறுமா?
பார்க்கலாம்.
மாலை தொடுக்கப்படும்...
வணக்கம் நண்பர்களே..
கதையை பற்றிய உங்களுடைய மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்..
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
என்றும் அன்புடன்
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.