Page 1 of 1

மாலை சூடும் வேளை-41

Posted: Tue Jun 08, 2021 1:42 pm
by laxmidevi
மாலை-41

பாடல் வரிகள்

இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை...

விஜய் தன்னுடன் ஒருவனை அழைத்துக் கொண்டு கால் டாக்ஸியில் சிறப்பு நீதிமன்றம் வந்தான். அங்கே விக்ரமும் கார்த்திக்கும் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அவன் வந்தவுடன் அவனை அழைத்துக்கொண்டு நீதிமன்றத்தின் உள்ளே சென்றனர். கார்த்தி கமிஷனரிடம் இவன்தான் அறிவழகன் என்று அறிமுகப்படுத்தினான். பின்னர் வழக்கு தொடங்கியது.

நீதிபதி உன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறாயா?உண்மையில் இதையெல்லாம் நீ தான் செய்தாயா? இல்லை யாரேனும் வற்புறுத்தினார்களா என்று கேட்டார்.

அவனே ஒத்துக்கிட்டாலும் ஜட்ஸ் விடமாட்டார் போலவே விக்ரம் என்று விக்ரமின் காதை கடித்தான் கார்த்திக்.

பின்னே இவ்வளவு பெரிய குற்றத்தை யார் தானாக முன்வந்து ஒத்துக்கொள்வார்கள். அந்த சந்தேகம் அவருக்கு இருக்கும் தானே என்றான் விக்ரம் பதிலுக்கு.

ரொம்ப நாட்களுக்கு பிறகு இருவரும் இணைந்து செயல்பட்ட வழக்கு.கார்த்தியின் விசாரணை ,பீரி ப்ளானிங் எல்லாம் விக்ரமிற்கு மிகவும் பிடிக்கும்.விக்ரமின் மாறுபட்ட சிந்தனை சிறு சிறு விஷயத்தையும் கவனிக்கும் விக்ரமை ரசிப்பான் கார்த்திக்.இருவருமே விருப்பப்பட்டு இந்த துறையில் சேர்ந்தனர்.கார்த்திக் இதை விட்டு விலகும் சூழ்நிலை வந்த போது கார்த்தியை விட விக்ரமே அதிகம் வருந்தினான்.மறுபடியும் இருவரும் ஒரே பணியில் இருப்பதை எண்ணி மகிழ்ந்தனர் நண்பர்கள்.
மணி கூட தன் கணவனிடம் எங்க அண்ணன் கூட சேர்ந்துட்ட இல்ல இனி என்னை கவனிக்க மாட்டிங்க என்று விளையாட்டாக கூறினால்.

என்னையே மறக்கும் நிலை வந்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேன் கலை என்று தன் மனைவியிடம் காதல் பேசினான் கார்த்திக்.

அவர்கள் காதலில் முழ்கி முத்தெடுக்கட்டும்.நாம் நீதிமன்றத்தில் நடப்பதை கவனிப்போம்

இல்லை ஐயா. நான் தான் அனைத்தையும் செய்தேன் என்று ஒத்துக் கொண்டான் அறிவழகன்.

சரி .இந்த வீடியோவில் கூறியிருப்பதை மறுபடியும்  உன்னுடைய வாயிலாக கூற முடியுமா என்று கேட்டார் ஜட்ஜ்.

சரிங்க ஐயா.நான் அறிவழகன் என் அப்பா கிருஷ்ணமூர்த்தி கோவையில் பெயர் சொல்லக்கூடிய செல்வந்தர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவருடன் தொழில் செய்தவர்கள் ஏமாற்றியதால் எல்லா பணத்தையும் இழந்து கஷ்டப்பட்டார். பணம் இருக்கும் வரை உடனிருந்தவர்கள்  அனைவரும் திடீரென விரோதியாகிப் போனார்கள். என் தங்கச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணமும் நின்று போனது . அதில் மனமுடைந்த என் தந்தை இறந்துபோனார்.பணத்தினை கொண்டு மனிதனை மதிக்கும் சொந்தங்களின் முன்னே பணத்தை சீக்கிரமா சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிளம்பியது. அப்போது தான் ஒருவன் அறிமுகமானான்.வெளிநாட்டில் இருந்து புதிதாக ஒரு மருந்து தயாரிக்க இருப்பதாகவும் அதற்கு தேவையான செடிகளை இங்கே பயிர் செய்து கொடுத்தால் நிறைய பணம் தருவதாகவும் கூறினார் .சரி பணம் எனக்கும் தேவையாக இருக்கவே நானும் ஒத்துக்கொண்டேன். அதன் பின்புதான் தெரிய வந்தது அது மருந்து தயாரிக்க அல்ல என்று அது ஒருவகை போதை செடி என்று.அதைவிட்டு வெளியேற நினைத்தால் அவர்கள் என்னை கொன்று விடுவதாக மிரட்டினார் என்ன செய்வது என்று தெரியாமல்  இருந்த நிலையில் தான் அந்த போதையால் சீரழியும் இளம் தலைமுறையினரை பார்த்தேன். பணத்திற்காக நான் என் அன்னையின் வளர்ப்பை இழிவுபடுத்தி விட்டதாக உணர்ந்தேன் .அந்த கூட்டத்தில் இருந்தால் இன்னும் சில தவறுகள் செய்ய வேண்டியிருந்தது யாரும் அதனால் காயப்படாமல் பார்த்துக் கொண்டேன். அப்போதுதான் விக்ரம் சார் என்னை நெருங்கி வந்து விட்டதுதாக தெரிந்தது. நானே சரணடைந்தது விடலாம் என்று தான் வந்தேன். நான் செய்த தவறுகளில் தங்கைக்கோ தாய்க்கோ பங்கில்லை. கடைசிவரை அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தன் வாக்குமூலத்தை கூறி முடித்தான்.

அவன் செய்த தவறை ஒத்துக் கொண்டாலும் அரசு தரப்பு சாட்சியாக மாறி விட்டதாகவும் தண்டனை குறைப்பு செய்து 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்தனர். அவன் அளித்த விவரங்களின் படி தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் இருந்த போதை மருந்து கடத்தல் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒருவர் மற்றவர்களுக்கு தகவல் கொடுக்க முடியாமல் கைது செய்தனர். 

முக்கியமான முதன்மையான இடங்களில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டதால் தமிழ்நாட்டில் போதை மருந்துகள் புழக்கம் கணிசமான அளவு குறைந்தது. இன்னும் ஒரு சிலரை பிடித்து விட்டால் இதை முடித்து விடலாம் .ஆனால் அதற்கு மேல் வெளியில் இருந்து தமிழ்நாட்டுக்கு போதை மருந்து கடத்தி வருவதை தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விக்ரமும் கார்த்திக்கும் பேசிக் கொண்டிருந்தனர்.

மற்ற வேலைகளை கார்த்திகை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தன் மனைவியைக் காண மதுரை பறந்து விட்டான் விக்ரம்.

அதிகாலை 4 மணிக்கு தன் காரில் வந்த தன் மருமகனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் ராமநாதன்.

மங்கையை எழுப்ப சென்ற தன் மாமியாரை தடுத்து நான் பார்த்துக்கொள்கிறேன் அத்தை என்று கூறி தன் மனைவியின் அறைக்கு சென்றான் விக்ரம்.

அங்கே அவன் மனைவி அழகோவியமாய் தூங்கிக் கொண்டிருந்தாள். தானும் அருகே சென்று அவளை அணைத்தவாறு படுத்து கொண்டான். இத்தனை நாட்களாக அவனை தழுவாமல் போக்கு காட்டும் நித்திராதேவி அவனை சுகமாய் தழுவிக் கொண்டாள் அருகில் அவன் மனைவி இருக்கிறாள் என்ற பயம் கூட இல்லாமல்.

காலையில் எழுந்த மங்கை கண்டதென்னவோ தன்னை அணைத்துக் கொண்டு உறங்கும் தன் கணவனைத் தான்.அவரை நினைத்துக் கொண்டிருப்பதால் வந்த கனவு என்று எண்ணியவளுக்கு அவளை அணைத்துக் கொண்டுள்ள அழுத்தமான கணவனின் கரங்கள் உணர்த்தின இது கனவல்ல நிஜம் என்பதை.

கணவனை பார்த்ததும் மங்கையின் முகம் சூரியனை கண்ட செந்தாமரையாய் மலர்ந்தது.தூங்கும் போது கூட அவன் முகத்தில் இருக்கும் கம்பீரம் சற்றும் குறையாதது போல் தோன்றியது அவளுக்கு.அவன் தலை கோதி நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள்.

நாளின் தொடக்கமே ஆனந்தமாகவும் அழகாகவும் இருந்தது பெண்ணவளுக்கு.

நாள் முடியும் போதும் இதே ஆனந்தம் இருக்குமா?

மாலை தொடுக்கப்படும்.