மாலை சூடும் வேளை 43

Post Reply
laxmidevi
Moderators
Posts: 47
Joined: Thu Aug 20, 2020 2:14 pm
Has thanked: 1 time
Been thanked: 4 times

மாலை சூடும் வேளை 43

Post by laxmidevi »

மாலை-16

பாடல் வரிகள்

மலரின் கதவோன்று திறக்கின்றதா மௌனம் வெளியேர தவிக்கின்றதா பெண்மை புதிதாக துடிக்கின்றதா உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

பெங்களூர்

  தீவிரமாக  வேலை பார்த்துக்கொண்டு இருந்த சுந்தர் உன்னை பார்க்க இரண்டு பேர் வந்து இருக்காங்க.போய் பார் என்ற ஹரியின் குரலில் திரும்பிப்பார்த்தான்.

யார் டா ஹரி?

தெரியலடா சுந்தர்

சுந்தர் கிளம்பி வரவேற்பறைக்கு வந்தான். அங்கே ராகவனும் முரளிதரனும் சுந்தரை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

வாங்கப்பா வாங்க மாமா என்றான்.

சுந்தரை பார்த்தவுடன் முரளிதரன். சற்று பேச வேண்டும் அதனால் வந்தோம்.தொந்தரவு ஒன்றும் இல்லையே என்றார்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இருங்கப்பா இதோ வந்து விடுகிறேன் என்று தன் மேனேஜரிடம் போய் விடுமுறை சொல்லிவிட்டு தன் நண்பன் ஹரியிடம் கார் சாவியை வாங்கி வந்தான்.




வாங்கப்பா நம்முடைய வீட்டுக்கு போய் பேசலாம் என்று  இருவரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து போனான்.

வீடு ரொம்ப நல்லா இருக்குப்பா என்றார் முரளிதரன்.

கனி தான் டிசைன் பண்ணினாப்பா .

இருவரையும் அமர வைத்து விட்டு மூவருக்கும் இஞ்சி டீ எடுத்து வந்தான்.

முரளிதரன் தான் ஆரம்பித்தார்.
உனக்கு கனி மேல் கோபம் இருப்பது நியாயம் தான்.அதற்காக அவளை தள்ளி வைக்காதப்பா.பிள்ளை எங்களுக்காக சிரித்தாலும் உள்ளுக்குள் மிகவும் உடைந்து போய் இருக்கிறாள்.அவளை ஏற்றுக் கொள்ளப்பா சுந்தர் என்றார் முரளிதரன்.

ராகவன் எதுவும் பேசாவிட்டாலும் கண்ணில் ஏக்கத்துடனும் சுந்தரைப் பார்த்தார்.

அப்பா , எனக்கு கனியின் மீது வருத்தமே தவிர கோபமில்லை. கனி என்னைவிட்டு போனதற்கான காரணம் இன்னும் அப்படியே தான் உள்ளது.இது எதையும் சரி செய்யாமல் அவளிடம் என்னவென்று நான் பேசுவது. அதனால் தான் நான் கனியிடம் பேசவில்லைபா என்று கூறினான் சுந்தர்.


இப்போது தான் எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது சுந்தர்.அப்ப நான் உன் அம்மாவிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கவா?

இல்லப்பா. நானே அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்குறேன் .அப்புறமா நீங்க வந்து பேசுங்க என்றான் சுந்தர்.

சரிப்பா நீ அம்மா கிட்ட பேசிட்டு சொல்லு . பின் நாங்க வந்து முறைப்படி சம்பந்தம் பேசறோம் என்றார் முரளிதரன்.

ராகவனின் அருகில் வந்த சுந்தர் மாமா கனியை பற்றி கவலை வேண்டாம். அவள் என் பொறுப்பு என்று அவரின் கைகளை பற்றி கூறினான் .

என் பெண் மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணினேன் ஆனால் உன்னை போல ஒரு கணவனை கொடுப்பதற்கு தான் என் பெண்ணை கடவுள் சோதித்து இருக்கிறார் என்று இப்போதுதான் புரிகிறது என்றான் ராகவன்.

இப்போது தான் மனம் நிறைந்துள்ளது. சரிப்பா சுந்தர் நாங்கள் கிளம்புகிறோம் என்று கூறினார்  முரளிதரன்.

என்னப்பா இப்பவே கிளம்புறேன்னு சொல்றீங்க.மதியம் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்றான் .

சுந்தர் தானே சமைத்தான்.உதவி செய்வதாக கூறிய இருவரையும் வீட்டை சுற்றி பாருங்கள் என்று அனுப்பி வைத்தான்.

அவர்கள் வரும் முன் சாதம், சாம்பார், கோஸ் பொரியல், அப்பளம், பருப்புபாயசம் என ஒரு விருந்தே சமைத்து விட்டான்.

மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். அந்த கொஞ்ச நேரத்திலேயே சுந்தரை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைக்குமாறு செய்து விட்டான்.

சுந்தரின் இயல்பான பேச்சும், அமைதியும், அக்கறையும் அவர்களின் மனதை கவர்ந்தது.

மதிய சாப்பாட்டுக்கு பின் மூவரும் சிறிது நேரம் தூங்கி ஓய்வு எடுத்தனர். 4 மணியைப் போல் இருவரையும் காரில் அழைத்து சென்று கோவைக்கு பிளைட்டில் அனுப்பி வைத்தான்.

கிளம்பும்போது முரளிதரன் நாங்கள் இங்கு வந்து உன்னை பார்த்தது ஏதும் கனிக்கு  தெரியாது .நீயும் எதுவும் சொல்ல வேண்டாம் சுந்தர் என்றார்.

சரிப்பா என்றார் சுந்தர்.

அன்றிரவில் கஜபதி தன் மகனுக்கு போன் செய்தார்.

சொல்லுங்கப்பா வீட்டில் எல்லோரும் நலமா என்றான்.

நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் நீ எப்படிப்பா இருக்க

நல்லா இருக்கேன்பா என்றான் குரலில் சுரத்தே இல்லாமல்.

உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். ஜானுக்கு ஒருவாரம் வந்திருக்குப்பா.நல்ல இடமா தான் தெரியுது .ஜாதகத்திலே கூட இப்ப கல்யாணம் செய்யலாம் தான் சொல்றாங்க . நீ என்னப்பா சொல்கிறாய் என்றார் கஜபதி தயக்கத்துடன்.

அப்பா நல்ல விஷயத்தை ஏன் இவ்வளவு தயங்கி தயங்கி சொல்றீங்க. மாப்பிள்ளை வீட்டில் வசதி முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லே நல்ல குணம் உள்ளவர்களா என்று பார்க்க வேண்டும்.நீங்கள் அவர்களை பற்றி விவரங்கள் தாருங்கள். எதற்கும் நானும் விசாரித்து பார்க்கிறேன் என்றான் சுந்தர்.

சுந்தரின் குரலில் எந்தவித வருத்தமும் கோபமும் இல்லாததைக் கண்டு கஜபதிதான் சங்கடமாக உணர்ந்தார்.

என்னப்பா சுந்தரம் அம்மா அப்பாவின் மேல் உனக்கு கோபம் இல்லையா?

எதற்குப்பா கோபப்படவேண்டும்?

இல்லை உனக்கு தான் முதலில் திருமணம் செய்யலாம் என்று இருந்தோம். இப்போது உள்ள நிலைமையில் தங்கைக்கு திருமண ஏற்பாடு செய்தது பற்றி என்று இழுத்தார்.

அம்மாவின் நிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால் அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் கனியின் மேல் தவறு ஏதுமில்லை.இதை கொஞ்சம் கொஞ்சமாக தான் பேசி அம்மாவிற்கு புரிய வைக்க வேண்டும்.அதற்காக என் தங்கைக்கு திருமணம் செய்வதைப் போய் தவறாக நினைப்பேனா? என்னைப்பற்றி இவ்வளவு தான் புரிந்து கொண்டீர்களா என்றான் வருத்தமாக.

அப்படி இல்லை சுந்தர்.நீ தவறாக நினைப்பாய் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நீ கவலையில் இருக்கும் போது எப்படி இதை செய்வது என்று தான் யோசித்தேன்.

அதெல்லாம் ஒன்றுமில்லை அப்பா நீங்கள் சந்தோஷமாக திருமணப் ஏற்பாடுகளை கவனியுங்கள்.நான் விசாரித்துவிட்டு சொல்கிறேன்.

ஜனாவிக்கு பார்த்த  மாப்பிள்ளை வீட்டாரும் கோவையை சேர்ந்தவர்களே. விக்ரம் மற்றும் கார்த்தியிடம் அவர்களைப் பற்றி நன்றாக விசாரித்துவிட்டு தன்னுடைய சம்மதத்தை சொன்னான் சுந்தர்.

ஏனோ இந்த விஷயத்தை கனியிடம் கூற வேண்டும் போல் இருந்தது.

கனிக்கு போன் செய்தான் சுந்தர்.

கனி எப்போதும் போல போனை சம்முவிடம் கொடுத்து விட்டாள்.

அவளிடம் பேசி முடித்ததும் சுந்தர் போனை அம்மாவிடம் கொடு குட்டிமா என்றான்.

தன் மகளிடம் இருந்து போனை வாங்கிய கனி சொல்லுங்க என்றாள்.

கனி எப்படிம்மா இருக்கே என்றான் சுந்தர் கனிவாக.

ம்ம்.இருக்கிறேன் இதைக் கேட்க உங்களுக்கு இவ்வளவு நாளாயிற்று அதுவும் என் அப்பாவும் மாமாவும் வந்து பேசிய பின்தான் பேசிக்கொண்டிருக்கும் போதே குரல் உடைந்து அழுது விட்டாள்.




இவ்வளவு நாட்களுக்குப் பிறகு உன் அழுகையை தான் நான் கேட்க வேண்டுமா? இதற்குத்தான் நான் பேசாமல் இருந்தேன்.எனக்கு உன் மீது வருத்தம் இருந்ததே தவிர கோபம் இல்லை .என்னுடைய அம்மாவை சமாதானப் படுத்தாமல் உன்னிடம் என்னவென்று பேசுவது என்று தான் பேசாமல் இருந்தேன் .அப்புறம் தான் புரிந்தது அது உன்னை எவ்வளவு காயப்படுத்தும் என்று நானே உன்னிடம் பேசலாம் என்று இருக்கும் போதுதான் மாமாவும் அப்பாவும் வந்தார்கள். அது சரி அவர்கள் வந்தது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டான்.

அப்பாவும் மாமாவும் தொழில் சம்பந்தமாக சென்னை செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.ஆனால் அவர்கள் அங்கு செல்லவில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். எல்லா தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளையும் மலரும் விஜய்மாமாவும் பார்க்கும்போது இவர்கள் இருவருக்கும் சென்னையில் என்ன வேலை. மேலும் கார் ஏர்போர்டில் இருந்து திரும்பி வந்தது. எளிதாக ஊகித்து விட்டேன் அவர்கள் உங்களை தான் காண வந்து இருப்பார்கள் என்று.

ஆனாலும் கனிமா நீ இவ்வளவு புத்திசாலியாக இருக்க கூடாது. பின்னாளில் எனக்கு தான் கஷ்டம் உன்னிடம் எதையும் மறைக்க முடியாது என்று கூறி சிரித்தான்.


அத்தை மாமா தான் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டால் கனி

எல்லோரும் நலம் கனிமா என்றவன் ஜானுவின் திருமண ஏற்பாடு பற்றி கூறினான்.

ரொம்ப சந்தோசம் .ஜானுவும் நம்ம ஊருக்கு தான் வருகிறாள் என்றாள் குரலில் மகிழ்ச்சியை காட்டி.

கனியின் குணம் பற்றி நன்கு அறிந்திருந்தாலும் தங்களுக்கு திருமண தேதி குறிப்பதாய் பேசிவிட்டு இப்போது அவன் தங்கைக்கு திருமண ஏற்பாடு செய்திருப்பதை பற்றி தவறி கூட ஒரு வார்த்தை கூட கேட்க்காததை எண்ணி வியந்தான்.

கனி.. ஜானுவின் திருமணம் முடியட்டும் .சம்முவின் விஷயம் பற்றி பேசி அம்மாவிடம் பேசுகிறேன்.

முதலில் ஜானுவின் திருமணத்தை நல்ல படியாக முடிக்கலாம்.பிறகு மற்றதை பார்க்கலாம் என்று இலகுவாக கூறினாள்.

பின் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தனர்.

பத்மா தீவிரமாக எதையோ சிந்திப்பதைப் போல் இருந்தது அவர் முகம். பத்மா தன்னிடம் வந்து பேசி சென்றவர்கள் சொன்ன விஷயங்களை பற்றி யோசித்து தீர்க்கமாக முடிவெடுத்தார்.

பின் தன் போனில் இருந்த நம்பருக்கு கால் செய்தார்.

பத்மா  என்ன முடிவெடுத்தார்?

சுந்தர் தன் அம்மாவை சமாதானப்படுத்துவானா?

பார்க்கலாம்.

மாலை தொடுக்கப்படும்.


வணக்கம் நண்பர்களே..

கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்..

என்றும் அன்புடன்
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.



Post Reply

Return to “மாலை சூடும் வேளை”