மாலை சூடும் வேளை 45

Post Reply
laxmidevi
Moderators
Posts: 47
Joined: Thu Aug 20, 2020 2:14 pm
Has thanked: 1 time
Been thanked: 4 times

மாலை சூடும் வேளை 45

Post by laxmidevi »

மாலை- 45

தன்னுடைய மகளுக்கு ஜூஸ் கொடுத்துக்கொண்டிருந்த கணியின் கவனத்தை அவளுடைய செல்போன் சத்ததமிட்டு ஈர்த்தது. போனை எடுத்துப் பார்ப்பதவளின் விழிகள் வியப்பில் விரிந்தன.

காலை அட்டன்ட் செய்து சொல்லுங்க அத்தை? வீட்டில் அனைவரும் நலமா என்று கேட்டாள்.


பத்மா தான் அழைத்திருந்தார்.

கனி எந்தவித கோபமும் வருத்தமும் இல்லாமல் இயல்பாக உரையாடியது பத்மாவின் மனதை என்னவோ செய்தது. இல்லை என்னை மன்னித்துவிடு நான் அப்படி நடந்து  இருக்கக்கூடாது நான் செய்தது தவறா என்று தெரியவில்லை? ஆனால் கண்டிப்பாக சரியல்ல என்று மட்டும் புரிந்து கொண்டேன்.நான் என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் யோசித்தேனே தவிர உன்னை பற்றியும் யோசிக்க மறந்து விட்டேன் என்னை மன்னித்துவிடு கனிம்மா.

அத்தை உங்கள் மீதும் தவறு ஏதுமில்லை. உங்களிடத்தில் நின்று யோசித்துப் பார்த்தால் நீங்கள் செய்தது சரிதான் .நான் என் பிள்ளையை பற்றி யோசித்தது போல நீங்கள் உங்கள் பிள்ளைக்காக தானே யோசித்தீர்கள் .அதை யாரும் தவறாக கூற முடியாது அது நானாக இருந்தாலும். சரி அதை விடுங்கள் ஜானுவின் திருமண ஏற்பாடுகள் எவ்வாறு போய்க்கொண்டிருக்கிறது என்று கேட்டாள்.

எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது .ஆனால் நீ திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வந்து நீதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும். மறக்காமல் சம்முவையும் அழைத்துக் கொண்டு வந்து விடு அவள் உனக்கு மகள் என்றால் எனக்கு பேத்திதானே. அத்தையின் திருமணத்தில் மருமகள் இல்லாவிட்டால் எப்படி. நான் திருமண தேதி குறித்ததும் பத்திரிக்கை  எடுத்துக் கொண்டு வந்து அம்மா அப்பாவிடம் முறையாக பேசுகிறேன் .ஜனனியின் திருமணம் முடியும் எல்லோரும் கலந்து பேசி உங்கள் திருமணத்திற்கு நாள் குறிக்கலாம் என்றார்.

உண்மையில் பத்மா இப்படி மனம் மாறுவர் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை அவள்.சுந்தர் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது பத்மா கொஞ்சம் பிடிவாதக்காராக தான் இருப்பார் என்று நினைத்தாள். ஆனால் என் அம்மாவிடம் பிடிவாதம் இருக்கும் அளவிற்கு அன்பும் பாசமும் இருக்கும் என்று சுந்தர் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது என்று நினைத்தாள்.

அத்தையும் மருமகளும் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு போனை வைத்தனர்.

கனி பத்மா போன் செய்து பேசிய விபரத்தை தன் தாயிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே ராகவன் அங்கு வந்தார்.

அப்போது அவருக்கு போன் வந்தது எடுத்துப் பேசியவர் முகம் மாறியது. மங்கை பிரசவ வலி ஏற்பட்டு சிக்கலான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மலர் கூறினாள். நானும் விஜய்யும் அங்கு தான் செல்வதாகவும் கூறினாள்.

ராகவன் தன் மகளிடமும் மனைவியிடமும் விஷயத்தை கூறி நான் ஆபீசில் மேனேஜருக்கு சில விவரங்களைத் தந்து விட்டு வருகிறேன் . எல்லோரும் மதுரை செல்லலாம் என்றார்.

ராகவன் வரவும் அனைவரும் கிளம்பி மதுரை வந்து சேர்ந்தனர்.

டாக்டர் என்னதான் ஆச்சு மங்கைக்கு ?
என்று டாக்டரிடம் கேட்டால் விக்ரம்.

அவங்க கொஞ்சம் கொஞ்சமா சுயநினைவை  இழந்துட்டு வராங்க. ஆப்ரேஷன் பண்ணி குழந்தையை எடுக்கலாம்னா பிரஷர் ஏறவும் இறங்கவும் ஆக இருக்கிறது. அதுதான் ஒரே யோசனையாக இருக்கிறோம் இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் என்றார் டாக்டர்.

டாக்டர் நான் என் மனைவியை ஒரு முறை பார்க்கலாமா என்று கேட்டான்.

சரி நீங்கள் மட்டும் வாருங்கள் என்று தன்னுடன் விக்ரமை அழைத்துச் சென்றார் டாக்டர்.

டாக்டர் பிரியா மங்கையை மெதுவாக அழைத்து உன் கணவர் வந்திருக்கிறார் கண்ணை திறந்து பார் என்றார் .

கணவர் என்று சொன்னதும் தன் இமைகளை திறந்து பார்த்தாள் மங்கை.

விக்ரம் முகத்தில் தவிப்புடன் கண்களில் ஏக்கமும் காதலும் வழியே தன் மனைவியையே பார்த்துக் கொண்டு நின்றான்.

அதைக்கண்டு கொண்டால் மங்கை கண்டிப்பாக அவர் விழிகளில் வழியும் காதல் எனக்கானது.எனக்கு மட்டுமே சொந்தமானது. இத்தனை நாட்களில் விக்ரமின் அன்பிலும் அக்கறையிலும் அவனின் உரிமையான சீண்டலிலும்  தெரிந்து கொள்ளாத காதலை அவனின் கண்களில் தெரிந்த ஏக்கத்திலும் தவிப்பிலும் உணர்ந்து கொண்டாள்.ஒரு சில விஷயங்களை சொல்லி கேட்டு தெரிந்து கொள்வதைவிட உணர்ந்து கொள்வது நல்லது அது போலத்தான் காதலும்.
அப்படித்தான் மங்கையும் விக்ரமின் காதலை உணர்ந்து கொண்டாள்.தான் ஏதோ ஒன்றை தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம் அது தன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது. எது எப்படியோ கணவனின் காதல் தன்மீது என்ற அறிந்ததே மங்கைக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. நீ எது வந்தாலும் அதிலிருந்து எளிதாக மீண்டு விடலாம் என்று நம்பினாள்.

தன்னுடைய கைகளை எடுத்து தன் கணவனின் கைகளில் வைத்தாள்.எதுவும் பேசாமல் தன் மனைவியை நெற்றியில் முத்தமிட்டு பயப்படாதே ஒன்றும் ஆகாது என்று கூறினான்.

பின் டாக்டரிடம் டாக்டர் மூன்று பேரும் எனக்கு முக்கியம்தான் ஆனால் முடியாதபட்சத்தில் என் மனைவியை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள். அவள்தான் எனக்கு எல்லாமே அவள் இல்லாத என்று விக்ரமால் அதை  சொல்லக் கூட முடியவில்லை.


தன் பிள்ளைகளுக்காக தான் தன் மீது அன்பும் அக்கறையும் இருக்கிறானா என்று எண்ணிய தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டாள் மங்கை.

நீங்கள் கவலைப்படாதீர்கள் விக்ரம். மறுபடி அவர்களுக்கு ஒரு சில டெஸ்ட் எல்லாம் எடுத்து விட்டு ஆபரேஷன் செய்யலாம் என்று கூறி விக்ரமை வெளியில் அழைத்துச் சென்றார் டாக்டர்.

தன் மனைவியை பார்த்துவிட்டு வெளியே வந்த விக்ரமின் முகத்தில் பயமும் கவலையும்  அப்படிக் கிடந்தது.

கார்த்திக்கும் விஜய்யும் கவலைப்படாதே விக்ரம்.எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.நீயே இப்படி உடைந்து போனால்  எப்படி.பார் மற்றவர்களை அவர்களும் மிகவும் கலங்கிவிடுவார்கள். நீதான் தைரியமா இருந்து  எல்லாருக்கும் ஆறுதல் சொல்லவேண்டும் வா போகலாம் என்று அவணின் கவனத்தை திசை திருப்பினர்.

அதன்பின் மங்கையும் தன்னால் முடிந்த அளவு தன் குழந்தைகளை வெளி உலகுக்குக் கொண்டுவர டாக்டர்களுடன் இணைந்து போராடினாள்.

கொஞ்ச நேரத்தில் மங்கையின் மனஉறுதியாலும் டாக்டர்கள் கொடுத்த மருந்து மாத்திரைகளின் உதவியாலும் மங்கையின் உடல் நிலை சீராகியது.

அடுத்த அரைமணி நேரத்தில் தன் அன்னையை கலைப்பாக்கி விக்ரமின் புதல்வர்கள் இப்புவியில் ஜனித்தனர்.ஆம் விக்ரமிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

மங்கை அசதியிலும் களைப்பிலும் மயக்கமாய் இருந்தாள். நர்ஸ் குழந்தைகளை சுத்தம் செய்து வெளியில் கொண்டுவந்து கொடுத்தார்.

மங்கையும் இரண்டு குழந்தைகளும் நலமாக இருப்பதாக  கூறினார் டாக்டர்.

அதைக் கேட்ட அனைவரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தனர். எல்லோரும் குழந்தைகளை ஆவலாக பார்த்தபோது விக்ரம் மட்டும் தன் மனைவியை காண அறைக்கு சென்றுவிட்டான்.


தன் மனைவியின் முகத்தை கண்டவனுக்கோ அவளின் முகத்தில் பிரசவித்த களைப்பையும் மீறி ஒருவித மலர்ச்சி இருந்தது.அது தாய்மை தந்த அழகு போல.

ஏதோ புரியாமல் பேசினாள் என்றால் நான் அது அவளுக்கு புரிய வைத்திருக்க வேண்டும். அதை விடுத்து அவளை தவிர்த்தது தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். என்னை மன்னித்து விடம்மா. இனிமேல் இப்படி நடக்காது என்று தன் மனைவியின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அவளிடம் மனதுக்குள் பேசிக் கொண்டு இருந்தான்.

சார் அவங்களை வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என்ற நர்சின் குரலில் நடப்புக்கு திரும்பினார் விக்ரம்.

மங்கையை அறைக்கு  மாற்றியது மொத்த குடும்பமும் குழந்தைகளையும் மங்கையையும் கவனித்துக் கொண்டிருந்தனர் .விக்ரம் மட்டும் மங்கை கண்விழித்து பார்த்தபின்  குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டான்.

மங்கை கண்விழிக்க இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் என்று டாக்டர் சொல்லவே கார்த்திக் எல்லாரும் இப்படியே ஹாஸ்பிடலில் இருக்க முடியாது விக்ரம்.முதலில் நீ போய் விட்டிருக்கு சென்று ரெப்ரேஷ் ஆகிவிட்டுவா பின்பு ஒவ்வொருவராக போய் வரலாம் என்றான்.

இல்லை கார்த்தி அவள் கண்விழித்துப் பார்த்த பிறகு நான் வீட்டுக்கு போய் கொள்கிறேன் என்றான் கெஞ்சலாய் விக்ரம்.

சொன்னால் கேள் விக்ரம் இப்பொழுது மங்கை மயக்கமாய் தான் இருக்கிறாள் நீ ஃப்ரெஷ் ஆகி வந்து விட்டாள். அவள் விழித்திருக்கும் நேரம் அனைத்தும் மங்கையுடனே இருக்கலாம் என்றான்.

கார்த்திக் கூறுவது சரியாக படவே விக்ரம் கிளம்பினான் .என்ன நினைத்தானோ கார்த்திக் விக்ரம் நானும் வருகிறேன் என்று தன் நண்பனுடன் சென்றான்.

இவர்கள் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் மங்கை கண்ணை வைத்து பார்த்தாள்.தன் குடும்பம் முழுவதும் தன் அருகில் இருந்தாலும் அவள் கண்கள் என்னவோ தன்னவனை தான் தேடியது.விக்ரம் வீட்டிற்கு சென்று விட்டான் என்று அறிந்த பின்புதான் தன் குழந்தைகளைப் பற்றி கேட்டாள்.
இருவருமே அப்படியே விக்ரமை போலிருந்தனர்.




விக்ரமன் கார்த்திக்கின் வீட்டிலிருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் இருபுறமும் அந்தக் கார்கள் வந்து அணை கட்டியது. துப்பாக்கி முனையில் இருவரையும் தங்களுடன் கடத்தி சென்றனர்.




மங்கை தன் கணவனைக் காண வழிமேல் விழி வைத்து காத்திருந்தாள்....

விக்ரம் பத்திரமாக வருவானா?

மாலை தொடுக்கப்படும்



Post Reply

Return to “மாலை சூடும் வேளை”