மாலை சூடும் வேளை 47

Post Reply
laxmidevi
Moderators
Posts: 47
Joined: Thu Aug 20, 2020 2:14 pm
Has thanked: 1 time
Been thanked: 4 times

மாலை சூடும் வேளை 47

Post by laxmidevi »

மாலை-47

பாடல் வரிகள்
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் சொந்தம் பார்த்தாலே
சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே
பூவின் ஆயுள் கூடுமே
இரண்டு கண்கள் என்றாலும்
பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனி தான்
உள்ளம் என்றும் ஒன்றுதான்.......


கார்த்தி எழுந்திருடா மணி நாலாகிடுச்சு ஜாகிங்க் போகனும் என்றான் விக்ரம்.

உன்னோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா இங்க வந்துமா  ஜாக்கிங் போகணும் என்றான் கார்த்திக்.

எங்க இருந்தா என்னடா போலீஸ்காரன் போலீஸ்காரன் தான்?

இதுக்கும் போலீசுக்கும் என்னடா சம்பந்தம் .இது உனக்கே ஓவரா இல்ல?

இல்ல இப்ப நீ கண்டிப்பா என் கூட ஜாக்கிங் வரணும் இல்லேனா நேத்து அந்த நிம்மி பொண்ணு கூட செல்பி எடுத்தத மேகிட்ட போட்டு கொடுத்துடுவேன் என்று மிரட்டினான் விக்ரம்.

அந்த பொண்ணு அவங்க அண்ணா
மாதிரி இருக்கேன் தான் டா செல்ஃபி எடுத்து அவங்க வீட்ல காண்பிக்றேன்னு சொல்லுச்சு? நீ என்னடா இப்படி கோர்த்து விடுற.

அந்த பொண்ணு அண்ணானு சொன்னது உனக்கும் எனக்கும்  மட்டும்தான் தெரியும் போட்டோல தெரியாது. நான் மாத்தி சொல்லுவேனே கார்த்திக்.

சரி இப்ப என்ன ஜாக்கிங் வரனும் அவ்வளவு தானே வரேன் வந்து தொலைக்கிறேன். வரலனா விடவா போற என்றான் கடுப்புடன் கார்த்திக்.

நாம மட்டும் ஜாகிங் போக இவங்கஇரண்டு பேரும் ஜாலியாக தூங்கவா?

விஜய் வாடா ஜாகிங் போகலாம் என எழுப்பினான் கார்த்தி .

ஒன்னும் வேணாம் என்றான் விஜய்.

விஜய் இப்ப மட்டும் நீ ஜாக்கிங் வரல நேத்து நீ அந்த ரிசப்ஷனிஸ்டை சைட்
அடித்ததை மலரக்கிட்ட  சொல்லிவிடுவேன் .

நான் எப்படா அவள சைட் அடித்தேன்?

நீ சைட் அடிக்கல தான் ஆனா நான் சொல்லுவேன் . நான் சொன்னா மலர்குட்டிமா நம்புமே?
நல்ல இருக்கிறத குடும்பத்துல கூடி கும்பி அடிச்சிடதா டா மச்சான். நான் உன் கூட வரேன் என்று கதறினான்விஜய்.

சந்தோஷமாக இருந்தது கார்த்திக்கு.

சுந்தர் என்று ஆரம்பித்தான் கார்த்திக் .

இதோ ஜாக்கிங் கிளம்பிட்டேன் மச்சான் இப்பதான் நானும் கனியும் சேர்ந்து இருக்கோம் .மறுபடியும் பிரித்து விட்டுறாதீங்க நான் வரேன் என்றவாறு நால்வரும் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.

நேற்றிரவு எல்லோரும் வட்டமாக கீழே அமர்ந்து இரவுணவு சாப்பிட்டனர்.இரவு உணவை பூரணியும் பத்மாவும் தான் செய்தார்கள். தம் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக உண்பதை
கண்ணாற ரசித்தனர்.

அப்போது ராமநாதன் மங்கை அறையில் மட்டும் தான் ஏசி இருக்கும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை வரும் போது எல்லா அறையிலும் மாட்டிவிட லாம் என்றார் சிறு சங்கடத்துடன்.

என்ன சம்பந்தி இதுல என்ன இருக்கு.இதெல்லாம் ஒரு விஷயமா? நம்ம பிள்ளைகள் ஏதும் நினைக்க மாட்டாங்க என்றார் முரளிதரன் சமாதானமாக.

மாமா  எப்பவுமே ரூமை பூட்டிக்கிட்டு ஏசி போட்டுட்டு தான் தூங்குறோம் அதனால் நாங்கள் எல்லாரும் ஜாலியா மொட்டை மாடியில் தூங்க போறோம் என்றான் விக்ரம்.

ஹே ஜாலி என அனைவரும் ஆமோதித்த போது கார்த்தியும் விஜயும் மட்டும் விக்ரமை முறைத்தனர்.சுந்தர் வெளிப்படையாக முறைக்காவிட்டாலும் விக்ரமை உள்ளுக்குள்ளேயே வைத்து  திட்டிக் கொண்டிருந்தான்.

சிறியவர்கள் அனைவரும் மொட்டை மாடியில் படுத்துக் கொள்ளவதாய் கூறவும் பத்மா குழந்தைகளுக்கு பனி ஒத்துக்கொள்ளாதுடா.. நீங்கள் விரும்பினால் எல்லோரும் ஹாலில் படுத்துக் கொள்ளலாம் என்றார்.

பெண்கள் தங்கள் குழந்தையுடன் மொத்தமாக ஹாலில் படுத்துக்கொண்டனர் . பெரியவர்கள் நால்வர் மட்டும்  அறையில் படுத்துக் கொண்டனர்.

கார்த்திக்கும் விஜய்யும் நீ தனியா மொட்டைமாடியில் படு அது உன்பாடு . என்னை ஏண்டா என் கலைகிட்ட இருந்து பிரிச்சா?

கிட்டத்தட்ட இதையே கூறினர் விஜய்யும் சுந்தரும்.

அவனுக பீல் பண்ணினா கூட பரவாயில்லை சுந்தர்.உங்களுக்கு தான் இன்னும் லைசென்ஸ் வரவில்லையே அப்புறம் என்ன ஃபீலிங்க்ஸ் என்று கூறி சிரித்தான் விக்ரம்.

சுந்தர் நான் கொஞ்ச நேரம் கனி கிட்ட பேசிட்டு இருக்கலாம் என்று நினைத்தேன் என்றான்.

நீங்கள் எல்லாம் ஜாலியா ஜோடியாக இருக்க நான் மட்டும் தனியாக இருக்கவா? அதெல்லாம் எல்லாரையும் ப்ளான் பண்ணி பிரிச்சுவிட்டேன் . யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றான் விக்ரம் மகிழ்ச்சியாக.

டேய் விக்ரம் நீ ஹீரோ தானடா .பின்ன ஏன் டா வில்லன் மாதிரி எல்லாரையும் பிரிக்கிற என்றான் வருத்தமாக.

அதற்கு தன்னுடைய ட்ரேட் மார்க் புன்னகையை சிந்தி அனைவரையும் கடுப்பேற்றினான் விக்ரம்.

நல்லா வருவ டா நீ என் மற்ற மூவரும் வெளியில் திட்டினாலும் நிலவின் ஒளியில் தென்றலாக வருடும் காற்றின் ஏகாந்தத்தை வெகுவாக ரசித்தனர் ‌.

கீழே பெண்கள் திருமண பெண் ஜானவியை மாறிமாறி கேலி செய்து கொண்டு இருந்த விட்டு தாமதமாக தான் உறங்கினார்கள்

மாடியில் ஆண்களும் ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கேலி செய்து வார்த்தையாடிதில் வெகு நேரம் கழித்து தான் தூங்கினார்கள்.

அந்த வீடு நிறைய உறவுகளும் உறவுகளின் மனம் நிறைய மகிழ்ச்சியும் இருந்தது.அதை வானில் இருந்த நிலவும் பிரதிபலித்தது

விக்ரம் தன்னவளையும் தங்கள் பிள்ளைகளையும் பார்க்கும் ஆர்வத்தில் சீக்கிரமே விழித்து விட்டான். எல்லோரையும் எழுப்பி கிளம்ப செய்யவே இவ்வாறு செய்து கொண்டிருந்தான்.

காலையில் அனைவரும் மருத்துவமனை செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது ஜானு தன் வருங்கால கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த சம்மு அத்தை என்றவாறு  அவள் மடியில் ஏறி அமர்ந்தாள்.

சம்மூ வேற ட்ரஸ் மாத்திக்கலாம் வா என்றவறே அங்கு கனி வந்தான்.

நான் வரலை என்ற சம்முவை அவளின் அத்தையின் மடியில் இருந்து தூக்கி ட்ரேஸ் பண்ணிட்டு அத்தைட்ட வரலாம் சரியா என அங்கிருந்து கிளம்பினாள் கனி.

அவளுக்கு ஜானு வீடியோ காலில் இருந்ததே தெரியாது.

கனியையும் சம்முவையும் அந்தப்பக்கம் வீடியோ காலில் பார்த்தவன் அதிர்ந்தான்.

மாலை தொடுக்கப்படும்.

வணக்கம் நண்பர்களே,

உங்கள் கருத்துக்களை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நட்புடன்
லஷ்மி தேவி.



Post Reply

Return to “மாலை சூடும் வேளை”