மாலை சூடும் வேளை 48

Post Reply
laxmidevi
Moderators
Posts: 47
Joined: Thu Aug 20, 2020 2:14 pm
Has thanked: 1 time
Been thanked: 4 times

மாலை சூடும் வேளை 48

Post by laxmidevi »

மாலை-48

பாடல் வரிகள்.

‌ஒருவர் தூங்கும் தூக்கத்தில்
இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில்
இருவர் இருதயம் வாழுகிறோம்..

கோவை

சங்கர் நெஜமாதான் சொல்றியா?

அப்ப நான் சொல்றதை நீ நம்பலையா?

சரி இனிமே ஜானு போன் பண்ணனும் போது மறுபடியும் அவங்கள காட்ட சொல் அப்ப பார்த்து தெரிஞ்சுக்கலாம் .இப்ப ரொம்ப யோசிக்காம ஆபீஸ் கிளம்பு என்றால் அவன் அக்கா லாவண்யா.

மதுரை.

மங்கையையும் குழந்தைகளையும் காண அனைவரும் வீட்டில் இருந்து மருத்துவமனை கிளம்பி வந்தனர். அவர்களை பார்த்துவிட்டு விக்ரமிற்கும் மங்கைக்கும் தனிமை தர எண்ணி அனைவரும் அறையை  விட்டு வெளியேறினர்.

தன் மனைவியின் அருகில் பூக்குவியளையாய் ரோஜாப்பூவின் நிறத்தில் இருந்த தன் பிள்ளைகளைப் பார்த்து ரசித்தான் விக்ரம்.

    அதில் ஒருவன் அப்போதுதான் கண் விழித்துப் பார்த்து உதட்டை சுழித்து சிரித்தான் அவன் அவளின் அழகில் மயங்கி தன் மகனைப் கையோடு தூக்கி கொஞ்சிக் கொண்டிருந்தான் விக்ரம்.

தன் மகன்களை மாறி மாறி கொஞ்சிக்கொண்டு இருந்த விக்ரமை பார்த்த மங்கை கடுப்பாகி பிள்ளைகளை மட்டும்தான் கொஞ்சுவிங்களா என்றாள் கோபமாக

உன்னை கொஞ்சாமாலா இவனுக ரெண்டு பேரும் வந்தாங்க என்றான் விக்ரம் விளையாட்டாக.

தன் கணவனின் பதிலில் நாணம் வந்துவிட்டது பெண்களுக்கு.

தன் கைகளிலேயே உறங்கிய குழந்தைகளை தொட்டிலில் போட்டுவிட்டு மங்கையின் அருகில் கட்டிலில் வந்து அமர்ந்தான் விக்ரம்.

சாரிமா நீதான் ஏதோ தவறாக புரிந்து கொண்டாய் என்றால் நான் அதை உனக்கு  புரிய வைத்திருக்க வேண்டும் என்ற ஆரம்பித்தவனின் வாயினை தன் விரல்களால்  மூடினாள் மங்கை.

நான் தான் உங்களை தவறாக புரிந்து கொண்டேன் .நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும் என்று தான் தவறாக புரிந்து கொண்டதை அவனிடம் கூறினாள் மங்கை.

எப்போதுமே என் மனதில் நீ மட்டும் தான் அரசியாக இருந்து என்னை ஆள்கிறாய் அரசி என்றான் விக்ரம் காதலுடன்.

விக்ரமின் தோளில் சாய்ந்து கொண்ட மங்கை நீங்கள் அதை சொல்லவே தேவையில்லை.இப்பொழுது நான் முற்றுமுழுதாக உங்களை உணர்ந்துகொண்டேன் என்றாள் மங்கை.

அதற்குள் கார்த்திக் விக்ரமை அழைத்து டாக்டர் செக்கப்புக்கு வராங்கடா என்று கூறினான்.

டாக்டர்  குழந்தையையும் மங்கையையும் செக் செய்துவிட்டு மூவரும் நலமாக இருப்பதாகவும் இன்று மாலை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூறிவிட்டார்.

டாக்டர் கூறியபடி அன்று மாலையே மங்கையையும் குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.

தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தேவையானதை விக்ரமே பார்த்து பார்த்து செய்தான்.

தன் கணவனின் கனிவிலும் காதலிலும் கவனிப்பிலும் மங்கை மெய்மறந்து நின்றாள்.

டேய் விக்ரம் நீ இப்படி செஞ்சுட்டு இருந்தேனா  நாளைக்கு மலர் விக்ரம்மாமா  மங்கைக்கு எல்லாம் எப்படிபார்த்து பார்த்துசெய்யரார் . என்னை நீ இப்படி கவனிக்கிறாயாடா என்று என்கூட சண்டை போட போறாடா என்றான் விஜய் கவலையாக.

இல்லனா மட்டும் உன் கூட சண்டை போட மாட்டாளா? போடா என தன் பிள்ளைகளை பார்க்க சென்றுவிட்டான் விக்ரம்.

மறுநாள் காலையில் விக்ரம் அம்பிகாவைத் தவிர அனைவரும் கோவை கிளம்பி விட்டனர்.

அன்று மறுபடியும் நான் ஜானுவுக்கு வீடியோ காலில் அழைத்த சங்கர் நேற்று நாம் பேசும் போது உன்னருகில் இருந்தவர்கள் யார் என்று கேட்டான்.

அது என் அண்ணி , அண்ணியின் குழந்தை . இன்று தான் ஊருக்கு கிளம்பினார்கள் ஏன் கேடாகிறீர்கள் என்றாள் ஜானு.

சும்மாதான் குழந்தை க்யூட்டா இருந்தால அதான் யார் என்று கேட்டேன் என்று முடித்து விட்டான் சங்கர்.

அவர்களைப் பற்றி தன் அக்காவிடம் கூறினான் சங்கர்.

விடு சங்கர் திருமணத்திற்கு போகும் போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது அதைப்பற்றி துருவி துருவி விசாரித்தால் அவர்களுக்கு நம் மீது ஏதேனும் சந்தேகம் வந்து விடப் போகிறது. பழையதை பற்றி யோசிக்காமல் மகிழ்ச்சியாக திருமண நிகழ்வுகளை அனுபவிக்க பார் என்றாள் லாவண்யா.

அக்கா கூறுவது சரியாக இருந்தாலும் மனதின் ஓரத்தில் ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது. எல்லாத்தையும் பின்னுக்குத்தள்ளி தன்னவளுடனான திருமண நாளை ஆர்வமாக எதிர்பார்க்கத் தொடங்கினான் சங்கர்.

ஒரு வாரம் கழித்து அம்பிகாவும் விக்ரமும் கோவை கிளம்பிக் கொண்டிருந்தனர்.

அம்பிகா மகாலட்சுமியிடம் மகா ஒரு மாதம் செல்லவும் நாங்கள் மருமகளையும் பிள்ளைகளையும் எங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லவா என்று கேட்டார்.

மகாலட்சுமி பதில் கூறும் முன் விக்ரம் இன்னும் ஆறு மாசம்  இங்கேயே இருக்கட்டும் பிறகு நம் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூறிவிட்டான்.

சரிமா நான் குழந்தைகளை பார்த்துவிட்டு வருகிறேன். நீங்கள் காரில் இருங்கள் என்று உள்ளே குழந்தைகளை காண சென்றான் விக்ரம்.

கோபத்தில் மூக்கு நுனி சிவக்க வந்த தன் மனைவியை பார்த்து என்ன அரசி என் மேல் கோபமா என்றான்.

பின்னே நானே எப்படி உங்களை பார்க்காமல் இருக்க போகிறேன் என கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நீங்க என்னவென்றால் அத்தையே அழைத்து செல்கிறேன் என்று கூறினால் கூட வேண்டாம் என்கிறீர்கள் ?

எனக்கு மட்டும் உங்களைப் பிரிந்து இருப்பதற்கு ஆசையா என்ன அரசி? அத்தை,மாமா, மாது எல்லோரும் உங்களுடன் இருக்க விரும்புவார்கள் தானே .ஆறு மாதம் அவர்களுடன் இரு பின்பு எப்பொழுதும் என்னுடன் இருக்கப் போகிறாயே என்றான் சமாதானமாக.

தன்னவன் கூறியதைக் கேட்டு அவளுக்கு மனதில் என்னவன் என்ற கர்வம் வந்தது . தன்னைப் பற்றி மட்டும் நினைக்காமல் உடனிருப்போர் அனைவரின் விருப்பத்தினை பற்றி யோசிக்கிறானே என வியந்தாள். தன் ஆதியின் பக்கம் வந்து அவனை காதலுடன் அணைத்துக் கொண்டாள். விக்ரமும் தன் மனைவியை அணைத்து அவளின் உச்சியில் முத்தமிட்டான். உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள் பிள்ளைகளையும் தான். லீவு கிடைக்கும் போது உன்னிடம் பறந்து  வந்து விடுவேன் .

பிள்ளைகளை கொஞ்சி விட்டு கிளம்பினான் விக்ரம்.

உங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பேன் என்றால் மங்கை

அம்பிகாவும் விக்ரமும் கோவை வந்து சேர்ந்தனர்.

இன்னும் மூன்று மாதத்தில் ஜானுக்கும் ஷங்கருக்கும் திருமணத்திற்கு நாள் குறித்திருந்தனர் .

அடுத்த வாரத்திலேயே சுந்தரிக்கும் கனிக்கும் திருமணம் செய்யலாமா என்று கேட்டதற்கு பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் கனி தன் தாய் தந்தையருடன் தன் வீட்டில் வசிக்கிறாள் இன்னும் கொஞ்ச நாட்கள் அவர்களுடன் இருக்கட்டும். பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்று விட்டான் சுந்தர்.

அதன்படியே ஆறு மாதம் கழித்து அவர்களுக்கு திருமணத்திற்கு நாள் குறித்தனர் பெரியவர்கள் .

விக்ரமும் கார்த்திக்கும் மறுபடியும் போதை மருந்து தமிழ்நாட்டிற்கு வராமல் இருப்பதற்காக  மாநிலம் முழுவதும்  கண்காணிப்பை பலப்படுத்திக் கொண்டு இருந்தனர்.

மலருக்கு தற்போது ஐந்தாம் மாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் விஜய் தன் தொழிலோடு மனைவியை கவனித்துக் கொள்ளவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.

ஜானுவின் திருமணத்திற்காக  அனைவரும் இரண்டு நாட்கள் முன்னதாகவே மதுரை சென்று விட்டனர்.

விக்ரமுக்கும் கார்த்திக்கும் நிச்சயத்தன்று காலையில் உள்துறை செயலாளருடன் ஒரு மீட்டிங் இருந்ததால் தவிர்க்க இயலாமல் நேராக மாலை நிச்சயத்திற்கு வந்து விடுவதாய் கூறிவிட்டனர்.

பெண் வீட்டில் சார்பாய் அனைவரும் கல்யாண மண்டபத்திற்கு முன்னதாகவே வந்து விட்டிருந்தனர்.

மசக்கை யின் காரணமாக மலரால்  எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. ஜானு தான் நீங்கள் என்னுடன் அறையிலேயே இருங்கள் அது போதும் என்று விட்டாள்.அது மட்டுமில்லாமல் அவளுக்கு அடிக்கடி குடிப்பதற்கு ஏதாவது கொடுத்துக் கொண்டே இருந்தாள்.


மங்கைக்கும் தன் இரு குழந்தைகளை பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. அவளாலும் பெரிதாக எந்த உதவியும் செய்ய முடியவில்லை.

எனவே அம்பிகா மகாலட்சுமி பூரணி தான் பத்மாவிற்கு உதவியாக இருந்தனர். வரவேற்பு அலங்காரம் என மற்ற வேலைகள் கனி பார்த்துக்கொண்டாள்.

மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்று மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுற்றுவதற்காக கனி மண்டபத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தாள் சம்முவும் தன் அன்னையின் அருகில் நின்று இருந்தாள்.

ராமநாதன் கஜபதி  முரளிதரன் ராகவன் மற்றும் அவர்களின் மனைவிகள் என அனைத்து பெரியவர்களும் வாசலுக்கே வந்து மாப்பிள்ளை வீட்டினரை மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

கனி மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்தாள்.

மாப்பிள்ளையும் மாப்பிள்ளை குடும்பத்தினரும் கனியையும் அவளின் சேலையை பிடித்தவாறு நின்று கொண்டிருந்த சம்முவையும் பார்த்து பலமாக அதிர்ந்தனர்.


மற்றவர்கள் அதை கவனித்து பார்க்கும் தங்கள் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டனர்.

ஆனால் இதை விஜய் கவனிக்க தவறவில்லை .ஏதோ இருக்கிறது. அவர்களிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்

ஜானு சங்கர் திருமணம் நடைபெறுமா?

பார்க்கலாம்.

மாலை தொடுக்கப்படும்.


வணக்கம் நண்பர்களே ,

கதை பற்றி உங்கள் கருத்துக்களை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


இப்படிக்கு

அன்பு தோழி
லக்ஷ்மி தேவி



Post Reply

Return to “மாலை சூடும் வேளை”