Page 1 of 1

மாலை சூடும் வேளை நியூ ஸ்டோரி

Posted: Tue Sep 01, 2020 10:58 am
by Madhumathi Bharath
Hi friends,

  மாலை சூடும் வேளை...
      ஒரு காவலனின் காதல் கை சேர்ந்ததா ? கலைந்ததா?
      மங்கையவளின் மனம் போல் மாங்கல்யம் அமைந்ததா?
   மூன்று பெண்களின் கல்யாணமாலை அவர்கள் வாழ்வை மலர செய்ததா?

இதுவே கதை
ஒரு குடும்ப காதல் கதை..


மாலை-1
     அம்மா, ம்மா.... ஆ என்று தன் தாயை அழைத்து கொண்டு இருந்தாள் மங்கை. 

   என்னடி சும்மா கூப்பிடுற , ஏதாவது வேணுமா? என்று தன் மகள் மங்கையர்கரசி யிடம் வந்தார் மகாலட்சுமி.

இல்லமா நீங்க எல்லாம் கோவிலுக்கு போரிங்க, நான் மட்டும் காலேஜ்கு போனுமா? கடுப்பா இருக்கு என்றாள் மங்கை.
   மங்கையின் குலதெய்வம் அழகர் மலையில் மேல் உள்ள ரங்கநாதர். அங்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாட படும் திருவிழா. முன்பு எல்லாம் எப்போதும் போய் வரலாம். தற்போதுதோ வனத்துறையின் அனுமதி பெற்றே செல்ல முடியும். அதற்கு தான் மங்கையின் குடும்பம் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள்.
      மங்கையின் அப்பா ரங்கநாதன், வட்ட சியர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். விவசாயமும் செய்து வருகிறார். அவரை பொறுத்தவரை விவசாயம் ஒரு உயிர் காக்கும் தொழில் அதை தன்னால் முடிந்த வரை பாதுகாத்தார். அம்மா மகாலட்சுமி இல்லத்ரசி,பாட்டி கமலா,தம்பி மாதவன் 11 ஆம் வகுப்பு முடித்துள்ளான். அவனுக்கு கோடை விடுமுறை,சந்தோசமாக கோவிலுக்கு கிளம்பினான். இதுதான் மங்கையின் அழகிய குடும்பம், மதுரையில் வசித்தனர்.
     நீயும் வா என்றால் மாடல் எக்ஸம் இருகு , வரலை சொல்லிட்ட, என்ன செய்ய மா? என்றார் மகாலட்சுமி.
  எப்போதும் வம்பு செய்யும் மாதவன் கூட  சுந்தர் அத்தான், ஜானுக்கா லாம் வராங்க ஜாலியா இருக்கும்.நீயும் வா என்றான்.

இல்ல டா HOD பேசவே முடியாது. நீங்க போய்ட்டு வாங்க. அடுத்த முறை பார்கலாம் என்றாள் சோர்வாக.
  
   சுந்தர் , ஜானவி மங்கையின் அத்தை பிள்ளைகள். ராம்சுந்தர் கணினி துறையில் பணிபுரிகிறன். ஜனாவி வேதியியல் 3 ஆம் ஆண்டு மாணவி.
  என்னடாமா நான் வேண்டுமானால் Hod பேசி லீவ் வாங்கவா? என்றார் மங்கையின் தந்தை ரங்கநாதன்.
  2 நாள்ன்ன பரவாயில்லை 5 நாள் தர  மாட்டங்க அப்பா.
  சரி டா அப்ப கிளம்பு .

மங்கையின் பாட்டிக்கு அவள் திருவிழா கு வராதது வருத்தம். புலம்பி கொண்டே இருந்தார்.
ஒரு வழியாக பாதி மனதுடன் கல்லூரி விடுதி க்கு கிளம்பினாள் மங்கை.

தோசை பொடி, ஊறுகாய், பருப்பு துவையல் எடுத்துகிடய?
    பத்திரமா இருக்கணும், குடும்ப கௌரவம் உன் கையில் தான் இருக்கு என்று அறிவுரை கூறினார் மகாலட்சுமி.

  இது எப்போதும் வழக்கம் என்பதால் , சரிம்மா என்றாள் .

  மங்கையின் அப்பா அவளை கோவை பேருந்திலற்றி விட்டு,அங்கே கோவிலில் சரியா சிக்னல் கிடைக்காது டா, கிடைத்தவுன் கால் செய்றேன். பத்திரம் என்ற சொல்லி கிளம்பினர்.

  சரி என்னும் விதமாக தலையசதாள் மங்கை.

மங்கைய்க்கரசி IT 3 ஆம் ஆண்டு , சக்தி குரூப் ஆப் டெகனாலஜி கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கிறாள். இத்துறை தேர்ந்து எடுத்து சுந்தர். எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியும்,மதிப்பும் இருக்கும்.இதை படி என்றான் அவளிடம்.
   சுந்தரே மங்கையின் வழிகாட்டி,அவன் சொல்வதை அப்படியே கேட்பாள்.அவள் தந்தை யும் சம்மதித்தார். சக்தி குழுமம் ஒழுக்கததோடு, கண்டிப் புகும் பேர் போனது.அதனாலேயே ரங்கநாதன் மங்கை அங்கே சேர்த்து இருந்தார்.அவர் பிள்ளைகளிடம் பரிவும், பாசமுமக இருந்தாலும், கண்டிப்பும் சற்று அதிகமே. அதனால் மங்கையும், மாதவனும் தந்தை சொல்லுக்கு மறுத்து பேசியதே இல்லை எனலாம்.
  எப்போதாவது அபூர்வமாக மறுத்தாலும் அவரின் கோப பார்வையிலே அடங்கி விடுவார்கள்.

   பேருந்து நகர தொடங்கியதும் காதில் ஹெட் செட் மாட்டி பாட்டு கேட்டவாறே உறங்கி போனாள் மங்கை.
   நாளை விடியலில் அவளுடைய வாழ்வின் தடம் மாற போவதை மங்கை உணர்வாளா?