Page 1 of 1

மாலை சூடும் வேளை -2

Posted: Tue Sep 01, 2020 10:59 am
by Madhumathi Bharath
மாலை -2

பாடல் வரிகள்.

துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான்
காதலித்தான்.
என்றாலும் காக்கி சட்டையை தான்
கை பிடித்தான்.

    "பாலாண்ணா நான் வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு காலை 10 மணிக்கு மேல் வருகிறேன் என்றான் விக்ரமாதித்தன்.
  சரிங்க சார் என்றார் பாலா.
விக்ரமாதித்தன் கோவை மாவட்ட ஏசிபி .29 வயது இளைஞன். ஐபிஎஸ் முடித்து விட்டு பணியில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது. அவன் தந்தை முரளிதரன்  ஐ ஏஎஸ், வேளாண்மை வளர்ச்சி கழகத்தின் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.இவருக்கு 4 மில் , பல ஏக்கர் வயல்களும், தோப்பும் உள்ளது. கோவையில் மிகவும் செல்வாக்கான குடும்ப பின்னணி இவருடையது.விக்ரமின் தாய் அம்பிகா இல்லத்தரசி. தங்கை மணிமேகலை திருமணமாகி இதே கோவையில் கணவனுடன் , தன் இரு குழநதைகளுடன் வசிக்கிறாள்.
முரளிதரன் வரலாறுகளில் மிகுந்த விருப்ப முடையவர். தனக்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் அந்த விக்ரமாதித்தன் போல வீரமும்,புத்திசாலித்தனமும் இருக்க வேண்டுமென அப்பெயர் சூட்டினார்.அவனும் அப்பெயருகு ஏற்றவாறு இருந்து வருகிறான். தன் பெண் குழந்தை, மேகலா தெய்வம் போல் அன்புடனும்,இரக்கத்துடன் விளங்க வேண்டும் என அப்பெயர் இட்டார்.
மணிமேகலை அன்பான பெண் மட்டுமல்ல கொஞ்சம் குறும்பு, வேடிக்கை நிறைந்த பெண். பிள்ளைகளை பொறுத்தவரை முரளி விரும்பிய படி தான் நடந்தது.

நேற்று இரவு மைசூர் வழியாக தப்பி வந்த இரு தீவிரவாதிகள் கோவைஊடுருவி விட்டனர் என்ற தகவல் வந்ததில் இருந்து , தேவையான முன் ஏற்பாடு, பாதுகாப்பு செய்து விட்டு , அவர்களை பிடிக்க வியூகம் அமைத்துவிட்டு தற்போது தான் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து இல்லம் கிளம்பி கொண்டு இருந்தான்.
தற்செயலாக தன் கடிகாரத்தை பார்த்தான் அது அதிகாலை 3 மணி. முதல் நாள் காலை 7 மணிக்கு வந்தவன் இப்போதுதான் கிளம்புகிறான்.
அன்னைக்கு தெரிந்தால் ஒரு மூச்சு அர்ச்சனை நடக்கும். எப்போதுமே தாமதம் ஆவது தான் , ஆனால் இன்று இன்னும் அதிக தாமதம். அச்சமயங்களில் தந்தை தான் வந்து காப்பாற்றுவார்.
" அவனே களைத்து போய் இருக்கிறான்,அவனை நிற்க வைத்து வசை பாடுகிரயே அபிம்மா,நீ போய் ரெஸ்ட் எடு மை சன் "என்பர்.

அதனால் அவருகும் ஒன்றிரண்டு திட்டுகள் விழுவதுண்டு. இன்று என்னவாகுமோ என்று தன் அன்னையை எண்ணி சிரித்துகொண்டே காரை ஸ்டார்ட் செய்தான்.

  பின் பாலா அண்ணா வாங்க உங்களை வீட்டில் விட்டு விடுகிறேன் என்றான்.

பரவாயில்ல சார், நான் ஆட்டோ வில் போய் கொள்கிறேன் சார் என்றார் பாலா.

பாலா ,விக்ரமின் கீழ் பணபுரியும் நேர்மையான காவலர்.அவனை விட 8 வயது அதிகம்.அதனாலேயே அவன் தனித்து இருக்கும் போது அவரை அண்ணா என்று அழைப்பான்.

இருக்கட்டும் அந்த பக்கம் தான்,என் வீடும் உள்ளது,வாங்க என்றான் சின்னவன்.
சரிங்க சார் கோவை பேருந்து நிலையத்தில்  விடுங்கள். அங்கிருந்து நடந்து போய் விடுவேன். வீடு வரை சென்றால் திரும்பும்போது ஒன் வே நீங்கள் சுற்றி வர வேண்டும் என்றார் பாலா.
   சரிங்க பாலா அண்ணா.
பாலா வை அவர் சொன்ன இடத்தில் இறக்கி விட்டு தன் காரை இல்லம் நோக்கி செலுத்தினான் விக்ரம்.

பின் யோசனையுடன் , பாலா அண்ணா வை மதியத்துக்கு மேல் வர சொல்லலாம்.கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டும் என்று எண்ணிய வரே  பாலாவை இறக்கி விட்ட இடத்துக்கு வந்தான்.

அங்கே சற்று தூரத்தில் ஒரு பெண்ணுடன் சீரியஸ் ஆக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது
   அந்த பெண்ணை  பார்த்தான்.

இவளோ? என்று குழும்பினன்.


யார் அவள்? பார்போம்...