Page 1 of 1

மாலை சூடும் வேளை---5

Posted: Tue Sep 01, 2020 11:02 am
by Madhumathi Bharath
மாலை-5

பாடல் வரிகள்

எத்தனை பெண்களை கடந்திருப்பேன்
இப்படி என மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்க சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
தன்னை தருவாயோ இல்லை கரைவாயோ!!!


விக்ரம் தன் தந்தைக்கு அழைத்து கார் அனுப்ப சொன்னான்.
அங்கு வந்த முரளிதரன் தன் மகனுக்காக முன் பக்க கார் கதவை திறந்தார்.

அப்பா நீங்க ஏன் வந்தீங்க என்றான் விக்ரம்.

ஒரு வேலையா டிரைவர் வெளியே போயிருக்கார் .

இந்த நேரத்தில் உங்களுக்கு ஏன் அலைச்சல் சொல்லி இருந்தா நானே டாக்ஸில வந்திருப்பேன்ல.

இது தான் விக்ரம் தன்னுடைய வசதியை மட்டும் பார்க்காமல் , அனைவரின் நிலையில் இருந்தும் யோசிப்பான்.

மகனின் அக்கறையில் மனம் நெகிழ்ந்தது தந்தைக்கு.

ஒரு நாள் தானே.

சரிப்பா நான் டிரைவ் பண்றேன்.

வேண்டாம் டா மகனே ,இரவு உறங்கியிருக்க மாட்டாய் தூக்க கலக்கத்தில் எங்காவது போய் இடித்து விட்டால் ? நான் என் ஒரே ஒரு மனைவியிடம் பத்திரமாக போய் சேர வேண்டும்.

மற்ற நேரமாய் இருந்தால் பதிலுக்கு விக்ரமும் வாரியிருப்பான்.வேறு சிந்தனையில் இருந்தால் , புன்னகையுடன் காரில் ஏறி அமர்ந்தான்.

விக்ரமின் சிந்தனை முழுக்க காலையில் பார்த்த பெண்ணே நிரம்பி வழிந்தாள்.
தீவிரவாதிகளை பிடிப்பதை பற்றி கூட தற்காலிகமாக மறந்தான்
தான் நினைத்து இருந்தால் அவளை அவள் ஊருக்கே அனுப்பி இருக்கலாம்.அங்கு கோவில் உள்ள போலீஸ் அதிகாரியுடன் பேசி அவளின் குடும்பத்தினருடன் அனுப்பி இருக்கலாம் . விக்ரமிற்கு ஏனோ அவளை ஊருக்கு அனுப்ப மனமில்லை.இல்லை வேறு ஏதேனும் டாக்ஸியில் அனுப்பி இருக்கலாம்.அவ்வாறு செய்தால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட் ல நிறுத்தி விசாரிப்பார்கள்.அவள் மேலும் பயப்படக்கூடும். போலீஸ் ஜீப்பில் அனுப்பினால், யாரேனும் பார்த்து தவறாக நினைத்தால் என்று தான் தன் காரில் அனுப்பி வைத்தான்.தான் தற்செயலாக இருமுறை சந்தித்த இல்லையில்லை பார்த்த (ஏனெனில் இருமுறையும் விக்ரம் மட்டும் தான் அவளை பார்த்தான் அவள் இவனை பார்க்கவில்லை )பெண்ணின் ஏன் இவ்வளவு அக்கறை கொள்கிறோம்? என்று அவனுக்கு புரியவில்லை. எல்லோருக்குமே அவன் உதவுவது வழக்கம் தான் என்றாலும் இது சற்று அதிகப்படியாகத்தான் அவனுக்கே
தோன்றியது.

அப்போது அவளை பார்த்த நாட்கள் மனதில் நிழலாடியது.

விக்ரம் தன் தந்தையின் நண்பர் ரவி நடத்தும் திறன் குறைபாடுடையோர் ஆசிரமத்திற்கு தன் தோட்டத்தில் விளைந்த காய் கனிகள், பருப்பை கொண்டு கொடுத்து விட்டு அவருடன் பேசிக் கொண்டு இருந்தான்.அப்போது ஒரு பெண் அங்கிருந்த பிள்ளைகளுடன் விளையாடி கொண்டு இருப்பதைப் பார்த்தான்.அங்கு அடிக்கடி அங்கு செல்வதால் அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் அவனுக்கு பழக்கமே.அதனால் புதியதாய் ஒரு பெண்ணை பார்த்தும் யார் அங்கிள் அது புதுசா வேலைக்கு வந்திருக்காங்க லா? என்று கேட்டான்.

இல்லப்பா , அந்த பெண் இங்கு NSS கேம்ப் காக வந்தாள்.பிறகு இங்கு மாதம் ஒருமுறை வரலாமா? என்று கேட்டாள்.நான் வரலாம்மா‌ என்றதும் . மாதம் ஒருமுறை வருகிறாள்.கல்லூரியில் படிக்கிறாள் என்று நினைக்கிறேன். பிள்ளைகளும் அவளுடன் மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள்.ஏதேனும் கதையோ பாடலோ சொல்லித்தருவாள்.

அப்போது குழந்தைகளுடன் அவள் சேர்ந்து சிரித்தது ரசனைக்குரியதாகவே தோன்றியது அவனுக்கு.

விக்ரம் மனதில் இப்போதுள்ள இளம் பெண்களுக்கு ஷாப்பிங் செலவழிக்கவே நேரமில்லை அவன் தங்கை மேகியையும் சேர்த்து தான், இவளுக்கு இதற்கும் நேரமிருக்கிறதா ,பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான் என்று நினைத்தான்.
பின் அவரிடம் விடை பெற்று தன் அலுவலகம் சென்று விட்டான்.

அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து ஒரு தகவலுக்காக தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரை பார்க்க சென்றான் விக்ரம்

அங்கே ஒரு பெண் மற்றொரு பெண்னை மிரட்டிப் கொண்டு இருந்தாள்.

என்ன மதி இதற்கு போய் அழலாமா? சின்ன காயம் தான். வளர்ந்த பெண் நீ சின்ன பிள்ளை போல அழுகிறாயே , யாரேனும் பார்த்தால் சிரிப்பார்கள் என்றாள் .

சரி மங்கை , நான் அழலை, ஆனா வலிக்குது என்றாள் மதி.

அந்த பெண் மதியின் கால் வீக்கத்தை பார்க்கும் போது வலி அதிகம் போலத்தான் தோன்றியது.என்ன வலியுடன் இருப்பவளை போய் இப்படி திட்டுகிறாளே என்று அந்த மதியை திட்டியவளை நன்றாக பார்த்தான்.

இந்த பெண் ஆசிரமத்தில் பார்த்த பெண் அல்லவா?

அப்போது மதியை பரிசோதிக்க உள்ளே அழைத்து சென்றனர்.

அங்கிருந்த மற்றொரு பெண் காவ்யா என்ன மங்கை பாவம் வலியில் இருப்பவளை திட்டுகிறாயே என்றாள்.

இல்லை கவி, நாமும் வீக்கமாய் உள்ளதே, வலிக்குதுதா மதி என்றால் மனதளவிள் இன்னும் வலிப்பதாக எண்ணுவாள் ரொம்ப அழுவாள்.இப்போது பார் சின்ன காயம் தான், என்று கொஞ்சம் தைரியமாக பரிசோதனைக்கு ஒத்துழைப்பு அளிப்பாள்.இல்லைனா காலை தொடக் கூட விடமாட்டாள்.

சரி கவி,நீ மதி வந்தால் அவளுடன் இரு நான் அவளுக்கு பிடித்த மாதுளை ஜுஸ் சான்ட்விச் வாங்கி வருகிறேன்.மீதம் இருக்கும் வலியும் சரியாகிவிடும் என்றாள் மங்கை.

விக்ரம் அந்த மருத்துவரை பார்த்து விட்டு வந்த போது அந்த பெண்கள் அங்கு இல்லை.அப்பெண் பெயரென்ன மங்கை . மங்கை மட்டும் தானா இல்லை முழுபெயர் என்ன?என்னாவாய் இருந்தால் நமக்கென்ன என்று அவனும் வீட்டுக்கு வந்து விட்டான்.

அதன்பின் வந்த நாட்களில் விக்ரம் தான் சந்தித்த பெண்னை மறந்து விட்டான் எனலாம்.அவன் வேலையும் அப்படித்தானே.ஆனால் எப்போதாவது தனிமையில் இருக்கும் போது அந்த பெண்ணின் புன்னகை முகமும் சீண்டலான குரலும் நினைவில் வந்து போகும்.அப்பொழுதெல்லாம் என்ன அழகாய் தன் தோழியின் அழுகையை நிறுத்தினாள்.வேறு எப்படி பேசி இருந்தாலும் அப்பெண் மதி இன்னும் கொஞ்சம் கலங்கித் தான் போயிருப்பாள்.வித்தியாசமான பெண் புத்திசாலியும் கூட.என்று மனதினுள் பாரட்டிக்கொள்வான்.

விக்ரம் கூட அப்படித்தான், அவன் வழக்குகளை கையாளும் விதமே தனித்துவமாக இருக்கும்.எதையுமே சற்று மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து செயலாற்றுபவன். இதுவரை அவனுக்கு இதில் வெற்றியே கிட்டியுள்ளது.

அவளை சந்தித்ததை விக்ரம் நினைத்து கொண்டு இருந்த போது அவன் முகத்தில் இளம் புன்னகை வந்து போனது.தற்போது போன்ற சிக்கலான வழக்குகளை கையாளும் போது விக்ரமின் முகம் சற்று இறுக்கமாகவே இருக்கும்.

அவன் முகத்தில் இருந்த புன்னகை பார்த்த முரளிதரன்

விக்ரம் உன் முகத்தில் இருக்கும் மலர்ச்சியை பார்த்தால் தீவிரவாதிகள் இருக்குமிடம் தெரிந்து விட்டதா, என்றார்.

அவன் இங்கிருந்தால் தானே பதில் கூற.
விக்ரம் என்று மறுமுறை அழைத்த பின்

என்னப்பா என்ன கேட்டீங்க என்றான் மகன்.

என்னடா மகனே கனவா? கனவில் யார் என்று விக்ரமை கேலி செய்தார்.

இல்லப்பா ஒரு வழக்கை பற்றி யோசித்து கொண்டு இருந்தேன்.

மகனின் முகத்தில் இருந்த மலர்ச்சியும் புன்னகையும் கண்ட தந்தையுள்ளம் மகன் கூறுவதை சற்று நம்ப மறுத்தது.எதுவாக இருப்பினும் அவனே கூறட்டும் என்று விக்ரமிடம் எதுவும் கேட்கவில்லை முரளிதரன்.

அதற்குள் வீடு வந்து விட்டது.கரர் சத்தம் கேட்டு வந்த விக்ரமின் தாய் அம்பிகா

பரவாயில்லை நீயே வந்து விட்டாய்.நான் அங்கு வரலாம் என்று இருந்தேன்

அம்மா டையர்டா இருக்கு காபி கொடுங்க என்று ரெப்ரெஷ் ஆகி வந்தான்.
நடுவில் முரளிதரன் தோட்டத்திற்கு சென்று விட்டார். பின்னே அவருக்கும் சேர்த்தல்லவா திட்டு விழும்.

பேருதான் போலீஸ் ஆனால் திருடன் மாதிரி சொந்த வீட்டுக்கே இருட்டிலே வந்து விட்டு இருட்டிலே போகிறாய்.இருக்கிற ஒரு பையனையும் கண்ணிலே பார்க்க முடியல.இந்த வேலை வேண்டாம் டா தம்பினா கேட்க மாட்டேன்கிறாய் என்று புலம்பினார்.

இந்த வழக்கு முடிந்ததும் நேரமாய் வர பாராக்கிறேன் ம்மா..

இப்படி தான் ஒவ்வொரு முறையும் சொல்கிறாய்.உனக்கென ஒருத்தி வந்து உன் சிண்டை பிடித்ததால் தான்.நீ சரியாவாய்.என்ன மறுபடியும் கிளம்பிட்டியா?

இல்லம்மா கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு பிறகு போகணும்.

அதானே பாத்தேன் நீயாவது வீட்டில் இருப்பதாவது என்று பொருமினார் .

அப்புறம் உன்னை சாரு போன் பண்ண சொன்னாள்.

சரிம்மா என்று தன் அறைக்கு வந்து சாருவிற்கு போன் செய்தான் விக்ரம்.

சொல்லு சாரு என்ன விஜயம்.

என்ன வா எல்லாம் கல்யாணத்தை பற்றி தான். எப்போது என் வீட்டில் பேசி சம்மதம் வாங்க போகிறாய் என்றாள் மறுமுனையில் சாரு.

இந்த கேஸ் முடியட்டும்.பிறகு பேசலாம் சாரு.

சீக்கிரம் வந்து பேசு டா, என்னால் ரொம்ப நாள் சமாளிக்க முடியாது.

சரி சரி.எனக்கு தூக்கம் வருது .பிறகு பேசலாம்.

உனக்கு கல்யாணத்தை பற்றி பேசினாலே வேலை வந்திடும் , தூக்கம் வந்திடும் என்று திட்டி விட்டு போனை கட் செய்தாள் சாரு.

சாரு வீட்டில் எப்படி பேசி சம்மதம் வாங்குவது, முடியாவிட்டால் அப்பாவிடம் சொல்லி பேச சொல்லலாம் என்று நினைத்தவாறே உறங்கிப் போனான்.கனவில் அவன் மார்பில் சாய்ந்து இருக்கும் பெண்ணின் முகத்தை பார்க்க முயன்ற போது ஃபோன் சத்தத்தில் கனவு கலைந்தது.

விக்ரமின்
கனவில் வந்த பெண் யார்,
நினைவில் உள்ள பெண் யார்,
கைபிடிக்கப் போகும் பெண் யார்?

பார்ப்போம்.

மாலை தொடுக்கப்படும்..