Page 1 of 1

மாலை சூடும் வேளை----7

Posted: Sun Sep 06, 2020 1:23 am
by laxmidevi
மாலை -7

பாடல் வரிகள்

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லைநேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லைஹோய் ஆசை விடுவதில்லை
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை.......


விக்ரமின் தாய் அம்பிகா வீட்டின் ஹாலில் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தார் .

அப்போதும் அங்கு வந்த அவரின் தம்பி ராகவனைப் பார்த்து
வாடா ராகவா இப்பதான் அக்கா நினைவு வந்ததா என்றார்.

இல்லக்கா கொஞ்சம் வேலை அதான் வர முடியல ஏன் நீ தம்பிய பார்க்க வரலாம் இல்ல என்றார் அவர் பதிலுக்கு.

எங்கப்பா உங்க மாமாவும் மருமகனும் வீடு தங்குவதில்லை யாராவது ஒருத்தராவது வீட்டில் இருந்தாதானே நம்மை பார்க்க வருபவர்களுக்கு பதில் சொல்ல முடியும்.

சரி காபி சாப்பிடு டா என்றார்.

தன் வீட்டில் இருக்கும் சமையல்காரர் நிலாவை இருந்து நீலா தம்பிக்கு ஸ்ட்ராங்கா காபி கொண்டு வா எனக்கு டீ கொண்டு வாம்மா என்றார்.

கேள்விக்கு பதில் எல்லாம் சரியா சொல்லிருவியே, போலீஸ்காரன் அம்மாவாயிற்றே என்று கூறி சிரித்தார் ராகவன் .

அது சரிடா தம்பி ஏன் முகமெல்லாம் வாடி களைத்தது போல் இருக்கு?

எல்லாம் மலரின் திருமண விஷயம் தான் இன்னும் ஆறு மாதத்திற்குள் திருமணம் செய்யணுமா இல்லையெனில் இரண்டு வருஷம் கழித்துதான் செய்யணும்னு ஜோசியர் சொல்லிவிட்டார்கள் அதான் சீக்கிரமே செஞ்சிடலாம்னு பார்க்கிறேன், பூரியும் அதான் சொல்றா மாப்பிள்ளை என்ன சொல்கிறார் க்கா என்றார் ராகவன் .

என்னத்த சொல்றான் உன் மாப்பிள்ளை முதல்ல கேட்டதற்கு வேலைக்கு சென்று விட்டு பார்க்கலாம் என்று சொன்னான் அதன்பின் ஒரு வருடம் போகட்டும்மா என்றான். ஒன்னும் பிடி கொடுத்தேன பேசமாட்டேன்ங்றான் டா.

அக்கா விக்ரமை வற்புறுத்த வேண்டாம் மலரை பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம் அவருக்கு விருப்பமில்லை எனில் வேறு சம்பந்தம் பார்ப்போம். விக்ரம் மாப்பிள்ளைக்கு வேறு ஒரு நல்ல பெண்ணை பார்ப்போம். நமக்கு மலருக்கும் விக்ரமுக்கும் திருமணம் செய்ய ஆசை இருந்தாலும் அவர்களின் விருப்பம் தான் முக்கியம் .விக்ரம் மாப்பிள்ளையின் முடிவு தெரிந்து விட்டால் அதற்கு ஏற்றவாறு மற்ற விஷயங்களில் பார்க்கலாம் அக்கா என்றார் ராகவன்.

அதுவும் சரிதான் அவனிடம் பேசுகிறேன்.

சரிக்கா அப்ப நான் வரேன்.

சாப்பிட்டு போ என்றார் அம்பிகா.

வேலை இருக்கு மாப்பிள்ளை மாமாவையும் கேட்டதாக சொல் என்று கூறி சென்றார் ராகவன்.

ராகவன் அம்பிகாவின் தம்பி . ராகவனின் மனைவி பூரணி,மகள் மலர்விழி .அதாவது மலர்விழி விக்ரமின் தாய் மாமா மகள்.

மலர்விழியும் மணிமேகலையும் சேர்ந்தால் அந்த இடமே களைகட்டும் இன்னும் விக்ரமும் சேர்ந்துகொண்டால் அந்த இடத்தில் சிரிப்பிற்கு பஞ்சமிருக்காது .எனவே இருவரின் பெற்றோரும் மலருக்கும் விக்ரம் இருக்கும் மணம் செய்ய எண்ணினார்கள்.

சக்தி கல்லூரியில் தீவிரவாத ஊடுருவல் காரணமாக மாடல் எக்ஸாம் கேன்சல் செய்து விட்டனர் எனவே மாணவர்கள் நிறைய பேர் செமஸ்டர் எக்ஸாம் லீவில் இருக்க வீட்டிலேயே இருந்து கொண்டனர் .கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் வெளியே செல்ல அனுமதி இல்லாததால் விடுதியிலேயே இருந்து கொண்டனர்.

மங்கை அவள் தோழிகளுடன் விடுதியில் இருந்த தோட்டத்தில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். மங்கை கொடுக்கா பழம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு என்றாள் கவி.

சரி நாம போய் பறித்துவிட்டு வரலாமா என்ற மங்கை.

மங்கை இவர்கள் சொல்வதை கேட்காதே அங்கே மிருகங்களின் நடமாட்டம் இருப்பதால்தானே அந்த பூங்காவை பூட்டி வைத்திருக்கிறார்கள் என்று தடுத்தாள் மதி .


போ மதி இந்த ரெண்டு வருஷத்துல ஏதாவது மிருகத்தை இல்லை அதன் சத்தத்தையாவது கேட்டு இருக்கோமா? அதெல்லாம் பொய். நம்மை பயமுறுத்த அந்த வார்டன் அப்படி சொல்லி இருக்கும் என்றாள் கவி.

ஆம் உண்மையிலேயே அங்கே யானைகளின் நடமாட்டத்தை அந்தப் பூங்காவின் அருகில் கண்டதால் அந்த தோட்டம் முழுவதும் பூட்டி இருந்தனர் சக்தி கல்லூரி பச்சைமலையில் மேல் அமைந்து இருந்ததால் எல்லா வகை மரம் செடி கொடிகளும் இருந்தது. மாணவிகளின் விடுதி நல்ல வலுவான உயரமான இரும்புக் கம்பிகளுடன் வெளி கேட் இருக்கும். அதனுள்ளே நல்ல உயரமான மதில் சுவர் இருக்கும் நல்ல பாதுகாப்பானது .

ஆனால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த பூங்காவில் அப்படி ஒன்றும் பலத்த பாதுகாப்பு இல்லை எனவே எனவே மிருகங்களின் நடமாட்டத்திற்கு பயந்து பூட்டி இருந்தனர்.

மங்கை மற்றும் இன்னும் சிலர் அந்த தோட்டத்திற்குள் சென்று அடிக்கடி மாம்பழம் , கொடிக்கா, கொய்யா போன்ற சில பழங்களை பறித்து வருகிறது அடிக்கடி நடக்கும் .எனவே இம்முறையும் மதியின் எதிர்ப்பையும் மீறி மங்கை காவியா இன்னும் சிலர் அந்த பூங்காவிற்கு சென்றனர். அது எவ்வளவு பெரிய பிசகு என்று அங்கு சென்ற பின் தான் உணர்ந்தாள் மங்கை.

அங்கே மங்கையும் இன்னொரு பெண்ணும் மரத்தில் ஏறி பழங்களைப் பறித்து கீழே போட்டனர். மற்றவர்கள் அதை எடுத்து பத்திரப்படுத்தினர்.


மங்கை போலாமா போதும் வா என்றாள் கவி.

இரு கவி உச்சியில நல்ல பழுத்த பழம் இருக்கு அதை மட்டும் கட்டி விடுகிறேன் நீ எடுத்துக்கோ மற்றவர்களை வேண்டுமானால் கிளம்பட்டும் நாம் இருவரும் அதை எடுத்துக்கொண்டு போகலாம்.

சொன்னால் கேட்க மாட்டாயா ?
நீங்கள் கேட்டுக்குப் போங்கள் நானும் மங்கையும் ஒரு பத்து நிமிடத்தில் வருகிறோம் என்றால் கவி.

பரவாயில்லை கவி நாங்களும் இருக்கிறோம்.எல்லோரும் சேர்ந்தே போகலாம் என்றனர் மற்றவர்கள்.

சரி நீங்கள் மெதுவாக நடந்து கொண்டிருங்கள். நாங்கள் வந்து சேர்ந்து கொள்கிறோம் என்றால் கவி.

அதுவும் சரியாக படவே அவர்கள் தங்களுக்குள்ளே சலசலத்துவாறே வந்து கொண்டிருந்தனர். பேச்சு சுவாரஸ்யத்தில் பாதி தூரத்திற்கு மேல் வந்து விட்டிருந்தனர்.

அப்பொழுதும் மங்கை அந்தப்பழத்திலனை பறிக்க முயன்று கொண்டிருந்தாள் .

மங்கை முடியலைன்னா விடு அங்க பாரு அவங்க கேட் கிட்டே நெருங்கி விட்டனர் . நாமளும் போகலாம் வா என்றாள் கவி .
ஒரு நிமிஷம் என்றாள்.

அப்போது தூரத்தில் மரங்களின் கிளைகள் முறியும் சத்தம் கேட்டதுடன் தரையும் அதிர்ந்தது பெண்கள் இருவரும் பயந்துவிட்டனர்.

சீக்கிரம் வா மங்கை ஓடிவிடலாம் என்றால் கவி.

அவர்களின் தோழிகள் பயத்தில் வெளி கம்பிகளின் மேலே ஏறி பூங்காவின் வெளியில் சென்று விட்டனர் .இவர்கள் இருவரையும் எதிர்பார்த்தவாறே அங்கேயே நின்றிருந்தனர்.

மரத்திலிருந்த மங்கை கீழே இறங்கும் முன்னரே தூரத்தில் ஒரு யானை இவர்கள் இருந்த பக்கமாய்
ஓடிவந்து கொண்டிருப்பது தெரிந்தது மரத்திலிருந்து இறங்கிய மங்கை பதட்டத்தில் காலணிகளில் கூட அணிந்துகொள்ளாமல் வெறும் காலுடன் ஓடினாள்.

பச்சை மலைக்கும வேலை விஷயமாக அந்த விக்ரம் இந்த சத்தங்களைக் கேட்டு அங்கு வந்து கொண்டிருந்தான்

காலில் காலணியில்லாமல் ஓடியதால் மங்கையின் காலில் கல் கிழித்து ரத்தம் வழிந்தது .மேலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை அவளால்.

யானையும் வேகமாக இவர்கள் இருந்த பக்கம் வந்து கொண்டிருந்தது.

மங்கையும் உடன் ஓடி வருகிறாள் என்று எண்ணியவாறு கவி பூங்காவின் கதவை நோக்கியவாறு ஓடினாள்.

பின்புதான் மங்கை தன்னருகில் இல்லாததை கவனித்தால் கவி.


மங்கையும் யானை வருவதையும் கவனித்த கவி

மங்கை,..... என்று கத்தினாள் .

அதற்குள் அங்கு வந்திருந்த விக்ரம் அந்த இரும்புக் கதவின் மேல் ஏறிக்குதித்து அங்கு மங்கையின் அருகில் வந்து விட்டிருந்தான்.

யானையும் வேகமாய் இவர்கள் இருந்த பக்கம் வந்து கொண்டிருந்தது .
ஆதி ..,....சார் என்றவாறு விக்ரமின் மேலே சாய்ந்துவிட்டாள் மஙகை.
காலின் காயத்தினால் வந்த வலியும் பயத்திலும், பதட்டத்திலும் அவளால் சரியாக நிற்கக்கூட முடியவில்லை . விக்ரம் அவளை சேர்த்து அணைத்தவாறே தன்னுடைய துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி இரு முறை சுட்டான் .அந்த சத்தத்தில் அதிர்ந்த மங்கை மேலும் விக்ரமை இறுக்கி கட்டிக்கொண்டாள்.


யானை துப்பாக்கி சத்தத்தினை கேட்டதும் சத்தம் வந்த எதிர்த்திசையில் ஓடத்தொடங்கியது .பின்னால் சென்று மறைந்துவிட்டது . அதன்பின்பு மங்கையின் பதட்டம் குறையவில்லை.

மங்கை மங்கை ஒன்னும் இல்லைம்மா இங்கே பார் என்றவாறு அவளின் கன்னத்தினை தட்டி பதட்டத்தை தணிக்க முயன்றான் விக்ரம். அவளோ பயத்தில் இன்னும் அதிகமாக அவன் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள். என்னவோ அப்போதுதான் தான் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணினாலோ!!




ஏனெனில் நடந்த நிகழ்வு வீரியம் அப்படி கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பியிருக்கிறாள் .

அதற்குள் கவி மற்றும் அவள் தோழிகள் அங்கு வந்தனர்.

என்ன நடக்கிறதுமா இங்கே என்று கேட்டான் விக்ரம். கவி நடந்ததை சுருக்கமாக கூறினாள்.
ஆக நீங்கள் எப்போதும் இங்க இப்படி வருவது வழக்கம்தான் இல்லையா? பெண்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியம் ரொம்ப அவசியம் தான்.ஆனால் இப்படி அசட்டுத் துணிச்சல் இருக்கக்கூடாதும்மா.
அது உங்களை பெரிய ஆபத்தில் மாட்டி விட்டு விடும். சில நேரங்களில் நமது வாழ்வையே மாற்றிவிடும் என்றான் விக்ரம்.

இந்த நிகழ்விற்குப் பின் தனது ஆல்வின் வாழ்வின் திசையை வரப்போவதை அறிவானாஅந்த காவலன்?

சரி வாருங்கள் உங்கள் வார்டனிடம் விவரம் கூறி விட்டு விடுகிறேன் என்றான் விக்ரம் .


வேண்டாம் சார் என்று கோரசாக கத்தினார்கள் பெண்கள்.

வார்டனிடம் கூறினால் அது பிரின்சிபல் வரை செல்லும் ,பெரிய பிரச்சனையாகிவிடும் ,இன்னும் என்னென்ன நடக்குமா வேண்டாம் சார் ப்ளீஸ் என்று கெஞ்சினார்கள்


உங்கள் தப்புக்கு என்னையும் துணை போக சொல்கிறீர்களா ?ஆனால் நான் என் துப்பாக்கியில் இருந்து சுட்ட 2 தோட்டாக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே ?இதை சொல்லாமல் தீராது என்றாளன்.

பெண்கள் மீண்டும் கெஞ்சினார்கள்.

சரி அவங்களிடம் விஷயத்தைக் கூறுகிறேன் ஆனால் அங்கிருந்த பெண்களை சரியாக கவனிக்கவில்லை என்று கூறி விடுகிறேன் என்றான் கண்டிப்பாக .

அப்படி சொன்னால் விடுதியில் உள்ள அனைத்து பெண்களுக்குமே திட்டு விழும் சார் என்றால் பெண்ணொருத்தி.

எனில் உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள்

அனைவரும் அமைதியாக இருக்கவே சரி போகலாம் என்றான்.

சரி சார் மங்கை,....... என்று இழுத்தாள் கவி .
இந்த விவாதம் எதையும் கவனிக்காமல் விக்ரமை அணைத்தவாறு அவள் தோள் வளையே தலை வைத்து கண்ணை மூடி இருந்தால் மங்கை. விக்ரமும் அப்போதுதான் மங்கையை தான் இன்னும் அணைத்தவாறே வைத்திருப்பதை உணர்ந்தான் விக்ரம்.

மங்கை மங்கை என்று கூறி விக்ரம் விடமிருந்து விலக்கி மங்கையே கைத்தாங்கலாக தன்னுடன் அழைத்துச் சென்றாள் கவி.

காலில் அடிபட்டிருக்கிறது போல பார்த்து எதுவாக மெதுவாக அழைத்துச் செல்லுங்கள் என்றான் விக்ரம்.

பெண்கள் முன்னே செல்ல விக்ரமும் அவனுடன் வந்த இரண்டு காவலர்களும் அவர்களின் பின்னே சென்றனர்.

பின் ஏதோ நினைவு வந்தவனாக தன் செல்ஃபோனில் செக்யூரிட்டி ஆபீஸிலிருந்து சொல்லி அந்த பூங்காவின் கதவின் சாவி கொண்டு வருமாறு கூறினான் .


அதற்குள் அவர்கள் அனைவரும் கேட் அருகே வந்து விட்டிருந்தனர்.இப்போது எப்படி செல்வது மங்கையால் கேட் எகிறி குதிக்க முடியாது என்று யோசித்தாள் கவி.

இருங்கள் சாவி இப்போது வந்துவிடும் போகலாம் என்றார் விக்ரம் .

அனைவரும் விடுதி வந்து இருந்தனர்.

சொல்லியபடியே வார்டனிடம் நடந்ததை கூறினான் விக்ரம். பின் அங்கிருந்து ண் செல்லும்போது மங்கையை பார்த்தான் காயத்தால் வலி இருக்கவே தோட்டத்தில் கவியுடன் அமர்ந்திருந்தான் மங்கை.


ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்த மங்கை இங்கே பார்த்தது என்னவோ விக்ரமின் கோப விழிகளைத் தான் தான்....


மாலை தொடுக்கப்படும்....