தீண்டாத தீ நீயே.... சில துளிகள்
“சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி இருக்கான்.ஒருவேளை நீங்க தேடுறதை நிறுத்திட்டா...அவங்களுக்கு பதிலா வேற பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டா இந்தப் பிரச்சினையில் இருந்து ஈஸியா வெளி வந்திடலாம்.அதுவும் இல்லாம...”சம்ஹார மூர்த்தியின் இமைக்காத பார்வையில் ஒரு நொடி தயங்கியவன் மீண்டும் பேசத் தொடங்கினான்.
“அந்தப் பொண்ணைத் தேடுறதுக்காக இவ்வளவு செலவு செய்யணுமா? இத்தனை விமானம்...இத்தனை ஆட்களுக்கு சம்பளம்...அது தவிர அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் ..அப்படி இப்படின்னு ஏகப்பட்ட பணம் போய்க்கிட்டு இருக்கு சார்.அதான்”என்றவன் சம்ஹார மூர்த்தி எழுந்து வரவும் கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.
தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டவன் அசால்ட்டாக ஒரு துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி குறி வைத்தான்.
“ சா...சார்...”
“ஏதோ சொன்னியே...இப்ப சொல்லு”என்று பேசியபடியே துப்பாக்கியை அவனது வாயின் உள்ளே திணித்தான்.
“ஷா...ஷாற்”அவனது வாய் பயத்தில் குழறியது.
“நானே என்னோட வானதியை கடத்திட்டு போயிட்டானேன்னு இருக்கேன்.இந்த நேரத்தில் வந்து பணக்கணக்கு சொல்லுறியே...உன்னை என்ன செய்யலாம்?அவளுக்காக இன்னும் எத்தனை கோடி வேணும்னா செலவு செய்வேன்டா.அவ யார்னு நினைச்ச...அவளோட வாழ்ந்தா தான் எனக்கு அது வாழ்க்கை.. இன்னொரு முறை இப்படி பேசின...கொன்னு கடல்ல வீசிடுவேன்”என்று ஆத்திரத்துடன் கூறியவன் அங்கே நிற்கவும் பிடிக்காமல் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டான்.
*****
கண் விழித்த வானதிக்கு ரொம்பவும் அசதியாக இருப்பது போல தோன்றியது. மெல்ல சோம்பலுடன் கண்களைப் பிரித்துப் பார்த்தாள்.தலை பாரமாக இருப்பது போல தோன்றியது.கைகளால் தலையை தாங்கியபடி மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டாள்.அவள் கண் விழிப்பதற்காகவே காத்திருந்ததைப் போல அடுத்த நொடி அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஈஸ்வர்.
“ஹே...சில்லக்கா கண்ணு முழிச்சுட்டியா?”என்று கேட்டபடியே கையில் இருந்த கோப்பையை அவள் புறம் நீட்டினான்.
“இந்தா..இதை கொஞ்சம் குடிச்சுப் பாரு...”என்று நீட்ட அவனையும்,அவன் நீட்டிய கோப்பையையும் வெறுப்போடு பார்த்தாள் வானதி.அதை தட்டி விடுவதற்காக அவள் கை நீட்டிய நொடியில் தான் அவள் உடலில் ஏதோ வித்தியாசத்தை அவள் உணர்ந்தாள்.
சந்தேகப்பட்டு இரண்டு கைகளையும் நன்கு தடவி ஆராய்ந்தாள்.வலது கையில் தோள் பட்டையிலும்,இடது கையில் மணிக்கட்டிலும் லேசான எறும்பு கடித்ததைப் போல ஒரு வலி இருந்தது அவளை குழப்பியது.சட்டென்று ஆத்திரத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“எதுக்கு எனக்கு ஊசி போட்ட? என்ன ஊசி அது?”
“பரவாயில்லையே... உனக்கு கொஞ்சம் புத்தியும் இருக்கு போலவே” என்று கிண்டலாக பேசியபடி மறைமுகமாக அவன் செய்ததை ஒத்துக்கொள்ள அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
“என்ன ஊசி அது? விஷ ஊசியா? இல்ல போதை ஊசி மாதிரி எதுவுமா?” அவள் பேசி முடிக்கும் முன், அவள் முன்னே ஆங்காரத்துடன் எழுந்து நின்றான் ஈஸ்வர்.
“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?”
“இரக்கமே இல்லாத ராட்சசன் மாதிரி தெரியுது...கோழை மாதிரி ஒரு பெண்ணை கடத்திட்டு வந்து இப்படி அடைச்சு வச்சு இருக்கியே...நீ எல்லாம் மனுசனே கிடையாது” தன்னுடைய கல்யாணம் நின்று போனதற்கும், இப்பொழுது தான் அனுபவித்துக் கொண்டு இருக்கும் அத்தனை துன்பங்களுக்கும் அவன் தானே காரணம் என்ற ஆத்திரம் மிக அவனை தாக்கிப் பேசத் தொடங்கினாள் வானதி.
“சந்தோசம்..அப்படியே நினைச்சுக்க..அதுதான் உண்மையும் கூட...” என்று அவன் அலட்டல் இல்லாமல் கூற அவளுக்கோ வெறுத்துப் போனது.
“இதை பெருமையா வேற நினைக்கறியா நீ... இப்போ செய்ற எல்லா வேலைக்கும் அவர் வந்ததும் இருக்கு...அவர் கையால தான் நீ அழியப் போற...”
“அப்படியா சொல்ற?...அவனால எனக்கு அழிவா? இல்லை என்னால அவனுக்கு அழிவு வருதான்னு பார்த்துடுவோமா” என்றவன் இண்டர்காமை எடுத்து பேச, வெளியே இருந்து ஒரு கருப்பன் வந்தான்.
“மைக்கேல் ...உனக்கு இவன் போட்டோவை வாட்ஸ் ஆப்பில் (Whatsapp) அனுப்பி வைக்கிறேன்.இவனை சுத்தி நம்ம ஆட்களை எப்பவும் இருக்க சொல்லு...நான் எப்போ சொல்லுறேனோ அப்போ அவனைக் கொன்னுடு”
****
“ஒருவேளை தொழிலில் உங்களுக்கு பயங்கரமான நஷ்டத்தை ஏற்படுத்திட்டாரா?”என்று அவள் மீண்டும் தன்னுடைய கேள்விக் கணைகளைத் தொடுக்க, அவனோ அவளை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
‘ம்ஹுகும்...இதை விடவே கூடாது...காரணம் என்னன்னு கண்டுபிடிச்சே தீரணும்’ தனக்குள்ளாகவே சபதம் ஒன்றை எடுத்துக் கொண்டவள் அடுத்து அவனை கோபப் படுத்த முயன்றாள்.
“ஒருவேளை நீங்க காதலிச்ச பொண்ணை....அதாவது என்னை அவர் கல்யாணம் செஞ்சுக்க முயற்சி செஞ்சதால இப்படி எல்லாம் நடந்துக்கறீங்களா” என்று வேண்டுமென்றே நக்கலாக கேட்டாள்.அவளுக்கு நன்றாகத் தெரியும்.இதற்கு என்ன பதில் வருமென்று. இருந்தும் அவள் பின்வாங்கத் தயாராக இல்லை.
அவனது பார்வையின் தீட்சண்யம் அவளை சுட்டாலும் பார்வையை விலக்கிக் கொள்ளாமல் அவனையே உற்றுப் பார்த்தாள்.
“உனக்கு என்ன பெரிய உலக அழகின்னு நினைப்பா? சம்ஹார மூர்த்தி ஒரு கிறுக்கன் பத்தாதா? உன் பின்னாடி சுத்த...” என்றான் சுள்ளென்று...
“அப்புறம் எதுக்கு என்னை கடத்திட்டு வந்து இருக்கீங்க சார்” இமை கொட்டி விழி விரித்தாள் ஒன்றுமறியாதவள் போல...
அவன் கண்களில் மின்னல் கீற்று ஒன்று நொடியில் கடந்து போனது.
“சில்லக்கா...என்னிடம் வார்த்தையாடி விஷயத்தை கறக்கிற அளவுக்கு உனக்கு திறமை பத்தாது...பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்”என்றவன் அங்கிருந்து எழுந்து கப்பலின் உள் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மினி தியேட்டருக்குள் நுழைந்தான்.
இந்த ஒரு வாரமாக அவனை கணிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள் வானதி.தன்னை இப்படி அடைத்து வைத்து இருப்பதன் நோக்கம் தெரிந்து விட்டால் இவனிடம் அது குறித்து பேசி நல்ல முறையில் இங்கிருந்து வெளியேறி விடலாம் என்று நினைத்தாள்.
***
“இப்போ தள்ளி உட்கார போறீங்களா இல்லையா?” என்றாள் யாருக்கும் கேட்காத வண்ணம் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.
“அந்த ஐடியா எனக்கில்லை” என்று அவனும் கழுத்தை லேசாக சாய்த்து வைத்துக் கொண்டு கூற... அவளுக்குள் எரிச்சல் மூண்டது.
“என்ன அட்வான்டேஜ் (Advantage) எடுத்துக்க பார்க்கறீங்களா?”
“இல்லை மனசில் பதிய வைக்க முயற்சிக்கிறேன்”
“என்னன்னு?”
“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு...”
“என்னோட மனசிலா?” என்றாள் லேசாக நக்கல் தொனிக்க....
“இல்லை...என்னோட மனசில்” என்று அழுத்தமாக சொன்னவன் யாரோ வந்து அழைக்கவும் எழுந்து சென்று விட அந்த வீட்டு ஹாலில் தனியாக இருந்தாள் வானதி. அவள் மனம் முழுக்க அவன் சொல்லி சென்ற வார்த்தையிலேயே உழன்று கொண்டிருந்தது.
‘குழப்பிட்டான்...எப்பப் பாரு இப்படி எதையாவது சொல்லி குழப்புறதே இவனுக்கு வேலையா போச்சு’ அவள் போக்கில் அமர்ந்து இருக்க,மீண்டும் அவள் அருகில் வந்தவன் சற்று தளர்வாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
****
“என்ன சில்லக்கா..திடீர்னு என் மேலே இவ்வளவு ஆசை உனக்கு... உன்னோட புடவை முந்தானையில் தான் நான் கை துடைச்சுக்கணும்ன்னு நீ சொன்னா மறுத்து பேசிடப் போறேனா நான்... அதுக்காக இப்படியா? அதுவும் நாலு பேர் வந்து போகும் இடத்திலா... ஆனாலும் உனக்கு இம்புட்டு ஆசை இருக்கக் கூடாது இந்த மச்சான் மேல”
அவனது அடாவடித்தனம் நிறைந்த விவரணையில் கோபமாக அவனை முறைக்கத் தொடங்கியவள் அப்பொழுது தான் கவனித்தாள் அவளது புடவை அவனது சட்டையுடன் முடிச்சிடப்பட்டு இருப்பதை.
அவனை முறைத்தவாறே அவள் முடிச்சினை அவிழ்க்க அவனோ பார்வையாலேயே தன்னுடைய காதலை அவளுக்கு உணர்த்த முயன்றான்.
“ஏன் சில்லக்கா நீ என்னை எப்படி கூப்பிடுவ? அத்தான் அப்படின்னு பழைய கால ஹீரோயின் மாதிரியா? இல்லை சுவாமி அப்படின்னு மூக்கில் ராகம் போட்டா... அதுவும் இல்லேன்னா மாமான்னா? இல்லை மச்சான்னா?” என்று அதிமுக்கிய கேள்வி ஒன்றை அவன் ஆர்வத்துடன் கேட்க அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“ஏன் ஈஸ்வர்னு பேர் சொல்லி கூப்பிட்டா ஒத்துக்க மாட்டீங்களோ?” என்றாள் சீண்டலாக...
ஒருநொடி முகம் சுணங்கினாலும் அடுத்த நொடியே அவன் முகம் தெளிந்து விட்டது.
“கூப்பிடேன்...என்னுடைய பெயரை என்னோட எதிரில் தைரியமா சொல்றதுக்கும் இந்த உலகத்தில் ஒரு ஆள் இருக்கிறதை நினைச்சு சந்தோசபட்டுப்பேன்”என்று அவன் கூறிய விதத்தில் அவளுக்கு கோபம் பெருகியதே ஒழிய குறையவில்லை.
****
“இப்போ... இந்த நிமிஷம் இதுக்கு மேல நான் என்ன செஞ்சாலும் உனக்கு பயம் வராது அப்படித்தானே?”
‘பயமா? அது வந்து அரை மணி நேரம் ஆச்சு யுவர் ஆனர்..’ என்ற நிலையில் இருந்தாள் வானதி. ஈஸ்வர் அவளை நெருங்கத் தொடங்கியதுமே அவளின் இருதயம் ரேஸில் ஓடும் குதிரையின் வேகத்திற்கு இணையாக துடிக்கத் தொடங்கி இருந்தது.
அவள் தனக்குள் பேசிக் கொண்டிருந்த நொடிகளில் அவன் கைகள் அவளை வளைத்து தன் வசத்திற்கு கொண்டு வந்து இருந்தன.அவன் பிடி கொஞ்சம் கொஞ்சமாக இறுகத் தொடங்கிய பிறகே அவள் நிலை அவளுக்குப் புரிய தப்பிக்கும் வழி தெரியாமல் திணறத் தொடங்கினாள் வானதி.
“தப்பிச்சு ஓடிடணும் போல தோணுதா?”என்றான் அவளை அறிந்து வைத்தவன் போல...
அவள் ஆமாம் என்றா சொல்ல முடியும்? பேந்த பேந்த விழித்துக் கொண்டு இருந்தாள்.
“சரி நானே விட்டுடறேன்...ஆனா ஒரு கண்டிஷன்” என்று அவன் வார்த்தைகளால் அவளுக்கு வலை வீச... எச்சரிக்கை உணர்வுடன் அவனது பார்வையை சந்தித்தாள் வானதி.
அவளது பார்வையை உணர்ந்து கொண்டவன் அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
“என்ன சில்லக்கா இவ்வளவு பயம் தெரியுது உன்னோட கண்ணில்... நீ இந்த ஈஸ்வர்... ருத்ரேஸ்வரோட பொண்டாட்டி... எதுக்கும் எவனுக்கும் பயப்படக்கூடாது புரிஞ்சுதா?” என்று பேசியபடியே செல்லமாக அவளது மூக்கை பிடித்து ஆட்டினான்.
“இந்த வீட்டில் எல்லாருமே இனி உன்னோட சொல் பேச்சு கேட்டுத் தான் நடந்துக்கணும். எங்க எல்லாருக்கும் நீ தான் எஜமானி... என்னோட குடுமி கூட இனி உன் கையில் தான்.தெரியுமா?” என்று அவன் சொல்ல அவனையே வியப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி.
முதன்முதலாக அந்த கப்பலில் தான் பார்த்த ஈஸ்வருக்கும், இப்பொழுது இந்த நிமிடம் தான் பார்த்துக் கொண்டு இருக்கும் ஈஸ்வருக்கும் இடையில் தான் எத்தனை வேறுபாடுகள்... திமிரின் உச்சியில் இருந்த அவன் எங்கே? அன்பின் அடி ஆழத்தை ருசிக்க வைக்கும் இவன் எங்கே?
இது தான் நிஜம் என்றால் அன்று அந்த கவசம் ஏன்?’ அவளின் சிந்தனைகளில் இருந்து கலைத்தது ஈஸ்வரின் பேச்சு...
“கொஞ்சம் உங்க கனவுலகில் இருந்து மீண்டு வந்து எனக்கு என்ன வேணும்னு கேளு சில்லக்கா...”மூக்கோடு மூக்கை உரசியபடி அவன் பேச வேகமாக முகத்தை நகர்த்தி கைகளால் மூக்கை அழுந்தத் துடைத்துக் கொண்டாள் வானதி. அவளது சிறுபிள்ளைத்தனமான செய்கை கண்டு சிரித்தவன் கைகளால் அவள் மேனியில் தன்னுடைய தடத்தை அழுந்தப் பதிக்க முயல வானதியின் உடலில் ஏதோவொரு மாற்றம். அவனை தள்ளி விட்டு ஓட முடியாமல் அவன் அவளை சிறைபிடித்து வைத்திருக்க, கெஞ்சும் கண்களால் அவனை ஏறிட்டாள்.
“அப்போ நான் சொல்ற மாதிரி செய்றியா?” உனக்கு வேறு வழியே இல்லை..செய்து தான் தீர வேண்டும் என்ற கட்டளை அதில் மறைமுகமாக தொக்கி நிற்க பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கண்களால் ‘என்ன’ என்று கேட்டாள்.
“எங்க என்னை பார்த்து மாமான்னு கூப்பிடு பார்க்கலாம்” என்று அவன் கூற அவளுக்கு சட்டென்று ஏர்போட்டில் அவன் சவால் விட்டது நினைவுக்கு வர கோபமாக அவனை முறைத்துப் பார்க்க முயன்றாள். (நீ கோவப்படுற லட்சணம் தான் எங்களுக்கு தெரியுமே? உதட்டை சுருக்கி,கன்னத்தை கோணி,முட்டைக்கண்ணை முழிச்சு பார்ப்ப... அதுதானே...அப்படிங்கிற உங்க மைண்டு வாய்ஸ் எனக்கு கேட்குது)
அவளின் கோபத்திற்கு ஈஸ்வரின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பது தெரியாதா என்ன? பக்கென்று சிரித்து விட்டான்.
புத்தகத்தை வாங்க:
priya nilayam
51,Gowdiamuttroad ,
near ponnusamy hotel,
Royapettah, Chennai
Phone number: 9444462284
Theendatha Thee Neeye Book
Moderator: Madhumathi Bharath
- Madhumathi Bharath
- Site Admin
- Posts: 124
- Joined: Mon May 11, 2020 9:11 am
- Location: Tamilnadu
- Has thanked: 117 times
- Been thanked: 31 times
Theendatha Thee Neeye Book
Post by Madhumathi Bharath »
You do not have the required permissions to view the files attached to this post.
Jump to
- Tamil Novels
- ↳ Madhumathi Bharath
- ↳ சதிராடும் திமிரே (காதல் கதகளி பார்ட் 2)
- ↳ கந்தகமாய் அவன் காதல்
- ↳ நெருஞ்சியின் நேசம்
- ↳ எனை மீட்பாயோ காதலியே
- ↳ காதலே நீ கானலா
- ↳ Kindle EBook links
- ↳ Story Reviews
- ↳ Books
- ↳ Audio Novels
- ↳ நிலவே உந்தன் நிழல் நானே
- ↳ Kavi Sowmi
- ↳ காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி
- ↳ Sabareeshwari (SSK)
- ↳ நெயிர்ச்சியின் முழுவல் நீ
- ↳ RS Novels
- ↳ எதிர் துருவங்கள்
- ↳ Sutheeksha Eswar
- ↳ Enai Nanaikum Sarale
- ↳ திசை அறியா பயணமிது
- ↳ Iniya
- ↳ மின்னல் விழியே குட்டித் திமிரே
- ↳ இசையின் மலரானவன்
- ↳ Janani Prasanna
- ↳ காதல் கருவறை
- ↳ Malarvizhi
- ↳ விழி மொழியாள்
- ↳ Kirthika Balan
- ↳ போற போக்கில் ஒரு காதல்
- ↳ Laxmi devi
- ↳ மாலை சூடும் வேளை
- குறு நாவல்
- ↳ Abi Nethra
- ↳ என் கோடையில் மழையானவள்
- ↳ Kavi Sowmi
- ↳ Kanchana Malai
- ↳ காதல் மட்டும் புரிவதில்லை
- ↳ Karthika Maran
- ↳ உயிரே என் உலகமே
- ↳ நல்லவனின் கிறுக்கி
- ↳ Gowry Vicky
- ↳ Chandrika Krishnan
- ↳ மந்திரமென்ன மங்கையே
- ↳ Sahana Harish
- ↳ Malarvizhi
- ↳ உயிரானவளே
- ↳ Rajasekaran Bose
- ↳ காமனின் காதல்
- ↳ Raju Gayu
- ↳ தேன்மொழி
- ↳ Manosha
- ↳ கண்ணாளனின் கண்மணியே
- தமிழ் சிறுகதைகள்
- ↳ Archana Nithyanantham
- ↳ Inba Muthuraj
- ↳ Kanchana Malai
- ↳ Gowry Vicky
- ↳ Sethupathi Viswanathan
- ↳ Nan Ungal Kathiravan
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ பாவை கதைகள்
- ↳ Raju Gayu
- ↳ Renuka Mary
- ↳ Kaayaampoo
- ↳ Venba Ilanthalir
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Kavi Sowmi
- ↳ Saha
- ↳ Sahana Harish
- ↳ Sivaranjani Sivalingam
- ↳ Bhagi
- ↳ Muthu Saraswathi
- ↳ Jothi Ramar
- ↳ Sankari Dayalan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ Bhanurathy Thurairajasingam
- Completed Novel Links
- இருமுனைப் பேனா
- ↳ மாங்கல்யம் தந்துனானே
- ↳ தாய்மையிலும் விஷமுண்டு
- கவிதைகள்
- ↳ Bharathi Kannamma
- ↳ Preethi
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ Raji Prema
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Abi Nethra
- ↳ Archana Nithyanantham
- ↳ Kanchana Malai
- ↳ Saha
- ↳ Sethupathi Viswanathan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ காயாம்பூ
- ↳ Bhanurathy Thurairajasingam
- ↳ சித்துவின் வரிகள்
- சமையலறை
- ↳ Anjali Suresh
- பொது அறிவுத் தகவல்கள்
- படித்ததில் பிடித்த கதைகள்
- மருத்துவம்
- மனதோடு
- ↳ மறுபாதி
- ↳ நீயின்றி நானும் இல்லை
- ↳ மாயவனம்
- ↳ அ(இ)வளுக்கென
- ↳ உன்மத்தம் கொண்டேனடி உன்னால்
- ↳ Zaki
- ↳ காதல் போதையடா நீ எனக்கு