காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்_3

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்_3

Post by Rajeswari.d »

3
அப்போது தொடங்கிய நட்பு இவர்களுடையது... அன்று முதலில் ஒவ்வொரு வளர்ச்சியிலும் குரு கூடவே இருந்தான்.

கூடவே வளர்ந்ததினாலோ என்னவோ அவனை என்றுமே பிரித்துப் பார்த்தது கிடையாது.

சக தோழியர்கள் போலவே அவனும் அவளுக்கு தோன்ற ஆரம்பித்தான். ஒளிவு மறைவு என்பது எப்போதுமே கிடையாது.

படிப்பில் எந்த சந்தேகம் என்றாலும் தீர்த்து வைப்பது குரு மட்டுமே...
இவளுக்கு அத்தனை நோட்சும் எடுத்துத் தருவது குரு தான்.

எந்த இடத்திலும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது கிடையாது. வாழ்க்கையை அதன் போக்கில் அழகாக நகர்ந்து கொண்டு இருந்தது.

இருவருக்குமே சற்று பூசினாற் போன்ற உடல்வாகு தான். இதிலும் குரு எடுத்து வரும் தின்பண்டங்களுக்கு எப்போதும் அளவே கிடையாது.

சமயத்தில் இவளுக்கு மதிய உணவு கூட அவன் தான் எடுத்து வருவது.. அவனுடைய குடும்பம் சற்றுப் பெரியது. கூட்டுக்குடும்பம்.. இவனுடைய குடும்பத்தோடு இவனுடைய பெரியப்பாவின் குடும்பமும் அத்தையின் குடும்பமும் ஒரு இடத்தில் இருந்தனர்.

சமையல் கூட மொத்தமாகவே இதுவரையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இவர்களது தொழில் டிபார்ட்மென்டல் ஸ்டோர்..இவர்களது ஸ்டோரில் இல்லாத பொருள்களை கிடையாது. உடை கூட ஒரு ப்ளோரில் வைத்திருந்தனர். எப்போதுமே பிஸியாகவே இருப்பர்.

இவனுடைய அத்தைக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவனது வீட்டில் அவன் மட்டும்தான்.பெரியப்பா வீட்டில் இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர்.

மொத்தமாக சமைக்க வீட்டை பராமரிக்க என்று மூன்று வேலை ஆட்களை நியமித்து இருந்தனர். இந்த விவரம் எல்லாம் நித்யஸ்ரீக்கு ஓரளவு தான் தெரியும். அதிகமாக எல்லாம் விவரம் கேட்டது கிடையாது.நட்புக்கு அதெல்லாம் தேவையில்லை என்பது அவளுடைய எண்ணம். இதை அவனிடமே சிலநேரம் கூறியிருக்கிறாள்.

நித்யஸ்ரீ எப்போதுமே அவனிடம் வளவளவென்று ஏதாவது பேசிக்கொண்டே தான் இருப்பாள். பெரும்பாலும் இவனுடைய அண்ணனை பற்றியதாக மட்டும்தான் இருக்கும். ஆனால் குரு இவளிடம் ஒரு வார்த்தை கூட தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசியது கிடையாது.

இவளுக்கும் ஒரு நாளும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இருந்தது இல்லை. தினமும் மாலையில் பரத் இவளை வந்துஅழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான்.

சில நேரம் குருவை அறிமுகப்படுத்துவதும் உண்டு.. அவனும் இன்முகத்தோடு பேசிவிட்டு நகர்ந்து செல்வான்.

இப்போது பள்ளியின் கடைசி வருடம் வந்திருந்தாள் நித்யஸ்ரீ... என்ஜினீயரிங் படிக்க வைக்க வேண்டும் என்று பரத் ஆசைப்பட.. அண்ணனின் ஆசையை நிறைவேற்ற வேண்டி முதல் குரூப்பை தேர்வு செய்திருந்தாள்.

படிக்க நிறைய இருந்தது... முன்புபோல விளையாட்டுத்தனம் எல்லாம் இப்போது கிடையாது நித்யஸ்ரீ க்கு.. குருவும் கூட அதே பிரிவைத் தேர்ந்தெடுத்து இருக்க அவனும் கூட படிப்பில் அதிக கவனத்தை செலுத்தினான்.

இரண்டு பேருமே நல்ல மதிப்பெண்களுடன் பிளஸ்டூ படிப்பை நிறைவு செய்தனர். பரிட்சையின் கடைசி நாளன்று தான் புரிந்தது நித்திக்கு... இனிமேல் நண்பர்கள் யாரையும் பார்க்க முடியாது என்று முதல் முதலாக அன்றுதான் அழுதது..

இத்தனை வருட கால நட்பு இந்த இடத்தில் முடிய போகிறது என்று நிறைய வருத்தம் இருந்தது.

ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்று சொல்வது போல நித்யஸ்ரீ எந்த காலேஜில் சேர்ந்தாளோ அங்கேயே குருவும் வந்து சேர்ந்திருந்தான்.

அவனை மறுபடியும் பார்க்கவும் நித்யாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி…"டேய் சத்தியமா உன்னை இங்க எதிர்பார்க்கவில்லை…"

"டேய் குரு நம்ம பிரண்ட்ஷிப் ஸ்கூலோட முடிஞ்சு போச்சு என்று நெனச்சேன். ஆனா அப்படி இல்ல ன்னு தெரிஞ்சு போச்சு. தேங்க் காட்...இங்கே அட்மிஷன் போடும் போது உன்ன மட்டும் தான் நினைச்சேன்.நீயும் இங்கே வந்து சேர்ந்தா நல்லா இருக்குமே அப்படின்னு…"

"மனசுக்குள்ள தானே நெனச்ச நீ. ஒரு வார்த்தை சொன்னியா இந்த காலேஜ்ல சேர போறேன்னு... எதேச்சையா தானே இதெல்லாம் நடந்தது."

'இரண்டு மாதத்தில் சற்று வளர்ந்திருந்தான் குரு. கொஞ்சம் ஆச்சரியமாகவே அவனைப் பார்த்தாள் நித்யஸ்ரீ

"டேய் என்னடா நடக்குது..இரண்டு மாதம் தானே பார்க்கல அதுக்குள்ள என்ன விட உயரமாக வளர்ந்துட்ட.."

"ம்..பூஸ்ட் குடிச்சேன் "என்று நக்கலாக பதில் சொல்லிவிட்டு நகர்ந்தான் குரு.

"போடா ஓவரா பேசுற "என்று விட்டு அவளும் நகர்ந்தாள்.

இவர்கள் சேர்ந்திருந்தது என்ஜினியரிங் பிரிவு..அதே நேரத்தில் குருவின் அத்தை மகளான அபிநயா அதே கல்லூரியில் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் பிரிவில் சேர்ந்திருந்தாள்.

தினமும் அவளை கல்லூரிக்கு இவன் தன்னுடைய வண்டியில் அழைத்து வருவான்.

ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் பிரிவு முதலில் இருந்தது அதைத்தாண்டி அரை கிலோமீட்டர் சென்ற பிறகு இவர்களுடைய என்ஜினியரிங் கல்லூரி இருந்தது.

நித்யஸ்ரீ தினமும் வந்து செல்ல இப்போது கேப்ஸ்கு சொல்லியிருந்தனர் அவளது வீட்டில். ஏற்கனவே பரத் இந்த கல்லூரியில் படித்ததினால் கல்லூரியை பற்றிய அனைத்து விபரங்களும் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது.

கல்லூரிக்கு வருவது மட்டும் தான் கேப்சில்..வந்த பிறகு சுற்றிக் கொண்டு இருப்பது எல்லாமே குருவோடு மட்டும்தான்..

இப்போது கவனித்துப் பார்க்கையில் ஒரு விஷயம் அவளுக்கு தெளிவாக தெரிந்தது... குருவிற்கு முந்தைய நாட்களை விடவும் இப்போது அதிகமாக கோபம் வந்தது.

ஒருவேளை அவன் ஆரம்ப நாட்களில் இருந்து இப்படித்தான் இருக்கிறானாஇவளுக்கு தன் தெரியாமல் இருந்ததா தெரியவில்லை.

காலேஜில் யார் என்ன சொன்னாலும் குரு கோபத்தோடு அடிக்க சென்று விடுவான்.

பல நேரங்களில் குருவை இவள்தான் இழுத்துக் கொண்டு நகர்ந்து வருவது…

"ஏண்டா இப்படி இருக்கிற முன்னாடி எல்லாம் இப்படி இல்ல தானே நீ... எதற்காக இத்தனை கோபம் வருது.. ஒவ்வொரு தடவையும் உன்னை இழுத்துட்டு வர நான் கூடவே உன் பின்னாடி சுற்ற முடியுமா.. உன்னோட குணத்தை கொஞ்சம் மாற்றிக்கோ குரு".

"நான் எப்போதும் போல தான் இருக்கறேன் அவன் என்ன சொன்னான் தெரியுமா…"

"யார் என்ன சொன்னால் என்ன? நம்ம எதற்காக இங்கே வந்திருக்கிறோம். படிக்க தானே படிச்சு முடிச்சுட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம்... புரியுதா சின்ன பசங்க மாதிரி இன்னுமா அடிச்சுக்கிட்டு இருப்பே."

"தேவையில்லாம பேசினால் யாராயிருந்தாலும் அடி விழுகும்..நான் என்னை எப்போதும் மாத்திக்க மாட்டேன் நீ பேசாமல் போய்விடு.. "கோபமாக இவளிடம் கத்தி விட்டு நகருவான்.

இங்கே இது அடிக்கடி நடந்துகொண்டிருந்தது இருவருக்கும் நடுவிலும்..

காலேஜுக்கு வந்து சேர்ந்து ஆறு மாதங்கள் முடிந்து இருந்தது.அன்றுதான் முதல் முதலாக அபிநயாவை இவள் பார்த்தது.

அன்றும் வழக்கம் போல அபிநயாவை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்திருந்தான் குரு.

அன்று மாலையில் கிரௌண்ட் இல் விளையாடி கொண்டிருந்தான் குரு.புறப்பட தயாராக இருக்கையில்..சக மாணவன் கிண்டலாகப் பேசி கொண்டு இருந்தான் குருவிடம்..வந்து சேர்ந்த நாளிலிருந்து குருவிற்கும் அவனுக்கும் சுத்தமாக ஒத்து வருவது கிடையாது.

சிறு சிறு உரசல்கள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருந்தது.இன்றைக்கு வேறுவிதமாக ஆரம்பித்து இருந்தான்.

இவனோடு படிக்கும் மாணவன் தான் அவன் இன்று இவனை கல்லூரி வாசலில் பார்க்கவும்... "பார்ரா இவனுக்கு வந்த வாழ்வ... வீட்டிலிருந்து அழைத்து வர்றது ஒரு பொண்ண இங்க காலேஜில் சுத்தறதுக்கு இன்னொரு பொண்ணு... இவனுக்கெல்லாம் எப்படிடா இதுபோல பொண்ணுங்க மாட்றாங்க.. "இப்படி கேட்டான்.

இது நன்றாகவே குருவின் காதுக்கு கேட்டது.. எப்போதை விடவும் இப்போது நன்றாக கோபம் வந்து இருந்தது..

கையிலிருந்து ஃபுட்பாலை வேகமாக தூக்கி எறிந்தவன்.. பேசியவனிடம் கோபமாக நெருங்கினான்.

"என்ன சொன்ன டா எங்க மறுபடியும் சொல்லு.."

"என்ன இப்படி முறைச்சிகிட்டு கேட்டா பயந்திடுவேன்னு நினைக்கிறாயா... அப்படிதான் பேசுவேன்.. ஹோம்லியா ஒரு பொண்ணு மாடன்னா ஒரு பொண்ணா.. எப்படிடா உங்களுக்கெல்லாம் மாட்டுது "என்று சொல்லும் போது அவனது முகத்தில் வேகமாக குத்தி இருந்தான் குரு.

"யார் மேல கைய வெச்ச* என்று அவனும் திரும்ப அடிக்கப் போக அந்த இடமே சில நிமிடங்களில் ரண களமாகியது.

புழுதி பறக்க இரண்டு பேருமே அந்த மண்ணில் உருள ஆரம்பித்தனர். குரு அவனை அடிக்க அவன் திரும்ப இவனை அடிக்க என்று... இரண்டு பேருமே திடகாத்திரமான இளைஞர்கள்... குருவிடம் அதிகம் கோபம் இருக்க... குருவின் கரம் தான் ஓங்கிக் கொண்டிருந்தது.

ஏற்கனவே காலேஜ் விட்டு நீண்ட நேரம் ஆகியும் குரு வராமல் இருந்ததினால் அவனைத் தேடி என்ஜினியரிங் காலேஜிற்குல் நுழைந்தாள் அபிநயா.

எப்படியும் ஃபுட்பால் கிரவுண்டில் தான் இருப்பான் என்பது இவளுக்கு தெரியும்.
புட்பால் என்றால் அவனுக்கு அத்தனை பிரியம்.ஒரே வீட்டில் இரண்டு பேரும் வளர்ந்ததினால் அவனின் ஒவ்வொரு செய்கைகலுமே அபிநயாவுக்கு அத்துப்படி.

நித்தியஸ்ரீ தெரியாத ஒரு விஷயம் குருவை பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். அவனுடைய கோபம்... இயல்பாகவே கொஞ்சம் அதிகமாக அவனுக்கு கோபம் வரும்.

அவனிடம் என்ன பேசினால் கோபம் வரும் என்று கூட இவளுக்கு நன்றாக தெரியும்.

அது மட்டுமல்ல சிறு வயதில் இருந்தே நித்யஸ்ரீயோடு நட்பாக இருக்கிறான் என்பதும் இவளுக்கு நன்றாகத் தெரியும்.

நிறைய நேரங்களில் அவனை கலாய்ப்பது கூட உண்டு." அந்த பொண்ணுகிட்ட என்ன குரு இருக்குது உனக்கு ஏன் அவளை அவ்வளவு பிடிக்குது. பிரண்ட்ஸ் தான் ஒத்துக்கறேன்... தப்பா எல்லாம் எப்பவும் சொல்ல மாட்டேன்" இப்படிக் கூறுவாள்.

உண்மையில் இது குருவிற்கு நித்யஸ்ரீ எப்படியோ அது போலத்தான் வீட்டில் அபிநயா... உற்ற தோழி மட்டுமல்ல.. அவளை நம்பி என்ன வேண்டுமானாலும் மனம் விட்டு பேசலாம்.

அதனாலோ என்னவோ அவள் எவ்வளவு களாய்தாலும் குரு கண்டுகொண்டது எல்லாம் கிடையாது.

சொல்லிக்கோ எனக்கு என்ன என்பது போல தான் இருக்கும் அவனது மனநிலை... இன்றைய சண்டையை பார்த்தவுடன் அபிநயாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பதற்றம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.

ஆர்ட்ஸ் காலேஜ் முடித்தவுடன்... காலியாக இருந்த நீளமான கிரவுண்ட் விளையாட்டு மைதானமாக இருந்தது.

சரியாக இவள் பார்க்கும் போது தெரிந்து விட்டது.குரு தான் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறான் என்று..

இவனது கோபம் எப்படிப்பட்டது என்று நித்யஸ்ரீக்கு தெரிகிறதோ இல்லையோ இவளுக்கு நன்றாகத் தெரியுமே…

நிச்சயமாக இவளால் தனியாக அவனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாது. ஒருவேளை நித்யஸ்ரீ வந்தால் நிருத்தி விட முடியுமா என நினைத்தவள் வேகமாக நித்யஸ்ரீ இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தாள்.

நிச்சயமாக இஞ்சினியரிங் மாணவர்கள் நிறைய பேர்அங்கிருக்கும் லைப்ரரியில் தஞ்சம் புகுவது வழக்கம். நிச்சயமாக நித்யஸ்ரீ அங்கே தான் இருப்பாள் என்று நினைத்தவள் வேகமாக அந்த இடத்திற்கு சென்று பார்த்தாள்.

நித்யஸ்ரீ இவளை ஏமாற்றாமல் அங்கேதான் இருந்தாள்.. வேகமாக அவளிடம் ஓடி சென்று நின்றவள் மூச்சு வாங்க "அங்கே குரு சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறான் ப்ளீஸ் நித்தி என்கூட வா" என்று அழைத்தாள்.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”