காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்_6

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்_6

Post by Rajeswari.d »

6
"இந்த கல்யாணம் கட்டாயமா நடக்காது அம்மா... எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே கிடையாது".என்று பிடிவாதமாக பேசிக்கொண்டிருந்தான் பரத்

"அண்ணா ஏன் ணா இப்படி சொல்லுறீங்க...பொண்ணுக்கு என்ன குறைச்சல் ரொம்ப அழகா இருக்காங்க.. போட்டோவை கொடுத்தபோது கூட சொன்னாங்களாம்.. பொண்ணு ரொம்ப சாந்தமான குணம் படிச்ச பொண்ணு அப்படின்னு.."

"சாரி குட்டிமா அழகா இருக்காங்க, குணமான பொண்ணு அப்படிங்கறதுகாக கல்யாணம் பண்ணிக்க எல்லாம் முடியாது. எனக்கு எனக்குனு ஒரு கனவு இருக்கு குட்டிமா.. அந்த கனவு நிறைவேறிய பிறகு தான் கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன். அதனால இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்".

"கல்யாணம் பண்ணிக்கிட்டா கனவு எதுவுமே நடக்காதுன்னு யார் ணா சொன்னாங்க…"

"குட்டிமா உனக்கு சொன்னா புரியாது. ப்ளீஸ் இந்த விஷயத்துல நீ நடுவுல வராத. நான் ஏற்கனவே அப்பாகிட்ட சொல்லி இருக்கிறேன். எனக்கு வேலைக்கு போகிறதுக்கு எல்லாம் விருப்பம் கிடையாது.அப்பா கொஞ்ச நாள் வெளியே வேலை செய்தால் தான் வெளிஉலகம் புரியும் என்னை இங்கே அனுப்பி வச்சாங்க. என்னோட கனவு எல்லாமே பிசினஸ்தான். அதற்கான முயற்சியில் தான் ஈடு பட்டுட்டு இருக்கிறேன்.இந்த விஷயத்தில் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன் குட்டிமா."

"சரி ணா அப்பாகிட்ட மறுபடியும் பேசிப் பார்க்கலாம். அப்பாவைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் அண்ணா.. நம்மளோட ஆசைக்கு என்றைக்குமே நடுவே நிற்க மாட்டாங்க.. அதனால என்னோட செல்ல அண்ணா என்ன பண்றீங்க கல்யாண கனவு மட்டும் கண்டால் மட்டும் போதும். இந்த சின்ன பிரச்சினையை எல்லாம் யோசிக்கத் தேவையில்லை. அப்பா நிச்சயமா உன்னோட பிஸினஸுக்கு சம்மதம் சொல்வாங்க. அப்புறமா இந்த பொண்ணு தான் எனக்கு அண்ணியா வரப்போறாங்க.. குட் நைட் அண்ணா "என்று விட்டு நகர்ந்தாள்.

இரவு தந்தை வந்த உடனேயே மறுபடியும் இந்தப் பேச்சு ஆரம்பமானது. பரத்தின் தந்தை இதற்கு சற்றும் சம்மதிக்கவில்லை. "லட்சக்கணக்கில் முதலீடு பண்ணி பிசினஸ் தோல்வி அடைஞ்சுடுச்சுன்னா… போட்ட முதலீடும் நஷ்டம்.. நம்மோட உழைப்பும் நஷ்டம் புரியுதா.."

"அப்பா ப்ளீஸ்ப்பா புரிஞ்சுக்கோங்க.. என்னோட கனவு எல்லாமே நான் தொடங்கப் போகிற பிசினஸ்ல தான் இருக்கு.. நிச்சயமா தோல்வி அடையாது அப்பா. எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு ‌. ஒரு தடவை என்னை நம்பி எனக்கு உதவி செய்யுங்கள்.. நான் தொடங்கப் போவது பெரிய பிசினஸ். கொஞ்சம் பணம் நிறைய செலவு ஆகும். நீங்க முதலீடு பண்ணறதுக்கு கொஞ்சமா உதவி செய்யுங்க அப்பா. ப்ளீஸ் அப்பா" என்று கேட்டான் பரத்.

"அப்பா அண்ணாவோட ஆசை இதுதான்னா உதவி செய்யலாமே அண்ணன் நிச்சயமா ஜெயிப்பான் பா எனக்கு நம்பிக்கை இருக்கு."

இரண்டு பேரும் மாறி மாறி கேட்க அமைதியாக அமர்ந்திருந்தார் பரத்தின் தந்தை.

"அப்பா ஒரு விஷயம் சொல்லவா அப்பா... முதலீடு செய்து தொழில் தொடங்கறவன் ஆள்பவன் அப்பா.. உடல் உழைப்பை மட்டுமே முதலீடு செய்பவன் ஆளப் படுபவன் அப்பா.. நான் ஆள்பவானாக இருக்க ஆசைப்படுறேன்
ப்ளீஸ்பா" என்று பரத் கிட்டத்தட்ட கெஞ்சியபடி கேட்டான்.

"அப்பா அண்ணா சொல்வதும் சரிதானே... எத்தனை பேர் திறமை இருந்தும் அதை பயன்படுத்திகாம இருக்கிறார்கள். அண்ணாவுக்கு நிறைய திறமை இருக்கு அப்பா அண்ணா நிச்சயமா அவங்க கனவுல ஜெயிப்பாங்க. நம்பி அவங்களுக்கு என்ன உதவி வேணுமோ செய்யுங்கப்பா" என்று கேட்டாள் நித்யஸ்ரீ.

"உன்னோட ஆசையைப் பற்றி உன்னோட கனவு பற்றி எதுவுமே எனக்கு தெரியாது பரத் இப்ப சொல்லு.. என்னால முடிஞ்சதை நான் செய்து தருகிறேன். முதன்முதலாக அவனுடைய பிசினசை பற்றி தெரிந்து கொள்ள பரத்திடம் கேட்க ஆரம்பித்தார் அவனது தந்தை".

"அப்பா வந்து கொஞ்சம் இல்ல நிறையவே உங்க கிட்ட பேசணும். என்னோட கனவு ரொம்ப பெரியது அப்பா. இதுல நான் தோல்வியடைய வாய்ப்பே இல்லை. உங்களுக்கு புரியிற மாதிரி சொல்லுறேன் கேளுங்க" என்று தன்னுடைய கனவு அவருக்கு விவரிக்க ஆரம்பித்தான்.

கேட்டு முடித்த பிறகும் கூட சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. பரத் உன்னோடது ஆசை அது சரிதான். ஆனா பணம் நிறைய செலவாகும் போல இருக்கே கொஞ்சம் யோசனையோடு கேட்டார்.

"இன்வஸ்மெண்ட் பா நிச்சயமா அது வீணா போகாது."

"புரியுது டா அவ்வளவு பணம் கையில் இல்லையே.."

"அப்பா ப்ளீஸ்ப்பா... நான் வேணும்னா ஒரு ஐடியா தரேன் பா.. எனக்காக நீங்க வாங்கி வைத்திருக்கிற நகையை அண்ணா கிட்ட கொடுத்துடுங்கப்பா. அந்தப் பணத்தில் பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணட்டும் மெதுவா நகையை திருப்பிகலாம் பா. என்னப்பா சொல்லறீங்க".

இதற்கு லட்சுமி மட்டுமல்ல பரத்தும் மறுப்பு தெரிவித்தான். முடியாதுங்க இந்த விஷயத்துக்கு நான் சரின்னு சொல்ல மாட்டேன். அவளுடைய எதிர்காலத்துக்காக சிறுக சிறுக சேமித்து வைத்தது. அதைத் தொட நான் அனுமதிக்க மாட்டேன்.

"அப்பா எனக்கும் இதில் விருப்பம் இல்லை பா "என்று பதில் கூறினான்.

"என்னம்மா என்ன? எனக்கு என்ன இப்பவேவா கல்யாணம் பண்ணி அனுப்ப போறீங்க... இப்பதான் காலேஜ் ஃபர்ஸ்ட் வருஷம் சேர்ந்திருக்கிறேன்.. படிப்பை முடிக்கவே இன்னும் மூணு வருஷம் பாக்கி இருக்குதும்மா.. அதுக்குள்ள அந்த நகையெல்லாம் அண்ணா திருப்பி தந்து விடுவார்கள்.. அதனால ப்ளீஸ் நீங்க எதுவும் சொல்லாதீங்க அண்ணா நீயும் தான் மறுத்து எதுவும் பேசாத..*என்று தன்னுடைய அண்ணனுக்காக பரிந்து பேசினாள் ஸ்ரீ.

"நான் சொன்னதை என்றைக்கு தான் கேட்டிருக்கிறீர்கள் என்னமோ செய்யுங்க" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் லட்சுமி.

"ஆமாம்பா கல்யாணத்துக்கு முன்னாடி இந்த பிசினஸ் தொடங்கி விடட்டும்.பிசினஸ் இருக்குன்னா இன்னும் மரியாதை தானே. அப்புறம் அண்ணி கூட இன்ஜினியரிங் முடித்திருக்கிறார்கள். எதிர் காலத்துல அண்ணா வேலைக்கு உதவியாக கூட வரலாம். இன்றைக்கு ஆண் பெண் எல்லோரும் சேர்ந்து வேலை செய்கிறது தப்பு ஒன்னும் இல்லையே."

ஒரு வழியாக நிறைய பேசி தாய் தந்தை இரண்டு பேரையுமே நித்யஸ்ரீ பேசி சம்மதிக்க வைத்திருந்தாள்..

அன்றைய பேச்சு சுமுகமாக நிறைவடைந்து இருந்தது.தன்னுடைய அண்ணனிடம் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தாள் நித்யஸ்ரீ.

"அண்ணா எனக்கு ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கு.இப்ப சொல்லு ணா என்ன தயாரிக்கப் போகிறோம் நம்மளோட ஃபேக்டரியில்ல" என்று கேட்டு அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.

"நம்ம தயாரிக்கப்போவது ஒரு சாப்ட்வேர்..இந்த வாஷிங் மிஷின்ல எல்லாம் இத்தனை நிமிஷம் சுத்தணும் அப்படிங்கிறதுக்காக டைமிங் செட் பண்ணு இல்லையா அது போல...இந்த சிக்னல்ல குறிப்பிட்ட டைம் முடிஞ்சதும் சிக்னல் மாறும் இல்லையா அது போல ஒரு சாஃப்ட்வேர்... நிறைய யோசித்து இதை செய்யலாம் என முடிவு பண்ணி இருக்குறேன்.. இதற்கு இங்க நிறைய டிமாண்ட் இருக்கு. "என்று தன்னுடைய கனவை அவளிடம் விவரித்தான் பரத்.

"அதற்கு தேவையான மூலப் பொருட்கள் எல்லாம் எங்கே கிடைக்கும் அப்படினு எல்லாமே ரெடி பண்ணி வச்சிருக்கிறேன்... முதலீடு கொஞ்சம் அதிகமாகத் தான் ஆகும். ஆனால் கேரண்டியாக நஷ்டம் வராது."

"அண்ணா எனக்கு உன் மேல நெறைய நம்பிக்கை இருக்குதுன் ணா இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லறீங்க…"

"உன்னோட நகையையும் தர்றதா சொல்லி இருக்கிற குட்டிமா... முக்கியமான ஒரு விஷயம் இந்த கம்பெனியோட பார்ட்னர் நீயும் தான்.."

"அண்ணா என்ன இது இதெல்லாம் எனக்கு வேண்டாம். உன்னோட கனவு உன்னோட ஆசை உன்னோட கம்பெனி... எனக்கும் இதற்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது."

"அப்படி சொல்லக்கூடாது நித்யா.. ஏன்னா என்ன செய்யப் போறேன் அப்படிங்கறத ஒவ்வொரு ஸ்டெப்பும் உனக்கும் தான் சொல்லித் தரப் போறேன். ஒருவேளை என்னால் அதை கவனிக்க முடியாத போது நீ வந்து பார்த்துக்கணும்."

"ஏன்ணா நீ எங்க போற இதெல்லாம் நல்லா இல்ல பார்த்துக்கோ.. இன்னொரு தடவை இது மாதிரி பேசாதீங்க".

"கோபப்படக்கூடாது குட்டிமா எப்பவுமே உன் கூடத்தான் இருப்பேன். நான் என்ன சொல்ல வர்றேன்னா ஒருத்தருக்கு ரெண்டு பேர் அந்தத் தொழிலை பற்றி தெரியும் போது தோல்விக்கு வாய்ப்பு இல்லை இல்லையா.. அதற்காக சொல்ல வர்றேன்.. அப்புறம் எப்படி பார்த்தாலும் நீ என்னோட ஒரே குட்டி தங்கச்சி. என்னோட எல்லாத்திலேயும் உனக்கு சரி பாதி பங்கு உண்டு. அதனாலதான் புரியுதா."

"அண்ணா எனக்கு நீங்க மட்டும் போதும் வேற எதுவுமே தேவையில்லை. இந்த சொத்து சுகம் பணம் எதுவுமே வேண்டாம். நீங்க மட்டும் கடைசி வரைக்கும் என் கூட இருந்தா போதும். அப்படியே இப்ப பார்த்திருக்கிற பொண்ணையும் ஓகே சொல்லிடணும். என்னோட ஆசை அவ்வளவுதான்."

"அடிப்பாவி கடைசியில உன்னோட முடிவுல சரியா இருக்கிற.. எப்படி என்ன கரெக்ட்டா கோர்த்து விடற.."

"ப்ளீஸ் அண்ணா இந்த பொண்ணுக்கு ஓகே சொல்லிடு ணா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்... ரொம்ப அழகாய் இருக்கிறாங்கண்ணா.. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.அவங்ககிட்ட எப்பவுமே பேசிக்கொண்டே இருக்கலாம் போல தோணுது."

"அப்படியா... இத நான் நம்பனும் அப்படித்தானே... அது எப்படி ஸ்ரீ போட்டோவை பார்த்த உடனேயே உனக்கு மட்டும் இத்தனை தோணுது...."

"அதெல்லாம் கேக்க கூடாது ணா.. இப்பதான் உன்னோட சொந்த பிசினசுக்கு அப்பா-அம்மா ரெண்டு பேரும் ஓகே சொல்லியாச்சு இனிமே என்ன இந்த பொண்ணுக்கு ஓகே சொல்றதுல உனக்கு என்ன பிரச்சனை... உன்னோட ஆசைக்காக நானும் ஓகே சொன்னேன் இல்லையா...அப்பா அம்மா கிட்ட எல்லாம் பேசி இருக்குறேன்..நீயும் எனக்காக இந்த பொண்ண ஓகே சொல்லணும் ப்ளீஸ்ணா".

"என்னவோ செய் இப்போதைக்கு என்ன விட்டா போதும்…"

"அண்ணா தோங்க் யூ... நான் இப்போவே அம்மா கிட்ட போய் சொல்ல போகிறேன்.இந்த வாரத்திலேயே ஒரு நாள் போகிறோம் பார்க்கிறோம்... அந்த பொண்ண தூக்கறோம்."

"என்ன குட்டிமா வில்லி மாதிரி பேசுற தூக்க போறியா…"

"வாசல் வரைக்கும் சென்றவள் திரும்பி பார்த்து ஏன் நான் வில்லிதான்..எங்க அண்ணனுக்காக இந்த பொண்ண தூக்கப் போறேன்..பாய் "என்றுவிட்டு சிரித்தபடியே தாயின் அறையை நோக்கி ஓடினாள்.

அன்றைக்கு தூங்கச் செல்லும் போது நித்யஸ்ரீ அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள். அடுத்த நாள் காலை குருவைப் பார்க்கும் போது அவனிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் இவளிடம் இருந்தது.. அடுத்தநாள் காலேஜுக்கு செல்லும் போது பெரிய சாக்லெட் ஒன்றை வாங்கிக் கொண்டு புறப்பட்டாள்.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”