காதல்_8

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_8

Post by Rajeswari.d »

8

அடுத்த நாள் காலையிலேயே காலேஜுக்கு வந்திருந்தாள் நித்யஸ்ரீ. அவளது கண்கள் குருவைத் தேடிக் கொண்டிருந்தது.

தன்னுடைய அண்ணாவின் திருமணம் நிச்சயம் ஆக போவதை கூற அவ்வளவு ஆர்வமாக வந்திருந்தாள்.

ஆனால் அன்றைய நாளில் குரு காலையில் காலேஜிற்கு வந்திருக்கவில்லை. ஒரு மணி நேரம் வரை காத்திருந்த பின் குருவிற்கு போனில் அழைப்பு விடுத்தாள்.

"குரு இன்றைக்கு காலேஜ் வரலையா.."

"என்ன ஆச்சரியம் நித்யஸ்ரீ....லீவுனு சொல்லிட்டு போன இப்போ போன் பண்ணி கூப்பிடற.. நீ காலேஜ்க்கு வந்திருக்கிறாயா என்ன.. உலக அதிசயம் என கேட்டு போன் எல்லாம் பண்ணி இருக்குற".

"டேய் நான் தான் லீவு சொன்னேன்..நீயும் காலேஜுக்கு ஏன் கட் அடிச்சிட்டு வராமல் இருக்கிற.. உன்னை யாரு நீ கொடுக்க சொன்னாங்க".

"மிரட்டல் என்ன பெருசா இருக்கு உனக்கு என்னடி இப்போ பிரச்சனை என்ன ஆச்சு... நாம் மண்டே தான் காலேஜுக்கு வருவேன்"..

"நீ வந்து இருப்பேன்னு இன்னைக்கு நான் காலேஜுக்கு வந்திருக்கிறேன்.. எனக்கு தெரியாது என்ன செய்வியோ.. ஏது செய்வியோ இன்னும் அரை மணி நேரத்துல இங்கேயே இருக்கணும்.."

"என்ன மேடம் ஆர்டர் போடறீங்க.. அப்படி எல்லாம் வர முடியாது எங்க எனக்கு வீட்டில் வேலை இருக்கு".

"இப்ப வர முடியுமா முடியாதா அதற்கு மட்டும் பதில் சொல்லு.. உன்னோட கதையை கேட்க நான் தயாரா இல்லை ஒரே கேள்விதான் வர முடியுமா முடியாதா?".

"ரொம்ப ஓவரா போற நித்யஸ்ரீ..ஒன்று செய் காலேஜ் கேண்டீனில் வெயிட் பண்ணு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் வர்றேன்.. புறப்பட்டு வர்றேன் ஓகேவா".

"ஏன்டா ஏன் எதற்காக ஒரு மணி நேரம் ஆகும்…"

"எப்பா தெய்வமே இன்னைக்கு காலேஜ் லீவ் போட்டதால நல்லா தூங்கி விட்டேன். உன்னோட போன் கால் தான் என்னை எழுப்பிவிட்டு இருக்கு. எழுந்து குளித்து வர டைம் ஆகாதா.."

"உன்னோட அத்த பொண்ணு அபி வரலையா இன்றைக்கு காலேஜ் க்கு...."

"உடம்பு சரி இல்ல லீவு ன்னு சொன்னா.. சரி நாமளும் லீவு எடுத்துக்கலாம் என்று பார்த்தேன்.. இப்ப பாத்தா என்ன அழைச்சுக்கிட்டு இருக்கிற.."

"உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் குரு சீக்கிரம் வா.."

"ஒன்னு பண்ணு அடுத்தது லஞ்ச் ஹவர் தானே..அந்த நேரத்துல கரெக்டா கேன்டீன் வந்துடறேன். அங்கு வச்சு பேசிக்கலாம் ஓகேவா.."

"ஓகே சீக்கிரம் வா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறேன்.. "

ஒகே டி என்று போனை கட் செய்தான் குரு.

ஆனால் சொன்னது போல குரு அங்கே வந்து காத்திருக்க நித்யஸ்ரீ அங்கே கேண்டீனுக்கு வந்திருக்கவில்லை.

கேண்டீன் வந்து இருபது நிமிடம் தாண்டி இருந்தது.. நித்யஸ்ரீ வருவதற்கான எந்த அடையாளமும் அங்கே இல்லை.
வந்தவன் சுற்றிலும் தேடிக்கொண்டிருந்தான்..

"என்னாச்சு இலளுக்கு எப்பவும் இப்படி செய்ய மாட்டாளே... சொன்னால் சொன்னது போல நடந்துக்குவாலே இவளுக்கு இன்றைக்கு என்ன ஆச்சு?என்று கண்களால் தேடினான் குரு.

அப்போது இவனது வகுப்பு தோழர்கள் சிலர் அங்கு வந்தவர்கள்" என்ன குரு இங்கே இருக்கறியா.. இன்றைக்கு என்ன காலேஜுக்கு மட்டம் போட்டுட்டயா என்ன.. கிளாஸ் ரூம்ல உன்னை பார்த்த மாதிரியே தெரியல."

"மதியத்துக்கு மேல தான் காலேஜ் வரலாமுன்னு வந்திருக்கிறேன்.. நித்யஸ்ரீ எங்க?"

"அங்கே லைப்ரரியில் அவளைப் பார்த்தோம்.ஏதோ முக்கியமானது எழுதிக்கிட்டு இருக்கறா.. ஏன் வந்ததும் அவளை தேடுற.."

"டேய் அதை ஏண்டா அவன் கிட்ட கேக்குற.. காலேஜில சேர்ந்த நாளிலிருந்து ரெண்டு பேரும்தான் சேர்ந்து சுற்றுறாங்க .ஏடாகூடமா ஏதாவது கேட்டு வச்சிராத குருவுக்கு கோபம் வந்துவிடும்.. அப்புறம் மைதானத்தில் நடந்தது இங்கே கேண்டீன்ல நடந்திட போகுது "என்று இன்னொரு மாணவன் கூறினான்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மாதான் அவளைத் தேடறேன்.ஓகே நான் அவளை அங்கே போய்ப் பார்த்துக்கறேன் "என்று எழுந்து நகர்ந்தான் குரு.

அங்கே சென்று பார்க்க அங்கே நித்யஸ்ரீக்கு எதிராக விஷ்வா அமர்ந்திருந்தான். அவன் ஏதோ கேட்க சுவாரசியமாக பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

பார்த்த உடனேயே சுறுசுறுவென கோபம் ஏறியது குருவிற்கு.. அங்கே வர சொல்லிவிட்டு இங்கே அரட்டை அடிக்கிறியா.. என மனதிற்குள் நினைத்த படி அவன் வேகமாக அங்கே சென்றான்.

"முக்கியமா பேசணும்னு சொன்னியே நித்து போகலாம் வா "என்று யோசிக்காமல் அவளது கரம் பற்றி எழுப்பி நிறுத்தினான்.

குரு என்ன? என்று கேட்டாள் நித்யஸ்ரீ அழைத்தது எல்லாம் மறந்து இருந்தது. சட்டென எழுப்பி நிறுத்தவும் அவளுக்கும் கோபம் தோன்றியிருந்தது.

"என்ன இது கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல்.. எதுக்காக இப்படி இழுக்கிற என்ன.. என்னதான் உன்னோட பிரச்சனை.." கொஞ்சம் கோபமாக கேட்டாள் நித்யஸ்ரீ

"ஓ... தப்பான நேரத்தில் வந்துட்டேனா.. நான் வேணும்னா போகட்டுமா.. முதல்ல மேனர்ஸ் என்னென்னு நீ கத்துக்கோ புரியுதா. வீட்டிலிருந்தவனை காலேஜுக்கு உடனே வான்னு அழைக்க வேண்டியது.. கேண்டீன் போனா நீ இல்லை.. இங்க தேடி வந்தா எனக்கு மேனர்ஸ் இல்லையா.. எப்படி நித்யஸ்ரீ இப்படியெல்லாம் பேச முடியுது உன்னால.."

"சாரி சாரி குரு ஒரே நிமிஷம் வந்துடறேன்..இவனுக்கு இந்த நோட்ஸ் வேண்டும் என்று கேட்டான்."

"உனக்கு எப்பவுமே இப்படித்தான் நித்யஸ்ரீ.. நான் உனக்கு விளையாட்டு பொருள் மாதிரி தெரியுதா.. உனக்கு மட்டும்தான் வேலை இருக்குது.. உனக்கு மட்டும் தான் நண்பர்கள் இருக்கிறாங்க அப்படித்தானே அப்படின்னா நான் யாரு உனக்கு.. எங்கிட்ட சொன்னது கூட மறக்கற அளவுக்கு இவன் உனக்கு முக்கியமா போயிட்டா அப்படித்தானே.."

"ஒரு நிமிஷம்" என்று விஸ்வாவிடம் சொன்னவள் குருவோடு வேகமாக வாசலை நோக்கி நகர்ந்தாள்.

"ஏன் சின்ன குழந்தை மாதிரி இப்படி எல்லாம் பண்ற.. முன்னல்லாம் இப்படி கிடையாது குரு நீ.. இப்போ உன்கிட்ட நிறைய மாற்றம் தெரிந்தது.. தொட்டதுக்கு எல்லாம் கோபப்படற. சின்ன விஷயத்துக்கு கூட விட்டு கொடுக்கறது இல்ல.."

"எது சின்ன விஷயம் நித்யஸ்ரீ.. என்னோட இடத்துல இருந்து நீ பாரு.. வீட்டில் இருந்த என்ன வரச் சொல்லற.. வந்து பார்த்தா நீ அந்த இடத்துல இல்ல..இங்கே எவனுக்கோ நோட்ஸ் வேணும்னு சொல்லி எடுத்துக் கொடுத்திருக்கிற..".

"டேய் அவன் நம்ம கூட படிக்கிறவன் டா புரியுதா.."

"காலேஜ்ல நீ மட்டும்தான் படிக்கிறியா வேறு யாருமே இங்க இல்லையா நீயே தான் தரணும்னு ஏதாவது கட்டாயம் இருக்கா.."

"ஏண்டா இப்படி எல்லாம் பேசுற.."

"அது போகட்டும் விடு .. நான் எதுவும் உன்கிட்ட கேட்கல இப்ப எதுக்காக என்ன வர சொன்ன அத முதல்ல சொல்லு.. ஏதாவது விஷயம் இருக்கா இல்ல ஒன்றுமே இல்லையா.."

கடவுளே?

"ஏன் எதுவுமே இல்லையா.. சரி நான் கிளம்புறேன் ."

"ப்ளீஸ் குரு ஒரு நிமிஷம் நான் உன்கிட்ட ரொம்ப சந்தோசமான விஷயத்தை சொல்லலாம் அதுக்காக தான் உன்னை இங்கே வரச்சொன்னேன்."

என்ன?

"நீ மதியம் சாப்டியா இல்லையா.."

இத கேக்க தான் கூப்பிட்டாயா?

"டேய் ஏதாவது சொல்லிட போறேன். என் பின்னாடி கேன்டீனுக்கு வா. நானும் இன்னும் சாப்பிடல. உங்கூட சாப்பிட்டுட்டு ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்லணும்."

"கேண்டீனுக்கு வான்னு கூப்பிட்டது நீ...எப்படி சாப்பிட்டுட்டு வருவேன்னு எதிர் பார்க்கிற.."

"ஏன் எல்லா விஷயத்துக்கும் இவ்வளவு கோபம் வருது குரு.".

"பின்ன எங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லிட்டு இங்க வந்து பார்த்தால் எல்லாத்தையும் மறந்துட்டு யாரோ ஒருத்தன் கூட அரட்டை அடிச்சிட்டு இருப்ப நா மட்டும் கோபமே படக்கூடாது அப்படித்தானே.."

"டேய் தயவுசெய்து பேசாம வாடா.. இதுக்கு மேல ஏதாவது பேசினேன்னு வை.. நான் இப்படியே கிளம்பிப் போய் விடுவேன்."

"அதுதான் போவேன்னு சொல்லற இல்ல போ.. நான் இப்படியே கிளம்பி வீட்டுக்கு போறேன்."

"டேய் ஏன்டா என் உயிரை எடுக்குற.. பேசாமல் என் பின்னாடி வா" என்று அவனை இழுத்துக்கொண்டு கேண்டீன் நோக்கி நகர்ந்தாள் நித்யஸ்ரீ.

"ப்ளீஸ் முகத்தை இப்படி தூக்கி வச்சுக்கிட்டு வராத..நெஜமாவே உன்னோட முகத்தை பார்த்தால் சமயத்துல பயமா இருக்கு. அவ்வளவு டெரரா முகத்தை வெச்சிகிட்டு இருக்கிற.."

"நான் ஒன்னும் சினிமாவில் நடிக்கிற ஹீரோ கிடையாது.. என் முகம் இப்படித்தான் இருக்கும். தெரிஞ்சு தானே இத்தனை நாள் பழகிக் கொண்டிருக்கிற.. இப்ப என்ன புதுசா இப்படியெல்லாம் கேட்கிற.. பேச கஷ்டமா இருந்தா சொல்லிடு இனி உன்கிட்ட பேசமாட்டேன்."

"குரு திஸ் இஸ் டூ முச்..இன்னொரு தடவை இதுமாதிரி ஏதாவது பேசினேன்னு வை.. என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. உனக்கு என்னதான் பிரச்சனை.. தூங்க விடாம கூப்பிட்டேன்னு கோபமா.. அப்படின்னா போன்லயே சொல்றதுக்கு என்ன ?நானும் பேசாம உன்ன விட்டு இருப்பேன் இல்ல."

"இனிமே கோபமா பேசல போதுமா" என்று அமைதியாக சென்று வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டான்..

வேகமாக வேண்டியதை வாங்கிக் கொண்டு வந்தால் நித்யஸ்ரீ.. அவனுக்கு எதிரில் வைத்தபடி அமர்ந்து கொள்ள இப்போதும் தலை குனிந்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான் குரு.

என்ன யோசிக்கிற?

"ஒன்றும் இல்ல சாரி நித்யஸ்ரீ.. இப்ப எல்லாம் ஏன்னு தெரியல எனக்கு ரொம்ப கோபம் வருது. அதுவும் நீ வேற யார் கூடயாவது பேசினார் ரொம்ப ரொம்ப வருது."

"இது பொசசிவ்னஸ் குரு.. இதுக்கு ஒண்ணுமே பண்ண முடியாது. இங்க எல்லாரும் நல்லா பேசுறாங்க.. இங்கே வந்து பேசும் போது நம்ம பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு போக முடியாது இல்லையா.. நான் என்ன செய்யறது சொல்லு."

"பரவாயில்ல விடு எதுக்காக என்னை அழைத்த... அதை சொல்லு முதல்ல" என்று கேட்டான் குரு.

"அண்ணாவுக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருச்சு.. நாளைக்கே அந்த பொண்ண நிச்சயம் பண்ண நாங்க எல்லாம் போறோம். இந்த விஷயத்தை உங்கிட்ட நேரில் சொல்லனும்னு தான் இங்கே காலேஜுக்கு வந்தேன். இது சொல்ல தான் உன்னை அழைத்தேன் நீ தான்…"

"ஹேய் கங்கிராஜுலேசன் உங்க அண்ணா கிட்ட சொல்லிடு.. எனக்கும் பயங்கர ஹேப்பி.. ஆனா நீதான் ரொம்ப ஹேப்பியா என்ஜாய் பண்ணுவே இல்லையா.."

*ஆமாம் குரு பயங்கர எக்ஸ்சைட்டா இருக்கு.வீட்ல அண்ணாவுக்கு சொந்தமாக பிசினஸ் வச்சு தர்றதா சொல்லி இருக்கிறார்கள் அண்ணாவோட ரொம்ப நாள் கனவு இது. அண்ணாவுக்கு நல்ல பொண்ணு கிடைச்சிருக்கு கூடவே அண்ணனோட கனவு நிறைவேறப் போகுது.."

"அண்ணி ரொம்ப ஸ்வீட் நேத்து பேசினேன். இங்க பாரு அவங்களோட போட்டோஸ்... அண்ணனும் அண்ணியும் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு.. இங்க பாரு நேத்து ரெஸ்டாரன்டில் எடுத்தது.."

"ஏன் நித்து ஃபோன்ல அனுப்புவதற்கு என்ன.. இவ்வளவு லேட்டா கொண்டு வந்து காட்டற.."

"நான் உன் பக்கத்துல இருந்து உன்னோட முகத்தோட ரியாக்சன் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு இத காட்டணும்னு நெனச்சேன் இது ஒன்னும் தப்பில்லையே.."

"தப்பே இல்ல மொபைல் கொடு "என்று வாங்கியவன் ஒவ்வொரு போட்டோவாக தள்ளி படி பார்த்துக் கொண்டிருந்தான்."நீ எதுக்கு நந்தி மாதிரி அங்க போன "என்று உதட்டில் சிரிப்புடன் கேட்ட படியே..

"என்ன சைடு கேப்பில் என்ன ஒட்டறையா.. பிச்சுடுவேன். அண்ணிகிட்ட பார்த்து பத்து நிமிஷம் தான் பேசினேன்அப்புறம் நான் புறப்பட்டு வந்திட்டேன் உனக்கு தெரியுமா.. எப்படி அவங்க பர்சனலா பேசணும் கூட்டிட்டு போயிட்டு அங்கு உட்கார்ந்திருப்பேன்னு எப்படி யோசிக்கிற?"

"எதோ கொஞ்சூண்டு மூளை வேலை செஞ்சு இருக்குது வேற என்னத்த சொல்ல?"

"குரு…"

"என்ன ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? இத்தனை நாள் உன்னை பார்க்கிறேன் நீ சரியான அண்ணா பைத்தியம். நான் என்ன நெனச்சேன்னா உனக்கு கல்யாணம் பண்ணின பிறகுதான் உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க ன்னு?"

ஏன் இப்படி சொல்ற குரு?

"ஏன்னா நீ உங்க அண்ணன் மேல அவ்வளவு பாசம் வச்சு இருக்கற.. உன்னாலும் உங்க அண்ணாவை இன்னொரு பொண்ணுக்கு விட்டுத் தர முடியுமா அப்படினு யோசிச்சா எனக்கு பதிலை கிடைக்கல.. அதனாலதான் சொல்லுறேன்."

"குரு நெஜமாத்தான் சொல்றியா? நிஜமாவே நான் அப்படித்தானா..கல்யாணத்துக்கு பிறகு என்னால் அவங்களுக்கு பிரச்சனை வரும்னு சொல்றியா? நான் ஏதாவது அவங்களோட பர்சனல் விஷயத்துல தலையிட்டு பிரச்சனை பண்ணுவேன்னு நினைக்கிறாயா?"

"ஏய் லூசு அப்படி யார் சொன்னாங்க.. உங்க அண்ணன் மேல உனக்கு அளவுக்கதிகமான பாசம் ஜாஸ்தி ஆனா உன் அண்ணன் மேல வச்சிருக்கிற அதே பாசத்தை வர போற பொண்ணு மேலேயும் நீ காட்டும் போது இதெல்லாம் பிரச்சினையே கிடையாது."

"யோசிச்சுப் பாத்தா எனக்கு நீ சொல்றது சரின்னு படுது குரு. நான் சின்ன வயசுல இருந்து அண்ணாவோட செல்லம்தான். ஒருவேளை என்னால அவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வரும்னா நிச்சயமா என்னால தாங்க முடியாது."

"அப்படி இல்ல நித்யஸ்ரீ.. உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது.. விடு அதை விடு.உன்னோட சந்தோஷத்தை என்கிட்ட பகிர்ந்துக்க என்ன தேடற அதுவே எனக்கு பயங்கர சந்தோஷம்.
ஜாலியா போய் என்ஜாய் பண்ணு.."

"சரிடா.. நான் இப்படியே வீட்டுக்கு கிளம்ப போறேன்..இன்றைக்கு இதை உன்கிட்ட சொல்வதற்காகவே இங்கே வந்தேன்."

*அடிப்பாவி அப்போ கிளாஸ் கவனிக்க வரவில்லை. அப்படித்தானே.."

*சீரியஸா உண்மையை சொல்லனும்னா ஆமாம்.. நீ என்ன செய்யப்போற.. கிளாஸ் அட்டென்ட் பண்ண போறியா இப்படியே கிளம்ப போறியா.."

"நீயே கிளம்ப போற அப்புறம் நான் இங்கே இருந்து என்ன செய்கிறது.."

"அடப்பாவி..என்னவோ எனக்காக காலேஜுக்கு வர்ற மாதிரி பேசுற.."

"சும்மா அப்பப்ப அப்படிதான் சொல்லுவேன். அதெல்லாம் உண்மைன்னு நீ நெனச்சிக்க வேண்டாம் சரியா. இன்றைக்கு எனக்கு காலேஜ்க்கு வர்ற ஐடியாவே இல்லை. சாயங்காலமா அண்ணா கூட போய் கொஞ்ச நேரம் கடையில உட்கார போறேன். அப்பா அம்மா ரெண்டு பேரும் ரொம்ப வருத்தப்படறாங்க.. பொறுப்பில்லாம சுத்தறதா நினைக்கிறாங்க".

"அப்படின்னா நீ பியூச்சர்ல வேலைக்கு எல்லாம் போக மாட்டியா.. உங்கள் கடையை தான் பார்க்க போறியா.."

"எதிர்காலத்தைப் பத்தி இதுவரைக்கும் யோசிக்கவே இல்ல நித்யஸ்ரீ.. பாக்கலாம் "என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் குரு.

"டேய் பஸ்ஸ்டாப் வறைக்கும் வாடா நான் புறப்பட்ட பிறகு நீ கிளம்பினால் போதும். விட்டுட்டு போகாதே" என்றபடியே பின்னாடியே அவனோடு ஓடினால் நித்யஸ்ரீ.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”