காதல்_9

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_9

Post by Rajeswari.d »

9

நிச்சயம் செய்வதற்காக பூர்ணிமா வீட்டிற்கு நித்யஸ்ரீயின் வீட்டில் அனைவரும் புறப்பட்டு சென்று இருந்தனர்.

உறவினர்கள் பலரையும் அழைத்து இருந்தனர்.நித்யஸ்ரீ வீட்டில் மட்டுமல்ல பூர்ணிமாவின் வீட்டிலும் நிறைய பேர் அழைத்திருந்தனர்.

ஆரவாரமாக மகிழ்ச்சியாக இனிதே நிறைவடைந்தது. திருமணம் மட்டும் மூன்று மாதங்கள் கழித்து செய்வதாக முடிவு செய்திருந்தனர்.

இதுகூட பரத்தின் யோசனைதான்.. துவங்கப் போகும் பிசினஸிற்காக இந்த இடைவெளி அவனுக்குத் தேவைப்பட்டது.

பிசினஸில் ஓரளவிற்கு வருமானம் வந்த பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தான்.

பெண் வீட்டிற்கும் கூட திருமணத்திற்கு இந்த நாட்கள் தேவைப்பட்டது. கொஞ்சம் நிதானமாக பரபரப்பு இல்லாமல் பார்த்து செய்து கொடுக்கலாமே…

அங்கே பூர்ணிமா வீட்டில் அவள் மட்டும்தான்.. கூடப்பிறந்தவர்கள் என்று யாரும் கிடையாது. ஒரே மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று அவர்கள் ஏற்கனவே முடிவு செய்து இருந்தனர்.

இருப்பதிலேயே பெஸ்ட் திருமண மண்டபம்..உணவு கூட பெஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தனர்.

சொந்தம் பந்தம் என்று இருப்பவர்கள் அனைவரையுமே அழைக்க வேண்டும்.இப்படி நிறைய கனவு அவர்களது பக்கம் இருந்தது. அதனால் இவர்கள் கேட்ட அந்த மூன்று மாதம் அவர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியை தந்தது.

இங்கே பரத் தன்னுடைய கனவு வேலையை உருவாக்க மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான்.

ஏற்கனவே நீண்ட நாட்களுக்கு முன்பாக ஐம்பது சென்ட் இடம் போல கோவையின் அவுட்டர் பகுதியில் வாங்கிப் போட்டிருந்தார் பரத்தின் தந்தை.

அந்த இடத்தில் தன்னுடைய பேட்டரியை உருவாக்க அதற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வேலையை துவங்கி இருந்தான் பரத்.

பதினைந்து நாட்களுக்கும் மேலாக நடந்து கொண்டிருந்தது இவர்களது ஃபேக்டரி உருவாக்கும் பணி...பெரிய பெரிய இரும்பு உபகரணங்களைக் கொண்டு உருவாக்கிக் கொண்டிருந்தான்.

அதே நேரத்தில் ஆபீஸ் ரூம்பை பாக்டரியின் முன்புறத்தில் அமைத்துக் கொண்டிருந்தான்.வேக வேகமாக வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தான் பரத். நஷ்டம் என்பது எப்போதும் வந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான்.

ஏனென்றால் பணம் பத்தவில்லை என்று கிட்டத்தட்ட பாதி நகைக்கும் மேல் நித்யஸ்ரீ நகையை வாங்கி இருந்தான்.

நித்யஸ்ரீ மிகமிக மகிழ்ச்சியாக கொடுத்திருந்தால் என்றாலும் தாயாருக்கு துளியும் விருப்பம் கிடையாது.

பெண்ணின் திருமணத்திற்காக வாங்கி இருக்கும் நகைகளை பிசினஸில் போடுவது துளியும் விருப்பம் கிடையாது. ஆனாலும் பரத்தின் ஆசை இது எனும்போது மறுத்து கூறவும் முடியவில்லை.

முதலில் பரத் நினைப்பதை விடவும் பணம் அளவுக்கதிகமாக இன்னும் தேவை இருந்தது. நிச்சயமாக வேலை துவங்கிய உடன் சில மாதங்களிலேயே பணத்தை திரும்ப பெற்றுவிடலாம். அந்த அளவிற்கு தோல்வி என்ற பயமில்லாத தொழில் அது.

திரும்பிப் பார்ப்பதற்குள் நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இப்போது இரண்டு மாதம் முடிவடைந்திருந்தது. இந்த இரண்டு மாதத்தில் பரத்தின் வாழ்க்கையில் நிறைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது.

அத்தனை வேலைகளுக்கு நடுவிலும் பூர்ணிமாவிடம் தினமும் பேசுவதை வழக்கத்தில் வைத்திருந்தான். எதிர்காலம் பூர்ணிமாவோடு எனும்போது அவளிடம் மறைக்க தன்னிடம் எதுவும் இல்லை என்பது இவனுடைய கருத்து.

என்னென்ன செய்கிறான் செய்து கொண்டிருக்கிறான் எல்லாவற்றையும் அவளிடம் கூறிக் கொண்டிருந்தான்.

இடையில் மூன்று முறை பூர்ணிமாவை நேரில் சென்று சந்தித்து விட்டு வந்திருந்தான். பூர்ணிமாவும் இன்ஜினியரிங் படித்து இருந்ததாள்.இவன் செய்யும் ஒவ்வொன்றுமே அவளுக்கும் எளிதாக புரிந்து இருந்தது.

பரத் அத்தோடு விட்டுவிடவில்லை. நித்யஸ்ரீயை தினமும் மாலையில் தான் செய்து கொண்டிருக்கும் வேலையை அவளை அழைத்துக் கொண்டு அங்கே சென்று ஒவ்வொன்றையும் அவளிடம் விளக்கமாக கூறிக்கொண்டிருந்தான்.

"அண்ணா இதெல்லாம் எதுக்கு ணா எனக்கு இதெல்லாம் தேவையே இல்லை இது உனக்கு பிடிச்ச தொழில் இதை நீ மட்டும் பாரு ..எதற்காக என்கிட்ட இதையெல்லாம் விளக்கமா சொல்லிக்கிட்டு இருக்குற…"

"நித்து எது எப்படியாக இருந்தாலும் சரி இந்த வேலைக்கு பார்ட்னர் நீயும் தான்.. அதனால நான் செய்யற ஒவ்வொன்றையும் நீயும் தெரிஞ்சுக்கணும்".

"ஏன்ணா அம்மா ஏதாவது சொன்னாங்களா.. அதனாலதான் தேவையில்லாம என்ன இது போல வேலையில் இழுத்துக் கொண்டு இருக்கிறாயா.."

"அப்படி கிடையாது நித்து.. நான் முதல்ல யோசிக்கும் போதே இதை மட்டும் தான் நெனச்சேன். எனக்கு நீ எப்போதுமே என் பக்கத்துல இருக்கணும். உன்னை என்றைக்கும் தனியா விட்டுட மாட்டேன். அம்மா அப்பா கிட்ட கூட பேசியாச்சு. இது தொழில் பார்ட்னர் நீ மட்டும் தான். லாபமோ நஷ்டமோ நீயும் நானும் தான் பார்க்கணும்."

"அண்ணா.."

"என்றைக்கும் நஷ்டம் வராது நித்து... லாபம் மட்டும் தான் வரும் எனக்கு என் மேல நிறைய நம்பிக்கை இருக்கு அதே மாதிரிதான் நீயும் என நம்பலாம்.."

"அதுக்கு இல்லன்னா உழைப்பை எல்லாம் நீ போட்டுட்டு வேடிக்கை பார்க்கிற எனக்கு பார்ட்னர்ஷிப்பா சிரிக்க வைக்காத.. எனக்கு என் அண்ணா மட்டும் போதும்.."

"அப்படி கிடையாது நித்து... என்னோட குட்டி தங்கச்சி நீ.. எப்பவுமே என் கூட தான் இருக்கணும்.. இந்த தேவதை கை தொட்டா மட்டும்தான் என்னோட இந்தத் தொழில் விருத்தி அடையும்.."

"இதெல்லாம் ரொம்ப அதிகம் ணா.. தயவுசெய்து வேற யார்கிட்டயும் இது எல்லாம் உளரி வச்சுக்கிட்டு இருக்காத..
அண்ணிகிட்ட இதைப்பற்றி ஏதாவது கேட்டியா அவங்களோட ஒப்பீனியனை கேட்டுக்கோ ணா."

"இது என்னோட சொந்த உழைப்பினால் தொடங்கப் போகிற பிஸினஸ் நித்து... இதை யார் கிட்டையும் கேட்க வேண்டிய அவசியமே எனக்கு கிடையாது. அப்பா அம்மா கிட்ட கூட இந்த விஷயத்தை நான் சொல்லல.. முதல் முதல்ல உன் கிட்ட தான் சொல்லியிருக்கிறேன். நீ இதற்கு மாட்டேன்னு எதுவும் சொல்லக்கூடாது."

"அண்ணா... என்னவோ செய் போ ஆனால் ப்ளீஸ் தயவுசெய்து என்ன இங்க கூப்பிடாத.."

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நித்து... இந்த நடக்கற ஒவ்வொரு வேலையும் உனக்கு தெரியணும். ஒவ்வொரு பிசினஸ் ஆர்டர் கூட நீ தான் முன்னாடி நின்னு செய்து தரனும். நீ வேற நான் வேற கிடையாது. எப்பவுமே இதனை மறக்கக்கூடாது நித்யஸ்ரீ.."

"அண்ணா நான் இப்பதான் படிச்சுக்கிட்டு இருக்கிறேன்.. அதுக்குள்ள எதுக்காக இதுபோல பொறுப்பை எல்லாம் என்கிட்ட தர்ற"

"ஆனா நீ நல்ல திறமைசாலி.. இங்க நடக்கிற எல்லா வேலையும் உனக்கு நான் கற்று தருவேன். நீ எல்லா வேலைகளையும் தெரிஞ்சுக்கணும். சொந்தமா சுயமா நிக்கணும். பொண்ணு அப்படின்னு எந்த இடத்திலேயும் தயங்கி நிற்கவே கூடாது. வீட்ல அப்பா எப்படி உனக்கு எல்லா விதத்திலயும் சம உரிமை கொடுக்கிறார்களோ அதே மாதிரிதான் பிசினஸ்லயும் எல்லா உரிமையும் உனக்கு உண்டு. பாதி ஷேர்ஸ் உன் பேர்ல தான் எடுக்க போறேன்."

"என்னவோ செய் ணா நான் எதுவும் கேட்க மாட்டேன்.. எனக்கு நீ முக்கியம் அப்புறம் வரப்போற அண்ணி..என்ன சொல்லுறியோ அதை நான் அப்படியே செய்வேன். எப்பவும் மறுத்துப் பேச மாட்டேன் உனக்கு தெரியுமே அண்ணா.. எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும். நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன் ணா."

"அது எனக்கு எப்பவுமே தெரியும் நித்து... காலேஜ் எப்படி போகுது. உன்னோட ப்ரெண்ட் எப்படி இருக்கிறான். அவன் ரொம்ப நல்ல பையன் இல்லையா.."

"செமையா போகுதே ணா.. அவன் ரொம்ப நல்லா இருக்கிறான்.. முன்னாடி மாதிரி எல்லாம் இல்ல ணா இப்ப அவனுக்கு நிறைய கோபம் வருது. அவன் கோபப்படும் போது எல்லாம் நான் உதாரணத்துக்கு உன்னை தான் சொல்லுவேன். எங்கண்ணா எவ்வளவு பொறுமையா இருப்பாங்க தெரியுமா. நீ ஏன் இப்படி இருக்கிற உனக்கு ஏன் இத்தனை கோபம் வருது இப்படி எல்லாம் அவன கேட்டு கடுப்பேத்துவேன்."

"ரொம்ப நல்ல பையன் டா.. எவ்வளவு மரியாதையாக பேசுவான் தெரியுமா."

"நீதான் அவன பெருமையா பேசணும் கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது. பொறுமையும் கிடையாது அத்தனை கோவம் வருது அவனுக்கு.. இப்ப எதுக்கு நான் அதைப் பத்தி எல்லாம் பேசணும். நம்ம நம்ம வேலையை பார்க்கலாம். இந்த வாரம் கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க கடைக்கு போக போறோம். நம்ம அதை பத்தி பேசலாமா.."

"வாலு எதுக்கு இப்போ எங்கிட்ட வர.."

"இல்லன்னா இந்த பூர்ணிமா அண்ணிகிட்ட நீங்க அடிக்கடி பேசறதா எனக்கு ரகசிய தகவல் வந்தது உண்மைதானே... தினமுமே பேசுகிறாயாமாம். அப்படியா.."

"டேய் அடி வாங்க போற... பேச சொல்லி நம்பரை கொடுத்து விட்டு தெரியாத மாதிரி என்கிட்ட வந்து கேக்குறியா.."

"என்ன ணா நிச்சயம் பண்ண போயிட்டு பத்து நிமிஷம் அங்கே அண்ணிகிட்ட பேசினீங்க தானே... பேசிட்டு ஒரு போன் நம்பர் கூட வாங்காம வர்றீங்க... நான்தான் எங்க அண்ணா ரொம்ப ஜோவியல் டைப் பேச ஆரம்பிச்சா நல்ல பேசுவாங்கன்னு அவங்க கிட்ட சொன்னா அவங்க சிரிக்கிறாங்க.. இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட உங்க அண்ணா என்கிட்ட பேசல தெரியுமா அப்படின்னு.. அதுதான் நம்பர் குடுத்துட்டு வந்தேன்.. என்ன ணா இப்படி இருக்கிற.. இந்த காலத்துல பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க தெரியுமா...
பொண்ணு பேசாம இருந்தா கூட போன் பண்ணி பேசுறாங்க நீ என்னடான்னா…"

"அதுதான் பேச வெச்சிட்டல்ல அப்புறம் என்னடா.."

"சரி ணா வீட்டுக்கு கிளம்பலாம் வாங்க" என்று அழைத்து கொண்டு நகர்ந்தாள் நித்யஸ்ரீ .அனைவருமே திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தனர்.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”