காதல்_10

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_10

Post by Rajeswari.d »

10
திருமணத்திற்கு சரியாக பதினான்கு நாட்களுக்கு முன்னால் பரத்தின் பேக்ட்டரி ஓபன் செய்யப்பட்டது.

பூர்ணிமாவின் குடும்பத்தில் உள்ள எல்லோருமே வந்து கலந்து கொண்டனர். நித்யஸ்ரீக்கு பயங்கர மகிழ்ச்சி.. அழகு தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தாள்.

பூர்ணிமா வந்த நேரத்தில் இருந்து அவளை விட்டு எங்குமே நகரவில்லை நித்யஸ்ரீ. பூர்ணிமாவும் இவளை தன்னோடு கூடவே வைத்துக் கொண்டாள்.

நாத்தனார் என்பதையும் தாண்டி பூர்ணிமாவின் குட்டி தங்கை போல அவளிடம் இயல்பாக பேசிக்கொண்டிருந்தாள் நித்யஸ்ரீ.

பூர்ணிமாவிற்கும் கூட நித்யஸ்ரீயை அத்தனை பிடித்தது.. பரத்தை விடவும்..

பரத் கூட நித்யஸ்ரீயிடம் கூறியிருந்தான் "பூர்ணிமாவுக்கு என்ன விடவும் உன்னத்தான் ரொம்ப பிடிக்குது. ஒரு பக்கம் பாக்க சந்தோஷமாத்தான் இருக்குது. இன்னொரு பக்கம் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கு. பொண்ணுங்க ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்திடுவீங்க நான்காம் பாவம் இல்லையா.."

"என்ன இப்படி எல்லாம் பேசுற ணா அப்மடி எல்லாம் எதுவும் கிடையாது.. நீ இல்லாத நேரம் என்கூட பேசுவாங்க நீ வந்த பிறகு உன் கூட பேசுவாங்க.. எப்படி?"

"உன் கூட நல்ல விதமா இருந்தாலே போதும் நித்து எனக்கு அதுதான் வேணும்."

"அப்புறம் ஏன் அண்ணா உனக்கு பொறாமை வருது.."

"அடிப்பாவி என பார்த்தால் பொறாமை படறவன் மாதிரியா தெரியுது.."

"எங்க அண்ணா அப்படி கிடையாது எனக்கு நல்லா தெரியும். ஆனாலும் சில நேரம் பேசும் போது யோசிக்க வைக்கற ணா.."

அன்றைய நாளில் அதே துணிக்கடைக்கு குருவும் தன்னோடு குடும்பத்தினரோடு வந்து இருந்தான்.

நித்யஸ்ரீக்கு அவனைப் பார்க்கவும் அத்தனை சந்தோஷம்.. வேகமாக அவனுக்கு அருகில் சென்றவள் ."வாவ் சப்ரைஸ் இங்கே உன்னை எதிர்பார்க்கவே இல்லை.நாங்க கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க வந்திருக்கிறோம். உங்க வீட்ல யாரெல்லாம் வந்திருக்கிறீர்கள்.."

"நானும் அபியும் மட்டும் தான் வந்திருக்கிறோம்.. ஏன் கேக்குற நித்து…"

"சும்மாதான் உன்னை இந்த இடத்துல் பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்க்கலை".

"ஓகே நித்து போய் பார்த்து எடு.. நான் கிளம்புறேன்.."

"கொஞ்ச நேரம் இரேன் குரு.."

"ஏய் லேடிஸ் துணி இருக்கிற இடத்துல எனக்கு என்ன வேலை.. இதெல்லாம் சரி வராது. நான் இப்போது புறப்பட்டு விடுவேன்."

"ஓகே ஓகே நீ கிளம்பு..இப்ப அண்ணா உன்ன பாக்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க.. அண்ணா கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு கிளம்பு சரியா "என்று இவனை அழைத்துக்கொண்டு நகர்ந்தாள்.

"அண்ணா எங்க இருக்கிறாங்க நித்து.."

"அண்ணா மாடியில அவங்களுக்கு டிரஸ் செலக்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்."

"நித்யஸ்ரீ உங்க அண்ணிக்கு டிரஸ் எடுக்கும்போது அண்ணா கூட இருக்க வேண்டாமா.. ஏன் தனியா மாடிக்கு அனுப்பி வச்ச.."

"அண்ணிக்கு ஏற்கனவே எடுத்தாச்சு டா..அண்ணியும் அண்ணாவும் மாடியில அண்ணாவுக்கு செலக்ட் பண்ண போயிருக்காங்க.. நாங்க அங்கே இருந்தா நல்லா இருக்காதுன்னு இந்த பக்கம் வேடிக்கை பார்க்க வந்தேன். வந்தா நீ நிக்கற.. அபி எங்க இருக்கிறா அத முதல்ல சொல்லு…"

"அவ வேற செக்சன்லே இருக்கிறா. பாரு எனக்கு எடுக்க வந்த துணி கூட எடுத்தாச்சு.. தனியா பேச டைம் கொடுத்துட்டு வந்திருக்கிற.. இப்ப நான் போய் அவங்களை தொந்தரவு பண்ணனுமா.. அதுதான் கல்யாணத்துக்கு வருவேன் இல்லையா அப்போ வந்து பாத்துக்குறேன். சரி உனக்கு டிரஸ் எடுத்தாச்சா.. எந்த மாதிரி எடுத்த.."

"அண்ணனுக்கு கல்யாணம் இல்லையா அதனால…"

"அதனால…"

"பட்டு சாரி தான் எடுக்கணுமாம் அப்படின்னு சொல்லி அண்ணியோட கலரிலேயே ஒரு சாரி எடுத்துக் கொடுத்து இருக்கிறார்கள்… முதல் நாள் இரவு மண்டபத்தில் போடுறதுக்காக எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு டிரெஸ் எடுத்துட்டேன்..*

"நீ கலக்கு நித்து...ஓகே நான் புறப்படுகிறேன் கல்யாணத்துக்கு வந்து உன்னை பார்க்கிறேன்." என்று கூறிவிட்டு குரு புறப்பட்டு சென்றிருந்தான்.

திருமணத்திற்கு தன்னுடைய காலேஜில் இருந்த அனைவரையுமே அழைப்பு விடுத்த இருந்தாள் நித்யஸ்ரீ. பிரத்தியேகமாக அத்தனை பேரையும் அழைத்து இருக்க குருவை மட்டும் தனியாக ஸ்பெஷலாக வரச் சொல்லி இருந்தாள்.

அனைவருமே ஆர்வமாக எதிர்பார்த்த அந்தக் கல்யாணம் எந்த விதமான சலசலப்பும் இல்லாமல் இனிதாக நடந்து முடிந்திருந்தது.

பத்து நாட்களுக்கு பூர்ணிமா பரத் இருவரையுமே ஹனிமூனிற்காக மாலத்தீவு அனுப்பி வைத்திருந்தனர்.

இந்த இடத்தை செலக்ட் செய்தது கூட நித்யஸ்ரீ தான்.. நீண்ட நாட்களாக சொல்லிக் கொண்டிருந்தவள் கடைசியாக இவர்களை மட்டும் அனுப்பி வைத்திருந்தாள்.

கடைசி நிமிடம் வரைக்கும்மே இவளையும் கூட வர சொல்லி கேட்டுக் கொண்டிருந்தான் பரத்.

"ஹய்ய ஹனிமூனுக்கு போறவங்க கூட நான் எதுக்காக தொந்தரவுக்கு கூட வரணும் அதெல்லாம் தப்பு ப்ரோ.. இன்னொரு நாள் போகலாம்.. இப்போ நீ போய் எல்லா இடத்தையும் சுத்தி பார்த்துட்டு வந்திடு...அடுத்த முறை என்னை அழைச்சுட்டுப் போகும்போது எல்லா இடத்தையும் பார்க்கணும் இல்லையா.. "இப்படிப் பலவாறாகச் சொல்லி அனுப்பி வைத்திருந்தாள்.

"அண்ணா அங்க இருக்கிற அழகான இடத்தை எல்லாம் தினமும் போனில் போட்டோ எடுத்து அனுப்பவும். ஹனிமூனுக்கு தான் அனுப்பி வெச்சாங்க அப்படின்னு ரூம்லேயே இருந்திடக் கூடாது.. "இப்படி சொல்ல பரத் அவளுடைய காதை பிடித்து திருகினாள்.

"சின்ன பொண்ணு போனா போகட்டும் என்று பார்த்தா இப்படி எல்லாம் பேசுற நீ. நான் உன்னோட அண்ணன் தெரியுமா.."

"ப்ரோ உன்னை என்றைக்கு நான் அண்ணனா பார்த்தேன்... எனக்கு நீ தான் பெஸ்ட் பிரண்ட்.. பெஸ்ட் பிரெண்டை எப்படி வேணும்னாலும் கலாய்க்கலாம்.. ஓவரா பேசினால் இன்னும் நிறைய பேசுவேன்."

"தெய்வமே விட்டுடு நான் கிளம்புறேன். உனக்கு தினமும் போட்டோ தானே வேணும் தினமும் மறக்காமல் போட்டோ எடுத்து அப்லோட் பண்ணி விடுறேன். வாட்ஸப் நம்பருக்கு ஓகேவா.. "என்று கூறி புறப்பட்டு சென்று இருந்தான்.

இத்தனை நாள் இல்லாமல் காலேஜிற்கு நித்யஸ்ரீ வர முதல் முதலாக குருவோடு அன்றைக்கு சண்டை வந்திருந்தது.

இப்போது எல்லாம் நித்யஸ்ரீ குருவைத் தவிர காலேஜில் வேறு யாரிடம் பேசினாலும் அவனுக்கு சுத்தமாக பிடிப்பது கிடையாது.

பேச ஆரம்பித்தாள் என்றாலே அவளை இழுத்துக் கொண்டு வருவதை வழக்கத்தில் வைத்திருந்தான்.

அன்றைக்கு கூட நித்தியஸ்ரீயிடம் காலேஜ் நண்பன் ஒருவன் எதையோ கேட்க இவள்அவனோடு புறப்பட தயாராக இருப்பதைப் பார்த்து பிடித்து இழுத்து வந்து இருந்தான்..

இது கொஞ்சம் நித்யஸ்ரீயின் கோபத்தை தூண்டி இருந்தது. "உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. ஏன் குரு இப்படி நடந்துகொள்கிறாய்..
இப்ப எதுக்காக என்ன அங்கே இருந்து எடுத்துட்டு வந்த.. இது காலேஜ் குரு. இங்கே எனக்கு எல்லாருமே பிரண்ட்ஸ்.. உன்ன மாதிரி தான் இங்கே இருக்குற எல்லாருமே.. நீ என்னதான் உன் மனசுல நெனச்சிகிட்டு இருக்குற.. நீ முன்னாடி மாதிரி கிடையாது.. நீ தயவு செய்து என்கிட்ட எதுவும் பேசாத" என்று கோபமாக அவனிடம் கூறி விட்டு வெளியேறினாள் நித்யஸ்ரீ.

உடனே எல்லாம் வீட்டுக்கு சென்று விட வில்லை. நேராக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவள் பின்னோடு வந்த குருவும் இன்னொரு ஓரத்தில் அமர்ந்து இருந்தான்.

இரண்டு பேருக்கு நடுவிலும் பேச்சு என்பது துளிகூட கிடையாது. எங்கேயோ பார்த்தபடி ஒருபுறமாக நித்யஸ்ரீ அமர்ந்திருக்க அவளது முகத்தைப் பார்த்தபடி குரு அமர்ந்து இருந்தான்.

என்றும் இல்லாமல் இன்று அபி அவர்களைத் தேடி வந்து இருந்தாள்.
இருவரையுமே பார்த்தவள் வேகமாக அவர்களுக்கு அருகே வர.. வந்த சில நிமிடங்களிலேயே புரிந்து விட்டது. இரண்டு பேரும் ஏதோ ஒரு வித கோபத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்று..

"ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை.. நேற்று வரைக்கும் நல்லாதானே இருந்தீங்க. இப்ப ஏன் ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு திசைக்கு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்."

"அபி உன்னோட அத்தை பையனுக்கு என்ன பிரச்சனைன்னு கேளு.. வர வர அவன் நடந்து கொள்வது கொஞ்சம் கூட நல்லா இல்லை".

"என்ன குரு என்ன ஆச்சு.. நித்யஸ்ரீ கிட்ட சண்டை போட்டியா என்ன.. எப்போதும் இவ்வளவு கோபமா அவளை நான் பார்த்ததே இல்லை. பெரும்பாலும் அமைதியா போற பொண்ணு என்னடா சொன்ன... "என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

குரு அவளுக்கு பதில் எதுவும் கூறவில்லை.. எங்கேயோ வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

"இது சரிவராது நித்யஸ்ரீ நீயும் சொல்ல மாட்ட.. அவனும் சொல்ல மாட்டான்.. நான் என்ன செய்யறது நடுவுல உட்கார்ந்து ரெண்டு பேரோட முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருக்கிறதா.."

"இந்த குரு முன்ன மாதிரி இல்ல அபி.. எப்ப பாரு இவன் செய்யறது எதுவுமே எனக்கு பிடிக்கல.. சின்ன வயசிலிருந்து இவனை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் தானே.. முன்னாடி எல்லாம் அவன் இது போல இல்லை."

"என்ன ஆச்சு நித்யஸ்ரீ என்ன செஞ்சான் அப்படி.. மறுபடியும் யார்கிட்டயாவது சண்டை போட்டானா.."

"கிளாஸ்ல இருக்குற எந்த பசங்ககிட்டேயும் பேசவிடறது கிடையாது.. பசங்க மட்டும் இல்ல பொண்ணுங்க கிட்டயும் தான்.. எப்பவும் இவன்கிட்ட மட்டுமே பேசனும்னு எதிர்பார்க்கிறான்.. சின்ன வயதிலிருந்தே இவன தெரியும். இவனோட குணம் எல்லாம் அத்துப்படி அதுவும் எனக்கு தெரியும்.

ஆனா ஏன் இப்ப எல்லாம் இப்படி நடந்தது என்று எனக்கு புரியவில்லை. யாருகிட்டயும் பேச கூடாதுன்னு எப்படி அபி. விட்டா இவன் உன் கிட்ட கூட பேச வேண்டாம்னு சொல்லுவான் அந்த மாதிரி ஒரு பொசசிவ்னஸ் என்ன செய்ய? இவனுக்கு என்ன சொல்லிப் புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல.."

"இதுதான் காரணமா... என்ன குரு ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிற.. நித்தியஸ்ரீ இந்த ஒரு தடவை இவனை பாவம் பார்த்து விட்டுடு..இவன் அப்படி எல்லாம் கிடையாது. குரு கிளம்பலாமா.. உன்னோட வண்டியில அழைச்சுட்டு போறியா இல்ல கேப்ஸ் புக் பண்ணிக்கவா.."

ம்.. போகலாம் என்று எழுந்து கொண்டவன் நித்யஸ்ரீயை பார்த்து சாரி நித்து வெரி சாரி.. இனிமே இது மாதிரி எல்லாம் நடக்காது. ஸாரி என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அவனுடைய டூவீலர் நிற்கும் இடம் வரைக்கும் கூடவே நடந்து வந்த அபிநயா "என்ன குரு இப்படியெல்லாம் நடந்துக்கிற... உனக்கு நித்யஸ்ரீ யை பிடிக்கும்னு எனக்கு தெரியும். ஆனா இந்த அளவுக்குனு எனக்கு தெரியாது. அவள் மத்தவங்க கிட்ட பேசறது உனக்கு பிடிக்கலையா.. உண்மையை சொல்லு நீ அவள விரும்புகிறாயா.. "நேரடியாக மனதில் தோன்றிய சந்தேகத்தை கேட்டிருந்தாள் அபிநயா.

"உனக்கு ஏன் இப்படி எல்லாம் சந்தேகம் வருது அதெல்லாம் ஒன்றுமில்லை. இங்கே வேறு ஒரு பிரச்சினை. அவ பேசினா அந்த பையன் சரி கிடையாது. அதனால்தான் அவளை அங்கிருந்து இழுத்துட்டு வந்தேன்".

"ஆனால் எனக்கு என்னவோ நான் சொன்னது தான் சரின்னு தோணுது. உன்னோட நடவடிக்கையில் நிறைய மாற்றம் தெரிந்தது. அதுவும் சமீப காலமா.. நானும் உன்னை கவனிச்சுக்கிட்டு தான் வர்றேன். இல்லன்னு பொய் சொல்லாத குரு".

"அப்படியெல்லாம் எதுவுமில்லை சொன்ன புரியுதா இல்லையா.. என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது. அவ எனக்குப் ப்ரெண்ட் மட்டும்தான்.. இப்ப மட்டும் இல்லை எப்பவும்.."

"இப்ப எதுக்குடா உனக்கு அவ்வளவு கோபம் வருது.. நான் என்ன கேட்டேன் உன் கிட்ட.. லவ் பண்றேனா ஆமாம்னு சொல்லு இல்லைனா இல்லைனு சொல்லு. அதுக்கு எதுக்கு இப்போ என்கிட்ட மூஞ்ச காட்டுற. வண்டியை எடு போலாம்.."

வண்டியை ஸ்டார்ட் செய்து அவன் அமைதியாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். அவனது மனதை அவனிடம் கேள்வி கேட்டது. ஒரு பார்வையில் அபிநயாவால் எப்படி தன்னுடைய மனதில் உள்ளதை கண்டு கொள்ள முடிந்தது. அந்த அளவிற்கா மனம் நினைத்தது முகத்தில் தெரிகிறது இப்படி நினைத்துக் கொண்டே வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான் குரு.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”