காதல்- | |

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்- | |

Post by Rajeswari.d »

11
அன்றைய நாள் கோபமாக முடிந்திருந்தாலும் அடுத்த நாளே எல்லாவற்றையும் மறந்துவிட்டு நித்யஸ்ரீ அவனிடம் எப்போதும் போல இயல்பாக பேச ஆரம்பித்திருந்தாள்.

"டேய் குரு மதியம் லஞ்ச்க்கு கேன்டீன் தான் போகணும் நீ என் கூட வருவியா வரமாட்டியா.." என்று அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நேற்று சண்டை எல்லாமே நேற்றோடு முடிந்திருந்தது. ஆரம்பத்திலிருந்தே இருவரும் இப்படித்தான். எவ்வளவு பெரிய சண்டை வந்து இருந்தாலும் அடுத்த நாள் சம்பந்தப்பட்டவர்கள் எதுவுமே நடக்காதது போல வழக்கம் போல பேசிக் கொள்ள வேண்டும் இது சிறு வயதிலிருந்தே இருவரும் பேசிக் கொண்டது.

இதோ காலையில் குரு வழக்கம் போல எப்போதும் அமரும் அவனுடைய இடத்தில் அமர்ந்திருக்க நித்யஸ்ரீ தான் அவனுக்கு அருகில் வந்து பேச்சுக் கொடுத்தது.

அவள் பேச ஆரம்பிக்கும்போதே குருவின் உதட்டில் சிறு புன்னகையுடன் கொண்டது.

வேண்டாம் நான் வரலை தேவை இல்லாமல் மறுபடியும் நமக்குல்ல சண்டை வேண்டாம்."

"அதுதான் நேத்து நீ சாரி சொல்லிட்ட இல்லையா அப்புறம் எதுக்காக அதையே நான் பிடிச்சுட்டு தொங்கனும்.. நெஜமாகவே உன்கிட்ட பேசாட்டி எனக்கு என்னவோ போல இருக்குது குரு. அதனால ப்ளீஸ் நேத்து நடந்ததை நம்ம ரெண்டு பேரும் மறந்திடலாம்." இப்படி ஆரம்பிக்கும் போது அவனால் எத்தனை நேரம் கோபத்தை பிடித்து வைத்திருக்க முடியும். அவளுமே வழக்கம் போல பேச ஆரம்பித்திருந்தாள்.

மதியம் லஞ்ச் நேரம் வரவே இவனை இழுத்துக்கொண்டு நகர்ந்தாள் நித்யஸ்ரீ.. அவள் இழுத்த இழுப்பிற்கு கூடவே வந்தவன் "அண்ணா ஊர்ல இருந்து வந்தாச்சா" என்று கேட்டான்.

"பரத் அண்ணாவையா கேட்கற.."

"ஆமாம் ஊரில் இருந்து வந்துட்டாங்களா பிஸினஸ் எப்படி போய்கிட்டு இருக்கு.."

"அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சு இருபது நாள் பக்கமாக போகுது. அண்ணா போன வாரமே வந்துட்டாங்க. பிசினஸ் ரொம்ப நல்லா போயிட்டு இருக்குது. இது வேணும்னா கரெக்டா எனக்கு தெரியும். நான் தான் தினமுமே அங்கே ஆபிசுக்கு போயிட்டு தான் வீட்டுக்கு போறேன்."

"ஏன் ஆஃபீஸ்க்கு போகணும் உங்க அண்ணாவே ஆபீஸ் வேலையை பார்த்துக்கலாம் இல்லையா.. நீ ஏன் போகணும் அங்கே எல்லாம்..")

"நீ எதுக்காக உங்க அப்பாவோட கடைக்கு போகிறே.. நீ எங்கேயும் போக வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் எதற்காக போகிற உனக்கு தான் அண்ணா ரெண்டு பேர் இருக்காங்க தான.. அப்புறம் நீ ஏன் போறே.. இன்னும் அப்பா பெரியப்பா அத்தனை பேரும் அங்க தான் இருக்கிறார்கள்.. அப்புறம் ஏன் போற…"

"இதென்ன கேள்வி நித்யஸ்ரீ.. நான் போனா அவுங்களுக்கு நிறையா ஹெல்ப் பண்ண முடியும்.. அதற்காகத்தான் அங்க போகிறேன்".

"அதே உதவியை நான் எங்க அண்ணனுக்கு செய்ய மாட்டேனா.. நான் படிக்கிறது இன்ஜினியரிங்.. அது சம்பந்தமான வேலை தான் அங்க ஃபேக்டரியிலேயும் நடக்குது.. அப்புறம் நான் போகாம வேற யார் போவாங்க…
அண்ணா போட ஃபேக்டரியில் எனக்கும் பங்கு இருக்கு உனக்கு தெரியுமா.."

"ஆண்கள் செய்யுற வேலையை எதற்காக பொண்ணு நீ போய் செய்யணும்.."

"குரு நீ என்ன சொல்ல வர்ற.. எப்படி பொண்ணுங்க எந்த வேலையும் செய்யக் கூடாதா.. இதுதான் நீ என்கிட்ட கேக்க வர்றீயா.."

"அப்படி இல்ல நித்யஸ்ரீ.."

"வேற எப்படி? இன்னொரு முறை இது போல எதுவும் பேசாத.. அப்படி பேசினா உன்கிட்ட நான் பேசுறது இதுதான் கடைசியாக இருக்கும்."

"இது சின்ன விஷயம் இதற்கு ஏன் இவ்வளவு கோபம் வருது."

"போதும் குரு எது சின்ன விஷயம்... ஆண்கள் மட்டும் தான் பிசினஸ் பார்க்கணுமா.. பொண்ணுங்க பார்க்கக் கூடாதா.. உனக்கு தெரியாது எங்க அண்ணா தொடங்கும்போதே நீயும் அதுல பார்ட்னர்னு சொல்லிதான் பிசினஸ் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நான் அதை எல்லாம் தெரிஞ்சுக்க வேணும் தானே.."

"வேண்டாம் நித்யஸ்ரீ நான் சொல்ல வருவது உனக்கு புரியல.."

"என்ன புரியலை எல்லாம் புரியுது.. உனக்கு உன் வீட்டு பொண்ணுங்களை எல்லாம் வீட்டுக்குள்ளேயே வச்சிருக்கிறது போல எல்லாரும் இருக்கணும்னு பார்க்கிற.. ஆனா எங்க வீட்ல அப்படிக் கிடையாது. எல்லா வேலையையும் ரெண்டுபேரும் செய்யணும்னு தான் எதிர்பார்ப்பார்கள். இன்றைக்கு நேத்து இல்ல சின்ன வயசுல இருந்தே அப்படித்தான்."

"ஏய் போதும்டி தெரியாத்தனமா உன்கிட்ட சொல்லிட்டேன். நீ இங்க இருந்து அங்க பேட்டரிக்கும் போயி சிரமப்படறையே என்று கேட்டேன்.. படிப்பு முடியற வரைக்குமாவது கொஞ்சம் ஃப்ரீயா இருப்பேன்னு பார்த்தேன் சொன்னது தப்புதான் மன்னிச்சுடு.. "சொல்லி விட்டு நடந்து சென்றான் குரு.

வேகமாக அவனது கரத்தைப் பற்றி நிறுத்தினால் நித்யஸ்ரீ." என்ன விளையாடுறியா சாப்பாட தானே வந்தோம். நீ பாட்டுக்கு கோபமா புறப்பட்டு போனா என்ன அர்த்தம். நீ பேசறது சிலநேரம் எனக்கு பிடிக்கல தான். அதுகாக மூஞ்சிய திருப்பிக்கொண்டு போவியா. ஒழுங்கா இங்க உட்காரு".

"என்ன வேணும் நான் போய் வாங்கிட்டு வரேன். உங்கூட சாப்பிடறதுக்கு கூட்டத்துக்கு பதிலா நான் அபிய கூப்பிட்டு இருக்கலாம். நிம்மதியா சாப்பிட்டு இருப்பேன்."

"அப்புறம் ஏன் என்ன அழைத்த... போ போய் அவ கூடவே சேர்ந்து சாப்பிடு எனக்கு ஒன்னும் எந்த பிரச்சினையும் கிடையாது."

"குரு ப்ளீஸ் குரு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்காத... இப்ப எல்லாம் உன் கிட்ட பேசுறதுக்கு பயமா இருக்கு. எப்படி பேசினாலும் கடைசியில் சண்டையில் தான் முடியுது."

"அதுதான் நானும் கேட்கிறேன். எதுக்கு பேசனும். என்கிட்ட பேசாத நித்து.. அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது என்று நினைக்கிறேன்.*

"கொன்னுடுவேன் டா என்னோட பொறுமைக்கும் ஒரு அளவு தான் இருக்கு. உட்காரு சாப்பிட வாங்கிட்டு வர்றேன். சாப்பிட்ட பிறகு பேசிக்கலாம்."

எதுவுமே சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் குரு. அவனை முறைத்தபடியே சென்று உணவை வாங்கிக் கொண்டு வந்தாள் நித்யஸ்ரீ.

அவனுக்கு எதிரில் இருந்த டேபிளில் வாங்கியதை கொண்டுவந்து வைக்க சாப்பிட எல்லாம் இல்லை. ஏதோ யோசனையில் வாங்கி வந்த உணவை ஸ்பூன் கொண்டு கிண்டி கொண்டிருந்தான் குரு.

"இப்ப என்ன தாண்டா உனக்கு பிரச்சனை.. சாப்பாட்டைப் பார்த்து சாப்பிடு குரு. அப்புறம் முக்கியமான விஷயம். தயவுசெய்து எங்க அண்ணாவை பற்றி இதுபோல இன்னொரு தடவ பேசாத.. என்ன பொறுத்தவரைக்கும் நான் அவங்களோட குட்டி தங்கச்சி மட்டுமல்ல ஏஞ்சல் மாதிரி... எங்க அண்ணா என்ன அந்த அளவுக்கு பார்த்துக்கறாங்க.."

"போதும்... உன்னோட அண்ணா புராணம்.. சின்ன வயசுல இருந்து கேட்டு கேட்டு... கேட்டு கேட்டு எனக்கு சலிப்பா இருக்கு. உங்க அண்ணாவுக்கு உன் மேல பாசம் அதிகம். கல்யாணத்துக்கு பிறகு கூட அது அப்படியே இருந்தால் எனக்கு சந்தோஷம்தான். இங்கேயே நிறைய அசைன்மென்ட் படிக்க நிறைய தர்றாங்க.. அங்கே மறுபடியும் பேக்டரிக்கு போறாலே அப்படிங்கற நல்ல எண்ணத்தில் கேட்டுட்டேன் இனிமே உன்ன பத்தி எதுவும் கேட்க மாட்டேன் போதுமா…"

"உன்ன உரிமையோட கேட்க வேண்டான்னு யார் சொன்னாங்க.. கேட்ட விதம் தப்பு குரு அதை தான் சொல்லறேன். என்னவோ பொண்ணுங்க ஃபேக்டரி வேலையை செய்யக் கூடாது. வீட்டைப் பார்த்துக்கறதுக்குத் தான் பிறந்திருக்கிறார்கள் அத மாதிரி நீ சொன்னதால எனக்கு கோபம் வந்துருச்சு. சாரிடா.."

"இந்த சாரியே தேவையில்லாதது.. இனிமே உன்கிட்ட எதையுமே கேக்க மாட்டேன் போதுமா."

"மறுபடியும் கோபப்படற டா…"

"நான் இப்படி தான் எனக்கு சட்டு சட்டென்று கோபம் வரத்தான் செய்யும். இதுதான் நான் இப்படி தான் கடைசி வரைக்கும் இருப்பேன்."

"நான் உன்னை எதுவும் கேட்கல போதுமா இப்ப சாப்பிடு தயவு செய்து.."

அதற்குப் பிறகு இருவருக்கும் நடுவிலும் பேச்சு எதுவுமே இருக்கவில்லை. அமைதியாக உணவு உண்டு முடித்தனர்.

சாப்பிட்டுவிட்டு எழுந்து கை கழுவ நகர்கையில் முதல் முதலாக குரு அவளிடம் "ஐ லவ் யூ நித்து" என்று கூறினான்.

"ம்.. நானும் லவ் யூ லவ் யூ "என்று கூறிவிட்டு நகர போனாள். நித்யஸ்ரீ.. நித்யஸ்ரீக்கு அவன் கூறியது விளையாட்டுப் போலத் தோன்றியது. சிறு வயதிலிருந்தே கூடவே வந்ததினால் பெரியதாக எதுவும் தோன்றவில்லை.

ஆனால் குரு அவளது கையை எழுந்து அவளின் கையை பிடித்து நிறுத்தியிருந்தான்.

"நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல.. நான் சீரியஸா உன்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்கறேன். என் முகத்தைப் பார்த்து பதில் சொல்லு நித்து" என்று அவளிடம் கேட்டான் குரு.

இப்போதுதான் அவன் கூறியதில் அர்த்தம் முழுவதுமாக அவளுக்கு புரிய வர எழுந்து நின்றவள் அவனது முகத்தை பார்த்தபடியே மறுபடியும் முதலில் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

"என்ன சொல்ற நீ... இத்தனை நாள் இல்லாமல் என்ன திடீர்னு.. நான் இதெல்லாம் யோசித்தது கூட கிடையாது. எனக்கு உன்கிட்ட என்ன பேசறதுன்னு கூட தெரியலை"என்று கூறியபடி அவனது முகத்தையே பார்த்தாள்.

"எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கு நித்யஸ்ரீ... நீ எனக்கு மட்டும்தான் அப்படின்னு எனக்கு தெரிஞ்சா மட்டும் கூட போதும். வேற யார் உன்கிட்ட பேசினாலும் எனக்கு கோபம் வருது. என்னால என்ன கண்ட்ரோல் பண்ணிக்க முடியலை. என் மேல எந்த தப்பும் இருப்பதாகவும் எனக்கு தெரியல. எந்த இடத்துல உன் மேல எனக்கு லவ் வந்துச்சுன்னும் தெரியல. தினம் தினம் இந்த கேள்வியை எனக்குள்ளே கேட்டு கேட்டு செத்துக் கொண்டிருக்கிறேன்.
என்னை மறுத்துடாத அப்படின்னு உன்கிட்ட கெஞ்ச மாட்டேன். ஆனா உன் மனசுல இருக்குறது என் கிட்ட சொல்லிடு நித்து."

"ப்ளீஸ் குரு இந்த நிமிஷம் இந்த பேச்சை இத்தோட விட்டுடு.. எனக்கு கொஞ்சம் டைம் கொடு. நான் யோசித்து உன் கிட்ட சொல்லுறேன். இந்த நிமிஷம் வரைக்கும் உன் மேல எனக்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாது. நீ எனக்கு நல்ல நண்பன் அதை மட்டும்தான் நெனச்சிகிட்டு இருக்குறேன்."

சற்று நேரம் அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவன் எழுந்து நகர்ந்தான். "யோசிச்சு உன்னோட பதில் சொன்னா போதும் நித்யஸ்ரீ. உன்ன நான் தொந்தரவு எல்லாம் செய்ய மாட்டேன்" என்று விட்டு சென்று விட்டான்.

முதல் முறையாக யோசிக்க ஆரம்பித்தாள் நித்யஸ்ரீ.இத்தனை நாளாக இவனை தெரிந்து இருந்தாலும் வாழ்க்கையில் இனி தொடர்ந்து வரப்போகிறான் என்ற கோணத்தில் எத்தனை யோசித்தாலும் குழப்பமே மிஞ்சியது.

அதன் பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்கு குருவை இவள் கண்களால் கூட பார்க்கவில்லை. காலேஜிற்கும் விடுப்பு எடுத்திருந்தான்.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”