காதல்_12

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_12

Post by Rajeswari.d »

12
இரண்டு நாட்கள் வேகமாக நகர்ந்து இருந்தது. குரு காலேஜுக்கு வரவில்லை. முதல் முதலாக அவனை தன்னையும் அறியாமல் தேட ஆரம்பித்தாள் நித்யஸ்ரீ.

அந்தத் தனிமை உணர்வு முதல் முதலாக அவளுக்கு என்னவோ போல இருந்தது. இத்தனை நாட்கள் கூடவே இருந்திருக்கிறான் தான் ஆனாலும் இன்றைய மனநிலையை போல எப்போதும் இவளுக்கு உண்டானது கிடையாது.

நிறைய குழப்பம் தோன்ற அடிக்கடி வழக்கமாக அவன் அமர்ந்திருக்கும் இடத்தை திரும்பிப் பார்த்தால் நித்யஸ்ரீ.

மாலை கல்லூரி விடவும் யோசிக்காமல் அவளுடைய அண்ணன் பரத்தை பார்க்க வேண்டி ஆபீஸிற்கு புறப்பட்டு இருந்தாள்.

வீட்டிற்கு முன்னதாக போனில் அழைத்து கூறியிருந்தாள்.. "அம்மா அண்ணாவோட ஆபீஸ்க்கு போகிறேன். நைட் அண்ணா கூட வீட்டுக்கு வந்துடறேன்" என்று..

இவள் அங்கே ஆபீஸுக்கு செல்லவும்மே பரத்திற்கு அத்தனை மகிழ்ச்சி.. "வா வா குட்டிமா நான் உன்ன தான் நினைச்சுட்டு இருந்தேன். என் மனசுக்குள்ள ஏதோ ஒரு இடத்தில் ஒரு பட்சி சொல்லிக் கிட்டு இருந்துச்சு. இன்றைக்கு நித்து குட்டி இங்க வருவ அப்படின்னு..அதே மாதிரி நடந்திருப்பது".

அப்படியா அண்ணா என்று லேசாக சிரித்தவள் அவன் கூடவே ஆபீஸ் அறைக்குள் நுழைந்தாள்.

"என்ன ரொம்ப அமைதியா இருக்கிற என்ன ஆச்சு "என்று கேட்டான் பரத்.

"கொஞ்சம் குழப்பம் அண்ணா உன்கிட்ட தான் சொல்யூசன் கேக்கலாம்னு வந்திருக்கிறேன். கேட்கவா?"

சொன்ன தனது தங்கையை திரும்பிப் பார்த்தான் பரத். அவளது முகம் அத்தனை குழப்பத்தில் இருந்தது அந்த நிமிடத்தில்..

"ஏன் உனக்கு இத்தனை குழப்பம் குட்டிமா.. ஒன்னு செய்யலாம் பத்து நிமிஷம் இங்கேயே உட்கார்ந்து இரு.. பின்னாடி குடோனுக்கு போய் செய்ய வேண்டிய வேலையை சொல்லிட்டு வந்துடறேன்.அதற்கு பிறகு பேசலாம் என்ன சொல்ற".

"சாரி ணா நான் தொந்தரவு பண்ணிடேனா.. நான் வேணும்னா கிளம்புறேன் இன்னொரு நாள் இது பற்றி பேசிக்கலாம்".

"லூசு... வெயிட் பண்ணு நானும் வந்துடறேன். பக்கத்தில எங்கேயாவது ரெஸ்டாரன்ட் போய் டின்னர் முடிச்சிட்டு ரெண்டு பேரும் வீட்டுக்கு போகலாம். அதுக்காகத்தான் சொன்னேன் புரியுதா. உட்காரு உனக்கு இல்லாத நேரமா குட்டிமா... உன்ன விடவும் எனக்கு எதுவுமே பெருசு கிடையாது."

"எனக்குத்தான் "தெரியுமே என்றபடி அங்கு இருந்த பேப்பரை எடுத்து புரட்ட ஆரம்பித்தாள் நித்யஸ்ரீ.

அடுத்த அரைமணி நேரத்தில் இவள் அருகே வந்து இருந்தான் பரத். "வா போகலாம் இந்த பக்கத்துல புது ஹோட்டல் ஒன்னு ஓபன் பண்ணி இருக்கிறார்கள் நாம அங்க போய் ஏதாவது சாப்பிட்டு பேசலாம் ஓகே வா."

"ஓகே டா" என்றபடி அவனோடு கூடவே நடந்தால் நித்யஸ்ரீ.

அங்கே ஹோட்டலில் சென்று அமர்ந்த பிறகும் கூட யோசனையோடு இருந்தாலே தவிர அண்ணனிடம் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

"என்ன ஆச்சு என்ன பிரச்சனை ஏன் இப்படி யோசிச்சுகிட்டு இருக்கிற.. ரெண்டு நாளா நானும் ஏன்ன கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன் பழைய சுறுசுறுப்பு உன்னோட முகத்தில் துளிகூட கிடையாது."

"சின்ன குழப்பம் ணா. எப்படி சரி பண்றதுன்னு எனக்கு தெரியல.. உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல அதான் யோசிச்சுக்கிட்டு இருக்கிறேன்."

"சொல்றதுக்கு யோசிக்கற அவ்வளவு பெரிய பிரச்சினையா என்ன உன்னோட ஃப்ரெண்டு இருக்கான்ல... குரு அவன் கிட்ட கேட்டால் சொல்லிடுவானே.."

"பிரச்சனையே அவன் தான்…"

"ஏண்டா அவன் உன்கிட்ட மறுபடியும் சண்டை போட்டனா அதனாலதான் முகத்தை இப்படி வெச்சுட்டு சுத்திக்கிட்டு இருக்கிறாயா.."

"அண்ணா நாங்க சண்டை போட்டா சமாதானமாகிடுவமே... இது வேற எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெரியலை "என்று சற்று நேரம் அமைதியாக தன்னுடைய விரல் கொண்டு தனக்கு முன்னால் இருந்த டேபிளை கிரி கொண்டிருந்தாள்.

பரத் அவளது முகத்தைப் பார்த்தானே தவிர என்ன என்று எல்லாம் கேட்கவில்லை. தன்னுடைய தங்கை நிறைய குழம்பி இருக்கிறாள் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. எப்படி தன்னிடம் நடந்ததை கூறி விடுவாள் என்பது தெரியும். அதனால் அவளது முகத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் வரை அமைதியாக இருந்தவள் பிறகு ஒரு முடிவுக்கு வந்தது போல தன்னுடைய அண்ணாவை நிமிர்ந்து பார்த்தாள் நித்யஸ்ரீ. "அண்ணா குரு என்ன விரும்புவதாக சொல்லி இருக்கிறான். எனக்கு அவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. பிரச்சனை இதுதான் வேற எதுவும் இல்லை."

"உன் மனசுக்கு என்ன தோணுது நித்யஸ்ரீ நான் அவன் உன்கிட்ட இப்படி சொல்லுவாங்க முன்னாடியே எதிர்பார்த்தேன் கடைசி தடவை உன்ன பார்க்கும்போது அவன் உன்னோட முகத்தை பார்த்ததில் இருந்து எனக்கு தோணுச்சு."

"என்னண்ணா சொல்லறே.."

"குரு உன்கிட்ட உன்ன பிடிச்சிருக்குன்னு சொல்வான்னு எனக்கு முன்னாடியே தெரியும். கடைசி தடவை உன்ன அவனோட பார்க்கும்போது எனக்கு தோணுச்சு."

"அண்ணா இப்ப நான் என்ன செய்யறது டா"..

"இதென்ன கேள்வி உன் மனசுக்கு என்ன தோணுது குருவை உனக்கு பிடிச்சிருக்கா.. அவன் கூட கடைசி வரைக்கும் நிம்மதியாக வாழ முடியும்னு உனக்கு தோணுதா.. நீ தான் எனக்கு பதில் சொல்லணும்."

"அவன் ரொம்ப கேரியிங் ணா... உனக்குதான் தெரியுமே சின்ன வயசுல இருந்தே அவன பார்த்துகிட்டே இருக்கறேன் எந்த இடத்திலேயும் அவன் என்ன விட்டுக் கொடுத்தது கிடையாது. ஆனால் சட்டென இப்படி வந்து சொல்லுவானு நான் நினைக்கவே இல்ல. ரெண்டு நாளாச்சு சொல்லிட்டு இன்னும் காலேஜுக்கு வரல. நானும் இன்னும் அவனுக்கு போன் பண்ணி எல்லாம் பேசலை.. இந்த ரெண்டு நாள்ல அவன் இல்லாதது எனக்கு ஒரு மாதிரியா இருக்குது ணா.. அதுதான் இந்த குழப்பத்தை உன்கிட்ட சொல்லி எனக்கு நல்ல தீர்வு கிடைக்கும்னு.. உன்ன.. உன்ன பார்க்க வந்தேன்."

"குட்டிமா நம்ம அம்மா அப்பா ரெண்டு பேருமே முற்போக்குவாதிகள். நிச்சயமா இந்த கல்யாணத்துக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்க மாட்டார்கள். அதே மாதிரிதான் குருவோட வீட்டுலயும் அப்படின்னா உனக்கு ரொம்ப அவனை பிடித்து இருக்குதுன்னா தயங்காமல் நீ ஓகே சொல்லலாம். இதுதான் என்னோட முடிவு. நானா இருந்தால் கூட அவனைப் போல ஒரு பொறுப்பான பையன் பார்க்க முடியாது."

"அப்படின்னா நான் அவனுக்கு ஓகே சொல்லிடவா ணா."

"தயங்காம உன்னோட சம்மதத்தை சொல்லிடு நல்ல நேரமா பார்க்க அம்மா அப்பா கிட்ட நான் பேசிக்கறேன் என்னோட குட்டிமா போட ஆசை எல்லாமே நிறைவேறிடும். நீ கவலையே படவேண்டாம் குரு தான் உனக்கு கணவனாக வருவான்.."

"சரி இனிமேயாவது சாப்பிடலாம் இல்லையா ஸ்வீட் வாங்கிட்டு வரேன். ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டு போகலாம் ஓகேவா. நான் குருவை பார்த்து பேசுறேன் சரியா. குழப்பத்தை எல்லாம் எடுத்து ஓரமா வச்சுட்டு. படிப்புல கவனம் செலுத்து. காதலிக்க பர்மிஷன் கொடுத்தாங்கன்னு இஷ்டத்துக்கு ஊர் சுற்றக் கூடாது."

"அண்ணா என்ன நீங்க நான் அப்படியெல்லாம் கிடையாது ணா. அவனோட விருப்பத்துக்கு சம்மதம் மட்டும் தான் சொல்லுவேன் அத தாண்டி நீ பயப்படற மாதிரி எதுவும் எதுவும் நடக்காது. நான் உன்னோட தங்கச்சி தெரியுமா."

"அது எனக்கு நல்லாவே தெரியுமே.. எவ்ளோ பெரிய டிசிஷன் அத கொஞ்சம் கூட யோசிக்காம அண்ணா கிட்ட வந்து சொல்யூஷன் கேட்கின்றனா நீ என் மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிற அந்த நம்பிக்கையே எப்பவும் நான் காப்பாற்றுவேன் குட்டிமா.."

"அண்ணா வந்து.."

"என்னடா சொல்லு.."

வீட்டில யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் ணா.. படிப்பு முடிஞ்ச பிறகு இந்த விஷயத்தை அம்மா அப்பா கிட்ட சொன்னா போதும். இப்பவே சொன்னா அம்மா அப்பா ரெண்டு பேருமே மனசுக்குள்ள வருத்தப்படுவார்கள்.. அவளுக்கு பிடிச்ச மாப்பிள்ளைய செலக்ட் பண்ணுற அளவுக்கு பெரிய பொண்ணு ஆகிட்டயா அப்படின்னு.."

"நானும் அதைத்தான் உன் கிட்ட சொல்லுறேன் குட்டிமா.. எங்கிட்ட சொன்னது மாதிரி அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் உளரி வைத்துவிடாதே.. நானே சமயம் பார்த்து நல்ல நேரமா உங்க விஷயத்தை நான் சொல்லி பர்மிஷன் வாங்கி தரேன்.
குரு வீட்ல எப்படி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வாங்களா.."

"அவங்களோடது கூட்டுக் குடும்பம்தான் பெரிய ஃபேமிலி.. இதுவரைக்கும் அவங்க வீட்டை பத்தி எதுவுமே கேட்டு தெரிஞ்சுகிட்டது கிடையாது. ஒன்னு ரெண்டு விஷயம் சொல்லியிருக்கிறான் ஆனால் அதைத்தாண்டி நானா எதுவும் கேட்டது கிடையாது. அனேகமா அவங்க வீட்டிலேயும் சம்மதம் சொல்லுவாங்க என்றுதான் நினைக்கிறேன். இல்லாட்டி என்கிட்ட வந்து கேட்டிருக்க மாட்டான் இல்லையா."

"சரிடா வீட்டுக்கு கிளம்பலாம்.. குட் நீயூஸ் என் கிட்ட சொன்னதால வீட்டுக்கு நிறைய ஸ்வீட் வாங்கிட்டு போகலாம்.
பூர்ணிமா கிட்ட கூட இந்த விஷயத்தை நான் சொல்ல மாட்டேன். நீயும் உளரி வைத்துவிடாதே ஏன்னா என்ன விடவும் நீதான் அண்ணிகிட்ட குளோஸா இருக்கிற.".

"ம் சரி ணா.. "என்றபடி புறப்பட்டாள் நித்யஸ்ரீ. அன்றைக்கு மிகமிக மகிழ்ச்சியாக இருந்தாள்.

இவளுடைய அண்ணா இவளுடைய காதலுக்கு தடை எதுவும் விதிக்கவில்லை. அதுவே பெரிய மகிழ்ச்சியை தந்திருந்தது. இத்தனை நாள் இல்லாமல் குருவை பற்றி நிறைய யோசிக்க ஆரம்பித்தாள் நித்யஸ்ரீ.

சிறு வயதில் முதன் முதலாக பார்த்ததில் இருந்து இன்று வரைக்கும் நடந்ததை அவளது மனம் அழகாக அசை போட்டது. எந்த இடத்தில் அவன் மேல் தனக்கு காதல் வந்தது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

எப்படி யோசித்தாலும் அவளுக்கு விடை மட்டும் கிடைக்கவே இல்லை. பிடிக்கும் மிக மிக அதிகமாக பிடிக்கும் அதைத்தாண்டி எதையுமே யோசிக்க முடியவில்லை இவளால்..

இவள் மற்ற பசங்களோடு பேசும் போது குருவிற்கு எப்படி கோபம் வந்தததோ அதேபோல குரு வேறு யாருடனும் அதிகமாக பேசிக் கொண்டிருந்தாலும் கூட சமயத்தில் இவளுக்கும் அவன் மேல் நிறைய கோபம் வந்து இருந்தது.

அதனுடைய அர்த்தம் எல்லாம் என்ன என்று இப்போது யோசித்துப் பார்க்க அவளது முகமே அன்று செவ்வானம் பூசிக் கொண்டது.

இத்தனை நாள் இல்லாமல் இனிமேல் அவனுடன் எப்படி பேசப் போகிறேன். பேச்சு முன்பைப் போல சரளமாக பேச வருமா..

அல்லது மரியாதையாக பேச வேண்டுமா எதுவுமே தெரியவில்லை. அடுத்த நாள் அவனது முகத்தை பார்க்கப் போகிறேன் என்ற நினைவு தோன்ற அந்த நிலையிலேயே கண் மூடினாள் நித்யஸ்ரீ.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”