காதல்_14

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_14

Post by Rajeswari.d »

14

அன்று மாலை வீட்டுக்கு வரும்போது பரத் மிகவும் சோர்வாக காணப்பட்டான். முதலில் அண்ணன் சோர்வை கண்டு கொண்டது ஸ்ரீ தான்..

"அண்ணா ஏன் ரொம்ப டல்லா தெரிகிறீர்கள் என்ன ஆச்சு வேலை அதிகமா ஆபீஸ்ல.."

*சோல்டர் ரொம்ப பெயினா தெரியுது குட்டிமா.. அதுதான் வலியோட சாயல் முகத்தில் காட்டுது போல இருக்கு.."

*ஏன் ணா ரொம்ப வலிக்குதா.. நீ முதல்ல சுடுதண்ணி வச்சு குளிச்சிட்டு வந்து அண்ணியை தைலம் போட்டு விடச் சொல்லு.."

"சரிடா நான் போயிட்டு வந்துடறேன் "என்றபடி தன்னுடைய அறையை நோக்கி நகர்ந்தான் பரத்.

இரவு உணவு உண்ண வரும் போதும் கூட பரத்தின் முகம் வாடியிருந்தது. என்ன ணா இன்னும் ரொம்ப வலிக்குதா என்ன?

"இப்ப கொஞ்சம் பரவா இல்ல டா லேசா வலிக்குது அவ்வளவுதான்."

"ஏன்னா அதிகமா வேலை இருக்குதா என்ன?"

இருவரும் பேசிக்கொண்டிருக்க பூர்ணிமா அமைதியாக இரவு உணவை இருவருக்கும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

"அண்ணி எனக்கு எடுத்து கொடுக்க வேண்டாம் நீங்களும் இப்படி வந்து உட்காருங்க.. சேர்ந்து சாப்பிடலாம்.."

"அத்தையும் மாமாவும் பக்கத்தில போயிருக்கிறார்கள்.. அவங்க வந்ததும் அவங்க கூட உட்கார்ந்து சாப்பிடுகிறேன் நித்யா."பூர்ணிமா பதில் கூறியபடி உணவை எடுத்து வைத்தாள்.

"அவங்க லேட்டா வந்தா என்ன செய்வீங்க ஒருவேளை போன இடத்திலேயே சாப்பிட்டுட்டு வந்துட்டாங்கன்னா.. அப்ப தனியா உட்கார்ந்து சாப்பிடுவீங்களா.. முதல்ல இப்படி சேர்ல உட்காருங்க "என்று தனக்கு அருகில் பூர்ணிமாவை அமர வைத்தாள் நித்யா.
பிறகு பரத்தைப் பார்த்தபடியே.. "நீ சொல்லு ணா ஆபிஸ்ல நிறைய வேலையா இருக்குதா என்ன.."

"ஆமாண்டா புதுசா ஒரு டெண்டர் கிடைச்சிருக்கு நம்ம கம்பெனிக்கு.."

"வாவ் சூப்பர் இது நல்ல விஷயம் இல்லையா என்ன கம்பெனிக்கு ணா.."

*வாஷிங் மெஷின் மாதிரியான பொருட்களை வைக்கிற டைமர் தானே நம்மளோட ப்ராடக்ட்.. பிரபலமான வாஷிங் மெஷின் கம்பெனியின் பெயரை சொன்னவன்.. அவங்க நம்மளோட ப்ராடெக்ட் க்கு ஓகே சொல்லி இருக்கிறார்கள்.. அடுத்த அஞ்சு வருஷத்துக்கு நம்ம அக்ரிமென்டில் சைன் பண்ணனும்.. அது சம்பந்தமாகத் தான் பத்து நாளா பேச்சுவார்த்தை போய்க்கிட்டு இருந்தது. சாம்பிள் பீஸ் கேட்டிருந்தாங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி கொடுத்தேன். அது இல்லாம நிறைய சில்லறை ஆட்டர்ளும் வருது.. கம்பெனியை பொறுத்தவரைக்கும் கொஞ்சம் பிசி தான். இன்னும் ரெண்டு நாள்ல நீ கூட ஆபீஸ்க்கு வர வேண்டியதா இருக்கும் நித்தியா. அக்ரிமென்டில் சைன் பண்ணும் போது கம்பெனியோட இன்னோரு பார்ட்னர் நீயும் வந்து சைன் பண்ணனும்."

*அதெல்லாம் ஓகே ணா இப்ப நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. திடீர்னு வலி வருவதற்கு என்ன வேலை செஞ்ச ஒரு வேலை லோடு ஏத்த ஆளு வரலைன்னு நீயே எடுத்து போட்டுட்டியா என்ன.."

*என்ன சிரிக்க வைக்காத குட்டிமா.. ஆடர் அதிகமா வர்றதால வேலைக்கு அதிகமான ஆட்களை சேர்த்திருக்கிறேன். இப்ப நம்ம கம்பெனியில் ஐம்பது பேருக்கு மேல வேலை செய்யுறாங்க. அவங்க ஒவ்வொருத்தருக்கும் புரியிற மாதிரி சொல்லி கொடுத்து வேலை வாங்கும் போது நானே டயர்ட் ஆகிடறேன்."

"அண்ணா... சூப்பர்வைஸ் பண்ணற மாதிரி யாரையாவது போட்டுக்கலாம் இல்லையா.."

"போடலாம்டா நீ சொல்லுறதும் சரிதான். வேலை தெரிஞ்ச ஒரு ஆள ரெடி பண்ணனும். நானும் இன்றைக்கு அதைத்தான் யோசிச்சிட்டே வந்தேன்."

"சரி ணா பேசிக்கொண்டே இருக்க வேண்டாம் சாப்பிட்டதும் போய் தூங்கு. நாளைக்கு பாக்கலாம் தூங்கி எழுந்தா ஒருவேளை இந்த வலியெல்லாம் இல்லாமல் போகலாம்."

"ஆமாடா நானும் அதைத்தான் யோசிச்சிக்கிட்டு வந்தேன்" என்று கூறியபடியே உணவு உண்டு முடித்தான் பரத்.

அடுத்த நாள் காலை எப்பவும் போல காலேஜ்ற்கு செல்ல அங்கே குரு மிகுந்த மகிழ்ச்சியோடு வந்திருந்தான்.

"என்னடா முகத்திலேயே பல்ப் எரியுது என்ன விஷயம்.. ஏதாவது வீட்ல விசேஷமா" என்ன என்று கேட்டாள் நித்யஸ்ரீ.

*ஐயா நாளைக்கு பொண்ணு பார்க்க போறேன் தெரியுமா.."

"யாருக்கு" என்று கொஞ்சம் அதிர்ச்சியாக கேட்டாள் நித்யா.

"நீ எதுக்காக ஷாக் ஆகுற என் வீட்லயும் எனக்கு பெரியவங்க இரண்டு அண்ணா இருக்கிறார்கள் தெரியுமா. அவனுக்குத்தான் பொண்ணு பார்க்க போறோம். ஆமாம் நீ எதுக்கு அப்படி பார்த்த முதல்ல அதுக்கு பதில் சொல்லு" என்று கூறினான்.

*உனக்குத்தான் பொண்ணு பார்க்கப் போகிறாங்கன்னு…"

"பயந்துட்டியாக்கும்.."

"ம்.. "என்றபடி தலைகுனிந்து இருந்தாள் நித்யா.

"அது எப்படி உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிக்கிட்டு வேற பொண்ண பார்க்கப் போவேன். அப்ப இத்தனை நாள் நீ என்ன பத்தி தெரிஞ்சுகிட்டது அவ்வளவுதான் இல்லையா." என்று சொன்னபடி வேகமாக நகர்ந்து சென்றான் குரு.

*குரு பிளீஸ் கோபப்படாத.. நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். நீ ஹேப்பியா முகத்தை வச்சிட்டு வரவும் நான் தான் தப்பா நினைச்சிட்டேன்."

"எப்படி நித்தியா இப்படி எல்லாம் உன்னால யோசிக்க முடியுது. என்ன பார்த்தா ஒரு பொண்ணுக்கு சம்மதம் சொல்லிட்டு ஏமாத்துற மாதிரியா தெரியுது".

"அதில்லடா நானே குழப்பத்தோடு இங்கே வந்தேன்".

"என்ன குழப்பம் எதா இருந்தாலும் எப்படி நீ என் பேரில் சந்தேகப்படலாம்."

"ப்ளீஸ் குரு* என்று இவள் சொல்ல சொல்லவே நகர்ந்து வேகமாக சென்று விட்டான் குரு.

என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் கைவைத்தபடி அதே இடத்தில் அமர்ந்து விட்டாள் நித்யா. ஏற்கனவே அண்ணன் கை வலிக்கிறது என்று சொன்னதையே யோசித்து வந்தவளுக்கு... சாதரணமாக பேச ஆரம்பித்து வேறுவிதமாக முடிந்திருந்தது.

மாலை வரை கூட இவளது முகத்தை பார்க்கவே இல்லை குரு. சமாதானம் செய்து விடலாம் என்று அவனுக்கு அருகே சென்று அமர அவளது முகத்தையும் முறைத்துப் பார்த்தபடி எழுந்து சென்று விட்டான்.

இதற்கு முன்பு எல்லாம் எப்போதுமே குருவிடம் கோபித்துக் கொள்வது இவளாகத் தான் இருப்பாள். குரு தான் இவளை சமதனம் செய்வதற்கு அவள் பின்னோடு சுற்றிக் கொண்டிருப்பான். இந்த முறை சூழ்நிலை அப்படியே மாறி இருந்தது. இவள் குருவின் பின்னால் சுற்றிக் கொண்டு இருந்தாள்.

மாலை காலேஜ் முடிந்து நேராக புட்பால் கிரவுண்டுக்கு சென்று விட்டான். எப்படி அவனை பேசி சமாதானம் செய்து விட வேண்டும் என்று இவளும் கிரவுண்ட் ஓரத்தில் காத்திருந்தாள். விளையாடி முடிக்கும் இவளது முகத்தை கூட பார்க்காமல் வேகமாக தன்னுடைய வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.

இவனுடைய பாராமுகம் இவளை முதன் முதலாக மனதளவில் தாக்க ஆரம்பித்தது. காதல் சொல்லி கூட நிறைய நாட்கள் முடிந்து இருந்தது. ஆனால் இதுவரையிலும் இருவருக்கும் நடுவிலும் சண்டை என்று வந்தது கிடையாது. பெரும்பாலும் இவனுடன் பேசாவிட்டால் கூட அபிநயா விடம் நன்றாக நெருங்கி இருந்தாள் நித்யஸ்ரீ.

அவளுடன் நன்றாக தினமுமே பேசுவாள். ஆனால் அவளுக்கும் கூட இவர்கள் இருவரும் விரும்புவது தெரியாது.

அவன் சென்ற பாதையை நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு தன்னுடைய அண்ணனைத் தேடி புறப்பட்டாள்.

ஏற்கனவே அன்று காலையில் இவளிடம் கூறியிருந்தான் பரத். "நான் சொன்னேன் இல்லையா அக்ரிமெண்ட் சைன் போட இன்றைக்கு வராங்க குட்டிமா நீ காலேஜ் முடிஞ்சதும் நேரா ஆபிசுக்கு வந்திடு."

இப்போது தான் காலையில் சொன்னதை ஞாபகம் வர வேகமாக புறப்பட்டாள் நித்யஸ்ரீ.

இவள் அங்கே செல்லும் போது ஏற்கனவே சிலரோடு பேசிக் கொண்டிருந்தான். இவளை பார்க்கவும் இவளது கரம்பற்றி அழைத்துச் சென்றவன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் பரத்.

"கம்பெனியோட இன்னொரு பார்ட்னர் இவங்க தான்…மெட்டீரீயல் வாங்கியதில் இருந்து பொருட்கள் செய்யறது மெத்தட் வரைக்கும் இவங்களுக்கும் தெரியும். இங்க நடக்கிற ஒரு சின்ன சின்ன வேலை கூட இவங்களும் திறமையா செய்வாங்க "என்று கூறியபடி அறிமுகப்படுத்தி வைத்தவர் சற்று நேரத்தில் எல்லாம் பார்மலிடீஸ் முடிந்து அக்ரிமென்டில் கையெழுத்து போட்டிருந்தனர்.

பிறகு அவர்களிடம் பேசி அனுப்பி வைத்து விட்டு நேராக நித்யஸ்ரீ நிற்கும் இடத்திற்கு வந்து நின்றான் பரத்.

"என்ன குட்டிமா முகமே சரி இல்ல என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா இன்னைக்கு காலேஜ் நல்லா தானே போச்சு.. "வரிசையாக நித்யாவின் முகத்தை பார்த்தபடியே கேள்விகளை அடுக்கினான் பரத்.

குட்டிமா என்ற குரலிலேயே உடைந்து இருந்தவள் பிறகு தன்னுடைய அண்ணாவின் கரத்தைப் பற்றி அழ ஆரம்பித்து இருந்தாள் நித்யஸ்ரீ.

"என்ன இது குட்டிமா அழுக கூடாது ஏன் அழற அழாத... என்ன இது எத்தனை பிரச்சனை வந்தாலும் கண்களில் மட்டும் கண்ணீர் வரக்கூடாது என்ன பழக்கம் இது.. புதுசு புதுசா கத்துகிட்டு வர.."

"அண்ணா குரு" என்றவள் மறுபடியும் அழ துவங்க…

"குருவுக்கு என்ன ஆச்சு ஏன் அழற முதல் அழுகைய நிப்பாட்டு.."

*அவனுக்கு எல்லாம் ஒன்னும் ஆகல அவனுக்கு கொழுப்பு அதிகம் ஆயிடுச்சின்னா.. நான் எதுவுமே செயலை அவன் என்கிட்ட கோச்சுக்கிட்டு பேசாமல் போய்விட்டான்.."

"அப்படியா என்ன நடந்தது முதல்ல அதை சொல்லு" என்று கேட்டேன் பரத்.

சுருக்கமாக நடந்ததைக் கூற வயிற்றைப் பிடித்தபடி சிரிக்க ஆரம்பித்தான் பரத்.

"நான் அழுது கொண்டிருக்கிறேன் நீ எதுக்கு ணா சிரிக்கிற" என்று பரத்தின் முதுகில் இரண்டு அடி வைத்தால் நித்யஸ்ரீ.

"பின்ன என்ன இதுக்கெல்லாமா அழுவாங்க.. காதல்னா சும்மா இல்ல இதுபோல சின்னச் சின்னதா சண்டை வரத்தானே செய்யும். அதுக்காக இப்படி தான் குழந்தை மாதிரி வந்து அழுதுகிட்டு இருப்பியா.. நாளைக்கு காலையில வழக்கம்போல காலேஜுக்கு போ. நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு குருவே வந்து பேசுவான். இத்தனை நாளா ரெண்டு பேரும் அப்படித்தான இருக்கிறீங்க. இப்ப மட்டும் ஏன் உனக்கு அவமேல இத்தனை சந்தேகம் வருது. அவனாலேயேயும் உன்கிட்ட பேசாமல் எல்லாம் இருக்க முடியாது குட்டிமா புரியுதா.. கண்ணீரை முதல்ல துடை... எவ்வளவு பெரிய அக்ரிமென்டில் சைன் பண்ணி இருக்குற.. அப்படிப்பட்ட நீ இந்த சின்ன விஷயத்திற்காக அழுதுகிட்டு இருப்பியா.."

"அவன் முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு போனதே பார்க்கவும் என்னால தாங்க முடியல ணா.."

*பைத்தியம் இப்படி எல்லாம் இருக்க கூடாது புரிஞ்சுதா... நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்னு ஆயிடுச்சின்னா இந்த கம்பெனியை பொறுப்பா பார்த்துக்க போறது நீதானே.."

"என்ன இப்படி எல்லாம் பேசுற நீ பேசாத போ... அவன்தான் என்ன கடுப்பேத்துறான்ன் நீயும் இப்படி எல்லாம் பேசுற.. கடைசி வரைக்கும் இது உன்னோட கம்பெனிதான். ஏதோ நீ ஆசைப்பட்ட அதனால் தற்சமயம் உனக்கு பார்ட்னராக இருக்கிறேன். ஆனா கடைசி வரைக்கும் இப்படியே இருப்பேன்னு எல்லாம் நினைக்காத. இது உன்னோட உழைப்பு உன்னோட பணம் சரியா... அப்புறம் நீ சொன்னதுதான் கரெக்ட்டு. குருவை இத்தனை நாளா பார்த்து கிட்டு இருக்கிறேன். அவன் எப்படி என்கிட்ட பேசாம இருப்பான் நாளைக்கு வந்தா எப்போதும் போல பேசி விடுவான். அதனால இனிமே அழ மாட்டேன் ஓகே வா.. சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன்."

"குட்டிமா பத்து நிமிஷம் வெயிட் பண்ணு நான் உன்கூடவே வந்துடறேன். இன்றைக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சுருச்சு. நாளையிலிருந்து தான் இந்த ஆர்டருக்கான வேலையை தொடங்கனும். அதனால அஞ்சு நிமிஷம் இதோ கிளம்பி வந்து விடறேன்" என்றபடி உள்ளறைக்குள் சென்றான்.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”