காதல்_17

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_17

Post by Rajeswari.d »

17
பிரபலமான மாலில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். நித்யாவுக்கு என்ன என்ன பிடிக்குமா அனைத்துமே வாங்கிக் கொண்டு அவளது டேபிளில் வந்து அமர்ந்தான் குரு.

"சொல்லுங்க மேடம் இன்றைக்கு கெஸ்டு நீதான் உனக்கு என்ன வேணுமோ எல்லாமே வாங்கித் தரதா முடிவு பண்ணி இருக்கறேன் இதை சாப்பிட்டுட்டு அடுத்தடுத்து என்ன வேணும்னு சொல்லு "என்று கூறினான்.

"டேய் குரு நான் என்ன சாப்பிடவா வந்திருக்கிறேன். உன்கிட்ட கொஞ்ச நேரம் பேச தோணுச்சு அதனால தான் இங்க வந்தேன்."

"சரி சரி சாப்பிட்டுட்டு பேசலாம் இப்போ என்ன ஆகிட போகுது."

"அதுவும் சரிதான்" என்ற நித்யா.. நல்லா படிச்சிட்டு இருக்கியா குரு என்று கேட்டாள்.

"லூசு என்ன கேட்டுக்கிட்டு இருக்குற நீயும் நானும் இப்போ படிப்ப பத்தி தான் பேச வந்திருக்கறோமா.."

"சாரி பழக்கதோஷம்.."

"ஓகே நித்யா நாம இப்படி வச்சுக்கலாம் ரெண்டு நாளைக்கு ஒரு தடவை எங்கேயாவது ஒரு பக்கம் பார்த்து ரெண்டு பேரும் பேசிக்கலாம் என்ன சொல்லற.."

"ஹலோ நீங்க எல்லாம் பசங்க நெனச்ச நேரத்துக்கு எதையாவது ஒரு காரணத்தை சொல்லிட்டு பார்க்க வந்து விடலாம் ஆனால் நாங்க அப்படி எல்லாம் வர முடியாது பரத் அண்ணாவுக்கு மட்டும்தான் தெரியும் அம்மா அப்பாவுக்கு இன்னும் தெரியாது. அவங்களுக்கு தெரியாம வருவது எவ்வளவு கஷ்டம் தெரியுமாஎத்தனை பொய் சொல்ல வேண்டியதா இருக்குது தெரியுமா.."

"ம்...அதுவும் சரிதான் சரி ஓகே பார்க்கலாம் சரியா" என்றபடி பொதுவாக பேச ஆரம்பித்தனர்.

பேச ஆரம்பித்தது முதல் புறப்பட்டு வெளியே வரும் வரையிலும் குரு நித்யஸ்ரீயின் கையை விடவில்லை தன்னுடைய கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.முன்ன தெரியல்லை நித்யா இப்ப நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணறேன் எனக்கு உன்னோட ஞாபகமாகவே இருக்கிறது" என்று கூறினான்.

குரு சொன்னது எல்லாமே உண்மை என்று தெரியும் போது என்ன பேசுவது நித்தியா புன்னகையோடு அவனை அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்." இன்னும் கொஞ்ச நாள் தான்.. அண்ணா அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டாங்கன்னா உன் வீட்டுக்கு வந்துவிடுவோம். மாப்பிள்ளை கேட்டு எப்படி?"

இந்த பதில் குருவின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது "ஆனாலும் உனக்கு இருக்குற குறும்பு இருக்கே யப்பா என்னால சத்தியமா யோசிக்க கூட முடியவில்லை ...அதற்கெல்லாம் அவசியமே இல்ல உங்க அண்ணா சொல்லாட்டி கூட நான் என் வீட்டு சொந்தங்களை கூப்பிட்டுட்டு அங்கு வந்து இறங்கி விடுவேன் பார்த்துக்கோ.".

"ஹே அவசரப்பட்டு எதுவும் செஞ்சுட்டாத குரு முறையா அண்ணா அப்பா அம்மா கிட்ட சொன்ன பிறகுதான் நீ உன் வீட்டு ஆளுங்க கிட்ட சொல்லி கூட்டிட்டு வரணும் சரியா ஓகே ன்னு சொல்லி எனக்கு இப்போ பிராமிஸ் பண்ணு.." என்று அவனுக்கு நேராக தன்னுடைய கையை நீட்டினாள்.

"நித்யா இது.. இதுக்கெல்லாம் ப்ராமிஸ் கேட்ப... உன் மேல ஆணையா சொல்லுறேன் நீ சொல்லும் போது தான் வீட்டுக்கு வருவான் போதுமா.".அன்றைக்கு அந்த பதிலை நிந்யாவிடம் சொன்னது தவறோ என்று பல நாள் வருந்தி இருக்கிறான்.

"குரு இப்போதைக்கு இது போதும் ஓகேவா புறப்படலாம் அடுத்த இப்போதைக்கு எல்லாம் வந்து பார்க்க மாட்டேன் .எக்ஸாம்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்குது அப்ப காலேஜில வந்து பார்க்கிறேன் சரியா "என்றபடி நகர்ந்து சென்றாள்.

முதல் எக்ஸாமுக்கு காலேஜிற்கு பாத்து வரும்போது வாசலிலேயே காத்திருந்தான். முதன் முதலாக பார்க்கும் போது அவளுக்கு வழங்கிய சாக்லேட்டை இப்போதும் எடுத்து நீட்டினான்.

"உன்னால சாக்லேட் சாப்பிட்டு சாப்பிட்டு புசுபுசுன்னு குண்டா ஆகிட்டு இருக்கிறேன்" என்று சொன்னபடியே வாங்கிக் கொண்டாள்.

"ஹேய் இது நல்லா இருக்கே.. நீ ஒன்னும் சாக்லெட் சாப்பிட வேண்டாம் முதல்ல கொடு சாக்லேட்ட இனிமே உனக்கு வாங்கித் தரமாட்டேன். வாபஸ்" என்று சொன்னபடியே அவளது சாக்லெட்டை பறிக்க போனான் குரு.

"ஹலோ கொடுத்தது கொடுத்ததுதான் திரும்ப இந்த கையிலிருந்து அந்த பக்கம் வரவே வராது பார்த்துக்கோ" என்றபடி இரண்டு பேருமே காலேஜிற்குள் நுழைந்தனர்.

இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் வித்தியாசத்தில் அடுத்தடுத்து வரிசை கட்டி பரீட்சை இருக்க பரபரவென நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது இடையிடையே குருவோடு பேச்சு நிறைய படிப்பு என்று வேகமாக நகர்ந்தது நித்யஸ்ரீக்கு..

கடைசி எக்ஸாமிற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் அன்றைக்கு காலை சற்று சோம்பலாக விடிந்தது.

நித்யஸ்ரீ காலையில் எழும்போதே இவனுடைய அண்ணன் பரத் அவனுடைய பேக்டரிக்கு சென்றிருந்தான்.

தன்னுடைய அண்ணனைக் காணவில்லை எனவும் உடனே அவனுக்கு அழைப்பு விடுத்து பேசினால் நித்யஸ்ரீ.

"அண்ணா எங்கண்ணா இருக்குற காலையில எந்திரிக்கும் போது உன்ன ஆளையே காணோம் "என்று கேட்டாள்.

"பெரிய ஆர்டர் ஒன்று வந்து இருக்குதுடா குட்டிமா.. அதை இன்னும் இரண்டு நாளில் முடிச்சு கொடுக்கணும். வேலை நிறைய இருக்குதுடா ஆபீஸ்ல அதனால காலையில எந்திரிச்சு வந்து விட்டேன்."

"ஏன் ணா வாய்ஸ் ரொம்ப டல்லா தெரியுது இன்னும் சாப்பிடலையா நீங்க.."

"இப்பதாண்டா வாங்கிட்டு வந்து வச்சிருக்கேன் இனிதான் சாப்பிடணும் கொஞ்சம் டயர்டா இருக்குது" என்று கூறினான் பரத்.

"என்ன அன்னைக்கு மாதிரி மறுபடியும் கை வலி இருக்குதா என்ன ?நான் வேணும்னா அங்க வரட்டுமா.."

"சரிதான் நீ படிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்த... ஞாபகம் இருக்குதா இங்க வந்தா எப்படி படிக்க முடியும் வீட்ல உட்கார்ந்து வரப்போற எக்ஸாமுக்கு படிக்கிற வேலையை பாரு புரிஞ்சுதா…"

"ஆனாலும் அண்ணா உன்னோட குட்டிமாவை இப்படி நீ அசிங்கபடுத்தி இருக்க வேண்டாம் நானெல்லாம் அரியர் வச்சாவது எப்படியும் படிச்சு பாஸ் ஆயிடுவேன்."

"அது எனக்கு தெரியும் குட்டிமா.."

"ஓகே ணா லேட் பண்ண வேண்டாம் சாப்பிடுங்க நான் மறுபடியும் மதியம் பேசுறேன்" என்று போனை வைத்தாள்.

ஆனால் மதியம் வரும் முன்னமே பூர்ணிமாவிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது பூர்ணிமாவின் தந்தை இவர்களிடம் பேசினார்

பூர்ணிமாவிற்கு பேறு கால வலி தொடங்கி விட்டது. குழந்தை பிறப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது ஹாஸ்ப்பிடலுக்கு அழைத்துக் கொண்டு போகிறோம் என்று அழைத்துக் கூறினார்.

செய்தி கேட்ட உடனேயே மகிழ்ச்சியாக நித்யஸ்ரீ நித்யஸ்ரீயின் தந்தை தாய் மூவருமே புறப்பட்டு சென்றனர்.

பரத்திடம் போனில் அழைத்து சொல்ல அவன் அங்கே வேலை இருப்பதாக கூறி இருந்தார்." அம்மா இங்க அர்ஜெண்டான ஓர்க் போயிட்டு இருக்கு உடனே என்னால வர முடியாது இரவு புறப்பட்டு வரேன் நீங்க பூர்ணிமா கிட்ட சொல்லிடுங்க எப்படியும் ஏழு மணிக்குள்ள புறப்பட்டு வந்திடுவேன்" என்று கூறி அனுப்பி வைத்தான்.

ஹாஸ்பிடலுக்கு புறப்படும்போதே நித்யஸ்ரீ குருவிடம் போனில் அழைத்து கூறியிருந்தாள்.குரு நான் இன்னைக்கு இல்ல நாளைக்குள்ள நான் அத்தை ஆகி விடுவேன் நீ மாமா ஆக போற" என்று மகிழ்ச்சியாக கூறினாள்.

*சூப்பர் சூப்பர் என்ன குழந்தைன்னு உடனே எனக்கு நீ போன் பண்ணி சொல்லணும் ஓகேவா "என்று பதிலுக்கு குருவும் அவளிடம் கூறினான்.

அடுத்ததாக பரத்திற்கு போனில் அழைத்த வாழ்த்துக்களை கூறினான் குரு.
மச்சான் குடும்பஸ்தான ஆயிட்டீங்க என்று அவனை கலாய்க்க அதற்கு அவன் சிரித்தபடியே என்ன குரு நித்யா அதுக்குள்ள சொல்லிட்டாளா உன்கிட்ட என்று கூறினான்.

"அதெல்லாம் எப்பவோ கூப்பிட்டுச் சொல்லிட்டா எனிவே வாழ்த்துக்கள் மச்சான் நீங்க எப்ப ஹாஸ்பிட்டளுக்கு போக போறீங்க குழந்தையை பார்க்க…"

"இங்க ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு குரு.. அத முடிச்சுட்டு ஆறு மணிக்குள்ள புறப்ப்படனும்.. ஓகே குரு கட் பண்ணறேன் எனக்கு நிறைய வேலை இருக்கு இங்க.."

ஓகே ணா என்று சொல்ல ஆரம்பித்து கடைசி நேரத்தில் மச்சான் என்று கூறியபடியே சிரித்தபடி போனை வைத்தான் குரு.

நேரம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. பூர்ணிமாவை இப்போது ஹாஸ்பிட்டலில் இங்கும் அங்குமாக நடக்க வைத்து கொண்டிருந்தார்கள் அவ்வப்போது பரத் அடிக்கடி போனில் பேசிக்கொண்டு இருந்தான்.

"ஆறு மணிக்கு இங்க வேலை முடிஞ்சும்னு நினைக்கிறேன் அதுக்கப்புறம் நேரா அங்க புறப்பட்டு வந்து விடுவேன் ஒரு மணி நேரம்தான் ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ நான் வந்துடறேன் பூர்ணிமா..நிறைய ஆசைப்பட்டேன் ஹாஸ்பிட்டலுக்கு உன்ன அட்மிட் பண்ணும் போது உன் பக்கத்திலேயே இருக்கணும்னு" என்று அவளிடம் கூறிக்கொண்டிருந்தான்.

"பரவாயில்ல பரத் எனக்குத்தான் தெரியுமே உங்களுடைய வேலை எப்படிப்பட்டது என்று எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல இங்கே என் பக்கத்துல தான் பூர்ணிமா இருக்கறா.. என்னோட அம்மா அப்பா அத்தை மாமா எல்லோருமே என்ன சுத்தி தான் இருக்கிறார்கள் எனக்கு எந்த பயமும் இல்லை நீங்க டென்ஷன் ஆகாதீங்க பொறுமையா உங்களுடைய வேலையை முடிச்சுட்டு வந்தா போதும்."

"தேங்க்ஸ் பூர்ணிமா சீக்கிரமாவே வந்துடறேன்" என்று போனை வைத்தான்.

மாலை ஐந்து மணிக்கு நெருங்கிக் கொண்டிருக்கும் போது முக்காவாசி வேலை முடிந்து இருந்தது வேகவேகமாக அனுப்ப வேண்டியதை அனுப்பிவிட்டு நேரம் பார்த்தபடியே புறப்படத் தயாரானான்.

தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்து வண்டியில் புறப்பட ஆரம்பிக்க அப்போதுதான் முதன் முதலாக அந்த மாற்றத்தை தனக்குள் உணர ஆரம்பித்தான் பரத்.

முதலில் காலில் தொடங்கிய வழியில் மெல்ல மெல்ல அதிகமாவது போல் உணர ஆரம்பித்தான். கடைசியாக நெஞ்சு பகுதியில் உறைந்தது போல ஒரு வலி உயிர் போகும் அளவிற்கு சட்டென தோன்றியது.

ஒரு கை கொண்டு நெஞ்சுப் பகுதியை மெதுவாக தடவிக் கொடுத்தபடியே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு எதிரில் தெரிந்தது பெரிய ஹாஸ்பிடல் ஒன்று...

தனக்கு உடலில் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று எப்போதும் யோசித்தது கூட கிடையாது ஆனால் இன்றைக்கு வலி அதிகமாக இருக்கவும்...எதற்கும் சிறு செக்கப் செய்துவிட்டு வலிக்கான மாத்திரையை எடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்றவும் யோசிக்காமல் ஹாஸ்பிடலுக்கு வண்டியை நுழைத்தான் பரத்.

அங்கு சென்று நிலவரத்தை சொல்ல இவனுடைய உடல் நிலையை பரிசோதனை செய்த டாக்டர் இவனை உடனே வந்து அட்மிட் ஆக வேண்டும் என்று கூறினார்..

"இது நார்மல் வழி மாதிரி தெரியல ஹார்ட் அட்டாகோட சிம்டம்ஸ் மாதிரி தோணுது நீங்க உடனே அட்மிட் ஆகுங்க...என்னென்னு பார்த்திடலாம்.. எல்லாத்தையும் பார்த்துட்டா பிரச்சனை எதுவும் இருக்காது இல்லையா "என்று கூறினார்.

வலி இப்போது சற்றே அதிகமாவது போல் தோன்ற அங்கே பூர்ணிமாவை பார்க்கச் செல்லவேண்டும்.. மனம் முழுக்க அவளையும் சுற்றிக் கொண்டிருக்க சற்றே தயங்கியபடி நின்றிருந்தான் பரத்.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”