காதல்_19

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_19

Post by Rajeswari.d »

19
அழுகை அழுகை அப்படி ஒரு அழுகை தனது அண்ணனின் முகத்தை பார்க்க முடியாமல் கதறி கொண்டிருந்தாள் நித்யஸ்ரீ.

இரண்டு முறை சுய நினைவு இல்லாமல் மயங்கி விழுந்து இருந்தாள் உறவினர்கள் பலர் வந்து அங்கே குழுமியிருந்தனர்.

இறுதி யாத்திரை செல்வதற்காக அவனை ஐஸ்பெட்டியில் பரத்தை ஹாலில் வைத்து இருந்தனர்.

யாராலும் எவராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.இறப்பில் கூட எந்த ஒரு வலியின் அடையாளமும் இல்லாமல் கண்மூடி உறங்குவது போல தோற்றத்தில் இருந்தான்.

இதைப் பார்க்கப் பார்க்க நித்யஸ்ரீக்கு இன்னும் அழுகை அதிகமாக வந்தது வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்ல யாருமே இதை எதிர்பார்க்காத ஒன்று இவனுக்கு இப்படி ஆகிவிடும் என்று யாராவது கூறியிருந்தால் கூட யாருமே நம்ப முடியாது அந்த அளவிற்கு திடகாத்திரமான இளைஞன் பரத்.

ஆனால் என்ன நடந்தது என்று யோசிக்கும் முன்னமே எல்லாமே முடிந்திருந்தது மருத்துவர்களை பொறுத்தவரைக்கும் அவர்கள் கூறியது அளவுக்கு அதிகமான மன அழுத்தம் தொடர்ச்சியாக செய்த வேலை அழுத்தம் தாளாமல் உடனடியாக ஹார்ட் அட்டாக் வந்து இருக்கிறது என்று ஒரே வரியில் கூறி முடித்து விட்டார்கள்.

குழந்தை பிறந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைவதா இல்லை இங்கே இவன் இல்லை என்பதை நினைத்து அழுவதா என்று யாருக்குமே தெரியவில்லை சொல்வதா வேண்டாமா என்கிற பயம் ஒரு பக்கம் நிறைய இருந்தது.

பூர்ணிமாவின் பெற்றவர்களுக்கு மட்டும் முதலில் கூறியிருக்க அவர்கள் நேரடியாக இங்கே வந்து இருந்தனர்.

ஒரே மகன் தனக்கு கொல்லியிடுவான் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டு இருந்தவர் இன்றைக்கு நிலைமை அப்படியே மாறி இருந்தது ஆசையாக வளர்த்த மகனுக்கு தன்னுடைய கையில் கொள்ளி வைக்கும் நிலை வந்துவிட்டதே என்று கதறிக் கொண்டிருந்தார் பரத்தின் தந்தை.

ஆனால் எத்தனை நேரம் பூர்ணிமாவிடம் சொல்லாமல் இருப்பது ஒரு கட்டத்தில் அவளுக்கும் தகவல் சொல்லப்பட்டது தகவல் கேட்டு அந்த நிமிடமே மருத்துவமனையில் சுத்தமாக நினைவை தொலைத்திருந்தாள் பூர்ணிமா.

இதயத்துடிப்பு வேகமாக அவளையும் கூட ஐசியூவில் வைத்து பார்த்துக் கொள்ளும் நிலைமை வந்திருந்தது என்ன நடந்தது என்று எதுவுமே கேட்கவில்லை சுயநினைவை மொத்தமாக தொலைத்து ஹாஸ்பிடலில் படுத்திருந்தாள் பூர்ணிமா.

நித்யஸ்ரீயின் வீடு மயானம் தோற்றமளிக்க ஆரம்பிப்பது பரத் இறந்து முழுவதுமாக பத்து நாட்கள் கடந்து இருந்தது என்ன செய்வது என்று எதுவும் அவளுக்கு தெரியவில்லை.

அண்ணனை நினைக்கும் நேரமெல்லாம் அழுது அழுது உடல்நிலையைக் கெடுத்துக் கொண்டு இருந்தாள். கடைசி எக்ஸாம் எழுத நித்யஸ்ரீ காலேஜுக்கு செல்லவில்லை.

கண்களை மூடினால் பரத் இவளது கண் முன்னால் தோன்றி குட்டிமா என்று கூப்பிடுவது போல தோன்ற ஆரம்பித்தது.

விஷயம் தெரிந்த உடன் அபிநயாவை அழைத்துக் கொண்டு குரு இவளை காண வீட்டிற்கு வந்திருந்தான் வீடு அமைதியாக இருக்க அபிநயா நித்யஸ்ரீயின் கைகளை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

தலை குனிந்தபடி அழுது கொண்டு இருந்தாலே தவிர நிமிர்ந்துகூட குருவைப் பார்க்க வில்லை உடல் பாதியாகி இருந்தாள் நித்யஸ்ரீ.

சரியாக சாப்பிடுவது இல்லை என்பது அவளது முகத்தைப் பார்க்கும் போதே தெரிந்தது அவள் மட்டுமல்ல அவளுடைய தாய் தந்தை இரண்டு பேருமே எதையோ தொலைத்து போலத்தான் அமர்ந்திருந்தார்கள்.

அபிநயா தான் நித்யஸ்ரீயிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்
எதற்குமே அவளிடம் இருந்து பதில் வரவில்லை.
இப்போது என்ன செய்வது என்பது போல குருவை திரும்பிப்பார்த்தால் அபிநயா குருவுக்கும் என்ன சொல்வது என்று எதுவுமே தெரியவில்லை

இப்போது புறப்படலாம் மறுபடியும் வந்து பார்க்கலாம் என்பது போல தலை அசைக்க விடை பெற்று புறப்பட்டாள் அபிநயா.

பத்து நாட்களாக இவர்களுடைய ஃபேக்டரி ஓபன் செய்திருக்கவில்லை .தொடர்ந்து ஃபேக்டரி பூட்டியிருந்தால் சரிவராது என்று தோன்றவும் மேனேஜர் அன்று காலையில் இவர்களது வீட்டுக்கு வந்திருந்தார்.

"பத்து நாளா ஏற்கனவே ஆபீஸ் மூடி வைத்திருக்கிறோம் ஏற்கனவே நிறைய பேருக்கு கொடுக்கவேண்டிய ஆர்டர் நிறைய இருக்குது எல்லாமே தேங்கி நிற்குது ஆபீஸ் திறந்தால் தான் முடியும் என்ன செய்றது தொழிலாளர்களும் பாவம் இல்லையா ஐம்பது பேர் இந்த கம்பெனியை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் "என்று கேட்டார்.

அவருக்கு லஷ்மி தான் பதில் கூறினார் அழுதபடியே கம்பெனி பேக்டரின்னு சொல்லி சொல்லியே இருந்த ஒருத்தனும் இல்லாமல் போய்ட்டான். இந்த பேக்டரி இருந்தா என்ன? இல்லாமப் போனா தான் என்ன ?இனிமே இதப்பத்தி எதையும் யோசிக்கறதா இல்ல நீங்க போங்க அங்க வேலை செய்யற ஒவ்வொருவரையுமே வேற கம்பெனியில வேலை தேட சொல்லிடுங்க" என்று கூறினார்.

பரத்தின் தந்தைதான் வேகமாக "லக்ஷ்மி என்ன இது கொஞ்சம் அமைதியா இரு" என்று அவரிடம் கூறியவர் மேனேஜரை அழைத்து கொண்டு வாசலுக்கு வந்தார்.

அவரோடு கூடவே நித்யஸ்ரீயும் எழுந்து வெளியே வந்தாள்…" மேனேஜர் சார் அது அந்த பேட்டரி அண்ணாவோட கனவு அதை நஷ்டம் என்று சொல்லி ஒரேடியாக மூடிவிட எனக்கு துளிகூட விருப்பம் கிடையாது .

அண்ணனோட கனவே அந்த பேக்டரி தான் அதை பெரிய அளவில் கொண்டு வரணும் அப்படிங்கறதுதான் அண்ணனோட ஆசை இன்னைக்கு அண்ணா இல்லாமல் போகக் கூட அதுதான் காரணம் .

அந்த பேக்டரியை எக்காரணத்தை கொண்டும் இழுத்து மூட விடக்கூடாது விடமாட்டேன் அதனால நீங்க ஒர்க்கர்ஸ் கிட்ட எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க இன்னும் ரெண்டு நாள்ல கம்பெனி எப்போதும் போல வேலை நடக்கும்னு…

ஆர்டர் கொடுத்து இருக்கிறவங்க கிட்ட இன்னும் கொஞ்சம் அவகாசம் கேளுங்க சரியா என்று கொஞ்சம் நிமிர்வாக பதில் கூறினாள் நித்யஸ்ரீ.

"ஓகே மா இன்னும் ரெண்டு நாள் என எல்லாரையும் வேலைக்கு வர சொல்லிடறேன் நன்றிங்க" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர்.

"நித்து உன்னால முடியுமா "என்று கொஞ்சம் குழப்பத்தோடு கேட்டார் இவளது தந்தை.

"அப்பா அண்ணாவோட கனவு அந்த பேக்டரி அதை எக்காரணத்தைக் கொண்டு இழுத்து மூட விடக்கூடாது அண்ணாவோட அந்த ஃபேக்டரி இருக்குற வரைக்கும் அண்ணாவிடம் மூச்சு காத்து அந்த ஃபேக்டரியில் தான் இருக்கும் எக்காரணத்தை கொண்டும் அது ஒன்னும் இல்லாம பண்ணிட கூடாது .

"அண்ணாவோட கனவை நிறைவேற்றி வைக்கணும் பா... அப்பா அண்ணாவுக்கு ஐம்பது பேர் வேலை செய்யறது எல்லாம் விஷயம் இல்லை அதை நூறு பேரா மாற்றுவது தான் கனவு அதை நோக்கிதான் என்னோட உழைப்பு இருந்தது நிச்சயமாக கனவை நிறைவேற்றி வைப்பேன்."

சொன்னது போலவே இரண்டு நாள் கழித்து நேரடியாக ஆபீஸிற்கு புறப்பட்டு விட்டாள் நித்யஸ்ரீ.

ஏற்கெனவே தொடர்ந்து வேலை செய்யும் இடம் முதல் ஆபீஸில் அனைத்து வேலைகளும் அவளுக்கும் தெரியும் என்பதினால் பெரியதாக கஷ்டம் எதுவும் அவளுக்கு இருக்கவில்லை.

என்னென்ன செய்ய வேண்டும் எங்கெங்கு வேலைக்கான பொருட்களை வாங்கினான் என்பதில் தொடங்கி ஆர்டர் எப்படி அனுப்புவது என்பது வரைக்கும் எல்லாமே இவளுக்கு தெரிந்து இருந்தது.

ஆரம்ப நாட்களில் இவனுடைய தந்தை அவளுக்கு துணையாக கூடவே எல்லாமே சில நாட்களுக்குத்தான்..

அங்கே நித்யஸ்ரீயின் வேலையை பார்த்த தன்னுடைய உதவி அவளுக்கு தேவை இல்லை என்று முடிவுக்கு வந்திருந்தார்..

ஆபீஸுக்கு சென்ற சில நாட்களிலேயே அங்கிருக்கும் வேலைகள் இவளை சுருட்டி உள்ளிழுத்துக் கொண்டது.

பரத் முதலில் வேலை செய்தது போல நாள் முழுவதும் ஆபிஸிலேயே குடியிருக்கவில்லை ஆனால் ஓரளவிற்கு தூங்கும் நேரம் தவிர மற்ற நேரத்தை அங்கேயே செலவு செய்ய ஆரம்பித்தாள்.

கவன முழுவதுமே பரத்தின் ஃபேக்டரி அதனுடைய வளர்ச்சி தொழிலாளர்களின் நலன் என்று அப்படியே டோட்டலாக மாறியிருந்தாள் நித்யஸ்ரீ இப்போது குருவின் ஞாபகம் எங்குமே இல்லை.

ஒரு மாதம் முடிந்த போது பூர்ணிமா தன்னுடைய குழந்தையோடு இவர்களது வீட்டிற்கு வந்திருந்தாள்.முதலில் பூர்ணிமாவின் தாய்தந்தையர் இருவருமே இவளை அனுப்புவதற்கு சம்மதிக்க எல்லாம் இல்லை.

அவளை தங்களோடு வைத்துக் கொள்ள முடிவு செய்திருந்தனர் ஏன் சிறிது நாட்கள் கழிந்த பிறகு இவளுக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைத்து விடலாம் என்கின்ற எண்ணமும் கூட அவர்களுக்கு இருந்தது.

ஆனால் பூர்ணிமா துளிகூட சம்மதிக்கவில்லை. இந்த நிமிடம் வரைக்கும் வாழ்ந்தது பரத்தோடு மட்டும் தான் எனக்கு அவர் மட்டும் போதும் எனக்கு கல்யாணமோ இன்னொரு வாழ்க்கையோ தேவையில்லை.

என்ன பத்தி யாரும் யோசிக்கப் தேவை இல்லை என்னை அங்கு கொண்டு போய் விடுங்க என்று பிடிவாதமாகக் கூறி தன்னுடைய குழந்தையோடு இங்கே வந்து இருந்தாள்.

குழந்தை அப்படியே பரத்தின் ஜாடை இலேசாக இருக்க இங்கே அவள் வருவதற்கு யாரும் தடை எதுவும் சொல்லவில்லை அவளது விருப்பம் அதுவாக இருக்கும் பட்சத்தில் தாராளமாக இங்கேயே இருக்கட்டும் என்று அழைத்துக் கொண்டனர்.

பரத் இறந்த இரண்டாவது மாதத்தில் குரு மறுபடியும் நித்யஸ்ரீயை சந்திக்க அவளது ஆபீஸுக்கு வந்திருந்தான்.

அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றாலே தவிர எதுவுமே பேசவில்லை அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

"ஏன் இப்படி இருக்கிற..உங்க அண்ணா இறந்துட்டாங்க... உன்னால கடைசி எக்ஸாம் எழுத முடியல ஆனா ஒரு வார்த்தை கூட இந்த மாதிரி ஆகிடுச்சு அப்படின்னு உனக்கு என்கிட்ட சொல்லறதுக்கு மனசு வரல அப்படித்தானே.."

"நிச்சயமா நான் உன் கிட்ட சண்டை போடுவதற்காக இங்க வரல பத்து நாள் கழிச்சு தான் எனக்கு தெரிய வந்துச்சு நீயும் நானும் சின்ன வயசுல இருந்து எந்த அளவுக்கு ஃப்ரெண்டா இருந்திருக்கிறோம் என்று உனக்கு தெரியும் உன்னோட கஷ்டம் அப்போ என்னால உன் பக்கத்துல இருக்க முடியல அப்படின்னு நினைக்கும்போது எனக்கு எவ்வளவு வேதனையாக இருக்கிறது தெரியுமா..

"நான் இப்போ எதையும் யோசிக்க நிலைமையில இல்ல குரு.."

"அண்ணா இறந்தது பெரிய இழப்புதான் அதை இல்லன்னு சொல்லல ஆனா எந்த ஒரு இடத்திலேயும் உனக்கு என்னோட ஞாபகமே வரலையா அத நெனச்சு தான் என்னால தாங்கவே முடியல .."

"சாரி குரு நான் இப்போ நிறைய குழப்பத்தில் இருக்கிறேன் என்னால உன்னுடைய எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. நான் இப்போ விரும்பியதையெல்லாம் தனிமையை மட்டும்தான் .எனக்கு யாருடைய ஆதரவும் தேவை இல்லை யாரும் எனக்காக பரிதாபப்பட வேண்டாம் அழவும் வேண்டாம் எல்லாமே என்னோடவே முடியட்டும்."

"ஏண்டி இப்படி பைத்தியம் மாதிரி பேசுற நான் உன்னோட குரு உனக்கு தெரியுதா இல்லையா என்று அவளுக்கு அருகில் வர சட்டென பின்னால் நகர்ந்து சென்றாள் நித்யஸ்ரீ."

அவள் முகத்தையே பார்த்தபடி யோசனையோடு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் குரு.

"சாரி நித்யஸ்ரீ நீ எங்க ஆபீசுக்கு வந்து ஒன்றரை மாசம் ஆச்சுன்னு சொன்னாங்க என்னால உடனே வந்து பார்க்க முடியல
.. கேம்பஸ்ல செலக்ட் ஆகி இருந்தேன் இல்லையா.. அவங்க உடனே வந்து வேலையில் சேர சொல்லிட்டாங்க நான் அங்க போயிட்டேன். இப்பதான் டைம் கிடைச்சது வந்ததும் நேரா உன்ன தான் பார்க்க வந்திருக்கிறேன் இனி தான் வீட்டுக்கு போகணும்."

"நான் உன்கிட்ட முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும் குரு நானும் உன்னை பத்திதான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. நல்லது இனிமே என்ன பாக்க இங்க வரவேண்டாம் கொஞ்ச நாளைக்கு.. என்னால இப்போதைக்கு வேறு எதையும் யோசிக்க முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.."

"எனக்கு நீ சொல்றது சுத்தமா புரியல ஓகே சரி பார்க்க வரவேண்டாம்னா என்ன அர்த்தம் இனிமே பார்க்க வரவேண்டாமா.. இல்லை எப்போதுமே பார்க்க வரக்கூடாதா உன் பேச்சு எனக்கு சுத்தமா புரியல எனக்கு தெளிவா சொல்லு" என்று கூறினான் குரு.

"இப்போதைக்கு என்னோட ஆசை எல்லாமே எங்க அண்ணனோட கனவை நிறைவேற்ற வேண்டும் அது மட்டும் தான் இப்போ என்னோட மைண்ட்ல இருக்கு இதை தாண்டி நான் வேற எதை பத்தியும் யோசிக்கறதா இல்லை."

"இழப்புங்கறது பெரிய விஷயம் நித்யஸ்ரீ நான் அதை இல்லன்னு சொல்ல மாட்டேன் அதுக்காக நீ இப்படி சொல்றது கொஞ்சம் கூட சரி கிடையாது."

"சாரி குரு இதுக்கு மேல உன்கிட்ட எனக்கு பேச துளிகூட விருப்பம் கிடையாது இப்போதைக்கு என்ன பத்தியும் என்னோட வாழ்க்கையை பற்றிய என்னுடைய எதிர்காலத்தைப் பற்றியோ எதையும் என்னால் யோசிக்க முடியாது.

அம்மா அப்பாவை அண்ணனுடைய இழப்பில் இருந்து மீட்டுக் கொண்டு வரணும் பாப்பாவையும் அண்ணியையும் பாத்துக்கணும் அது தான் இப்போதைக்கு என்னோட மைண்ட் ஃபுல்லா இருக்கு …

அப்புறம் இந்த ஃபேக்டரி இதையும் விடமாட்டேன் அதனால ப்ளீஸ் இப்போதைக்கு என்னால உனக்கு எந்த பதிலும் சொல்ல முடியாது நீ வேலைக்கு போய் சேர்ந்து இருக்கிறாயா ரொம்ப சந்தோஷம் அதுல உன்னோட கவனத்தை செலுத்து.."

"அப்படின்னா.. நம்மளோட காதல்.."

"அண்ணன் கூட அதுவும் முடிஞ்சு போச்சு இத நிறைய நாள் யோசிச்சு தான் இந்த பதிலை சொல்லறேன் என்னால இப்போதைக்கு எதைப்பற்றியும் யோசிக்க முடியாது நீ கிளம்பு குரு."

பைத்தியம் தான் உனக்கு பிடிச்சிருக்கு நித்தியஸ்ரீ எதற்கும் எதற்கும் நீ முடிச்சுப்போட்டு பேசிக்கிட்டு இருக்கிற.. நான் உன்னோட குரு நான் உனக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன் எனக்குன்னு வாழ்க்கை ஒன்று இருந்ததுனா அது உனக்காக மட்டும் தான்..

நீ நிறைய குழப்பத்தோடு இருக்கிற.. நித்யஸ்ரீ அதனாலதான் இப்படி தப்பு தப்பா பேசிக்கிட்டு இருக்கிற நீ எவ்வளவு வேணும்னாலும் டைம் எடுத்துக்கோ மெதுவா இதுபற்றி பேசிக்கலாம் இப்போதைக்கு நான் புறப்படறேன் பை என்று சொல்லி விட்டு நகர்ந்தான் குரு.

அந்த நிமிடம் அவள் மேல் அதிகபட்சமாக கோபம் இருந்தாலுமே அவருடைய இழப்பு பெரியது என்று தோன்ற வந்த கோபத்தை சற்றே அடக்கியபடி நகர்ந்தான்.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”