காதல்_21

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_21

Post by Rajeswari.d »

21

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. நித்யஸ்ரீ யாரையும் சோர்வாக இருக்க விட வில்லை…

அண்ணி வேகமா எழுந்திருங்க.. காலையிலேயே பாப்பாவை ரெடி பண்ணிட்டு கோயிலுக்கு போயிட்டு வந்துடலாம்..சீக்கிரமா புறப்படுங்கள் என்று ஒருபக்கம் அவளை விரட்டி விட்டாள்.

அம்மா நாங்க கோயிலுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள பாயசம் மாதிரி ஏதாவது செய்யுமா என்று லட்சுமியிடம் கூறினாள்.

நேற்று நித்யஸ்ரீ யை கோபமாக திட்டியதாலோ என்னவோ.. இன்று சமாதானம் செய்வது போல..நித்து.. சாயங்காலம் எத்தனை மணிக்கு கேக் வெட்ட போறீங்க என்று கேட்டார்.

நேற்று ஆர்டர் கொடுத்தாச்சு மா வாங்கிட்டு வரணும் அண்ணி அவங்க அம்மா அப்பாகிட்ட சொல்லி இருக்கிறாங்களான்னு கேட்கணும் மா எத்தனை பேர் வருவாங்க என்று பார்த்து அதுக்கேத்த மாதிரி ஏதாவது செய்யணும் மா..

இங்க பக்கத்துல இருக்கிற எல்லாரையும் அழைச்சுடறேன்.நைட் கொஞ்சம் சீக்கிரம் வந்து விடு நீயும் என்று கூறினார்.

சரிம்மா என்று விட்டு புறப்பட்டு வந்து இருந்தால் காலையிலேயே மனநிலை சற்று நல்ல விதமாக இருந்தது.

பரத் இருக்கும் போது பேசியது போல தொழிலாளர்களை கவனித்துக்கொள்ள மூன்று சூப்பர்வைசர்களை நியமித்து இருந்தாள் நித்தியஸ்ரீ.

தினம் தினம் அங்கே உற்பத்தியாகும் ப்ராடக்ட்கள் எங்கெங்கு யாருக்கு சப்ளை செய்ய வேண்டும் என்பதைப்பற்றி காலையிலேயே வந்து சொல்லிவிடுவர்..

இருப்பு எவ்வளவு இருக்கிறது இன்னும் எவ்வளவு தேவை யார் யாருக்கு எவ்வளவு அனுப்பவேண்டும் இப்படியான பேச்சுவார்த்தைகள் வழக்கம் போல காலையில் இவர்களது ஆபீஸ் ரூம்பில் நடக்கும்.

இதுவும் பரத் இருக்கும்போது கொண்டு வந்த சிஸ்டம் தான். அதையே நித்யஸ்ரீயும் ஃபாலோ பண்ணி கொண்டு இருந்தாள்.

கிட்டத்தட்ட மினி மீட்டிங் போல அது இருக்கும் .இங்கே பாகுபாடு என்பது எல்லாம் கிடையாது எவ்வளவு தேவை யார் யாருக்கு எந்த நேரத்தில் அனுப்பி வைக்க வேண்டும். இது போல தெளிவாக கேட்டு தெரிந்து கொள்வாள்.

அதுபோலவே வழியாக அனுப்பி விடவேண்டும் என்பது அவர்களுக்கு கொடுக்கப்படும் கட்டளை.

இதுவரையிலும் எந்த இடத்திலும் குழப்பம் என்பது வந்தது கிடையாது. இங்கே மீட்டிங் போகும் சமயம் யாரையுமே ஆபீஸ் ரூமிற்குள் அனுமதிப்பது கிடையாது.

காலையிலேயே குரு பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு ஆபீஸ்ற்கு வந்திருந்தான்.

மீட்டிங் நடக்கும் ஹாலையேப் பார்த்தபடி வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தான்.

காலேஜில் கூட படித்தவன் பத்திரிக்கை கொடுக்க வந்திருக்கிறேன் என்று சொல்ல அவனை அமர வைத்து ஜூஸ் கொடுத்து உபசரித்து இருந்தனர்.

அரைமணி நேரம் சென்ற பிறகு தான் இவனை நித்யஸ்ரீயை பார்ப்பதற்கு அனுமதித்தனர்.

இவன் சரியாக உள்ளே நுழையும் போது அங்கே யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்தாள் நித்யஸ்ரீ..

"நீங்க சொன்ன தகவல் எனக்கு ஆச்சரியமா இருக்குது ரொம்ப ரொம்ப நன்றி என்னோட நிறுவனத்தை வளரும் தொழில் நிறுவனமா தேர்ந்தெடுத்ததிற்கு..நீங்க சொன்ன அளவுக்கு நான் சாதித்து இருக்கிறேனா இல்லையா என்று தெரியாது ஆனாலும் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது கதவை லேசாகத் தட்டிவிட்டு உள்ளே வந்து நின்றான் குரு.

பார்வை முழுவதும் குருவை மேல் வைத்துக் கொண்டிருந்தாலும் பேசுவதில் எந்த தடையும் இருக்கவில்லை நித்யஸ்ரீ.

"என்றைக்கு பங்க்ஷன் என்ன சொல்லுங்க அன்றைக்கு நான் அப்பா கூட வர்றேன்" என்று கூறிக் கொண்டிருந்தாள்.

எதிர்முனையில் பேசிக்கொண்டிருந்தவருக்கு... பதிலாக ஓகே சார் என்று பதில் சொல்லிவிட்டு போனை கட் செய்தாள்.

"வா குரு" என்று இவனைப் பார்த்து கூற..

"ம்…வந்துட்டேன் ரொம்ப நாள் கழிச்சு உன்னோட முகம் ரொம்ப தெளிவா இருக்கிற மாதிரி தோணுது நித்யஸ்ரீ ஏதாவது நல்ல செய்தி இருக்குதா.."

"இப்ப தான் போன்ல தகவல் சொன்னாங்க இந்த வருடத்திற்கான சிறந்த தொழில் முனைவோருக்கான அவார்டு எங்க கம்பெனிக்கு கொடுத்திருக்கிறார்கள்.. அதுதான் இப்போ போன்ல சொல்லிக்கிட்டு இருந்தாங்க.."

"வாழ்த்துக்கள் நித்தியஸ்ரீ ஒரு மாதிரியா நீ சாதிச்சுட்ட இல்லையா.."

"எனக்கு தெரியல குரு உட்காரு "என்று அவனுக்கு முன்னால் இருந்த இருக்கையை காட்டினாள் நித்யஸ்ரீ.

"நாட்கள் வேகமாக போய்க்கிட்டு இருக்குது இல்லையா குரு அபிநயாவுக்கு கல்யாணம் அப்படின்னு நான் யோசிக்கவே இல்லை.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது என்னோட வாழ்த்துக்கள் அவர்கிட்ட சொல்லிடு.."

"கட்டாயமா சொல்லிடறேன்.. அதெல்லாம் சரி நீ என்கிட்ட தான் பேசல அபிநயா கிட்ட போன்ல பேசி இருக்கலாம் இல்லையா மொத்தமா கட் பண்ணிவிட்டு அப்படித்தானே.."

"அப்படி இல்ல குரு வீட்டு சூழ்நிலை என்னால வேற எதையும் யோசிக்க முடியல வீடு அதைவிட்டா ஆபீஸ் அப்படியே நாள் நகர்ந்து போயிடுச்சு.". அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் குனிந்தபடியே பதில் கூறினாள் நித்யஸ்ரீ.

"நீ எப்படி இருக்கிற குரு உன்னோட ஒர்க் எப்படி போய்கிட்டு இருக்குது இன்னமும் பெங்களூர்ல தான் இருக்கிறாயா.."

"பரவாயில்லையே என்ன பத்தி கூட கொஞ்சமா தெரிந்து வைத்திருக்கிற ஆச்சரியம்தான்... எங்கே என்ன சுத்தமா மறந்துட்டேன்னு நினைச்சிட்டு இருந்தேன்."

"எப்படி மறப்பேன் நினைக்கிற.."

"மறக்க முடியாது ஆனா கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டா சம்மதிக்க மாட்ட அப்படித்தானே.."நீ செய்தது தவறு என்பது போல அவனுடைய குரல் கேள்வி எழுப்ப நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

"சரி வராது குரு இனிமே அதைப் பற்றி பேசவேண்டாம் கல்யாணத்தை பத்தி இனிமே நான் யோசிக்க போறதே கிடையாது நான் கடைசி வரைக்கும் இப்படித்தான் இருப்பேன்".

"ஏன் உன் அப்பா உனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா... அதனால இந்த முடிவுவா.. ஒருவேளை நான் தான் காரணமா உனக்கு ஆரம்பத்திலிருந்து கல்யாணம் வரைக்கும் என்னை பற்றி யோசித்தது கிடையாது இல்லையா என்ன பிடிக்கல அதனால இந்த முடிவு எடுத்திருக்கிறாயா".. கொஞ்சம் கோபமாக கேட்டான் குரு.

"என்ன கேட்டாலும் என்கிட்ட பதில் கிடையாது குரு முன்னாடி அண்ணனை இழந்த வேதனையில் இதைப்பற்றி யோசிக்க முடியாது என்று சொன்னேன்."

"இப்ப என்ன ஆச்சு.."

"இப்பவும் நிலைமை அப்படியேதான் இருக்கு எதுவுமே மாறலை அண்ணி குழந்தையோட வாழாமல் வீட்டில் இருக்கும்போது நான் மட்டும் எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க முன்னாடி சந்தோஷமா இருக்க முடியும்".

" நான் பூர்ணிமா அண்ணி கூட அந்த மாதிரி பழகுவது கிடையாது என்னோட இன்னோரு சகோதரி மாதிரி தான் அவங்கள பார்க்கறேன். அவங்க அழுதுட்டு இருக்கும்போது நான் நிம்மதியா கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படி என்னால இருக்க முடியும் என்னால முடியாது குரு."

"ஒருவேளை அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்தால் நீ யோசிப்பியா.."

"அவங்களுக்கு அதில் துளிகூட விருப்பம் கிடையாது குரு நான் நிறைய முறை பேசி பார்த்துட்டேன். அவங்க அம்மா அப்பாவும் வந்து இரண்டு பேரும் பேசிட்டு போனாங்க. என் வீட்ல கூட அம்மா அப்பா ரெண்டு பேரும் அவங்க கிட்ட பேசினாங்க.."

"அவங்களைப் பொறுத்த வரைக்கும் பரத் அண்ணா கூட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறார்கள் இன்னொரு வாழ்க்கை பற்றி அவங்க யோசிக்கவே இல்ல அவங்களுக்கு அவங்களோட குழந்தை தான் உலகம் இப்போதைக்கு.."

"இதுக்கு முடிவு தான் என்ன…"

"எனக்கு தெரியல குரு ஆனா அவங்களோட லைப் ஸ்டேபிள் ஆகுற வரைக்கும் என்ன பத்தி நான் யோசிக்கவே முடியாது.ஏற்கனவே உன் கிட்ட முன்னாடி சொன்னதுதான் குரு இப்போது மாற்றி எல்லாம் பேச மாட்டேன். எனக்கு நீ நல்லா இருக்கணும் ஒருவேளை உன் வீட்ல உனக்கு பொண்ணு பார்த்தா தயங்காம என்ன பத்தி யோசிக்காம நீ கல்யாணம் பண்ணிக்கோ இதுதான் என்னோட ஆசை."

" சொன்னாங்க தியாகச் செம்மல் நீ தான்னு... நீ சொன்னதும் நான் அப்படியே அதை கேட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்விடுவேன்னு நினைக்கறையா... ப்ளீஸ் நித்யா இது மாதிரி இனிமே பேசாத இது அபிநயாவோட கல்யாண பத்திரிக்கை வரணும்னு தோனிச்சுன்னா வா.. வர வேண்டாம்னு தோணினா வரவேண்டாம். தப்பா நினைக்க மாட்டேன் "என்று கோபமாக பத்திரிகையை அவளது டேபிள் மேல் வைத்து விட்டு வெளியேறினான் குரு..

பத்திரிக்கை எடுத்துப் பார்த்தவள் தனியாக எடுத்துவைத்தாள் திருமணத்திற்கு நிச்சயமாக போய் விட்டு வர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். எந்த மண்டபம் எந்த நேரம் என்பதை தனியாக காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டாள் நித்யஸ்ரீ.

பிரச்சினைகள் எதுவுமே முடிவுக்கு வரவில்லை கிணற்றில் போட்ட கல் போல அமைதியாக இருந்தது நாட்கள் மட்டுமே நகர்ந்து கொண்டிருந்தது பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல்..

இப்போது அடிக்கடி குரு இவளது கண்களில் பட்டு கொண்டு தானிருந்தான் எப்படியும் வாரத்தில் ஒன்று ,இரண்டு நாட்கள் இயல்பாக அல்லது எதிர்பாராதவிதமாக சந்திக்க நேரிட்டது.

எப்போதுமே வீட்டிற்கு மளிகை பொருட்களை நீண்ட நாட்களாக குருவின் கடைகளில்தான் வாங்குவது.

அங்கே அவனது கடையில் வாங்கிக் கொண்டு வரும்போது அவனோடு கூட இருப்பது போல ஒரு உணர்வு எப்போதுமே நித்யஸ்ரீக்கு தோன்றும்.

பெரும்பாலும் அவனுடைய பெரியப்பா மகன்கள் தான் இருப்பது குரு எப்போதுமே அங்கே இருப்பது எல்லாம் கிடையாது .

ஆனால் இந்த முறை செல்லும்போது அங்கே பில்லிங் செக்சனில் பணம் வாங்கும் பகுதியில் அமர்ந்திருந்தது குரு தான்.

சற்று தயக்கம் தோன்றினாலும் பின் பணம் செலுத்த சென்று தானே ஆக வேண்டும்அவனை நோக்கி நகர்ந்து சென்றாள் நித்யஸ்ரீ.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”