காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்_24

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்_24

Post by Rajeswari.d »

24

இவளிடம் பேசி விட்டு வீட்டிற்கு சென்றவன் எதையோ பறிகொடுத்தது போல வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தான்.

"குரு இன்றைக்கு அபிநயா மாப்பிள்ளையோட விருந்துக்கு வீட்டுக்கு வர்றாங்க..எங்கேயும் புறப்பட்டு போயிடாத சரியா" என்று இவனுடைய தாயார் சொல்லியிருந்தார்.

"எங்கேயும் போகல இங்கதான் இருக்கிறேன்" என்று சொல்லியவன்.."அம்மா வீட்டு ஏதாவது ஸ்வீட் வாங்கணும்னா சொல்லுங்க போய் வாங்கிட்டு வந்துடறேன் "என்று கேட்டான்.

"ஆமாண்டா கட்டாயமா வாங்கணும் நல்ல வேலை ஞாபகப்படுத்தின பணம் எடுத்துட்டு போய் கொஞ்சம் வாங்கிட்டு வந்துடு.*

பதினோரு மணியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது அபிநயா அவனுடைய கணவனோடு வீட்டிற்கு வந்திருந்தாள்.

தடபுடலாக மதிய விருந்து நடந்து கொண்டிருந்தது. அவளுக்கு பிடித்தது என்று எல்லாவற்றையும் பார்த்து பார்த்து சமைத்து வைத்திருந்தனர்.

வீட்டில் அனைவருமே அங்கேயே தான் இருந்தனர் கலகலப்பாக பேசியபடி அனைவருமே மொத்தமாக அமர்ந்திருக்க..அபிநயா கண்களுக்கு குருவின் வாடிய முகமே கண்களில் தென்பட்டது.

மாலை வரையிலுமே அங்கேயேதான் இருந்தாள். இரவு புறப்படுவதற்கு முன்பாக குருவை பார்த்தவள் குருவிடம் நேரடியாக கேட்டிருந்தாள்.

"ஏன் குரு முகம் இப்படி டல்லா இருக்குது என்ன பிரச்சனை நல்லா தானே இருந்த…"

"ஐ ஆம் ஓகே நான் நல்லாத்தான் இருக்கேன் எனக்கு என்ன பிரச்சனை.."

"நீ தான் சொல்லணும் குரு எனக்கு எப்படி தெரியும் கல்யாணத்துக்கு நித்லு வந்து இருந்தா.. ஆனா ஏன் ஸ்டேஜுக்கு வரல… எப்ப புறப்பட்டுப் போனா கல்யாணத்துக்கு கூட நீ சிரிச்ச முகமா இருந்த... ஆனால் மதியத்துக்கு மேல உன் முகமே சரியில்ல இப்போ வரைக்கும் அப்படித்தான் வைத்திருக்கிற.."

"என் மனசுக்குள்ள என்ன தோணுதுன்னா உனக்கு நித்யஸ்ரீயை ரொம்ப பிடிக்கும் குரு அதனால்தான் இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கிறியா.."

"அப்படி எல்லாம் எதுவும் இல்லை நீதான் பார்த்துட்டு இருக்குற தானே ..இதுக்கு முன்னாடி எப்படி இருந்தேன். அதே மாதிரி தான் இப்போது இருக்கிறேன்...பெங்களூர்ல ரெண்டு வருஷம் போய் வேலை செஞ்சு முடிச்சிட்டு இங்கே வந்து இருக்கிறேன் அப்போதெல்லாம் இவளை பார்த்துக்கிட்டு இருந்தேனா.. புதுசு புதுசா கற்பனை பண்ணி கதை சொல்லாத புரியுதா…"

"என்ன கேட்டாலும் என்னோட வாய எதையாவது சொல்லி அடைச்சிடு சரியா.."

"நீ என்ன பத்தி எதுவும் கவலைப்பட வேண்டாம் அபிநயா நீ உன்னோட கணவரோட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழு.இங்கே நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் எப்பவுமே இருப்பேன் போதுமா."

*என்னவோ சொல்ற போடா நான் கிளம்புறேன்..ஒருவேளை உனக்கு நித்யஸ்ரீயை பிடிச்சிருந்தா நீ தயங்காமல் சொல்லலாம் நானே அத்தை மாமா கிட்ட பேசுறேன் இதை பற்றி…"

"என்ன கல்யாணம் ஆன உடனே உன்ன ரொம்ப பொறுப்பான பொண்ணா மாறிட்டதா நினைப்பா அதெல்லாம் தேவையில்லை நீ எப்பவுமே அபிநயா தான்…"

"ஓகே ஓகே நானும் பாக்கத்தானே போறேன். ஏதாவது உதவி தேவைனா நீ என்ன தானே தேடி வந்தாகணும்.."

"இப்ப சொன்னியே இது வேணும்னா சரியான வார்த்தை நிச்சயமா எனக்குள்ள ஏதாவது குழப்பம் என்றால் முதலில் கேட்க போறது உன்கிட்ட மட்டும்தான் .இப்போதைக்கு எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல உன்னோட கல்யாண வேலை அதிகம் இல்லையா அதனால கூட கொஞ்சம் டல்லா தெரியலாம்.."

"கல்யாணத்துக்கு உன்னை எந்த வேலையுமே வீட்ல இருக்கிறவங்க செய்ய விடல.. அது எனக்கு நல்லாவே தெரியும் சும்மா சமாளிக்க வேண்டாம்.ஓகே உனக்குள்ளே எந்த பிரச்சினையும் இல்லை என்றால் அப்புறம் நான் கேட்கிறதில் எந்த அர்த்தமும் கிடையாது.
புறப்பட்டறேன் குரு அடிக்கடி வரணும்.."

"கட்டாயமா அம்மா அப்பா எப்ப எல்லாம் வர்றாங்களோ அப்பல்லாம் நானும் கூடவே வருவேன் போதுமா.."

"இது போதும்டா என்னோட கணவர் பக்கத்துல நிறைய வயசு பொண்ணுங்க இருக்காங்க அவங்க பக்கத்துல உனக்காக ஒரு பொண்ணு பார்க்கலாமா…"

"இப்பதான் சொன்னேன் கல்யாணம் முடிஞ்சதும் நீ பெரிய பொண்ணா ஒன்றும் ஆகிவிடவில்லை .எனக்கு தெரிஞ்ச அதே அபிநயா தான்... இப்போதைக்கு எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா எதுவும் இல்ல.. இன்னும் கொஞ்ச நாள் ஆகும் .

எப்படியும் இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அப்புறம்தான் இதை பற்றி யோசிப்பேன் இப்பதானே அப்பா கூட டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பார்க்க வந்திருக்கிறேன் அதனால..கூடவே இருந்து வேலை எல்லாம் பழகி ஒரு மாதிரியாக செட்டில் ஆன பிறகுதான் கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன்."

"இவ்வளவு தெளிவாக பேசுறப்போ எனக்கு நிம்மதியா இருக்கு குரு.இதையெல்லாம் நான் கேட்கல உங்க அம்மாதான் என் கிட்ட கேக்க சொன்னாங்க அப்படியே கேட்டுட்டேன் நான் அவங்க கிட்ட தெளிவா சொல்லிடேன் அவன் ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கிறான் அத்தை நீங்க தேவையில்லாமல் பயப்பட வேண்டாம். அப்படின்னு சொல்லி விடுறேன் ஓகேவா.." என்றபடி புறப்பட்டுச் சென்றாள்.

அடுத்த சில நாட்களிலேயே நித்யஸ்ரீ தொழில் முனைவோருக்கான அவார்டு வாங்கியிருந்தால் அங்கிருந்த லோக்கல் சேனல் முதல் பத்திரிக்கையின் கூட வந்திருந்தது.

அதைப் பார்க்கும்போது குருவுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் போனில் கூட அழைத்து அவளிடம் வாழ்த்து சொல்ல இயலவில்லை.

இனிமேல் தொந்தரவு செய்யமாட்டேன் என்று கோபமாக கூறிக் கொண்டு வந்திருந்தான். அதை நினைத்தவன் தன்னுடைய போனில் இருந்த கேலரியில் அவளது போட்டோவை தேடி எடுத்து அதை பார்த்து வாழ்த்து கூறினான்.

'ராட்சசி..சந்தோஷமான செய்தியை கூட நேரில் பார்த்து வாழ்த்த முடியல ..என்ன நீ என்ன செஞ்சு வெச்சிருக்கற.. "கோபமாக கூறினாலும் அங்கே சின்ன செல்ல சினுங்களும் இருந்தது

நாட்கள் மிக மிக வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது இங்கே வந்து ஒரு வருடம் முடிந்து விட்டது.

இங்கே குடோனில் இவனுக்கு முழுக்க முழுக்க வேலை சரியாக இருந்தது.வீட்டில் பெண் பார்க்கலாமா என்று குருவிடம் கேட்டுக்கொண்டிருக்க தயங்காமல் தன்னுடைய பதிலைக் கூறி இருந்தான்.

"அம்மா நிச்சயமாக கல்யாணம் பண்ணிக்குவேன் ஆனா இப்போ இல்ல எப்பன்னு எனக்கு தெரியாது கொஞ்சநாள் காத்திருக்கணும்."

"ஏண்டா இப்படி சொல்லுற உங்க அண்ணா ரெண்டு பேருக்குமே கல்யாணம் முடிஞ்சுருச்சு அபிநயாயாவையும் கல்யாணம் பண்ணி அனுப்பியாச்சு மிச்சமிருக்கிறது சின்ன வாண்டு மட்டும் தான் ..அவ இப்ப தான் கடைசி வருடம் படித்துக்கொண்டிருக்கிறா.."

"உனக்கு பெண் பார்த்து கல்யாணம் முடிச்சாச்சுன்னா கடைசியா அவளுக்கும் கல்யாணம் பண்ணினா எல்லாரையும் செட்டில் பண்ணின மாதிரி ஆகிடும் இல்லையா.."

"கொஞ்சம் டைம் வேணும் மா.. இப்பவே கல்யாணம் பண்ணி என்ன செய்யறது எனக்கு என்ன நிறைய வயசாயிடுச்சா."

"ஏண்டா உனக்கே தெரியும் உன் கூட படிச்சவங்க எல்லாம் கல்யாணம் ஆகி எல்லாரும் கையில் ஒரு குழந்தை அப்படின்னு ஆகியாச்சு. நாங்க நல்லா இருக்கும் போதே உன்னோட குழந்தையையும் பார்த்தா நல்லா இருக்கும் இல்ல.."

"அம்மா நான் என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலையே இன்னும் கொஞ்ச நாள் டைம் கொடுங்க அப்படித்தானே கேக்குறேன் ப்ளீஸ் மா நிச்சயமாக கல்யாணம் பண்ணிக்குவேன் .. அதுல எல்லாம் சந்தேகமே வேண்டாம் ஆனால் தயவு செய்து இனிமே இத பத்தி என்கிட்ட கேட்காதீங்க..நீங்கள் கேட்கும் போதெல்லாம் மறுப்பு சொல்ல எனக்கே ஒரு மாதிரியா இருக்கு எனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு.."

அன்றைய அந்தப் பேச்சுக்கு பிறகு இவனது வீட்டில் கூட அவனை தொந்தரவு எதுவும் செய்யவில்லை .நாட்கள் மட்டும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது ஆறு மாதம் என்பது ஒரு வருடமாக மாறி இருந்தது.

நித்யஸ்ரீயின் வீட்டில் கல்யாணத்துக்கு எல்லாம் சம்மதிக்கவில்லை. பலமுறை அவளது தாய் தந்தை இரண்டு பேருமே பேசி பார்க்க முடிவுவாக தன்னுடைய பதிலைக் கூறி விட்டாள்.

"கல்யாணத்துல எல்லாம் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லம்மா .நான் இப்படியே இருந்திடலாம்னு இருக்கிறேன். இங்கே நீங்க அப்பா அண்ணி அண்ணியோட குழந்தை இவங்களோட முகத்தை பார்த்திட்டே இப்படியே வாழ்ந்துடுவேன்.

ஃபேக்டரி இருக்குது நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஃபேக்கரியை பார்த்துக்கறது.. அப்புறம் உங்களை எல்லாம் யாரு பார்க்கிறது.. அண்ணனோட இடத்தில் இருந்து உங்களை எல்லாம் நல்லா பாத்துக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.

அம்மா அதனால இனிமே கல்யாணத்தை பத்தி யாரும் பேச்சு எடுக்காதீங்க...இதையும் தாண்டி பிடிவாதமா பேச்சை எடுத்தா நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன் யார்கிட்டயும் சொல்லாத எங்கேயாவது தூரமாய் போய் விடுவேன் "என்று கோபமாகக் கூறி இருந்தாள்.

சிறு வயதிலிருந்தே நித்யஸ்ரீயை பார்த்துக் கொண்டு இருக்கிறார்களே சாதாரணமாக பேசும் போது பெரிதாக தெரியாது பிடிவாதம் பிடித்தால் அவளை அவ்வளவு சீக்கிரம் சமாதானப்படுத்த முடியாது.

நித்யஸ்ரீயின் தந்தை லட்சுமியிடம் கூறியிருந்தார்." கொஞ்ச நாளைக்கு பேசாம இரு நிச்சயமா அவளுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். அப்படி எல்லாம் விட மாட்டேன் .

ஆனா எப்பவுமே இத மட்டும் சொல்லிக்கிட்டே இருந்தா அவளுக்கு இப்படி தான் தோணும் கொஞ்ச நாளைக்கு வெயிட் பண்ணு" என்று கூறி முடித்தார்.

குழந்தைக்கு கூட ஐந்து வயது முடிந்திருந்தது இப்போது யூகேஜி சென்று கொண்டிருந்தாள்.

பூர்ணிமாவின் தாய் தந்தையர் வீட்டில் வேறு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று ஆரம்பித்தில் கூறி இருந்தாலும் கூட இவள் பிடிவாதமாக மறுத்த காரணத்தினால் போக்குவரத்து அவ்வளவாக இல்லாமல் இருந்தது.

இப்போது நிலைமை அப்படியே மாறி இருந்தது தன்னுடைய மகளைக் காண அடிக்கடி இரண்டு பேருமே வந்து சென்று கொண்டு இருந்தனர்.

இதன் பயனாக பூர்ணிமா கூட அடிக்கடி தன் தாய் தந்தையரை காண தன்னுடைய மகளோடு சென்று வந்து கொண்டிருந்தாள்.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”