காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்_1
Posted: Fri Jun 18, 2021 9:55 am
1
மெலிதான ஏசி சத்தம் கூடவே தனக்கு நேராக மேலே சுற்றிக்கொண்டிருக்கும் விசிறியின் சத்தம்.. இந்த சத்தம் கூட நித்யஸ்ரீக்கு இரைச்சலாக காதில் கேட்டது.
தினமுமே தூங்க வரும்போது பன்னிரெண்டு மணியை நெருங்கி விடும். அதன் பிறகு கூட புரண்டு புரண்டு படுப்பது இப்போதெல்லாம் வாடிக்கையாக மாறியிருந்தது.
வாழ்க்கைப் பயணம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது நித்யஸ்ரீக்கு இந்த நிமிடம் வரைக்கும் புரியவில்லை.
இதோ தன்னுடைய அறைக்கு வந்து படுத்தவள் உடல் அசதியின் காரணமாக இரண்டு மணியை தொடும் போது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.
ஆழ்ந்த உறக்கத்திலும் அந்தக் குரல் தெளிவாக அவளது காதுக்கு கேட்டது. "குட்டிமா.. குட்டிமா"அந்த ஆழ்ந்த உறக்கத்திலும் அவரது முகம் லேசான புன்னகையை தோற்றிருந்தது. "அண்ணா வந்துட்டியா.. மறுபடியும் திரும்ப வந்துட்டியா.. "என்று தூக்கத்திலேயே கேட்டாள் நித்யஸ்ரீ.
ஒரு நிமிடம்தான் காட்சி மாறி இருந்தது. இப்போது அவளை அழைத்துக் கொண்டு இருந்தது வேறு ஒரு நபர். "குட்டிமா என்ன மொத்தமா மறந்துட்ட இல்லையா.. "இப்படி அந்தக் குரல் கேட்கவும் குரலுக்கு உரியவனின் உருவம் தனக்கு முன்பாக நிற்பது போல் தோன்ற சட்டென வேகமாக எழுந்து அமர்ந்தாள் நித்யஸ்ரீ.
முகம் முழுக்க வியர்வையை பூசி இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து இது போன்ற ஒரு கனவு தற்சமயம் இவளுக்கு வந்திருக்கிறது.
எல்லாமே முடிந்து விட்டது என்று வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து விடலாம் என்று முடிவு செய்த பிறகு இப்போது எதற்காக இவனின் ஞாபகம் தனக்கு வருகிறது.
அதன்பிறகு விடியும் வரையிலும் கண்களை மூடவே இல்லை நித்யஸ்ரீ... தூக்கம் எதுக்கோ ஓடி ஒளிந்து இருந்தது. இப்போது எதற்காக இவனின் ஞாபகம் இன்றைக்கு எனக்கு வருகிறது. நினைவை விட்டு விரட்ட எவ்வளவு முயற்சி செய்தாலும் இவளது உயிரோடு கலந்தவன் அல்லவா.. எப்படி மறைந்து விடுவான்.. ஐந்து மணி வரையிலும் பெட்டில் புரண்டு கொண்டிருந்தவள் அதற்கு மேல் படுக்க பிடிக்காமல் எழுந்து வெளியே வந்தாள்.
அந்த நேரத்திலேயே இவனது தாயார் லஷ்மி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். எழுந்து வந்த இவளை பார்க்கவும் என்ன நித்து தூங்கி எழுந்துட்டியா... என்று கேட்டபடியே கையில் வைத்திருந்த காபியை இவளுக்கு கொடுத்தார்.
மகளுடைய முகத்தை பார்க்கவுமே தெரிந்துவிட்டது... இரவெல்லாம் தூங்கவில்லை என்று..இதுவே அவருக்கு கோபத்தைத் தூண்டி இருந்தது.
"ஏன் நித்து நைட் எல்லாம் தூங்கலையா. கண்ணு ரெண்டும் கோவப்பழம் மாதிரி சிவந்து கிடக்குது."
"ஏதேதோ கனவு மா. அண்ணா கூட வந்தாங்க அதுக்கப்புறம் எனக்கு தூக்கமே வரல. நேரத்தை பார்க்கவும் எழுந்து வந்துட்டேன் ஏன்மா கேட்கிறீங்க.."
"வயசு புள்ள கல்யாணம் பற்றிய கனவு கண்டால் சந்தோஷப்படலாம்.. இங்கே அப்படியா நடக்குது. என்னோட பேச்சை யாருதான் கேட்கறீங்க இந்த வீட்ல..
பைத்தியக்காரி மாதிரி கத்தி கத்தி ஒருநாள் இல்லாமல் போய் விடுவேன் போல இருக்கு."
"ஏன் மா காலையில் இப்படியெல்லாம் பேசுறீங்க.. இழந்தது வரைக்கும் போதும்மா.. இனிமே யாரையும் இழக்கற தைரியம் எனக்கு கிடையாது." இவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இவனது தந்தை குமார் வந்திருந்தார்.
"என்ன லட்சுமி காலையிலேயே அவளைத் திட்டிக் கொண்டிருக்கிற... என்ன ஆச்சு" என்று கேட்டார்.
"எப்பவும் என்ன மட்டுமே குறை சொல்லுங்க இவ பண்ற தப்பு உங்களுக்குப் புரியுதா புரியலையா...நானும் எத்தனை முறைதான் கேட்டுக்கிட்டு இருக்கிறது.."
"என்ன கேட்கணும் உனக்கு அவள் கிட்ட…அதுவும் இந்த காலை நேரத்தில்.."
"அவ கிட்ட பெருசா என்ன கேட்கப் போறேன்.. மத்த பொண்ணுங்க மாதிரி ஒரு கல்யாணம் கட்டிக்கோ இத தான கேக்கறேன்.இதுவரைக்கும் இவ பிடிகொடுத்து பேசி இருக்கிறாளா நான் தான் இங்கே கிடந்து அல்லாடறேன்.."
"இப்போ உங்களுக்கு என்னதான் பிரச்சினை அம்மா.. எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் கிடையாது.. கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்கப் போறேன்.போதுமா இதுதான் என்னோட பதில்".
"பாருங்க எப்படி கூட கூட பேசலாம்னு..இவள் கிட்ட ஏதாவது சொல்ல முடியுதா".
"லஷ்மி உனக்கு உன்னோட தப்பு புரியுதா.. காலையில எழுந்து வந்த பொண்ணு கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்கிற..போய் காலையில் வேலையை பாரு. கேட்க நேரம் இருக்கு பார்க்கும் போது எல்லாம் அவள் கிட்ட சண்டை போட்டா எப்படி?"
"எப்பவுமே உங்களுக்கு நான் பேசறது மட்டும் தான் தெரியுமா...அவளோட தப்பு உங்களுக்கு புரியவே புரியாதா...இன்னும் எத்தனை நாள் இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருக்கப் போறேன்னு தெரியல."
"அம்மா ப்ளீஸ்.. காலையிலேயே ஆரம்பிக்காதீங்க... நான் இன்றைக்கு சீக்கிரம் ஆபீஸ் போகணும்."
"ஆபீஸ் ஆபீஸ் ஆபீஸ்...இன்னும் எத்தனை நாள் அதையோ கட்டிக்கிட்டு அழப்போற... ஒருத்தன் அந்த ஆபீஸ்சையே கட்டிப் பிடிச்சிக்கிட்டு ஒரேடியா போய் சேர்ந்திட்டான். நீ என்ன செய்யப் போற.. என்னோட உயிரை எடுக்க போறியா.."
அம்மா…
"போதும் லட்சுமி இதுக்கு மேல பேசாத... என்ன பேச்சு இது காலையிலேயே இத்தனை பேசுற.. நீ போ நித்து.. ஆபிசுக்கு நேரத்தோடவே கிளம்பு.. உன்னோட அம்மாவுக்கு காலையிலேயே பைத்தியம் பிடிச்சிருச்சு.. அதுதான் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறா.."
"ஆமாம்மா என்ன சொன்னாலும் இப்படி ஒரு வார்த்தை சொல்லி என்னோட வாயை அடச்சிடுங்க.."கோபமாக சொன்னபடி சமையலறைக்குள் நுழைந்தார்.
அமைதியாக சென்று நிந்து வேகமாக புறப்பட தயாரானாள். எட்டுமணிக்கு மறுபடியும் ஹாலுக்கு வர இவளுடைய அண்ணி பூர்ணிமா குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள்.
"அண்ணி நாளைக்கு காலையில பாப்பாவுக்கு பிறந்த நாள் ஞாபகம் இருக்கிறதா.. புது டிரஸ் எடுக்கணும் கேக்கிற்கு ஆர்டர் கொடுக்கணும். எதுவுமே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம் "என்று கேட்ட நித்யஸ்ரீ நிமிர்ந்து பார்த்தாள் பூர்ணிமா.
நித்யஸ்ரீற்கு தற்சமயம் இருபத்தி ஐந்துவயது நடந்து கொண்டிருக்கிறது. இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. தற்சமயம் தன்னுடைய அண்ணாவின் கனவான அவனுடைய பேக்ட்டரியை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
நித்யா பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண்ணின் தோற்றத்தில் இருப்பவள். நாம் தினம் சந்திக்கும் பெண்களை விடவும் சற்று உயரமானவள். லேசாக பூசினாற் போல உடல்வாகு..இடுப்பு வரைக்கும் நீளமாக இருக்கும் அடர்ந்த தலைமுடி. அதை அழகாகப் பின்னி விட்டிருந்தாள்.
நல்ல திறமைசாலி கற்பூர புத்தி என்று சொல்வார்களே அது போல அவளுடைய அறிவு கூர்மையானது. அழகான குடும்பம் இவர்களுடையது.தாய் தந்தை அண்ணா இவள் என்று அழகாக இருந்த நந்தவனம் தற்சமயம் பொலிவிழந்து காணப்பட்டது.
"எதுவுமே பிடிக்கலை நித்யா.. இதெல்லாம் வாங்கணுமா என்ன அப்படின்னு இருக்கு.நான் எங்கேயும் வரலை வீட்டிலேயே இருந்து கொள்கிறேன்.ஏற்கனவே எடுத்த உடையே இருக்கு. அது போதும்".
"அப்படி சொல்லக் கூடாது அண்ணி.. இன்னைக்கு பதினோரு மணிக்கு நேரா போத்திஸ் வந்துடுங்க.. அங்க பாப்பாவுக்கு டிரஸ் எடுத்திடலாம். நான் காலையில ஆபிசுக்கு போயிட்டு அப்படி சரியான நேரத்துக்கு அங்க வந்துடறேன். என்ன சொல்றீங்க.."
"ம்... சரி நித்தி" என்றபடி நகர்ந்தாள் பூர்ணிமா. பூர்ணிமா முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்தாள். இவனது உலகமே தற்சமயம் குழந்தை மட்டும் தான்.இவள் வாழும் வாழ்க்கை கூட அந்தக் குழந்தையை சுற்றியே இருந்தது.
குழந்தை சுவேதாவிற்கு நான்கு வயது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வீட்டில் உள்ள அனைவருக்குமே அவள் தான் உலகம்.
தாய் பூர்ணிமா ஆகட்டும் அத்தை நித்யஸ்ரீ ஆகட்டும் பாட்டி, தாத்தா என அனைவருக்குமே இவள் ஒரு தேவதை.
நடந்து முடிந்த அத்தனை நிகழ்சிகளையும் தற்சமயம் மறக்கச் செய்பவள் இவள் மட்டுமே..
நடந்து முடிந்திருந்த இழப்பு மிகவும் பெரியது தான். அதிலிருந்து யாராலும் மீண்டு இந்த நிமிடம் வரைக்கும் வரவில்லை.. குழந்தையின் ஒவ்வொரு செயலும் அப்படியே அவனது தந்தையை ஜெராக்ஸ் செய்தது போல இருந்தது. இதைப் பார்த்து ஆறுதல் அடைவதா.. இல்லை தினம் தினம் நினைத்து அழுவதா.. விடை தெரியாத கேள்வி இது.
நித்யஸ்ரீ தன்னுடைய காரில் புறப்பட்டு ஆபீஸுக்கு சென்றாள். மறுபடியும் கூட பூர்ணிமாவிடம் பேசி விட்டு நகர்ந்தாள்.
"அண்ணி சரியாக பதினோரு மணிக்கு அங்க வந்துடுங்க. நான் உங்களுக்கு போன் பண்ணுறேன்.சரியான நேரத்துக்கு நானும் துணிக்கடைக்கு வந்துடறேன். பாப்பாவுக்கு டிரஸ் அப்படியே கேக்கும் ,சாக்லேட் வாங்கி விட்டு உங்கள் வீட்டில் வந்து விட்டுட்டேன்" என்று கூறினாள்.
அப்போதும்கூட இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த லஷ்மி... "ஒருத்தி கல்யாணம் பண்ணியும் கடைசி வரைக்கும் வாழ முடியாமல் தனி மரமா நிற்கறா.. வாழவேண்டிய பொண்ணு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கிறா.. இதையெல்லாம் பார்க்கணும்னு என்னோட தலையெழுத்து... "என்று புலம்பியபடியே நகர்ந்தார்.
காதில் எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை நித்யா...நேராக தன்னுடைய ஆபிசுக்கு சென்ற பிறகும் கூட இரவு கண்ட கனவே கண்களுக்குள் வந்து சென்று கொண்டிருந்தது.
ஏன் இத்தனை நாள் இல்லாமல் இப்படி ஒரு கனவு மறுபடியும் தனக்கு வரவேண்டும். எல்லாமே முடிந்து விட்டதாக தானே நினைத்திருந்தாள். இப்போது இத்தனை நாள் கழித்து மறுபடியும் ஏன் ஞாபகம் வருகிறது.
இப்படியாக யோசித்தபடியே அமர்ந்திருந்தாள் நித்யஸ்ரீ... ஆபீஸ் தான் முன் இருந்ததே தவிர இவளுடைய பேக்டரி ஆபீஸ்க்கு பின்புறத்தில் அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.
இடம் கூட இவர்களுடைய சொந்த இடம் தான்.. எத்தனையோ கனவுகளோடு ஆரம்பித்த இந்தத் தொழில்.. இதன் வளர்ச்சியை பார்க்கும் முன்னமே எல்லாமே முடிந்து இருந்தது.
எதுவும் யோசனை மனதில் தோன்ற அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் வேகமாக அங்கிருந்து புறப்பட்டாள் நித்யஸ்ரீ.. வண்டியை ஸ்டார்ட் செய்தவள் உடனே தன்னுடைய அண்ணிக்கு போனில் அழைப்பு விடுத்தாள். அண்ணி அங்க தான் வர்றேன் புறப்பட்டாச்சா..
"நீயே வீட்டுக்கு வர்றியா என்ன.."கொஞ்சம் ஆச்சர்யமாக கேட்டாள் பூர்ணிமா.
"ஆமா அண்ணி நானே வந்து அழைச்சுக்கிட்டு போறேன்... ஆபிசிலிருந்து புறப்பட்டாச்சு.. சீக்கிரமா ரெடியா இருங்க.. "என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
அங்கு சென்று பார்க்கவும் பூர்ணிமாவும் குழந்தையும் ரெடியாக இருந்தனர். பூர்ணிமாவின் கண்கள் கலங்கி சிவந்து இருந்தது. இதையும் சில வருடங்களாக பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள் நித்யஸ்ரீ.
குழந்தை பிறந்த அன்று தான் இவர்களுடைய அண்ணன் பரத்தை இழந்திருந்தனர். அன்றைய நாள் ஒவ்வொரு வருடமும் இவர்களுக்கு துக்க நாளாகவே தோன்றியது. ஆனாலும் அதிலிருந்து அனைவரையும் மீட்டு வர வேண்டி அந்த நாளைக்கு மகிழ்ச்சியான நாளாக மாற்ற ஏதேதோ செய்து கொண்டிருக்கிறாள். ஓரளவுக்கு அதில் வெற்றியும் கண்டிருக்கிறாள்.
சரியாக பதினோரு மணிக்கு போத்திஸிற்குள் தனது அண்ணியோடும் குழந்தையோடும் உள் நுழைந்தாள் நித்யஸ்ரீ.
அன்றைக்கு நல்ல முகூர்த்த நாள் என்பதினால் நிறைய கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடியே ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள்.
"அண்ணி பாப்பாவுக்கு டிரஸ் எடுத்துட்டு வாங்க நான் இங்கேயே வெயிட் பண்ணறேன். இன்னைக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு."
"சரி விடு நித்து.. நான் போய் பார்த்து எடுத்துட்டு வர்றேன்" என்று விலகி நடந்தாள் பூர்ணிமா.
நித்யஸ்ரீ ஒரு ஓரமாக அமரந்த பின்பும் ஏனோ இன்று மனம் படபடப்பாக இருந்தது. ஏனென்று தெரியாமலே ஒருவிதமான கலக்கம்.. நீண்ட நாட்களுக்கு பிறகு இது போல இன்று உணர்கிறாள். சற்றே தவிப்பு தோன்ற சுற்றிலும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.