காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்_2
Posted: Mon Jun 21, 2021 2:08 pm
2
முதல் முதலாக அவனது குரல் அவளது காதுக்கு கேட்டது. சட்டென நிமிர்ந்து எதிரில் பார்க்க இவனைப் பார்த்து தான் வந்து கொண்டிருந்தான்.
தன்னையறியாமல் எழுந்து நின்றாள் நித்யஸ்ரீ. வந்தவனும் கூட இவளைப் பார்த்து விட்டான். சற்றே முறைத்தபடியே இவளைப் பார்த்து தான் வந்து கொண்டிருந்தான்.
நீண்ட நாட்கள் கழித்து இது எதிர்பாராத விதமாக நடக்கும் சந்திப்பு அல்லவா... அவனைப் பார்க்கும் போது சற்று ஆச்சரியம் தான் இவளுக்கு...
இவன் எப்போது இவ்வளவு அழகான கம்பீரமான ஆண்மகனாக மாறினான்.. கொஞ்சம் வியப்பாகவே அவனைப் பார்த்தாள்.ஏனென்றால் கடைசியாக இவனை பார்த்த போது சற்றே பூசினாற்போல தான் இருந்தான்.
சாப்பிடுவதில் அவனுக்கு எப்போதும் வஞ்சனை கிடையாது. தனக்கு என்ன பிடிக்குமா விருப்பம் போல வாங்கி உண்பவன்.
ஆனால் இப்போது பார்க்கையில் இன்னும் உயரமாக தெரிந்தான் அவளது கண்களுக்கு…
கொஞ்சம் திகைப்பாக இருந்தாலும் பார்ப்பது மனதிற்குள் எங்கோ ஒரு இடத்தில் மகிழ்ச்சியும் இருந்தது. இடைப்பட்ட இத்தனை நாட்களில் ஒரு நாள் கூட இவளை சந்திக்க முயற்சிக்கவில்லை.ஆனால் இப்போது...
எதிர்பாராத சந்திப்பு இல்லையா நித்யஸ்ரீ..கேட்டவனின் பார்வை முழுக்க இவளது முகத்தை தான் பார்த்து கொண்டு இருந்தது.
"குரு எப்படி இருக்கிற "என்றபடி அவனது முகத்தையே பார்த்தாள்.இவனை சந்தித்து முழுவதுமாக நான்கு வருடம் ஆகி இருக்குமா..கடைசியாக தன்னுடைய அண்ணன் இறந்த சில நாட்களில் இவனை பார்த்தது.
இருவருமே பேச ஆரம்பித்து கடைசியில் சண்டையில் முடிய கோபமாக புறப்பட்டு சென்றவன் தான். மறுபடியும் கூட நிறைய முறை அவளை சந்திக்க முயற்சி செய்து தோல்வியை கண்டு இருந்தான்.
நிந்யஸ்ரீ தன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லை. கடைசியாக கோபமாக சத்தம் போட்டு விட்டு சென்றவன்.
இதோ இன்று மறுபடியும் நேரில் சந்திக்கிறாள். கடைசியாக பார்க்கும் போது இருந்த கோபம் இப்போதும் அவனது முகத்தில் இருந்தது.
இவளுக்குத்தான் அவனை நன்றாக தெரியுமே பார்த்த நாளிலிருந்து இவனுக்கு கோபம் மட்டுமே கூடப் பிறந்தது. கோபப்படாமல் இயல்பாக பேசினால் அதுதானே அதிசயம்.
"என்ன விசேஷம் குரு "என்று தயங்கி கேட்டாள் நித்யஸ்ரீ.
"கல்யாணம்தான் வேற என்ன.."
இந்த பதில் அவளை சற்றே திகைக்க வைத்தது."உனக்கா…"
"ஏன்? பண்ணிக்க கூடாதா...நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேனா என்ன?. அதுதான் வீட்ல கேட்கவும் ஓகே சொல்லிட்டேன்.இங்கே வந்திருக்கிறது கூட டிரஸ் எடுக்க தான்…"
"ஓ…" என்றபடி அவனது முகத்தை பார்த்தவள் பிறகு தன்னுடைய கைகளை அவனுக்கு எதிராக நீட்டினாள். "வாழ்த்துக்கள் குரு இதத்தான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே உன் கிட்ட சொன்னேன். நீ தான் கேட்கல எனக்கு நீ கல்யாணம் பண்ணிக்கப் போறது ரொம்ப சந்தோஷம் தான்.நீ ரொம்ப நல்லா இருக்கணும் அதுதான் என்னோட ஆசை."
"உன்னோட வாழ்த்து இல்லாட்டி கூட என்னால நிம்மதியா வாழ முடியும். நீ கூட கூடிய சீக்கிரம் உனக்கு ஏத்த மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ இன்னும் எத்தனை நாள் இப்படியே ஆபீஸை கட்டி புடிச்சிட்டு இருக்க முடியும் .."
"ஏன் பண்ணிக்க மாட்டேன் நிச்சயமாக கல்யாணம் பண்ணிக்குவேன். அதில் எல்லாம் உனக்கு சந்தேகம் தேவையில்லை".
"ஆனா உன்னோட குணத்துக்கு மாப்பிள்ளை கிடைக்கிறது கஷ்டம் இல்லையா வேணும்னா உனக்காக ஒன்றே ஒன்று செய்யறேன்... மாப்பிள்ளையே வேணும்னா நான் பார்த்து தரவா... "இந்தக் கேள்வி அவளை எந்த அளவிற்கு பாதிக்கும் என்று தெரிந்தே கேட்டான் குரு.
"அந்த சிரமம் உனக்கு தேவை இல்ல குரு எனக்கு அம்மா அப்பா உயிரோட தான் இருக்கிறார்கள்.. அவங்களுக்கு தெரியும் எனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கணும்னு...."
"எஸ் எஸ் ஆனா ஒரு நிலையான முடிவுல எப்போதுமே நீ இருக்கிற ஆள் கிடையாது இல்லையா அதனால தான் சொன்னேன்…எனி வே..கேட்க மறந்துட்டேன் இப்போது எல்லாம் சாப்பிடுவது இல்லையா..இப்படி ஒல்லியா கொத்தவரங்காய் மாதிரி இருக்கற.. அக்கறையா கேட்டதா நினைக்க வேண்டாம்.. பார்த்ததும் முதல்ல உடம்பு கம்மியானது தான் தெரியுது."
"ஏன் அங்க மட்டும் என்ன வாழுதாம்.. நீ கூட தான் ஒல்லியா தெரியற…அப்புறம் உன்னோட வருங்கால மனைவி துணி எடுக்க வந்திருக்கிறாங்களா என்ன? நான் பார்க்கலாமா அவளை.. சாரி அவங்கள.."
"அட அட அட இந்த ஸ்ரீ பொண்ணுக்கு தான் எத்தனை ஆர்வம்.. அதுவும் என்னோட வருங்கால மனைவியை பார்க்கறதுக்கு... நிச்சயமா முதல்ல உனக்குதான் காட்டுவேன். நீ சொல்லு நீ எப்ப கல்யாணம் பண்ணிக்க போற…"
"ஏன் நீயே கல்யாணத்துக்கு தயாராகும் போது நான் மட்டும் இப்படியேவா இருக்கப் போறேன்". என்று அவனுக்கு பதிலாக கூறிக்கொண்டிருக்கும் போதே இவர்களை நோக்கி அபிநயா வந்து கொண்டிருந்தாள்.
"ஹாய் நித்து எவ்வளவு நாளாச்சு உன்னை பார்த்து... நிஜமா இந்த இடத்தில் உன்னை எதிர்பார்க்கவே இல்லை.. எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருக்குது உன்னை இந்த இடத்தில் பார்க்கும் போது."
*ஹாய் அபி அண்ணி குழந்தைக்கு டிரஸ் எடுக்க இங்கே வந்தோம் ஆல்ரெடி எடுத்து இருப்பாங்க... பில் செட்டில் பண்ணிட்டு கிளம்ப வேண்டியதுதான். நீ சொல்லு என்ன இந்த பக்கம்.."
"குரு சொல்லலையா எனக்கு கல்யாணம் நித்து.. நாங்க குடும்பத்தோட இன்றைக்கு இங்கே வந்திருக்கிறோம். நான் குருவை தேடி இங்கே வந்தேன். பார்த்தால் ஆச்சரியம் நீ இருக்கிற.."
"ஒ.. "என்று அவளுக்கு அதற்கு மேல் சொல்வது என்று தெரியவில்லை நித்திக்கு... அமைதியாக நின்றிருந்தாள். எதையோ இழந்துவிட்டது போல மனம் வெறுமையாக காட்சியளிக்க ஆரம்பித்தது.சிரிக்கவும் முடியாமல் ஓ என்று அழவும் முடியாமல் ஒரு மாதிரியான கலவையான மன நிலையில் நின்றிருந்தாள்.
இப்போதும் கூட குரு இவளது முகத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். இவளுடைய முகம் மாறுதல் எதுவுமே அவனுக்கு அவனுடைய கண்களுக்கு தப்பவில்லை.
'விளக்கவும் முடியாது ஆனால் அதே நேரத்தில் வாழ சம்பாதிக்கவும் மாட்ட... அப்படி இருக்கும்போது எதற்காக மிட்டாய் பறிகொடுத்த குழந்தையைப் போல இப்படி ஒரு ஏக்கப் பார்வை பார்க்க வேண்டும்.' அவ்வப்போது குருவை தவிப்பாக அவனது கண்களை பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தது.
இதற்கு மேல் அவளை தவிக்க வைக்க அவனுக்கும் மனதில் இஷ்டம் கிடையாது. ஏனென்றால் இதற்கு மேல் ஏதாவது பேசினால் அழுது விடுவேன் என்பது போல நின்று இருந்தாள் நித்யஸ்ரீ.
"ஓகே அபி பேசிக்கிட்டு இரு வந்துடறேன்... அம்மா எல்லாம் மாடியில தான் இருக்கிறார்கள் பார்த்துட்டு வருகிறேன்" என்றபடி நகர்ந்தான் குரு.
அவன் நகரவும் அபிநயாவை பார்த்தவள் "மாப்பிள்ளை யாரு நம்ம குருவா "என்று கேட்டாள்.
"என்ன கேள்வி இது நித்யா.. உனக்கு தான் தெரியுமே சின்ன வயசுல இருந்து ரெண்டு பேரும் ஒரே வீட்டில் வளருகிறோம். அப்புறம் எப்படி..குரு சம்மதிப்பான். வீட்ல அம்மாவுக்கு நிறைய ஆசை தான் என்னை குருவுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கனும்னு.. ஆனா குரு தெளிவாகப் பேசி விட்டான்அவ எனக்கு கூடப் பிறந்த தங்கை மாதிரி அப்படின்னு.. அப்புறம் அவனே ஓகே சொன்னா கூட நான் சம்மதிக்க மாட்டேன். உனக்குதான் தெரியுமே.. மாப்பிள்ளை சென்னை பக்கத்துல பார்த்திருக்கிறார்கள்.. பெரிய தொழில் அதிபர்.. அத்தை மாமா குரு மூணு பேரும்தான் பார்த்து இந்த இடத்தை முடிச்சு கொடுத்தாங்க.கல்யாண பத்திரிக்கை எல்லாம் அடிச்சாச்சு.. நான் சீக்கிரமா பத்திரிக்கையை உன்னோட ஆபிசுக்கு கொண்டு வருகிறேன்."
" அபி எப்ப வேணும்னாலும் ஆபிசுக்கு பத்திரிக்கை கொண்டு வரலாம். இல்ல வீட்டுக்கு வருவதாய் இருந்தால் கூட ஒன்னும் பிரச்சனை இல்ல நான் உன்னோட வருகைக்காக வெயிட் பண்ணுவேன்.."
"கட்டாயமா வர்றேன் நித்யா பை" என்ற படி நடந்து சென்றாள். பேசி விட்டு நகர்ந்து செல்லவும் தான் மனம் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
அதே நேரத்தில் அவன் பேசி விட்டது சென்றது ஞாபகம் பொண்ணு இங்கே தான் இருக்கிறா... கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் தெரியும்.யோசனையோடு திரும்பிப் பார்க்க எதிரில் இருந்த கண்ணாடியில் இவளது உருவம் பிரதிபலித்தது.
அவன் தன்னைத்தான் சொல்லி விட்டு சென்றிருக்கிறான் என்று நினைக்கும்போது கொஞ்சம் மனம் மகிழ்ந்தாலும்.. எப்படியும் நடக்காத ஒன்றுக்கு என் கனவு காண வேண்டும் என்று இன்னொரு மனம் இவளிடம் கேள்வி கேட்பது.
அதேநேரம் இவனுடைய அண்ணி பூர்ணிமா.. உடையை எடுத்தபடி இவள் அருகில் வந்து நின்றாள். "எடுத்தாச்சு நித்து போகலாமா.."
போகலாம் அண்ணி என்றபடி எழுந்து நின்றாள் நித்யஸ்ரீ.
" யார்கிட்ட பேசிக்கிட்டு இருந்த நித்யா."
"காலேஜ் பிரண்டு அண்ணி.. அவளுக்கு கல்யாணம் ஆகப்போகுது அதைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். பாப்பாவை கொடுங்க நான் வச்சுக்குறேன். போகலாம் அண்ணி. உங்கள வீட்ல விட்டுட்டு அப்படியே ஆபிசுக்கு போயிடரேன்."
*ம்.. போகலாம் வா" என்றபடி நடந்தாள் பூர்ணிமா.
நேராக பூர்ணிமாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றவள் அதன்பிறகு ஆபீசுக்கு செல்லும் எண்ணம் துளியும் அவளுக்கு இருக்கவில்லை. வீட்டில் தந்தை மட்டுமே இருந்தார். அவரைப் பார்க்கவுமே "அப்பா அம்மா எங்கே போயிருக்காங்க.." என்று கேட்டாள்.
"கோவிலுக்கு போய் இருக்கிறா மா.. சாயங்காலம் தான் வருவா ஏன்டா கேக்கற…"
"என்னப்பா சும்மாதான் எனக்கு கொஞ்சம் தலை வலியா இருக்குது ரூம்ல கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வருகிறேன் பா.. இதுக்கு மேல ஆபீஸ்க்கு போகலை.."
"இதையெல்லாம் ஏன் டா என்கிட்ட சொல்லிட்டு இருக்கற.. உன்னுடைய இஷ்டம் தான். நீ ஆபீஸ்க்கு போன நாள் முதலா இந்த நாள் வரைக்கும் ஒரு நாள் கூட நீ ரெஸ்ட் எடுத்து பார்த்தது இல்லை. நீ போய் தூங்கு. இங்கே செய்ய எந்த வேலையும் கிடையாது டா "என்று கூறினார்.
அமைதியாக தன்னுடைய அறைக்குச் சென்றதும் கண்களை மூடி படுத்துகொண்டாள். தூக்கம் எல்லாம் வருவதாக இல்லை ஆனால் பழைய நினைவு வரிசையாக வலம் வர ஆரம்பித்தது.
முதலில் ஞாபகம் வந்தது.. குருதேவ்.. இவனை முதல் முதலாக சந்தித்த அந்த நிகழ்ச்சி இன்னமும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது.
ஒரு நாள் இரண்டு நாள் பழக்கம் அல்லவே அவனக்கும் இவளுக்குமானது. இவளுடைய ப்ரீ கே ஜியில் இருந்து காலேஜ் வரைக்கும் கூடவே வந்தவன் அல்லவா…
தன்னையுமறியாமல் பழைய நினைவுகளுக்குள் மூழ்கியிருந்தாள் நித்யா. அதேநேரம் குருவும் கூட அதை தான் நினைத்துக்கொண்டு இருந்தான்.. இருவரின் மனம் கூட ஒருவரைப் பற்றி ஒருவர் நினைப்பதில் ஒரே திசையில் பயணம் செய்து கொண்டு இருந்தது.
முதல் நாள் இவள் ஸ்கூலுக்கு அழைத்துச் செல்ல.. அத்தனை அடம்பிடித்து ரகளையில் ஈடுபட்டு இருந்தாள் நித்யஸ்ரீ.. மூன்றரை வயதிற்கு ஏற்ற துரு துருப்போடு... குட்டி குட்டியாக இரண்டு குதிரை வாழ் ஜடையும்.. கொழு கொழு கன்னமுமாக பளிச்சென்ற பால்வண்ண முகத்தோடு அன்றைய கிளாஸ் ரூம்பிற்குள் அழைத்து வரப்பட்டாள்.
அழைத்து வந்திருந்தது அவளுடைய தந்தையும் அண்ணனும்... அண்ணனின் கையை பற்றியபடி கிளாஸ் ரூமிற்குள் செல்லமாட்டேன் என்று அடம்பிடித்து கதறிக் கொண்டிருந்தாள்.
இவன் அழுவதைப் பார்த்து இன்னும் சில குழந்தைகள் கூட ஓவென்று அழ ஆரம்பித்தனர்.
பார்க்கவே அத்தனை வேடிக்கையாக இருந்ததுஅப்போது தான் முதல் முதலாக குருவை பார்த்தது..
அவனையும் அன்று தான் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். அவன் அழ எல்லாம் இல்லை சுற்றிலும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.
அழக்கூடாது என்று அவனிடம் கூறி நிறைய சாக்லேட்டுகளை கொடுத்துவிட்டு சென்றிருந்தனர். சாக்லேட் கிடைத்த மகிழ்ச்சியில் அழுகை எல்லாம் அவனுக்கு வரவில்லை.
நித்யஸ்ரீ அழுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த வகுப்பு ஆசிரியர் சிறிது நேரம் கழித்து நித்துவை அமைதியாக உள்ளே அழைத்துச் சென்றார்.
"முதல் நாள் இல்லையா அதுனால தான் குழந்தை அழறா… இன்னும் இரண்டு நாட்கள் வந்தா பழகிடும்.. நீ வாடா குட்டி" என்று அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்.
நித்திக்கு தந்தை விலகிப் போவது கூட பெரியதாக தெரியவில்லை அவளுடைய அண்ணன் நகர்ந்து செல்வது தான் சுத்தமாக பிடிக்கவில்லை.. அழுகை எல்லாம் அண்ணா அண்ணா என்று கத்திக் கொண்டிருந்தாள்.
இவளை விடவும் ஏழு வயது பெரியவன் ஆன பரத்திற்கு.. நித்யஸ்ரீ என்றால் உயிர்.. இவனுடைய குட்டித்தங்கை.. அதுவும் அழகான குட்டி தங்கை. எப்போதுமே பரத்துக்கு நித்யஸ்ரீ என்றால் உயிர்.
இப்போதும் கூட அண்ணனுக்காக தான் அழுகிறாளே தவிர இங்கே ஸ்கூலுக்கு வந்ததினால் கிடையாது.
அவருடைய வகுப்பு ஆசிரியர் அவளை தூக்கிக்கொண்டு அறைக்கு அழைத்து சென்றவர் ஒரு ஓரத்தில் அமர வைக்க.. இன்னமும் தேம்பிக் கொண்டு இருந்தாள். அப்போது தான் முதல் முதலாக குரு இவளுக்கு அருகில் வந்தது.
"ஹாய் குட்டி பாப்பா ஏன் இப்படி அழுகுற.. இந்த சாக்கி பிடிக்குமா உனக்கு நான் தரட்டுமா" என்று பாக்கெட்டில் இருந்த சாக்லேட் எடுத்து நீட்டினான். அந்த நிமிடம் அழுகை மட்டுப்பட அழுத விழிகளோடு புன்னகைத்தபடி கையை அவனுக்கு நேராக நீட்டிக் இருந்தாள் நித்யஸ்ரீ.