காதல்_5

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_5

Post by Rajeswari.d »

5
நித்துவை சமாதானம் பண்ணுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை குருவிற்கு... இவனது முகத்தை திரும்பி கூட பார்க்காமல் எங்கோ பார்த்தபடி சுற்றிக் கொண்டிருந்தாள் நித்து.

மாலை வரையிலும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக அவளை பிடித்து நிறுத்தி இருந்தான் குரு.

"என்ன தாண்டி உன்னோட பிரச்சனை.. ஏன் என்னோட உயிரே இப்படி வாங்குற.. ஒன்றுமில்லாத சின்ன விஷயத்துக்கு இத்தனை கோபப்படுவியா.. காலையிலிருந்து உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கிறேன் என்ன பாத்தா உனக்கு பாவமா தெரியலையா" என்று கேட்டான்.

"இதை நானும் கேட்கலாம் இல்லையா.. இப்ப கூட உன்னோட தப்பு உனக்கு புரியல இல்லையா...இத்தனை நாளாய் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீ இத்தனை கோவக்காரன், சண்டைக்காரன்னு எனக்கு தெரியாது. நேத்து பார்க்கும் போது அத்தனை ஷாக்கிங்கா இருந்தது. போதும் சாமி உன் கூட பிரண்ட்ஷிப் வெச்சிக்கிட்டது எல்லாம்.. அப்படி ஒருபிரண்ட்ஷிப் எனக்கு தேவை இல்லை.."

"ஓ.. அப்புறம் வேற இந்த மாதிரி பிரெண்ட்ஷிப் உனக்கு வேணும். சொல்லு தெரிஞ்சுக்கிறேன். இத்தனை நாளா என்னோட குணம் என்னன்னே தெரியாம பழகி இருக்கிற அப்படித்தானே.. அதுவும் எல்கேஜில இருந்து பெஸ்ட் ஃபிரண்ட் இல்லையா.."

"இப்போ என்னதான் சொல்ல வர்ற குரு…"

"தேவையில்லாமல் தப்பு தப்புபா பேசினா அவனுங்களுக்கு புரியற பாஷையில தான் சொல்லி புரியவைக்க முடியும். அதைத்தான் நேத்து செய்தேன். இத்தனை நாள் பார்க்கிற தானே.. எத்தனை பேர் கிட்ட அப்படி சண்டைக்குப் போனேன். நேத்து அவன் பேசினது தப்பு. அதனால தான் அவனை அடிச்சேன்".

"பிரின்ஸிபள் வரைக்கும் விஷயம் போயிருந்தா என்ன செய்திருப்பே.. உன்னோட டிசிய கைல கொடுத்து அனுப்பி இருப்பாங்க. உன்ன நெனச்சு உன்னோட வீட்ல எத்தனை கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.. அதெல்லாம் ஒரு நிமிஷத்துல தூக்கி வீசிவிடுவ அப்படித்தானே".

அவளும் தனக்காக தான் சற்றே யோசிக்கிறாள் என்று தோன்றவும் அமைதியாக நின்றிருந்தான் குரு.

"அதுதான் அப்படி எதுவும் ஆகலையே.. அப்புறம் இன்னும் அதையே பிடித்துத் தொங்கிக்கொண்டு இருப்பியா.."

இப்படி செல்லவும் அமைதியாக நின்றிருந்தாள் நித்யஸ்ரீ. "என்ன உனக்கு பேச வரல தானே.. என் மேல எந்த தப்பும் இல்ல தெரிஞ்சுக்கோ நீயும் இதையெல்லாம் புரிஞ்சுக்காம முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால் எப்படி?"

"நீ பேசாத டா நேற்று எல்லாம் நான் தூங்கவே இல்ல உனக்கு தெரியுமா.. அவ்ளோ பயமா இருந்தது பரத் அண்ணாகிட்ட கூட சொன்னேன் தெரியுமா."

"நீ லூசு டி எதுக்கு உங்க அண்ணா கிட்ட எல்லாம் சொன்ன நான் சொல்ல சொன்னேனா.. இது சின்ன பிரச்சனை சரியாகிவிடும் அவ்வளவுதான்."

"நான் இப்போது தானே இது மாதிரி எல்லாம் பார்க்கிறேன்.. அவன் அடிக்கும் போது உன்னோட கண்ணுல எத்தனை வெறி தெரியுமா.. எனக்கு எவ்வளவு பயமா இருந்தது."

"அட அட அட என்ன பயம்...பயப்படுற ஆளு நீதான் எனக்கு நல்லா தெரியும்."

"கிண்டல் பண்ணாத குரு கையை காட்டு கையில் மட்டும் தான் காயமா வேற எங்கேயும் அடிப்பட்டு இருக்கா.."

"இப்பதான் கேட்க தோணி இருக்குதா வேறு எங்குமே அடி இல்லை இது மட்டும் தான்..இன்றைக்கு லீவ் எடுக்கத்தான் அபர்ணா சொன்னா நான் தான் உன்னை பார்க்கணுமே அப்படிங்கிறது காக இந்த வேகமா வந்தேன். ரொம்ப பயந்துட்டியா சாரி டி.."

"இட்ஸ் ஓகே பரவாயில்ல விடு.. தப்பா பேசினா அதுக்கான தண்டனையை கட்டாயமாக கொடுக்க தான் செய்யணும். ஆனா அதுக்காக இந்த அடிதடியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நீ கூட அவனை போலவே வாயளவில் பதில் சொல்லி இருக்கலாம். இன்னொரு முறை இது போல பேசினா எனக்கு பிடிக்காது அப்படின்னு தெளிவா சொல்லி இருக்கலாம். அத விட்டுட்டு இப்படி அடிச்சுகிட்டு உருண்டு இருக்க வேண்டாம்".

அப்போது இவளுடைய வகுப்பில் படிக்கும் சக மாணவன் ஒருவன் இவளிடம் பேசுவதற்கு வந்தான். "நிந்யஸ்ரீ உன்கிட்ட கொஞ்சம் பேசணும். என் கூட வர முடியுமா இரண்டு நிமிடம்தான்.. நோட் சில சின்ன டவுட் கிளியர் செய்ய வேண்டியதா இருக்கு உன்கூட வர முடியுமா".

"ஒரு நிமிஷம் இதோ வருகிறேன் என்றவள் குருவிடம் திரும்பி ஒரு நிமிஷம் நான் அவன் கிட்ட பேசிட்டு வந்துடறேன் என்னனு தெரியல எப்போதுமே இவன் என் கிட்ட எதுவும் பேசினது எல்லாம் கிடையாது இன்றைக்கு அதிசயமா என்கிட்ட பேசணுங்கறான் "என்று இவனிடம் கூறிவிட்டு அவனோடு சென்றாள்.

குரு அவர்களையே பார்த்தபடியே தலைமுடியை கோதியபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.இது எல்லாமே அவர்களுடைய காலேஜ் கேண்டீனில் நடந்து கொண்டிருந்தது.

அவனோடு சென்றவள் அவனிடம் பேசியபடியே எதோ ஒன்றை ஆர்டர் செய்ய அந்த மாணவன் எடுத்துக் கொண்டு அவள் அருகில் நின்றான்.அவன் எதையோ கேட்க இவள் பதிலுக்கு சொல்லிக் கொடுத்து கொண்டிருக்க...சற்று நேரத்தில் எல்லாம் இரண்டு பேருக்குமே பேச்சு சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தது.

இடையிடையே நித்யஸ்ரீயின் சிரிப்பு சப்தம் கூட குருவை நிமிர்ந்து பார்க்க வைத்தது.அது எல்லாம் அவளுக்கு சுத்தமாக தெரியவில்லை. உலகமே மறக்கும் அளவிற்கு அவனோடு பேச்சு சுவாரஸ்யத்தில் ஈடுபட்டு இருந்தாள்.

இத்தனை நாள் இல்லாமல் முதல் முதலாக இப்போதுதான் குருவிற்கு என்ன என்று பிரித்து அறிய முடியாத அளவிற்கு பொறாமை உணர்வு தோன்றியது.

ஆரம்பத்திலிருந்து உயிர்த்தோழி எனும் அளவிற்கு நெருக்கம் இருந்தாலும் இவனை தவிர்த்து இன்னொரு ஆணிடம் மனம் விட்டு சிரிப்பது இவனை என்னவோ செய்தது.

இதற்கு மேல் பார்த்து கொண்டு இருக்க முடியாது என்று நினைத்தவன் அவளுக்கு எதிரே சென்று நின்றான்.

"போகலாமா நித்து பேசி முடிச்சாச்சா.. கிளம்பலாமா" என்று கூறினான்.

"குரு இவன் நோட்ஸ் கேட்டான். இரண்டு நிமிடம் வெயிட் பண்ணு வந்துடறேன். நோட்சை எடு எதை எழுதனும்னு உன்கிட்ட சொல்லிட்டு போறேன்" என்றபடி மறுபடியும் அவனிடம் கவனத்தை செலுத்தினாள்.

"இதுக்கு மேல ஒரு செகண்ட் கூட இங்கே வெயிட் பண்ண மாட்டேன். நீ என் பின்னாடி வரணும் வா" என்று கூறியபடி அவளது கையைப் பற்றி நகர்த்தி வந்தான்.

அதற்கு அந்த மாணவனோ…"ஹலோ என்ன பேசிக்கிட்டு இருக்கிறேன் உனக்கு தெரியுதா இல்லையா நீ பாட்டுக்கு தர தரன்னு இழுத்திட்டு போற.. அவளோட கைய விடு" என்று வழிமறித்த படி நின்றான்.

"என்ன எப்படி இருக்குது உடம்புக்கு.. நகரு டா இங்கே இப்ப நான் அவ கிட்ட பேசணும் புரியுதா.. "ஒரு நிமிடத்தில் கோபம் முகத்திற்கு ஏற முகம் சிவக்க அவனை முறைத்துக் கொண்டிருந்தான் குரு.

நேற்றுதான் ஏற்கனவே சண்டையை பார்த்து இருக்கிறாளே.. இப்போது மறுபடியுமா என்று ஒரு நிமிடம் தோன்ற… "விஸ்வா பிளீஸ்.. உனக்கு நோட்ஸ் தானே வேணும் நான் நாளைக்கு காலையில கொண்டு வந்து தரேன். இப்ப நான் குரு கூட கிளம்புறேன் நீ போய்க்கோ.. வரேன்" என்றவள் இவனை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள் நித்யஸ்ரீ.

"அவனுக்கு நீ என்ன பயப்படுறியா இந்த பக்கம் வா.. நித்யஸ்ரீ.. இங்க யாரும் யாருக்கும் அடிமை கிடையாது அதை முதலே தெரிஞ்சுக்கோ.. முதல்ல இந்த பக்கம் வா இன்றைக்கு பேசி முடிச்சிடலாம் என்று விஷ்வா குருவைப் பார்த்து கூறினான்.."

"என்ன விஷ்வா வம்பு பண்ணனும்னே வந்திருக்கிறாயா.. வேணும்னா வா நேருக்கு நேர் மோதி பார்த்துடலாம்". கொஞ்சமும் யோசிக்காமல் குரு அவனை சண்டைக்கு அழைத்தான்.

"ஸ்டாப் இட் குரு இதுபோல பேசுறதை முதல்ல நிப்பாட்டு.. என்ன நெனச்சிகிட்டு இருக்குற உன்னோட மனசுல பெரிய ரவுடின்னா.. எனக்கு இதெல்லாம் பிடிக்காது புரியுதா அதுதான் நான் உன்கூட வர்றேன்னு சொல்லிட்டேன் இல்லையா அப்புறம் எதுக்காக அவன மிரட்டிட்டு இருக்கிற.. வா போகலாம் " என கோபமாகக் கூறினாள் நித்யா

"பார்த்துக்கோ நித்யஸ்ரீ சார் உன் முன்னாடி ஹீரோயிசத்தை காட்ட நினைக்கிறார் போல இருக்கு. அதுக்காக தான் இப்படி திமிரா பேசிக்கொண்டிருக்கிறான்.."

"போதும் விஷ்வா திஸ் இஸ் டூ மச்.. பேசுறதுக்கு ஒரு அளவு இருக்கு. அவன் உனக்கு முன்னாடியே என்னோட பிரண்டு. என் கிட்ட உன்னை விடவும் அவனுக்கு நிறைய உரிமை இருக்குது. புரியுதா இதுக்கு மேல இந்தப் பேச்சை விடு. உனக்கு தேவை நோட்ஸ் தானே நாளைக்கு தரேன்.வா குரு போகலாம்" என்று இவனை இழுத்துக்கொண்டு நகர்ந்தாள் நித்யஸ்ரீ.

வாசலை நோக்கி நகர்ந்தபடி அவனிடம்"குரு ஆனாலும் உனக்கு இத்தனை கோபம் வரக்கூடாது. அவன் மேல ஏன் உனக்கு இத்தனை கோபம் வருது."

"எனக்கு அவன் மேல கோபம் இல்லை உன் மேல தான்.."

"என் மேலயா நான் என்ன செஞ்சேன்.."

"அதென்ன அவன் கூட்டிட்டு போனான் சரி அப்படி சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கிற.."

"குரு அவன் நம்ம கூடப் படிக்கிறவன் உன்ன மாதிரியே அவனும் ஒரு ஃப்ரண்டு புரியுதா.."

"அப்படினா அவனும் நானும் ஒண்ணா.."

"குரு சமயத்துல நீ லூசு மாதிரி பேசறே அது எப்படி நீயும் அவனும் ஒன்றாக முடியும்.. நீ என்கூட எல்கேஜியிலிருந்து படிச்சுட்டு வர்ற.. அவனை இங்கே வந்த பிறகு தான் தெரியும். எப்படி இரண்டு பேரும் ஒன்றாக முடியும். எனக்கு முதல்ல நீ தான் முக்கியம். அதற்குப் பிறகுதான் மத்தது எல்லாம்."

"இதெல்லாம் கேட்கும்போது நல்லாத்தான் இருக்கு ஆனா அத சரியா மட்டும் செய்து விடாதே.."

"என்னவோ போ குரு..ரெண்டு நாளா நீ செய்யறது எல்லாமே என்னோட கண்ணுக்கு புதுசா தெரியுது.. மொதல்ல நான் உன்னோட அத்தை பொண்ணு அபர்ணா கிட்ட பேசி உன்னை பற்றின அத்தனை விஷயத்தையுமே கேட்டு தெரிஞ்சுக்க போறேன்."

"அது ஏன் அபர்ணா கிட்ட கேக்கணும். என்கிட்ட கேளு ஸ்ரீ நான் உனக்கு சொல்லறேன். என்ன பத்தின எல்லா டீடெயிலும்…"

"அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல குரு நானே புரிஞ்சிக்குவேன் போதுமா வா போகலாம்.. என்னோட கேப்ஸ் ஏற்கனவே வந்திருக்கும். நாளைக்கு பார்க்கலாம் "என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள் நித்யஸ்ரீ.

அவள் விலகி நடக்கும்போது தான் குரு யோசிக்க ஆரம்பித்தான்.
இத்தனை நாள் இல்லாமல் ஏன் தனக்கு ஸ்ரீ வேறு ஒருவரிடம் பேசினால் பொறாமை தோன்றுகிறது. இதை யோசிக்கும் போது அவனுடைய மனநிலை ஒரு மாதிரியாக புரிந்து விட்டது.

நேற்று கூட அபர்ணா கூறினாலே.. நித்யஸ்ரீயை யாராவது தப்பா பேசினார்களா.. அப்படின்னு கேட்டாலே அப்படின்னா... அவளுக்கும் ஒருவேளை என்னுடைய மனநிலை புரியுதா என்ன?

இப்படி தன்னுடைய மனநிலை புரியவும் அவனுக்கு தன் மேல் ஆச்சரியமாக இருந்தது. இதெல்லாம் நடக்குமா நடக்காதா.. ஏன் இவளை தனக்கு இவ்வளவு பிடிக்கிறது. நித்துவுக்கும் தன்னை பிடிக்குமா.. ஒருவேளை தன்னை நண்பனாக மட்டும் நினைத்திருக்கிறேன் என்று கூறி நிராகரித்து விட்டால்... ஏதேதோ யோசனையோடு அன்று வீட்டிற்குப் புறப்பட்டான்.

ஆனால் அதே நேரத்தில் நித்யஸ்ரீ வீட்டிற்கு சென்று இருந்தாள்.அவளது வீட்டில் அனைவருமே மகிழ்ச்சியாக காணப்பட்டனர். அவனுடைய அண்ணன் பரத்திற்கு திருமணத்திற்கு நிச்சயம் செய்வதற்கு வீட்டில் முடிவெடுத்து இருந்தனர்.

பெண்ணின் புகைப்படத்தை அன்று தான் அவர்களுடைய உறவினர் ஒருவர் தந்து விட்டுச் சென்றிருந்தார்.

போட்டோவை பார்க்கவும் நித்யஸ்ரீ க்கு அவ்வளவு பிடித்தது... போட்டோவில் அழகாக பூர்ணிமா சிரித்துக் கொண்டிருந்தாள்.

தூரத்து வகையில் சொந்தம் என்று கூறியிருந்தனர். பரத்தின் உருவத்திற்கும் பூர்ணிமாவின் உருவத்திற்கும் நூறு பொருத்தம் இருந்தது. இவனுக்கென்றே அவளை படைத்தது போல இருந்தது.

பெண்ணின் புகைப்படத்தை பார்த்த உடனேயே நித்யஸ்ரீ "அம்மா நான் முடிவு பண்ணிட்டேன்.. இவங்க தான் எனக்கு வரப்போற அண்ணி.. அதுல எந்த மாற்றமும் கிடையாது.. நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது அண்ணாவுக்கு இந்த பொண்ணு தான் மனைவியாக வரணும்" என்று கூறிக் கொண்டிருந்தாள்.

"நீயே முடிவு பண்ணினா எப்படி நித்து…முதல்ல உங்க அண்ணன் வரட்டும். அவன் என்ன சொல்லுவான்னு எனக்கு தெரியலையே.. ஒருவேளை அவளுக்கு பிடிக்கலைன்னா.. மொதல்ல வரட்டும் பொண்ணோட போட்டோ காட்டலாம். பிடிச்சிருக்குன்னா மேற்கொண்டு பேசலாம்".

"அதெல்லாம் ஓகே சொல்லுங்கம்மா.. நான் அண்ணா கிட்ட பேசுகிறேன்.போட்டோவை எடுத்துட்டு போறேன் மா . அண்ணா வந்ததும் நானே வந்து காட்டுறேன்..என்று போட்டோவை வாங்கிக்கொண்டு நகர்ந்தாள் நித்யஸ்ரீ. அப்போது அவளுக்கு தெரியவில்லை அவளுடைய அண்ணன் பரத் அவ்வளவு சீக்கிரமாக இந்த திருமணத்திற்கு சம்மதிக்கப் போவதில்லை என்பது..



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”