காதல்_7

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_7

Post by Rajeswari.d »

7

இந்தாடா இது உனக்கு தான் என்று குருவிற்கு நேராக நீட்டினாள் நித்யஸ்ரீ…
இருப்பதிலேயே பெரிய சில்க் சாக்லேட்..

"ஏய் வாலு சாக்லேட்னா நீ உயிரை விடுவேல்ல என்ன அதிசயம்...உன் கையிலிருந்து இவ்வளவு பெரிய சாக்லெட் ... அதுவும் எனக்கா.. நம்பவே முடியலையே.. ஏதாவது அதிசயம் நடந்துடுச்சா என்ன"

"ஓவரா பந்தா பண்ணாமல் கொடுக்கும் போது வாங்கிக்கோ... அப்புறமா மனசு மாறிடுச்சுன்னா உனக்கு ஒரு பீஸ் கூட கிடைக்காது. எல்லாத்தையும் நானே சாப்பிடுடுவேன்".

"எனக்கு தான் உன்னை தெரியுமே.. சொல்லு என்ன விசேஷம் சாக்லேட் தர்ற அளவுக்கு.." அவளது முகம் பார்த்து கேட்டான் குரு.

"அண்ணாவுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆக போகுது… பொண்ணு பார்த்தாச்சு எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு...இந்த வாரத்தில் அம்மா அப்பா கூட பெண்ணோட வீட்டுக்கு ஒரு நாள் போயிட்டு வருவோம். முக்கியமா அண்ணா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க.. அதற்காகத்தான் இவ்வளவு பெரிய சாக்லெட் உனக்கு".

"உனக்கு இது ரொம்ப மகிழ்ச்சியான செய்திதான் இல்லையா... நானும் பயங்கர ஹேப்பி.. "என்றபடி சாக்லேட் பிரித்து இவளுக்கு கொஞ்சமாக கொடுந்தான்.

"என்ன சீட் பண்றியா..எப்பவும் போல கொஞ்சமா எடுத்துட்டு மிச்சத்தை என் கையில கொடு நான் தந்தா திருப்பி கேட்க மாட்டேன்னு நினைச்சியா "என்று கேட்டாள்.

"அதான பார்த்தேன் என்னடா அதிசயமா இருக்கு இவ கையில் இருந்து சாக்லேட் வருதான்னு.."

"கொடுடா "என்றபடி வாங்கிக் கொண்டால் நித்யஸ்ரீ.

"அப்புறம் எப்ப போய் பார்க்க போறீங்க.."

"இன்னும் ரெண்டு நாளில்ல அனேகமா பொண்ணு பார்க்கப் போவோம்.."

"உங்க அண்ணனுக்கு பொண்ணு பிடிச்சிருக்கா.."

"ஹேய் என்ன சொல்லற எனக்கு பெண்ண பிடிச்சா போதும் அண்ணா ஓகே சொல்லிட்டாங்க.."

"சரிதான் வாழப்போவது உங்க அண்ணா அதை கொஞ்சம் ஞாபகத்துல வச்சிக்கோ.."

"ஏண்டா இப்படி சொல்ற..அண்ணா தான் சொன்னாங்க உனக்கு பெண்ண புடிச்சிருந்தா எனக்கு ஓகே தான்னு."

"சரிதான் நான் ஒன்று சொன்னா கேப்பியா நித்யஸ்ரீ…"

"சொல்லு குரு நீ சொல்லி நான் கேட்காம இருப்பேனா.. சொல்லு.."

"தாராளமா உங்க அண்ணாவை கூட்டிட்டு போயி பொண்ண பாருங்க... ஆனா அங்க போயி பொண்ணுகிட்ட எங்க அண்ணா
பொண்ணு உனக்கு பிடிச்சி இருந்தா போதும் எனக்கு ஓகே ன்னு சொன்னாங்கனு சொல்லிடாத அப்படி சொன்னா.."

"புரியுது புரியுது நீ என்ன சொல்ல வர்றேன்னு... குரு உனக்குதான் தெரியுமே எந்த இடத்துல அவங்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கணும்னு எனக்கு தெரியும். நிச்சயமா அப்படி எல்லாம் போய் உளரி வைக்க மாட்டேன். நீ தேவையில்லாம பயப்படுவதை நிப்பாட்டு."

"அப்புறம் நாளையிலிருந்து காலேஜுக்கு நான் லீவு. பொண்ணு பாக்க போகப்போறேன் இல்லையா அதனால எனக்கு நல்லதா ஒரு டிரஸ் எடுக்க போறேன்.. அப்புறம் காஸ்மெடிக் ஐட்டம்ஸ்.. மேக்கப் ஐட்டம் இப்படி எல்லாமே வாங்கணும்."

"என்ன நித்து உங்க அண்ணாவுக்கு தானே பொண்ணு பாக்க போற.. அப்புறம் எதுக்கு உனக்கு டிரஸ் எடுக்கணும் மேக்கப் ஐட்டம் எல்லாம் வாங்கனும்... எனக்கு புரியவில்லை நித்யஸ்ரீ."

"நாத்தனார்ன்னா சும்மாவா... செமையா பந்தாவா போய் நிற்க வேண்டாமா.. அண்ணாவுக்கு அவ்வளவாக பேச எல்லாம் வராது.. அப்புறம் அண்ணாவுக்கு சேர்த்து நான் தான் பேசணும். முதன்முறை என்ன பார்க்கும்போது அந்த பொண்ணுக்கு நல்ல அபிப்ராயம் வரணும் இல்லையா அதற்காகத்தான்.."

"நீ பேசாமல் இருந்தாலே போதும் அந்த பொண்ணுக்கு நல்ல அபிப்ராயம் வந்துடும்.."

"டேய் வேணாம் குரு என்கிட்ட வம்பு பண்ணாத..இன்னொரு தடவை இது போல பேசி கொண்டு இருந்தனா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது கிண்டலாய் இருக்குதா.."

"ஸ்ரீ உன்கிட்ட சீரியஸா தான் சொல்லிக்கிட்டு இருக்குறேன். நீ பேசாமல் இருந்தாலே போதும் உங்க அண்ணா கல்யாணம் பிக்ஸ் ஆயிடும்.."

"எருமமாடு காலையில உனக்காக சாக்லேட் எல்லாம் வாங்கிட்டு வந்தா என்னயவே கிண்டல் பண்ணறையா... இன்னைக்கு காலி டா அடிக்காமல் விடமாட்டேன்..எத்தனை தைரியம் இருந்தா என்ன கிண்டல் பன்னுவ.."

அவனைத் துரத்த ஆரம்பித்தவள் கடைசியாக அவன் முதுகில் நான்கு அடி அடித்த பிறகு ஒரு இடத்தில் வந்து அமர்ந்தாள்.

"நித்து முதுகுல கொசுவையா அடிச்ச என்று கிண்டல் அடில்தவன்...
நித்து இப்ப எல்லாம் ரொம்பவே அடிக்க ஆரம்பிக்கிற.. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை பார்த்துக்கோ" என்றபடியே அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான் குரு.

அடுத்த நாளிலிருந்து நான்கு நாட்களுக்கு நித்யஸ்ரீ காலேஜுக்கு வரவில்லை. அவள் ஏற்கனவே சொன்னது போலவேஅண்ணனின் பெண் பார்க்கும் படலத்திற்கு தன்னை தயார் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

எப்படியும் பார்த்து விட்டால் உடனே நிச்சயம் செய்து விடுவார்கள் என்பது உறுதியாகி இருந்த காரணத்தினால் முதலில் பரத்தை பூர்ணிமா விடம் பேசுவதற்காக அங்கிருந்த பெரிய ஹோட்டலில் டேபிளை புக் செய்திருந்தனர்.

முதலில் இரண்டு பேரும் பேசி முடிவு செய்த பிறகு இரண்டு நாளில் பூர்ணிமாவின் வீட்டிற்கு சென்று நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

பரத்தோடு கூடவே புறப்பட்டு வந்தது நித்யஸ்ரீ மட்டும்தான்..அண்ணா அவங்கள பார்த்து ஒன்னு ரெண்டு வார்த்தை பேசிட்டு நான் வெளியே போய் விடுவேன். நீங்க பேசிட்டு வந்து சொன்னா போதும்.

"ஏன் இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்கிற.. நீயும் என் கூடவே இரு நகர்ந்து எல்லாம் போக வேண்டாம்."

"ஹோட்டலுக்கு முன்னாடி இருக்கிற புக் ஷாப்ல கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுறேன் அண்ணா.. எனக்கு அண்ணிகிட்ட நாலு வார்த்தை பேசணும்னு தோணுது.. அதனால்தான் அம்மாகிட்ட சொல்லிட்டு உன் கூட வந்தேன். இல்லைன்னா இங்க வந்து இருக்க மாட்டேன்."

"சரி சரி இரு வந்துடுவாங்க "என்றபடி அமர்ந்திருந்தான்.

சொன்ன நேரத்திற்கு முன்னாடியே பூர்ணிமா அங்கே வந்திருந்தாள்.. சற்றே படபடப்போடு இவர்களை நோக்கி வர.. அவள் இவர்களது இடத்திற்கு வரும் முன்னமே வேகமாக எழுந்து சென்ற நித்யஸ்ரீ அவளது கரம் பற்றி அழைத்து வந்தாள்.

"ஹாய் அண்ணி..ஏன் இத்தனை படபடப்பு...பயம் எல்லாம் தேவையில்லை அண்ணி... நான் நித்யஸ்ரீ எங்க அண்ணா தான் பரத்... பயப்படாம வாங்க அண்ணா இயல்பாகவே ரொம்ப ஸ்வீட்.. கோபமெல்லாம் வரவே வராது..

அப்புறம் ஏன் இந்த பொண்ணு வந்திருக்கிறான்னு யோசிக்கிறீங்களா.. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.. அதனால முதல்ல நான் தான் உங்ககிட்ட பேசணும்னு இங்க வந்தேன்."

இயல்பான நித்யஸ்ரீயின் பேச்சு பூர்ணிமாவிக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவள் பேச பேச நட்பாக ஒரு புன்னகை அழகாக மலர்ந்தது பூர்ணிமாவின் உதட்டில்..

"ரெண்டே நிமிஷம் நான் பேசிட்டு உடனே கிளம்பி விடுவேன்..அதுக்கு முன்னாடி அண்ணா உங்க ரெண்டு பேருக்கும் என்ன சாப்பிட போறீங்க அப்படிங்கறதை வேகமா போய் ஆர்டர் பண்ணிட்டு வந்திடு.." என்றுவிட்டு பூர்ணிமா விடம் அமர்ந்து கொண்டாள் நித்யஸ்ரீ.

பரத் சிரித்தபடியே நகர்ந்து செல்லவும் உட்காருங்க அண்ணி என்று எதிரில் இருந்த இருக்கையில் அமர வைத்தாள் நித்யஸ்ரீ.

"சாரி அண்ணா வர்றதுகுல்ல ரெண்டு வார்த்தை பேசிட்டு ஓடிடறேன். எங்க அண்ணா ரொம்ப ரொம்ப நல்லவரு.. உங்க மனச புரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி நடந்துக்குவாங்க.. நானும் கூடத்தான்..எங்க அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும். நிச்சயமா இந்த பொண்ணு தொந்தரவாக இருப்பாளோ அப்படின்னு நீங்க யோசிக்க எல்லாம் தேவையில்லை. ஏன்னா என்னோட எல்லை எதுன்னு எனக்கு தெரியும். அப்புறம் அண்ணா கிட்ட பேசிட்டு உங்களோட முடிவ என்கிட்ட தான் முதல்ல சொல்லணும் "என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது பரத் திரும்பி வந்திருந்தான்.

"ஓகே அண்ணா அண்ணிகிட்ட எல்லாமே பேசிட்டேன்..நீங்க பேசிட்டு உங்களோட முடிவு சொல்லுங்க நான் புறப்படுகிறேன்."

"ஏய் நித்து.. என்ன இது எங்க தனியா போற வெயிட் பண்ணு வரேன்.."

"சாரி அண்ணா எனக்கு முக்கியமான வேலை இருக்கு ஏற்கனவே அம்மாகிட்ட சொல்லி இருக்கிறேன்.நீங்க பேசிட்டு பொறுமையா வீட்டுக்கு வந்தா போதும்.
எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதை முடித்து விட்டு வீட்டுக்கு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

அவள் வெளியேறும் வரையில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு பூர்ணிமாவின் திரும்பிப் பார்த்தான்.

"உங்க தங்கச்சி பயங்கர க்யூட்.. பெயர் கூட ரொம்ப அழகு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அவள.. "முதல் முதலாக பூர்ணிமா பேசியது இதைத்தான்.

" கொஞ்சம் இல்ல நிறையவே வீட்ல செல்லம்.. அதுவும் என் கிட்ட கொஞ்சம் ஜாஸ்திதான்.. எனக்கு என்னோட தங்கச்சின்னா உயிர்.. அவளுக்கு ஏதாவது ஒன்றென்றால் என்னால தாங்கவே முடியாது."

"புரியுது பரத்.."

"உனக்கு என்னோட தங்கச்சியை பிடிச்சிருக்கா.."

"நியாயமா முதல்ல என்ன பிடிச்சிருக்கான்னு கேப்பிங்க என்று எதிர்பார்த்தேன்.. நீங்க அப்படியே மாற்றி சொல்லறீங்க.. எனக்கு உங்க தங்கச்சியை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு கூடவே உங்களையும்.."

"தேங்க்யூ வெரி மச் பூர்ணிமா.. என்னோட சிஸ்டருக்கு உன்ன ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..உன்ன பாக்குறதுக்கு முன்னாடி என்னோட அண்ணி இவங்க தான்னு முடிவே பண்ணிட்டா.. உண்மையில் நான்தான் பயந்துட்டே வந்தேன்.. ஒருவேளை உனக்கு என்னைப் பிடிக்கலைன்னா.. நித்து ரொம்ப ஏமாந்து போயிடுவா.. அவள் உனக்கு நல்ல பிரண்டா இருப்பா அப்படிங்கறதை உறுதியாக சொல்ல முடியும்."

"தேங்க்ஸ் பரத் நானும் கூட அவளுக்கு நல்ல பிரண்டா இருப்பேன். நித்யஸ்ரீ சொல்லிட்டு போனா என்னுடைய எல்லை எனக்கு தெரியும். என்ன நினைத்து பயப்பட தேவையில்லை என்று.. நான் கூட உறுதியாகச் சொல்லுவேன். இன்றைக்கு உங்க சிஸ்டர் உங்க கிட்ட எந்த அளவுக்கு பாசமாய் இருக்கிறார்களோ அதே அளவு பாசம் கடைசி வரைக்கும் உங்க கிட்ட இருப்பா இப்ப நீங்க தான் சொல்லணும் என்ன பிடிச்சிருக்கா உங்களுக்கு.. தங்கச்சிக்கு பிடித்தது
அதனால எனக்கும் பிடித்தது என்று சொல்லக்கூடாது."

"எனக்கும் பிடிச்சிருக்கு ."என்று சொன்னவன் அதற்குப் பிறகு பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டு இருந்தனர்..பேசிய சிறிது நேரத்திலேயே புரிந்து விட்டது பரத்திற்கு. பூர்ணிமா பேசுவதற்கு பழகுவதற்கு இனிமையானவள் என்பதை…

அதிக நேரம் எல்லாம் பேசிக் கொள்ளவில்லை இரண்டு பேருமே.. ஆனாலும் அன்றைய பேச்சு இருவருக்கும் மன நிறைவைத் தந்து இருந்தது. அன்றைய நாளுக்கு பிறகு வீட்டிற்கு வந்தவன் தன்னுடைய திருமணத்திற்கு சம்மதம் கூறியிருந்தான்.

நாட்களை கடத்த இரண்டு குடும்பத்திற்கும் விருப்பம் கிடையாது. ஏனென்றால் பூர்ணிமாவின் குடும்பம் இவர்களைப்பற்றி முழுக்க முழுக்க அறிந்திருந்தது.

நல்லவேளை நிரந்தரமான வருமானம் ஓரளவுக்கு நல்ல வசதி பரத்தின் குணம் இங்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத இளகிய குணம் இதெல்லாம் அவர்களை மாற்றி இருந்தது..

இது எல்லாமே அவர்களுக்கு பிடிச்சி இருக்க அந்த வாரத்திலேயே நிச்சயத்திற்கு நாள் குறித்து இருந்தனர்.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”