காதல்_13

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_13

Post by Rajeswari.d »

13
காலையில் எழும் போதே நேரம் ஆகி இருந்தது.ஆனாலும் என்றுமில்லாமல் தன்னை அழகாக அலங்காரம் செய்து கொண்டு புறப்பட்டாள் நித்யஸ்ரீ.

புறப்பட்டு வெளியே வரவும் பரத்தும் புறப்பட்டு வர சரியாய் இருந்தது.
இவளைப் பார்க்கவுமே அவனது முகத்தில் புன்னகை தோன்றி இருந்தது.

அவனது சிரித்த முகத்தை காணவும் இவளும் அவனது முகத்தை பார்த்தபடியே சிரித்து விட்டாள்.

இருவரையும் பார்த்தபடி வந்த லட்சுமி என்ன அண்ணனும் தங்கச்சியும் முகத்தை பார்த்துக்கிட்டு சிரிச்சுகிட்டு இருக்கிறீங்க. யார் என்ன தப்பு செஞ்சா அத மறைக்கறதுக்கு தானே வழக்கமா இப்படி முகத்தை பார்த்து சிரிப்பீங்க.

"அச்சோ அம்மா நீங்க வேற... "குட்டிமா முகத்தை பார்க்கும் இன்னைக்கு எனக்கு சிரிப்பு வந்துருச்சு.

"சிரிக்கிற மாதிரி தெரியுதா" என்று படி மகளை உச்சி முதல் பாதம் வரை கண்கலால் அளவு எடுத்தார் லட்சுமி.

"எனக்கு எதுவும் வித்தியாசமா தெரியலையே எப்போதும் போல தானே இருக்கிறா அப்புறம் எதுக்காக நீ அவளைப் பார்த்துச் சிரிக்கிற.."

"அம்மா.. அண்ணாவுக்கு வேற வேலை இல்ல நேற்று அண்ணாகிட்ட சேலஞ்ச் பண்ணியிருந்தேன் உனக்கு முன்னாடி நான் காலேஜுக்கு புறப்பட்டு போய் விடுவேன் அப்படின்னு.. அண்ணா அப்படி எல்லாம் இல்ல உனக்கு முன்னாடி நான் தான் புறப்பட்டு ஆபீசுக்குப் போவேன்னு சொன்னாங்க "

"நான் அப்படி எல்லாம் இல்ல நான்தான் புறப்பட்டு வருவேன்னு...அப்படின்னேன். அதுக்கு அண்ணா. உன்னால அவ்வளவு காலையில எல்லாம் எந்திரிக்க முடியாது அப்படின்னு சொன்னாங்க. ரெண்டு பேரும் ஒரே நேரத்துல வரவும் சிரிப்பு வந்துருச்சு."

"சரி சரி ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு கிளம்புங்க.. பூர்ணிமா என்னடா செய்யறா.."

"அம்மா குளிச்சுட்டு இருக்குறா மா இப்ப அவ வந்துடுவா.."

*சரி நீ சாப்பிட்டுட்டு கிளம்பு அவள் வந்தால் நான் பார்த்து சாப்பாடு கொடுக்கிறேன்."

"சரிமா "என்றவன் நித்யஸ்ரீ யை பார்த்து "குட்டிமா வரேன் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறது தானே" என்றபடி புறப்பட்டுச் சென்றான்.

இவளும் கற்று ஆர்வமாக அன்றைய காலேஜிற்கு புறப்பட்டு சென்றாள். இன்றும் குரு காலேஜுக்கு வந்திருக்கவில்லை. உண்மையிலேயே முதல் முதலாக குருவின் மேல் சரியான கோபம் வந்தது நித்யஸ்ரீக்கு..

'இவன் மனசுல என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்கிறான்.. இவன் பாட்டுக்கு வந்தான் ஐ லவ் யூன்னு சொன்னான் சொன்னதோட ஓடிப்போய் ஆச்சு.. மூன்று நாள் ஆச்சு இன்னும் காலேஜுக்கு வரல.."

அந்த நிமிடம் அவனின் மேல் நிறைய கோபம் தோன்ற வேகமாக அவனுக்கு போனில் அழைப்பு விடுத்தாள் நித்யஸ்ரீ.

முதல் ரீங்கிலேயே அவன் போனை அட்டெண்ட் செய்து இருந்தான்" சொல்லு நித்து... காலேஜ்க்கு தான் வந்து கொண்டு இருக்கிறேன் என்ன விஷயம் சொல்லு" என்று கேட்டேன்.

"வண்டில வந்துட்டு இருக்கியா.."

"ஆமாம் புறப்பட்டாச்சு இன்னும் கால் மணி நேரத்தில் அங்கே வந்துடுவேன்."

"அபிநயா உன்கூட வருகிறாளா.."

*ஆமா எப்போதும் போல வண்டியில் இருக்கிறாள் ஏன் கேக்கற.."

"அப்புறம் எதுக்குடா வண்டியில் வரும்போது போன் பேசுற.. வரேன்னு சொன்ன முடிஞ்சு போச்சு உன் கிட்ட எத்தனை முறை சொல்லுறது... வண்டி ஓட்டும் போது போன் அட்டென்ட் பண்ணாத அப்படின்னு.". சொன்னபடியே போனை கட் செய்தாள் நித்யஸ்ரீ.

அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாம் இவ்வளவு முன்னால் வந்து நின்றான் குரு.

*சொல்லு அவ்வளவு அதட்டற சொல்லு என்ன விஷயம் எதற்காக என்ன தேடின..
இப்ப சொல்லு" என்று அவளது முன்னாள் வந்து நின்றாள்.

"வந்து நீ இரண்டு நாளைக்கு முன்னாடி என்கிட்ட சொன்ன இல்லையா.."

"என்ன சொன்னேன் எனக்கு ஞாபகமே இல்லை.. சொல்லு என்ன"

"நிஜமாவே உனக்கு ஞாபகம் இல்லையா சரி பரவாயில்லை ஏன் ரெண்டு நாளா காலேஜுக்கு வரல.."

"அதுவா நித்து.. ஆடிட்டிங் டைம் இல்லையா கம்ப்யூட்டரில் கணக்கு வழக்கெல்லாம் கொஞ்சம் பார்க்கணும் வான்னு கூப்பிட்டு இருந்தாங்க.. அதுதான் எங்க போயிட்டேன். சொல்லு நீயே ஏன் என்ன தேடினே"..

"வந்து...வந்து.."

"என்ன நித்து.."

"அப்படின்னா ரெண்டு நாளைக்கு முன்னாடி என்கிட்ட சொன்னது விளையாட்டா குரு."

*சீரியஸா கேக்கறேன் நித்யா ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் உன்கிட்ட என்ன சொன்னேன் எனக்கு நிஜமா நியாபகம் எதுவுமே இல்லை. முதல்ல நேரடியா சொல்லு.. இப்படி சுத்தி வளச்சு சொல்லிக்கிட்டு இருக்காத.. எனக்கு நிஜமாகவே புரியலை".

"நீ ...நீ என்ன லவ் பண்ணுறதா.. விளையாட்டுக்கு தான் என் கிட்ட சொன்னியா நான் சீரியஸா நெனச்சுக்கிட்டு…" அதற்கு மேல் அவளிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை கண்களில் நீர் தேங்கி இருந்தது.

அவளது முகத்தில் சற்று நேரம் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான் குரு.

"குரு எனக்கு தெரிஞ்சு உன் கிட்ட மட்டும் பொய் பேசியதே கிடையாது. அப்படின்னா அன்னைக்கு சொன்னது உண்மைதானே.. அப்புறம் ஏன் கண்ணு கலங்குது நித்தியா.. என் முகத்தைப் பார்த்து பேசு "என்று அவளுடைய முகத்தை தன்னுடைய ஒரு விரல் கொண்டு நிமிர்த்தி அவனை பார்க்க வைத்தான் குரு.

"ஃபிராடு காலையிலேயே என்ன அழ வச்சி வேடிக்கை பாக்கறியா.. என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது.. எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா. ரெண்டு நாளா உன்னை பற்றி நினைக்காத நேரமே கிடையாது. நீ என்னடான்னா ஹாயா அண்ணா கடைக்கு வேலைக்கு போயிட்டான் கதை சொல்லுற."

"ஏய் நித்தியா நிஜமாவே அங்கேயும் பல்பு எரிஞ்சுடுச்சா.. உனக்கு என்ன பிடிச்சிருக்கா என்ன.. நான் ரொம்ப பயந்துட்டே இருந்தேன் தெரியுமா. இத்தனை நாளா பிரெண்டா தான் இருந்தோம் இப்ப மட்டும் ஏன் இப்படி எல்லாம் பேசுற இனிமே என்கிட்ட பேசாத நானும் உன் கிட்ட பேச மாட்டேன் அப்படின்னு சொல்லிடுவாளோன்னு பயந்துகிட்டே இருந்தேன். அந்த பயத்திலேயே ரெண்டு நாளா இங்க வரலை. இது சந்தோஷமான விஷயத்தை கொண்டாடனும் இல்லையா. என்ன பண்ணலாம் சொல்லு நித்து.. ரெண்டு பேரும் இன்றைக்கு காலேஜுக்கு கட் அடித்துவிட்டு வெளியே போகலாமா. ஏதாவது மாலுக்கு போய் படம் பார்த்துட்டு அப்படியே சாப்பிட்டு.."

"இதோ பார் லவ் பண்றேன் மட்டும் தான் சொன்னேன் அதுக்காக ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்காத.. நான் எங்க அண்ணா கிட்ட ப்ராமிஸ் பண்ணி இருக்கிறேன்."

"அடிப்பாவி லவ் பண்ணுறேன்னு சொன்னது நான் பர்மிஷன் கேட்டது உங்க அண்ணா கிட்ட யா.. ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர் நித்யா.. உங்க அண்ணா என்ன பத்தி என்ன நெனைப்பாங்க.. சரி அது போகட்டும் உங்க அண்ணா என்ன சொன்னாங்க. என்ன உங்கண்ணாவுக்கு பிடிச்சிருக்கா…"

"நீ ரொம்ப நல்ல பையனாம்.. அண்ணாவோட ஸ்டேட்மெண்ட் இது.. நீ போடுற சண்டையை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கிறது நான் மட்டும்தானே."

"ஒன்னும் இல்லையே நான் ரொம்ப நல்ல பையன் தெரியுமா.. ஒரு பொண்ணு தன்னோட சம்மதத்தை சொன்ன பிறகும் கூட அவளை டச் பண்ணாம முன்னாடி உட்கார்ந்து இருக்கிறேன். இதுவே என்னோட நேர்மைக்கு உதாரணமாகும்."

*ஒ.. அப்படியா எங்க தொட்டுப்பாரு பார்க்கலாம். அடி பின்னி எடுத்திடுவேன் ஜாக்கிரதை. உன்னோட லவ்வுக்கு மட்டும்தான் ஓகே சொல்லி இருக்கிறேன். எதா இருந்தாலும் நம்மளோட கல்யாணத்துக்கு பிறகு தான். அதுக்கு முன்னாடி உன்னோட விரல் நகம் கூட என் மேல படக் கூடாது."

"இதென்ன புதுசு புதுசா கண்டிஷன் போடற. நான் எப்போதும் போல உன்னோட குரு தான். நீ சம்மதம் சொன்னதால எதுவும் மாறிடாது. சரியா அதனால இனிமே தேவையில்லாம எதையும் யோசிக்க எல்லாம் செய்யாத…"

*ம்...சரி.. ஆனால்.."

"கேளு நித்து என்ன கேட்கணும்னு தோணுதோ அத கேட்டுடு.."

"ஏன் திடீர்னு இப்படி என்கிட்ட கேட்ட.. சின்ன வயசுல இருந்து இத்தனை நாள் பழகறோமே ஒரு நாள் கூட உன்னோட பார்வை என் மேல வேற மாதிரி கூட பார்த்தது கிடையாது."

"அது நித்யா.. எனக்குள்ள இந்த மாற்றம் எப்படி வந்ததுன்னு இன்னுமே எனக்கு தெரியலை. உன்னை எனக்கு பிடிக்கும் தான் ஆனால் இங்க காலேஜ்ல வந்து சேரும் போது கூட அதெல்லாம் எனக்கு தெரியலை.."
"
உங்க அண்ணா தான் நித்தியா இந்த காலேஜ்ல நித்யா சேர் போறா.. நீ எங்க சேரப் போற அப்படின்னு கேட்டது.."

"என்னது அண்ணாவா.."

"ஆமாம்.. டெண்த் படிக்கும் போது எனக்கு மொபைல் போன் வாங்கி தந்தாங்க இல்லையா.. அப்ப இருந்தே உங்க அண்ணா நம்பர் என்கிட்ட இருக்கு. உங்க அண்ணா சொல்லும் போது உனக்கு சர்ப்ரைஸ் தரணும்னு பின்னாடி இங்கு வந்து சேர்ந்தேன். ஆனால் இங்கே வந்து சேரும் போதெல்லாம் எதுவும் தோணல. இப்ப சமீப காலமா உன்கிட்ட யார் பேசினாலும் எனக்கு கோவம் வருது. உங்ககிட்ட பேசரவன பார்க்கும் போது அவன தூக்கி போட்டு மிதிக்கணும் என்கிற அளவுக்கு கோவம் வருது."

"டேய் குரு இதெல்லாம் ஓவர்.."

"அதுதான் நித்தியா அதனால யோசித்துப் பார்க்கும்போது தான் எனக்கு புரிந்தது.. நீ எனக்குத்தான்னு தெரிஞ்சு போச்சுன்னா இந்த பொறாமை எல்லாம் வராதோ என்னவோ அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சேன். உன்கிட்ட சொல்ல எனக்கு என்ன தயக்கம் அதுதான் சொல்லிட்டேன்."

"அப்புறம் இந்த ரெண்டு நான் காலேஜுக்கு வராததற்கு முக்கிய காரணம் நீதான். ஒருவேளை நான் உன்ன பிரெண்டா தான் நினைச்சேன் அதனால வேற மாதிரி யோசிக்க முடியாது அப்படின்னு சொல்லிட்டா என்ன செய்வது என்கிற பயத்திலேயே ரெண்டு நாளைக்கு காலேஜுக்கு வரல…"

"ஆனா நீ இந்த நல்ல முடிவவை தான் சொல்லுவேன்னு எனக்கு நேத்து உங்கஅண்ணா போன் பண்ணி சொல்லிடாங்க.."

"பரத் அண்ணாவா…"

"ஆமாம் பரத் அண்ணாவேதான் எடுத்து பேசினாங்க நானும் பேசினேன்... படிப்பு முடிஞ்சதுக்கு பிறகு வீட்டில் சொல்லி கல்யாணத்தை முறைப்படி பேசிக்கலாம். உன் மேல நம்பிக்கை நிறைய இருக்குது. என் தங்கச்சி உன்னோட பொறுப்புதான் பார்த்துக்கோ.. இப்படின்னு சொன்னாங்க.."

"நீ என்ன சொல்ல போறான்னு தெரிஞ்சுக்கறதுகாகத்தான் உன்கிட்ட அப்படி கேட்டேன் வெளிய போயிட்டு வரலாமா அப்படின்னு... பயப்படாத எழுந்து வா" என்று அவளது கரம் பற்றி அழைத்துச் சென்றான்.

காதலுக்கு சம்மதம் சொல்லி இருந்தாலும் கூட இவர்கள் இருவருமே எப்போதும் போலத்தான் பழகி வந்தனர்.

அதிகப்படியான உரிமையை இருவருமே எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கம் போல காலையில் காலேஜுக்கு வந்தார்கள் என்றால் ஒரு புன்னகையோடு அந்த நாள் இனிமையாக தொடர்ந்திருக்கும்.

நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இங்கே பரத்தின் ஆபீஸ் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு கொண்டிருந்தது.

நிறைய புதிய புதிய ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. ஆரம்பத்தில் பத்து பேர் என ஆரம்பித்த அந்த தொழிற்சாலை தற்சமயம் ஐம்பது பேரை தாண்டி இருந்தது.

ஓய்வு என்பது சற்றே குறைய ஆரம்பித்திருந்தது பரத்துக்கு.. தூங்கும் நேரம் கூட பரத்தின் நினைவுகள் எல்லாமே ஆபிசை சுற்றியே வந்து கொண்டிருந்தன. கவனமெல்லாம் முழுக்க முழுக்க ஒரே இடத்தில் குவிய ஆரம்பிக்க உடல் ரீதியில் வேறு ஒரு மாற்றம் நிகழ ஆரம்பித்திருந்தது பரத்திற்கு...



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”