காதல்_15

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_15

Post by Rajeswari.d »

15

திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிந்து இருந்தது. குரு நித்யஸ்ரீயின் காதலுக்கு கூட கிட்டத்தட்ட மூன்று வருடங்களை நெருங்கிக்கொண்டிருந்தது.

சிறு சிறு சலசலப்பு போல இருவருக்கும் நடுவிலும் பிரச்சினைகள் எழுந்தாலும் அது எல்லாமே அந்த நேரம் மட்டும்தான். அடுத்தநாள் எல்லாவற்றையும் மறந்து விட்டு புதிதாக எதுவும் நடக்காதது போல பேச இருவராலும் முடிந்தது.

அன்றும் வழக்கம் போல இரவு பரத்தோடடு வீட்டிற்கு செல்கையில் வேறு ஒரு மகிழ்ச்சியான சம்பவம் வீட்டில் நடந்திருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பூர்ணிமா அவளது தாயாரின் வீட்டுக்கு சென்று இருந்தாள். அங்கே லேசாக உடல்நிலை சரியில்லை என்று ஹாஸ்பிட்டளுக்கு செல்ல அப்போதுதான் அவள் தாய்மை அடைந்து இருந்தது தெரிய வந்திருந்தது.

அது தெரியவும் போனில் அழைத்து சொன்னவர்கள் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருந்தனர்.

வீட்டிற்கு சென்ற உடனேயே நித்யஸ்ரீ அவ்வளவு மகிழ்ச்சி.. "அண்ணி நான் அத்தையாக போறேன்" என்று கத்தியபடியே வேகமாக ஓடிச்சென்று பூர்ணிமாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"என்ன இது நித்து "குழந்தை மாதிரி என்று அவளும் மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்டாள்.

"அண்ணி எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா அண்ணி உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க.. உங்களுக்கு என்ன சாப்பிடணும்னு தோணுது அதை சொல்லுங்க இப்பவே போய் வாங்கிட்டு வர்றேன்."

"வாலு இப்பதான் பத்து நாள்தான் தள்ளிப் போய் இருக்கு.. இதுக்குள்ள இத்தனை ஆர்ப்பாட்டம் தேவையில்லை. இப்பதான் நான் சாப்பிட்டு வந்து இருக்கிறேன் எனக்கு எதுவுமே வேண்டாம். இங்க தான் எல்லாமே இருக்குதே அப்புறம் எதுக்காக புதுசா வாங்கணும்."

"அண்ணி உங்க அம்மா அப்பா எல்லாம் எங்க?"

*அவங்க என்ன விட்டுட்டு புறப்பட்டு போய்ட்டாங்க. மாமா வண்டி ஏத்தி விட்டுட்டு வரேன் ன்னு கூட போயிருக்கிறார்கள்."

"ஓகே ஓகே அண்ணி இனிமேல் வேலை எல்லாம் செய்யக் கூடாதுன்னு சொல்வாங்க இல்லையா.. வீட்ல நீங்க எந்த வேலையும் செய்யக்கூடாது. உங்களுக்கு என்ன வேணும்னாலும் சரி நான் தான் எடுத்துட்டு வந்து தருவேன்."

"நித்யா நான் ரொம்ப நல்லா இருக்கறேன் டா எனக்கு எதுவும் இல்லை. வாந்தி வர்றதுக்கான அடையாளம் கூட இல்ல போதுமா."

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நீங்கள் நிறைய ரெஸ்ட் எடுக்கணும். உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கும் அதை எல்லாம் தினமும் என்கிட்ட சொல்லுங்க காலேஜ்ல இருந்து வரும்போது கடையில வாங்கிட்டு வந்துடறேன்."

"சரி சரி உன் கிட்டயே சொல்லிடறேன் போதுமா. "

"ஓகே அண்ணி அண்ணா கிட்ட நிறைய பேச வேண்டியது இருக்கும் நீங்க அண்ணா கிட்ட பேசுங்க நான் அம்மா கூட இருக்கிறேன்" என்றபடி சமையலறைக்குள் நுழைந்தாள் நித்யஸ்ரீ.

அந்த மகிழ்ச்சியை அப்படியே அடுத்த நாள் குருவிடம் போய் சொல்லியிருந்தாள் நித்யஸ்ரீ.

நேற்றைய கோபமெல்லாம் எங்கேயோ ஒளிந்து கொண்டது நித்யஸ்ரீக்கு.. குரு கூட நேற்றைய சம்பவத்தை மறந்து இருந்தான்.

எப்போதும் போல பெரிய சாக்லேட்டை வாங்கிக்கொண்டு வந்திருக்க.. முதலில் யார் பேசுவது என்று தோன்ற ஆரம்பித்தது நித்யஸ்ரீக்கு…

இன்றும் வழக்கம்போல அமரும் இடத்தில் அமர்ந்திருந்தான். நான்கு பேர் அமரக்கூடிய நீளமான இருக்கை அது. ஒரு ஓரத்தில் அமர்ந்து இருக்க..இவனைப் பார்த்தபடியே அடுத்த மூனையில் வந்து அமர்ந்தாள் நித்யஸ்ரீ.

வந்து அமர்ந்த உடனேயே குரு அவளை நிமிர்ந்து பார்த்தான்..மொபைலில் வேறு எதையோ பார்த்துக் கொண்டிருக்க கவனத்தை மறுபடியும் மொபைலில் செலுத்தினான்.

அவனைப் பார்த்தபடியே இரண்டு அடி நகர்ந்து அவனை நெருங்க...மொபைலில் இருந்து கண்களை எடுத்தவன் விசிறியை பார்த்துவிட்டு மறுபடியும் மொபைலை பார்த்தான்.

மறுபடியும் நித்யஸ்ரீ இரண்டு அடி நகர... முகம் முழுக்க புன்னகையோடு குரு சட்டெனஇவளை நோக்கி இரண்டடி நகர்ந்து அவளுக்கு அருகே வந்து அமர்ந்தான்.போதுமா என்ற ஒரு சொல்லோடு..

அவனின் முகத்தை பார்த்தபடியே சிரிப்போடு தன்னுடைய கையிலிருந்த பேக்கிலிருந்து சாக்லெட்டை எடுத்து அவனுக்கு முன்பாக நீட்டினாள் நித்யஸ்ரீ..

இவள் எடுத்து நீட்டவுமே பதிலுக்கு குரு கூட பெரிய சாக்லெட்டை எடுத்து அவளுக்கு நேராக நீட்டினான்.

"இது எதற்காக "என்று கேட்டாள் நித்யஸ்ரீ.

"சாரி நேத்து கோபமா உன்கிட்ட பேசிட்டோன் இல்லையா அதுக்காக.. ஆனால் இன்றைக்கு சாக்லேட் ஷேரிங் எல்லாம் தர மாட்டேன்.. உன்னோடத நான் மட்டும் தான் சாப்பிட போறேன்" என்று பாக்கெட்டில் வாங்கி வைத்துக்கொண்டான்.

" இப்போது சொல்லு என்ன விசேஷம் இவ்வளவு பெரிய சாக்லேட்டை எனக்காக வாங்கிட்டு வந்து இருக்கிற."

"நான் வந்ததும் சொன்னனே நீ கவனிக்கவே இல்லையா குரு நீ வர வர சரியில்லை தெரியுமா."

"ஆமா எனக்கு தெரியுது" என்று கூறியபடி வழக்கமாக தலையை கோதி விடுவது போல கோதி விட்டவன்.. உன் முகத்தை பார்த்தாலே எல்லாமே மறந்து போகுது நித்யஸ்ரீ என்று கூறினான்.

"வழியாத பாக்கவே சகிக்கல" என்றபடி மறுபடியும் கூறினாள்.

"சூப்பர் சூப்பர் உங்க வீட்டுக்கு இன்னொரு உறுப்பினர் வரப்போறாங்க போல இருக்கு. ஆனாலும் உங்க அண்ணா ரொம்ப ஸ்பீடு தான். இவ்வளவு சீக்கிரமா நிச்சயமா உங்க வீட்ல குழந்தையே எதிர்பார்க்கல.."

"என்ன கிண்டல் பண்ணுறயா குரு அண்ணாவுக்கு கல்யாணம் முடிஞ்சு மூன்று வருஷம் ஆகிடுச்சு.."

"அதுதான் சொன்னேன் நித்யஸ்ரீ ரொம்ப ஸ்பீடா இருக்காங்க அப்படின்னு"..

"என்னடா பேச்சு எல்லாம் ஒரு மாதிரியா போகுது.. பிச்சிடுவேன் பாத்துக்கோ ஒழுங்கா பேசி பழகு. உனக்கு கல்யாணம் பண்ணினா நீ வேணும்னா உடனே பெத்துக்கோ யாரு வேண்டாம்னு சொன்னாங்க."

"எனக்கு பொறுமை எல்லாம் கிடையாது.எனக்கு எல்லாம் உடனே குழந்தை வந்தாகணும்.. என்ன சொல்ற நித்யா" என்று இவளை குறுகுறுவென பார்த்தான் குரு.

"டேய் நீ இப்ப எல்லாம் சரி கிடையாது உன்னோட பேச்சு எதுவுமே சரியில்லை.. நீ முதல்ல இங்கேர்ந்து போ போயும் போயும் உன்கிட்ட வந்து என்னோட மகிழ்ச்சியை சொல்ல வந்தேன் பாரு.. என்ன சொல்லணும்.. "என்று சொன்னபடி வேகமாக நகர போனால் நித்யஸ்ரீ.

விலகி என்றவளை இழுத்து தனக்கு அருகில் நிருத்திக் கொண்டான் குரு. "எங்க என்ன விட்டுட்டு விலகி போற நான் உன் கிட்ட பேசாம வேற யார் பேச போறாங்க..*

"உன்னோட லவ்வுக்கு ஓகே சொல்லும் போது நான் முடிவா சொல்லிட்டேன்.. இன்னொரு தடவை இது மாதிரி பேசினா நான் உன் கிட்ட பேசவே மாட்டேன் பார்த்துக்கோ.. உன்னோட குறும்புத்தனத்தை என்கிட்ட தயவுசெய்து காட்டாத குரு."

"சாரி இனிமே இது மாதிரி பேச மாட்டேன்."

"எத்தனை சாரி கேட்ப.. கொஞ்சம் யோசிச்சு பாரு.. எப்போ நீயும் நானும் விரும்புவதா முடிவு செஞ்சமோ அன்றையிலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் அடிக்கடி சண்டை வருது இதை கவனிச்சயா குரு."

"அதுதான் சாரி சொல்லிட்டேன்ல இனிமே இது மாதிரி நடக்காது சரியா.. நீ சொன்ன நியூஸ் கேட்டு எனக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான். நானும் மாமா ஆகிட்டேனே.."

குரு இப்படி அவன் மேல் இருந்த கோபம் அந்த நிமிடம் மொத்தமாக வடிந்து இருந்தது. ஆமாண்டா இத மறந்துட்டேனே நீயும் மாமா ஆகிட்ட..அத விடு அண்ணாவுக்கு எப்போ மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருக்கீங்க... நேற்று பெண் பார்க்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்த இல்லையா..

"பொண்ணு பாக்க எல்லாம் நான் அதிகப்படியாம் என்னை கூப்பிட்டு போகலை.."

"குரு இப்படி சொல்லவும் சிரிக்க ஆரம்பித்தாள். உனக்கு இந்த அவமானம் தேவைதான் எவ்வளவு வாய் பேசற.. இப்பத்தான் என் மனசு குளுகுளுன்னு இருக்கு."

"கடுப்பேத்தாத நித்யஸ்ரீ.. அதைவிடவும் இன்னோன்றும் சொன்னாங்க.. நான் ரொம்ப சின்ன பையனாம்.. அங்க எல்லாம் எதுக்கு கல்யாணத்தப்ப பொண்ண பார்த்தா போதும். இப்போ ஒழுங்கா காலேஜுக்கு போக சொல்லுன்னு அப்பா சொல்லி முடிச்சாச்சு."

"செம தான் போ கேட்கும்போது எனக்கு இன்னும் சிரிப்பு வருது. எப்போதும் போல காலேஜுக்கு வந்து இருக்கலாம் இல்ல அபிநயா இன்னைக்கு லீவா.."

"அவளும் அம்மா கூட போயிருக்கிறா.. அவங்க எல்லாம் போறாங்களாம் நான் மட்டும் போனா தப்பாம் இது எந்த மாதிரியான லாஜிக் எல்லாம் எனக்கு தெரியல."

"ஒருவேளை குரு இப்படி இருக்குமோ.."

"என்ன.."

"ஒருவேளை நீ கூட போனா பொண்ணு உங்க அண்ணனுக்கு பதிலா உன்ன புடிச்சி இருக்குன்னு சொல்லிட்டா.."

"ம்... அங்கேயே பளார்னு அந்த பொண்ணுக்கு கன்னத்தில் ஒன்னு வைத்து விட்டு வருவேன் அதுதான் நடக்கும்."

டேய் உன்ன சும்மா தாண்டா கேட்டேன். நிஜமா நீ அதை தான் செஞ்சாலும் செய்வ.. நீ போகாம இருக்கிறதே பெஸ்ட்...வா கிளாசுக்கு போகலாம் என்று கூறியபடி தங்களது வகுப்பறையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் இரண்டு பேரும்.

ஆனால் அன்று வீட்டிற்கு செல்லும் போது மறுபடியும் சண்டை ஆரம்பித்து இருந்தது. ஆரம்பித்தது என்னவோ குரு தான்.

"தேவையில்லாமல் என் கிட்ட சண்டை போட்ட இல்லையா.. சந்தேகம் வேற பட்ட.. அதனால உனக்கு பனிஷ்மெண்ட் தர வேண்டாமா.. அதனால நான் சொல்றத தெளிவா கேளு. இந்த வாரம் நீ என் கூட வெளியே வரணும்."

" வாட் என்னது.. "கொஞ்சம் அதிர்ச்சியாக குருவைப் பார்த்தாள் நித்யஸ்ரீ.

"இந்த வீகெண்ட் என் கூட வெளியே வரனும் நித்து."

*குரு விளையாடாத.. உனக்கு தெரியும் நான் எங்கேயும் வெளியே வர மாட்டேன்னு.."

"ஏன் வர மாட்ட.. அதெல்லாம் தாராளமாக வரலாம். உன்ன வேற எங்கயாவது அழைக்கிறேன். இங்கே இருக்கிற மாலுக்கு தானே கூப்பிடுறேன்.. தனியா எங்கேயாவது கூப்பிட்டா பயந்துகலாம் இங்கே வர்றதுக்கு என்ன".

"நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ.. எனக்கு அதைப் பத்தின பிரச்சினை கிடையாது. என்னால எங்கயும் வர முடியாது. இத்தனை நாள் என்ன பத்தி உனக்கு தெரியும் தானே புதுசா ஏன் இப்படி எல்லாம் கூப்பிடற.."

"முடிவா என்னதான் சொல்ல வர்ற நித்யஸ்ரீ.. என் கூட வெளியே வருவதால் என்ன பிரச்சனை வந்துட போகுது. உங்க அண்ணாவும் சொல்லி இருக்காங்க நான் ரொம்ப நல்ல பையன்னு.. இதுக்கு மேல யார் உனக்கு சொல்லணும்."

"நல்ல பையன் உன்னுடைய எதிர் காலத்துக்கு ஏற்றவன்... வீட்ல சொல்லி இந்த கல்யாணத்தை முடித்து வைக்கிறேன் அப்படினு தான் அண்ணா சொன்னாங்க... உன் கூட வெளியே சுற்ற சொல்லல புரியுதா.."

"இப்ப என்ன தான் சொல்ல வர்ற.."

"உன் கூட எப்போவும் வெளியே வர முடியாது. நிச்சயமா காலேஜ் முடிஞ்சு நீயும் நானும் கல்யாணம் பண்ணின பிறகுதான் வெளியே சுத்தற வேலையெல்லாம்.. இதுதான் என்னோட முடிவு தயவுசெய்து அதுல குழப்பத்தை வர வைக்காதே…"

"இப்ப வர முடியுமா முடியாதா "குருவுக்கு இப்போது லேசான கோபம் வந்திருந்தது.சிறுவயதிலிருந்தே பார்த்துக்கொண்டு இருக்கிறாள் தன் மேல் இவளது நம்பிக்கை இவ்வளவுதானா.. இப்படி தோன்ற ஆரம்பிக்கவும் வார்த்தைகள் சற்றே தடித்த வந்து விழுந்தது.

"நீ என்ன வேணும்னாலும் நெனச்சுக்கோ எனக்கு அதை பத்தி கவலை கிடையாது நான் உன் பின்னாடி எல்லாம் வரமாட்டேன் நான் ஏற்கனவே முன்னாடி சொன்னதுதான்.காதலுக்கு மட்டும் தான் உன்கிட்ட ஒகே சொல்லி இருக்கிறேன். உன்னோட ஊர் சுத்த வருவேன்னு எதிர் பார்க்காத.."

"என் மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிற… இப்பதான் நீ பேசும் போது புரிஞ்சது . ரொம்ப நன்றி நீ எங்கேயும் என் பின்னாடி வர வேண்டாம் நான் இனிமே எப்போதுமே உன்கிட்ட எதுவும் கேட்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டு வேகமாக புறப்பட்டான் குரு.

செல்லும் அவனையே சற்று அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தால் நித்யஸ்ரீ அவனிடம் காதலை சொன்ன பிறகு மறுபடியும் வரும் சண்டை இது..

பின்னாடி சென்று சமாதானம் செய்வதா அல்லது இப்படியே விட்டு விடுவதாக ஒன்றும் தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க தூரமாக சென்றவன் தேய்ந்து மறைந்தான்.

கோபமாக பேசிவிட்டு சென்றிருந்தாலும் நித்யஸ்ரீ பெரிதாக எதையும் கண்டுகொள்ளவில்லை.

எத்தனை கோபமாக பேசினாலும் அடுத்த நாள் வழக்கம் போல வந்து பேசி விடுவான் என்பதில் நித்யாவுக்கு துளி கூட சந்தேகம் கிடையாது. அவனுடைய பிடிவாத குணம் சட்டென கோபப்படுவது இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்கிறாளே…

எல்லாமே அடுத்த இரண்டு நாட்களுக்கு மட்டும்தான்குருவோடு வழக்கம் போல இயல்பாக பேச ஆரம்பித்து இருந்தாள் நித்யஸ்ரீ.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”