காதல்_16

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_16

Post by Rajeswari.d »

16
அடுத்தடுத்து இருவரது வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் நடக்க ஆரம்பித்தது.
குருவின் பெரிய அண்ணாவுக்கு திருமணம் முடிந்த அடுத்த இரண்டு வருடம் முடிந்த பிறகு அடுத்த அண்ணாவிற்கு பெண் பார்க்க ஆரம்பித்து இருந்தனர்.

இங்கே பரத்தின் ஃபேக்டரி ரொம்ப நல்ல முறையில் வேகமாக வளர்ச்சி கண்டு கொண்டிருந்தது.

நித்யஸ்ரீ தினமும் இப்போது ஃபேக்டரீக்கு சென்று கொண்டிருந்தாள்.
பூர்ணிமாவிற்கு இப்போது ஏழு மாதம் நிறைவடைந்து இருந்தது. அந்த மாத இறுதியில் அவளுக்கு வளைகாப்பு செய்து அழைத்து செல்வதற்கு முடிவு செய்திருந்தனர்.

நித்யஸ்ரீ கூட கடைசி ஆறு மாதகால ப்ராஜக்டை தன்னுடைய அண்ணாவின் கம்பெனியிலேயே முடித்திருந்தாள்.இதனால் தொழிலில் இருந்த நெளிவு சுழிவுகள் நிறைய கற்றுக்கொள்ள அவளால் முடிந்தது.

இவளுடைய சுறுசுறுப்பு எளிதில் எதையும் எளிதாக கற்றுக் கொள்ளும் ஆர்வம் இது எல்லாமே பரத்திற்கு மிக மிக பிடித்தது தன்னுடைய தங்கையை தேவதையாக தாங்கினான்.

குரு கூட அந்த ஆறு மாத காலத்தில் வேறு ஒரு கம்பெனியில் புராஜெக்டை முடித்து விட்டு மறுபடியும் காலேஜிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

கல்லூரியில் படிப்பு நிறைவடைய கூட இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தது. அடுத்த சில நாட்களில் படிக்க வென்று விடுமுறை அளித்து விடுவார்கள்.

அபிநயாவுக்கு சென்ற வருடமே படிப்பு முடிந்து இருந்தது. கடைசியாக இவளைப் பார்த்து என்ன மறந்திடக் கூடாது நித்யஸ்ரீ. குரு மட்டும் உனக்கு பிரண்டு கிடையாது நானும் தான். நீ எப்ப வேணும்னாலும் என்னோட வீட்டுக்கு வரலாம். இப்ப போலவே எப்போதுமே என் கூட போன்ல பேசிகிட்டே இருக்கணும். இப்படியெல்லாம் இவளிடம் கூறிவிட்டு சென்றிருந்தாள் அபிநயா.

குரு கூட கேம்பஸில் செலக்ட் ஆகி இருந்தான். பெரிய கம்பெனியில் வேலை கிடைத்திருந்தது மாதம் இருபத்தி ஐந்து ஆயிரம் ஆரம்ப சம்பளம் என்று பேசியிருந்தனர்.

அன்றைய பொழுதில் நித்யஸ்ரீ யை பார்க்கவும்..இன்னும் கொஞ்ச நாள்ல காலேஜ் முடிய போகுது நீ என்ன செய்யப் போகிற.. எந்த இன்டர்வியூக்கும் நீ வரவே இல்லை..

"அண்ணாவுக்கு உதவியா ஆபீஸுக்கு போனா பத்தாதா... நிச்சயமா என்னோட வீட்டுல விட மாட்டார்கள்.. ஆனால் நீ ஏன் குரு.. கேம்பசில் இந்த வேலையை ஏன் செலக்ட் பண்ணின.. உனக்கு தான் உங்களோட டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருக்கே அப்புறம் ஏன்?"

"நித்து எனக்கு கொஞ்சம் கனவு இருக்கு.அப்பாவால முடிகிற வரைக்கும் ஸ்டோரை பார்த்துக் கொள்ளட்டும்.அது வரைக்கும் வெளியே தான் வேலைக்கு போவேன். "

"என்னவோ போ குரு உங்கப்பா உன்மேல பெரிய நம்பிக்கை வச்சிருந்தாங்க. நீ அவங்க நம்பிக்கையை நீ ஏமாத்திட்டின்னு தோணுது."

"அப்பாகிட்ட சொல்லிட்டேன் நித்யஸ்ரீ. கொஞ்சம் வருத்தம் தான் ஆனா வேண்டாம்னு எல்லாம் சொல்லல உன்னோட ஆசை எதுவோ அதை செஞ்சுக்கோ அப்படின்னு சொல்லிட்டாங்க. கொஞ்ச நாள் தானே ஒரு வருஷம் இல்லாட்டி ரெண்டு வருஷம் அவ்வளவுதான்.. அதற்குப் பிறகு அங்கு கடையை தான் போய் பார்த்துக்கணும். அவங்கள தனியா எல்லாம் எப்போதும் விடமாட்டேன் புரியுதா. நீ சொல்லு உன்னோட பிளான் என்ன. அண்ணாவோட பேக்டரிய பாத்துக்கணும்.. அது ஏற்கனவே எனக்கு தெரியும்.நம்ம கல்யாணத்தைப் பத்தி எப்ப பேச ஆரம்பிக்கலாம்."

"என்ன இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு கேள்வியை கேட்கிற குரு.இப்பத்தான் படிப்பு முடிஞ்சிருக்கு இன்னும் ரெண்டு வருஷமாவது அண்ணா கூட இருக்கணும். அதற்குப் பிறகுதான் கல்யாணத்த பற்றி யோசிப்பேன்."

"காலேஜ் முடிஞ்சிருச்சு இனிமே அடிக்கடி பார்க்க எல்லாம் முடியாது. நான் கூப்பிட்டா கூட நீ வரமாட்டேன்னு சொல்லுவ."

"அப்படி எல்லாம் இல்ல குரு எனக்கும் உன்ன பார்க்காம இருக்க முடியாது."

"ஏய் நித்யா நிஜமாக தான் சொல்லுறியா.. சத்தியமா இந்த மாதிரி ஒரு வார்த்தைய உன் வாயிலிருந்து வரும்னு எதிர் பார்க்கவே இல்லை. சொல்லு எப்படி சந்திக்கலாம் இரண்டு நாளைக்கு ஒரு தடவை பார்க்கலாமா.."

"தினமுமே உன் கிட்ட போன்ல பேசுவேன் குரு.அப்புறம் ரெண்டு நாளைக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு பிளேஸ்ல வச்சு பார்த்துக்கலாம். அண்ணா கூட பிசினஸ்ல ஏதாவது ஒரு சாதனையை பண்ணனும் அதுதான் என்னோட ஆசை. அதனால ப்ளீஸ் ஒரு ரெண்டு வருஷம் எனக்கு டைம் வேணும். உங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வார்கள் தானே.."

"அப்பா அம்மாவுக்கு நான் ரொம்ப செல்ல பையன் நிச்சயமா என்னுடைய ஆசைக்கு தடையாக இருக்க மாட்டாங்க. கட்டாயமா நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவாங்க.. எனக்கு அவங்க மேல அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு."

"தேங்க் யூ டா..'

"ஏன் சந்தேகமாவே கேட்கிற நித்து.."

"ஒரு பெயரை எத்தனை விதமா தான் கூப்பிடுவியோ எனக்கே தெரியல..உன் வீட்லயே ரெண்டு அத்தை பொண்ணுங்க இருக்கிறாங்க இல்லையா அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொன்னா என்ன செய்வது அது தான் சந்தேகத்தை கேட்டேன்."

"பைத்தியம் சின்ன வயசுல இருந்தே கூடவே வளர்ந்தவங்க அவங்கள எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும் அப்படி ஒரு பைத்தியக்காரத்தனத்தை என்னோட வீட்ல யாரும் செய்ய மாட்டார்கள் நீ தேவையில்லாமல் கவலைப் படத் தேவையில்லை."

"உன் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு குரு சின்ன வயசுல இருந்து உன்ன பார்த்துக்கிட்டே இருக்கறேன் இல்லையா ஆனாலும் உன்கிட்ட இதுபோல ஏதாவது கேட்டு வம்பு பண்ண எனக்கு பிடிக்குது என்ன செய்ய.."தனது ஒற்றைக் புருவத்தை தூக்கி கிண்டலாக கேட்டாள் நித்யஸ்ரீ.

"அந்த வம்பு இருக்குற வாயை இழுத்து பிடித்து அந்த உதட்டோட உதடு வச்சு ஒரு முத்தம் கொடுத்தா எல்லாம் சரியா போயிடும்.."

"ஏய் என்ன பேச்சு எல்லாம் ஒரு மாதிரியா போய்க்கிட்டு இருக்குது உன் கிட்ட பேசல சரியா வா வேற வேலை இருந்தா போய் பார்க்கலாம்" என்றபடி நகர்ந்து சென்றாள்.

அந்த வாரத்திலேயே காலேஜ் விடுமுறை அளித்திருந்தனர். மொத்த மாணவர்கள் பட்டாளமும் அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்று இருந்தனர்.

நித்யஸ்ரீ குரு உட்பட அனைவருமே அங்கே சென்று இருக்க ஆரவாரமாக நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.நிறைய மாணவ மாணவிகள் இனிமேல் பார்க்கவே முடியாது என்பது போல அழுது கொண்டிருந்தனர்.

இவை எல்லாமே நித்யஸ்ரீ ஒரு ஓரமாக குருவின் கைப்பற்றி அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏன் குரு எல்லாரும் இப்படி எல்லாம் அழறாங்க.. எனக்கு அழுகையே வரமாட்டேங்குது பார்த்தால் சிரிப்பு தான் வருது என்ன செய்ய "என்று இவனிடம் திரும்பி கேட்டாள்.

"அதெல்லாம் மனுஷங்களுக்கு தான் அந்த உணர்வு வரும் நீதான் ராட்சசி ஆச்சே என்னோட மனசை கொள்ளை கொண்ட ராட்சசி அதனால அதெல்லாம் தோணாது நானே நாளையிலிருந்து பார்க்கப் போகிறது இல்லன்னு கவலையோட இருக்கிறேன் நீ அதை பத்தி யோசிக்கிற மாதிரியே தெரியலை "என்று அவளிடம் மெலிதாக கோபப்பட்டான் குரு.

"போடா.."

*எனக்கு தேவைதான் அப்புறம் நித்யஸ்ரீ உங்க அண்ணிக்கு வளைகாப்பு முடிஞ்சு அழைச்சிட்டு போனாங்க.. என்ன ஆச்சு இப்போ அவங்க எப்படி இருக்கிறாங்க.."

"அவங்க நல்லா இருக்கிறாங்க இந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா கூட போய் பார்த்துட்டு வந்தேன்.ரெண்டு நாள்ல மறுபடியும் போய் பார்த்துட்டு வருவேன்".

"ஜாலியா ஊர் சுத்துற அப்படித்தானே.."

"அண்ணி பார்க்க போறது எப்படி ஜாலியாக ஊர் சுத்துறது ஆகும் நான் எவ்வளவு நாள் ஆசையா காத்திருக்கேன் தெரியுமா பிறக்கப் போற குழந்தையை முதன் முதலில் நான் தான் என்னோட கையில வாங்குவேன்னு சொல்லி இருக்கிறேன். அண்ணிகிட்ட சொல்லிட்டும் வந்திருக்கிறேன் வலி பிடிக்கவும் முதல்ல என்கிட்ட தான் சொல்லணும் நான் உடனே அங்க வந்துடுவேன் அப்படின்னு.."

"என்னை மறந்திட மாட்டீயே நித்யஸ்ரீ.."

"என்ன குரு இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்கிற உன்ன எப்படி மறப்பேன்."

நண்பர்கள் அனைவரும் கலைந்து செல்லும் வரையிலுமே இரண்டு பேரும் அங்கேயே இருந்து வேடிக்கை பார்த்தனர் பிறகு ஒருவருக்கொருவர் விடைபெற்றுப் புறப்பட்டார்.

படிக்க என்று விடுமுறை கொடுத்து இருந்தாலும் அடுத்த நான்கு நாட்களுக்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை.நான்கு நாட்கள் முடிந்த உடனேயே முதன்முறையாக நித்யஸ்ரீற்கு குருவைப் பார்க்க வேண்டும் போல தோன்ற ஆரம்பித்தது.

எப்போதுமே குரு தான் நித்தியஸ்ரீயிடம் கூறிக் கொண்டு இருப்பான் பார்க்கலாமா என்று இந்த முறை அப்படியே நேர்மாறாக மாறியிருந்தது நித்யஸ்ரீ குருவைப் பார்க்க வேண்டும் என்று மனதில் தோன்ற ஆரம்பித்தது.

முதன்முதலாக குருவுக்கு போனில் அழைப்பு விடுத்தாள் நித்யஸ்ரீ ."ரொம்ப நாளா அடிக்கடி நீ கேட்டுக்கிட்டு இருப்ப இல்லையா எங்கேயாவது வெளியில் சந்திக்கலாமா அப்படின்னு இன்றைக்கு வரியா நீயும் நானும் பார்க்கலாம் "என்று..

"உலக அதிசயம் நித்து சாதாரணமா நீ என்ன பார்க்க கூப்பிட மாட்டையே இன்றைக்கு என்ன திடீர்னு... வீகெண்ட் ஆயிடுச்சு உங்க அண்ணிய பார்க்கக்கூட ஊருக்கு போகலையா.."

"இந்த வார நிறைய வேலை இருக்கிறது அண்ணா வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க அதனால இந்த வாரம் போகல அடுத்த வாரம் தான் போகணும் நான்தான் இரண்டு நாள் ஆபிசுக்கு வரலைன்னு சொல்லி இருக்கிறேன்.."

"நான் தான் முதலிலேயே சொன்னேனே உனக்கு இந்த ஆபீஸ் வேலை எல்லாம் செட்டாகாது நாலு நாள் போக பிடிக்கும் அதற்கு பிறகு போக பிடிக்காது வீட்ல இருந்தா நல்லா இருக்கும்னு மனசு சொல்ல ஆரம்பிக்கும்.."

"ஹலோ உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு இருக்காத அப்படி எல்லாம் கிடையாது உன்ன பாக்கனும்னு தோணுச்சு அதனால கூப்பிட்டேன் வருவியா இல்லையா அத மட்டும் சொல்லு இல்லைனா ஒன்னும் பிரச்சனை இல்ல வழக்கம் போல காலையில் புறப்பட்டு ஆபிசுக்கு போய் விடுவேன் அண்ணாவுக்காவது உதவியாக இருக்கும்.."

"கூல்.. எங்க வர்றதுன்னு சொல்லு நாளைக்கு தானே கரெக்டா வந்துடுவேன்.."

"சரிடா போனை வைக்கிறேன் "என்று போனை வைத்தாள் நித்யஸ்ரீ.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”