காதல்_18

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_18

Post by Rajeswari.d »

18
யோசித்த படி நின்றுகொண்டிருக்கும் அந்த நேரத்திலேயே மறுபடியும் அடுத்த வலி இதயத்தில் இருந்து வருவது போல தோன்றியது.

யோசிக்காமல் டாக்டரிடம் என்ன என்று பார்த்து விடலாம் என்று கூறியபடியே அவர்கள் சொன்ன அறையை நோக்கி நகர ஆரம்பித்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தெரிந்துவிட்டது பரத்திற்கு அட்டாக் வந்திருக்கிறது என்று வேகவேகமாக முதலில் அதற்கு தேவையான உபகரணங்களை அவனுக்கு கொடுத்து ஐசியூவில் அட்மிட் செய்து இருந்தனர்.

பரத் முதலாவதாக தகவல் சொல்ல அழைத்தது பரத்தின் தந்தைக்கு.. "அப்பா எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல ஹாஸ்பிடல் வந்திருக்கிறேன்..செக்கப் முடிஞ்சு ஒரு மணி நேரத்துக்குள் வந்துடுவேன் நீங்க அங்க யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். முடிஞ்சதும் நானே சொல்லறேன்" என்று கூறினான்.

எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டவர் அதற்கு மேல் அங்கே நிற்க வில்லை நேராக தன்னுடைய மகனைக் காண வேகமாகப் புறப்பட்டு சென்று இருந்தார்.

நீண்ட நேரமாக தன்னுடைய அண்ணனை தேடிக்கொண்டிருந்த நித்யஸ்ரீ தான் மறுபடியும் தன்னுடைய அண்ணனுக்கு போனில் அழைப்பு விடுத்தாள்.

பரபரப்பாக அவனுக்கு கொடுக்க வேண்டிய ஒவ்வொரு மருந்துகளையும் கொடுக்க ஆரம்பித்து இருந்தனர் ..

வலி இப்போது சற்று குறைந்ததாகும் தோன்றியது ஆனால் உடனே ஹாஸ்பிட்டலை விட்டு அனுப்ப முடியாது என்று தலைமை மருத்துவர் இவனிடம் கூறியிருந்தார் இருந்தார்.

பரத் கையில் குளுக்கோஸ் இறங்கி கொண்டிருக்க படுத்திருந்தான் . இப்போது போனில் அழைப்பு கேட்கவும் எடுத்து பேச போனை வாங்கி பார்த்தான். தன்னுடைய தங்கை எனவும்.. குட்டிமா என்று குரல் கொடுத்தான்.

"என்ன ணா எங்க இருக்குற இங்க ஹாஸ்பிடல் வரேன்னு தானே சொன்ன இன்னும் ஏன் வரவில்லை "என்று கேட்டாள்.

"சின்னதா உடம்பு முடியலடா இங்கே ஹாஸ்பிடல் வந்திருக்கிறேன்.."உண்மை தெரிந்தால் பதறி விடுவாள் என்று லேசாக உடல்நிலை சரியில்லை என்று பொய் உரைத்தான் பரத்.

*என்ன ணா சொல்லறிங்க... என்ன ஆச்சு "என்று வேகமாக சற்று குழப்பமாக கேட்டாள்.

"கை ரொம்ப வலிக்குது இல்லையா ஹாஸ்பிடல்ல காட்டி ஏதாவது பெயின் கில்லர் மாதிரி வாங்கலாம்னு வந்தேன் டா ..அங்கே தான் எனக்கு பதிலா நீ இருக்கிறியே எனக்கு நம்பிக்கை இருக்கு நித்யஸ்ரீ எந்த சூழ்நிலையையும் என்னோட இடத்துல இருந்து நீ பார்த்துக்குவேன்னு அப்படிங்கற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்குது."

"ஏன் இப்படி எல்லாம் பேசுற இப்படி எல்லாம் பேசக்கூடாது ணா.."

"நெருப்புனா வாய் வெந்திடுமா என்ன குட்டிமா எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன் நான் சொன்னது நினைச்சு நீ பதட்டம் எல்லாம் பட வேண்டாம் ஆனா ஒருவேளை எனக்கு ஏதாவது இருந்தா என்னோட ஸ்தானத்தில் இருந்து எல்லாத்தையும் நீ தான் பார்த்துக்கனும் ஆபீஸ்ல இருந்து வீட்ல இருக்குற எல்லாத்தையும் என்னமா கேட்கிறதா குட்டியா" என்று கேட்டான்.

அவன் அப்படி சொல்லணுமே கண்களில் நீர் வழிய ஆரம்பித்திருந்தது ."அண்ணா இப்படி எல்லாம் சொல்லாத... இப்படியெல்லாம் பேசாதே எனக்கு அழுகை அழுகையா வருது நீ முதல்ல எங்க இருக்கற அதை முதல்ல சொல்லு" என்று கேட்டாள்.

"ஒன்னும் இல்லடா வந்துடுவேன்" என்று போனை வைத்து இருந்தான் பரத்.

எப்போதுமே அவளுடைய அண்ணன் இதுபோல எல்லாம் பேசியது கிடையாது. முதன் முதலாக இப்படி பேசும் நிறைய குழப்பம் இவளுக்குள் தோன்றியிருந்தது.

மறுபடியும் இவளுடைய தந்தைக்கே அழைப்பு விடுத்தாள். அவர் போனை எடுக்கவில்லை. இங்கே ஹாஸ்பிடலுக்கு அருகில் இருப்பது போலவும் தெரியவில்லை.

அதேநேரம் இங்கே ஹாஸ்பிட்டலில் பூர்ணிமாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து இருந்தது.

ஏற்கனவே சொன்னது போலவே முதல்முறையாக நித்யஸ்ரீ யின் கைகளில் கொண்டு வந்து குழந்தையை கொடுத்தனர். கண்களில் நீர் வழிய மகிழ்ச்சியோடு கைகளில் வாங்கிக்கொண்டாள் நித்யஸ்ரீ.

மகிழ்ச்சியோடு அடுத்ததாகதன்னுடைய தாயாருக்கு கொடுத்தாள்.பூர்ணிமா வேகமாக தன்னுடைய மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே நகர்ந்து வந்தாள்.

தன்னுடைய அண்ணனுக்கு போனில் அழைப்பு விடுக்க அங்கே அழைப்பு எடுக்கப்படவில்லை

ஒரு வேளை வந்துகொண்டு இருக்கலாம் என்று நினைத்தவள் அடுத்ததாக தன்னுடைய தந்தைக்கு அழைத்தாள்.

அவரும் போனை அட்டென்ட் செய்யவில்லை ஏன் என்ற குழப்பத்தோடு குருவிற்கு போனில் அழைத்து கூறினாள்.

"அண்ணிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு குரு அண்ணாவுக்கு போன் பண்ணினா அண்ணனும் ஃபோன் எடுக்கல.. அப்பாவும் இங்க இல்ல ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டேங்கறாங்க என்னன்னு தெரியலை" என்று கூறினாள்

"நான் ஏதாவது செய்யணுமா நித்யா "/என்று கேட்டான் குரு.

" அதெல்லாம் வேண்டாம் குரு கொஞ்சம் குழப்பமாய் இருக்கிறேன் அண்ணா வேற போன்ல பேசும்போது ஒரு மாதிரியா பேசினாங்க அதனால…. ஏதோ ஒரு குழப்பம் உங்க கிட்ட போன் பண்ணி சொல்லிட்டேன்.. வேற ஒன்னும் இல்ல இப்ப நான் ஓகே தான் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல அண்ணா இங்க வந்து விடுவாங்க வைக்கிறேன் சரியா" என்று போனை வைத்தாள்.

அதே நேரம் அங்கே ஹாஸ்பிட்டலில் பரத்தின் தந்தையோடு டாக்டர் பேசிக்கொண்டிருந்தார் ."மூன்று இடத்துல ப்ளாக் இருக்கு நம்ம உடனே அதற்கான சிகிச்சையை தொடங்க ஆரம்பிக்கணும் இந்த சின்ன வயசுல இப்படி வருகிறது எங்களுக்கு ஆச்சர்யமா இருக்கு.உங்க பையன் நல்ல திடகாத்திரமாக இளைஞன்.. எந்த கெட்ட பழக்கமும் இல்ல என்று சொன்னாங்க அப்படி இருக்கும் போது இதுபோல ஏன் வந்ததுன்னு என்னால யோசித்து கூட பார்க்க முடியல ஒருவேளை அளவுக்கதிகமான மன அழுத்தமா கூட இருக்கலாம்.ஒன்னும் பயப்பட தேவையில்லை நம்ம அடுத்த கட்ட சிகிச்சையை ஆரம்பித்து விடலாம்" என்று கூறினார்.

"அவனுக்கு தேவையான சிகிச்சையை ஆரம்பிச்சுடுங்க டாக்டர் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை பணத்தை பற்றி கவலை எதுவும் படாதீங்க எனக்கு இருக்கிறது ஒரு பையன் தான் அவனுக்கு எதுவும் இல்லை என்று சொன்னாலே எனக்கு போதும்."

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வேகமாக டியூட்டி நர்ஸ் சற்று பதட்டத்தோடு அங்கே வந்திருந்தார்…"டாக்டர் மிஸ்டர் பரத் திற்கு அடுத்த அட்டாக் வந்துடுச்சு கொஞ்சம் சீக்கிரம் வந்து பாருங்க ஏற்கனவே டாக்டர்ஸ் பார்த்துக்கிட்டு இருக்காங்க நீங்களும் வந்தா நல்லா இருக்கும்னு சொல்றாங்க "என்று கூற வேகமாக எழுந்து சென்றார்.

அடுத்த அரை மணி நேரம் பரபரப்பாக ஹாஸ்பிட்டலில் கழிந்தது...அவசர அவசரமாக டாக்டர்கள் இங்கும் அங்குமாக வேகமாக சென்று கொண்டிருந்தனர்.அனைவருமே பரத் அனுமதி இருந்த அறைக்குள் மொத்தமாக குழுமியிருந்தனர்.. என்ன என்று உணர்வதற்கு முன்னாடியே பரத்தின் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரிந்து இருந்தது.

சிகிச்சை தொடங்குவதற்கு முன்னமே அடுத்த அட்டாக் வந்து இருக்க அவர்கள் செலுத்திய எந்த மருந்துமே அவனது உடல் ஏற்றுக் கொள்ளவில்லை அனைவரையும் ஏமாற்றி விட்டு நிம்மதியாக கண் மூடி இருந்தான் பரத்.

புது உறவு ஒன்று ஜனனம் எடுத்திருக்க இதை எதையுமே பார்க்காமல் பரத் நிம்மதியாக வேறொரு உலகத்திற்கு சென்றிருந்தான்.

ஐசியூவின் வாசலில் பரத்தின் தந்தை மொத்தமாக இடிந்த படி அப்படியே அமர்ந்திருந்தார் என்ன செய்வது வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படி சொல்வது என்று எதுவுமே தெரியாமல்…
விடாமல் அவருடைய போன் அடித்துக்கொண்டிருக்க எடுத்துப் பார்த்தவர் என்ன சொல்வது என்று தெரியாமல் ஃபோனையை வெறித்தபடி அப்படியே சாய்ந்து அமர்ந்திருந்தார்.

என்ன ஆனாலும் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லித்தானே ஆகவேண்டும் ஆனால் எப்படி சொல்வது என்று ஒன்றுமே புரியவில்லை அவருக்கு இது இவர்களது குடும்பத்தில் பெரிய இழப்புதான்.

இதெல்லாம் எப்படி நடந்தது என்று இந்த நிமிடம் வரைக்கும் அவருக்கு புரியவில்லை திடகாத்திரமான இளைஞன்தான் . எந்த நேரத்திலும் தன்னுடைய கடமை தவறாதவன்.தன் தங்கையின் மீது தன்னுடைய குடும்பத்தினர் மீது அவ்வளவு அன்பை பொழிகின்றவன்.

இப்படி ஒருவன் இல்லை என்று சொன்னால் அந்த குடும்பம் எப்படி தாங்கிக் கொள்ளும் இப்படியான பல யோசனைகள் ஓட அவர் மிகவும் இடிந்து போனார்.

மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருக்க போனை எடுத்துப் பார்த்தார் அவருடைய மகள்தான் அழைத்துக் கொண்டு இருந்தது .இதற்கு மேல் எதுவும் முடியாது என்று மனதில் தோன்ற யோசிக்காமல் போனை அட்டென்ட் செய்தார்.

"எங்க போனீங்க அப்பா...இங்க அண்ணிக்கு பாப்பா பிறந்திருக்கு அப்படியே அண்ணாவை உரித்து வைத்தது போல அவ்வளவு அழகா இருக்குது நீங்க எங்க போனீங்க சீக்கிரமா ஹாஸ்பிடலுக்கு வாங்க குழந்தையை பார்க்க வேண்டாமா அண்ணாவுக்கு போன் பண்ணினிங்களா ஃபோன் பண்ணினால் எடுக்கவே மாட்டேங்குறாங்க எங்க இருக்காங்கன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க நீங்க கூப்பிட்டா உடனே அட்டென்ட் பண்ணுவாங்க" என்று கேட்டாள்.

"பூர்ணிமா எப்படி இருக்கறா "என்று கொஞ்சம் குரல் கரகரத்தபடி கேட்டார்.

"அண்ணி மயக்கமா இருக்குறாங்க பா.. குழந்தையை மட்டும் தான் இப்போ காட்டிட்டு போனாங்க இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு அண்ணியை பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள் ஏன் கேட்கறீங்க" என்று கேட்டாள்.

"நீயும் அம்மாவும் உடனே வீட்டுக்கு வர வேண்டியதா இருக்கும் அண்ணாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல ரெண்டு பேரும் புறப்பட்டு வர்றீங்களா" என்று கேட்டார்.

"ஏன்பா அண்ணாவுக்கு என்ன நல்லா தானே இருந்தாங்க ஒருவேளை வேகமா வண்டியில் வரும்போது எங்கேயாவது... ஆக்சிடென்ட் அப்படி ஒன்னும் இல்ல தானே பயப்படுற மாதிரி எதுவும் இல்லை தானே "என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்ட படியே வேகமாக தாயாரை நோக்கி நகர்ந்தாள் நித்யஸ்ரீ.

ஏதோ ஒரு கொடிய கனவு மொத்தமாக இவர்களை அமுக்கியது போல இருந்தது அன்றைய சூழ்நிலை அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்று இந்த நிமிடம் வரைக்கும் நித்யஸ்ரீக்கு புரியவில்லை.

தனது தாயாரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தது தான் தெரியும் அதற்கு பிறகு எல்லாமே நீண்ட நெடிய கொடிய கனவு அது ..

எப்படி மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வந்தார்கள் என்று யோசித்தால் இன்று வரைக்கும் அவளுக்கு எதுவுமே தெரியவில்லை.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”