காதல்20

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்20

Post by Rajeswari.d »

20

குருவுக்கு வேலை கிடைத்திருந்தது பெங்களூர் சிட்டியில்..ஒரு ஐடி நிறுவனத்தில் அங்கே சென்ற அவனுக்கு உடனே எல்லாம் இங்கே நினைத்த நேரத்தில் வர முடியவில்லை.

அங்கே வேலைக்கு செல்வதற்கு கூட வீட்டில் உள்ள அனைவரிடமும் கேட்டு ஒரு மாதிரியாக சம்மதிக்க வைத்து இருந்தாள்.

"கொஞ்ச நாள் தானே என்னோட ஆசைக்காக ப்ளீஸ் சம்மதிங்க மா" என்று எல்லோரையுமே தலையசைக்க வைத்துவிட்டு தான் அங்கே சென்றிருந்தான்.

பெங்களூருக்கு புதிது என்பதால் ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டான் அடிக்கடி இங்கே வரமுடியவில்லை

நித்யஸ்ரீ ஞாபகம் ஒரு ஓரத்தில் மனதில் இருந்து கொண்டிருந்தாலும் உடனே எல்லாம் திரும்பி வந்து பார்க்க முடியவில்லை.

அடுத்ததாக குருவை கடைசியாக நித்யஸ்ரீ பார்த்தது ஆறு மாதங்கள் கழித்த பிறகு.. மறுபடியும் அதே ஆபிஸிற்கு அவளை பார்க்க வந்திருந்தான்.

இப்போதும் அவனைப் பார்த்தாலே தவிர முன்பு இருந்தது போலவே பேச எல்லாம் இல்லை. அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

"ஆறு மாசம் முடிஞ்சு போச்சு நித்யஸ்ரீ இன்னமும் இப்படியே பேசாமல் மௌனமாக இருந்தால் என்ன அர்த்தம்.. நான் என்னன்னு எடுத்துக்கிறது.."

இதற்கும் கூட அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை அமைதியாக எங்கேயோ எதையோ வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாளே தவிர அவன் முகத்தைப் பார்க்கவே இல்லை.

குருவிற்கு கூட கோபம் எல்லாம் வரவில்லை அவளைப் பார்க்கும் போது மிக மிக நிதானமாக வார்த்தைகளை கோர்வையாக்கி பேசிக் கொண்டிருந்தான்.

"அண்ணாவோட எல்லாம் முடிந்து போனதா தோணுது குரு என்னால இதுக்கு மேல யோசிக்கவே இல்லை.. அண்ணா கடைசியாக சொன்னது ஞாபகம் இருக்கு. வீட்ல பேசி கல்யாணம் பண்ணி வைக்கறேன்னு சொன்னாங்க இன்றைக்கு அவர்களே இல்லை.."

"நித்யஸ்ரீ அதுக்காக அப்படியே விட்டுட்டு இருக்க முடியுமா நீ டைம் வேணும்னு கேட்ட வேண்டும் என்கிற அளவுக்கு எடுத்துக்கலாம் .உன்ன நான் எதுவும் தப்பா சொல்ல மாட்டேன்.உங்க அண்ணனோட கனவை நிறைவேற்ற நினைக்கிறது உன்னோட அண்ணன் மேல நீ கொண்ட அன்பை சொல்லுது. "

"அதை நிறைவேற்றத்தான் நீ முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்னு தெரியும் நான் தப்புன்னு சொல்லல ஆனா அதே நேரம் நான் உனக்காக காத்திருக்கிறேன் அப்படிங்கறத உனக்கு புரியுதா இல்லையா.."

"அண்ணா இறந்து முழுசா ஆறு மாசம் முடிஞ்சிருச்சி குரு இந்த நிமிஷம் வரைக்கும் எதுவும் மாறல .கடைசியா எப்படி அழுதுக்கிட்டு இருந்தோமோ அப்படித்தான் இன்னும் வீட்டில் எல்லோரும் அழுது கொண்டிருக்கிறார்கள் .

அண்ணியையும் பாபாவையும் என்னால பார்க்கவே முடியல .அம்மா அப்பாவை சொல்லவே வேண்டாம் .

அப்படி இருக்கும் போது நான் எப்படி சுயநலமா என்னோட காதல் பெருசு என்னோட கல்யாணம் பெருசு அப்படின்னு அவங்க முன்னாடி போய் கேட்க முடியும் என்னால முடியாது குரு."

"இப்ப என்ன சொல்ல வர்ற..இப்ப முடியாது சரி... நான் ஒன்னும் அவசரப்படுத்தலையே நித்யஸ்ரீ நான் காத்திருக்கிறேன் என்னதான் கொல்லறேன்.."

"எனக்காக காத்துட்டு இருக்க வேண்டாம் குரு. எனக்கு வாழனும்னு ஆசை எல்லாமே அண்ணா இறந்த அந்த நிமிஷமே மறஞ்சிடுச்சு..உன் வீட்ல அவசரப்படுத்தினா… நீ வேற ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம் மறுப்பு எதுவும் சொல்ல மாட்டேன்."

"சபாஷ் கேக்க ரொம்ப நல்லா இருக்கு உன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கேன் இல்லையா அதனால தான் உனக்கு என்னோட அருமை தெரியல..

இன்றைக்கு நேற்றா ஆரம்பத்திலிருந்து நான் மட்டும்தானே உன் பின்னாடி சுத்துறேன். நீ ஒரு நாள் கூட எனக்காக யோசிச்சது கூட கிடையாது அப்படிங்கற போ உன்னோட முடிவு இது போலத்தான் இருக்கும்."

"நீ என்ன வேணாலும் நினைச்சுக்கோ எனக்கு அதை பத்தி கவலை கிடையாது என் வீடு இருக்கிற இந்த சூழ்நிலையில் என்னால ஒருத்தனை காதலிக்கிறேன் போய் அவங்க கிட்ட சொல்ல முடியாது.*

"வேண்டாம் நீ எதுவுமே சொல்ல வேண்டாம் நான் என்னோட வீட்டுல இருக்குறவங்கள கூப்பிட்டுட்டு உன் வீட்டுல வந்து பேசுறேன்."

"வேண்டாம் குரு அங்க நீ வரவேண்டாம் என்னால உன்னை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவேன் என் கூட படிச்சவன், இவனை காதலிக்கிறேன் அப்படி நான் சொன்னா அப்பா அம்மா ரெண்டுபேருமே வேதனைப்படுவார்கள்.."

"அதுதான் ஏன்னு கேக்குறேன் இதில் வேதனைப்பட என்ன இருக்கு.."

"நீயும் நானும் ஒரே இனத்தவர்கள் கிடையாது. உன்னோட வளர்ப்பு உன்னோட வீட்டு சூழ்நிலை வேற என்னோடது வேற.."

"கிரேட் நித்யஸ்ரீ கடைசியா என்ன சொல்ல போற... உனக்கு ஈக்குவல் ஆன ஆள் நான் இல்லைன்னு சொல்ல போறியா ஆனால் அதற்கு நீ இந்த ஜாதிய... சே...யோசிக்கவே அசிங்கமா இருக்கு.. இத்தனை நாள் பழகும் போது உனக்கு தெரியலையா நான் வேறு ஜாதியை சேர்ந்தவன்னு.."

"இல்லை குரு நான் அப்படி சொல்ல வரலை.."

"அப்போ இப்போ நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம் அதுதான்... என்ன சொன்ன.. நீ வேற ஜாதி உன்னை என்னோட பெற்றவர்களுக்கு முன்னாடி அறிமுகப் படுத்த மாட்டேன் அது தானே கடைசில உன்னோட புத்திய காட்டிட்டே இல்லையா ரொம்ப சந்தோஷமா இருக்கு."

"அப்படி இல்ல குரு ப்ளீஸ் நான் சொல்லுறத கேளு.."

"வேண்டாம் நீ எதை பத்தியும் சொல்ல வேண்டாம் இதுக்கு மேல என்கிட்ட இதை விடவா விளக்கமாக சொல்ல போற... எதையுமே சொல்ல தேவையில்லை..ஆரம்பத்திலிருந்தே உனக்கு எங்க வீட்டை பற்றி விசாரித்தது எல்லாம் கிடையாது ஏன் ஆர்வமாக கூட கவனித்தது கிடையாது அப்போதே நான் புரிஞ்சுக்கணும் நீ எப்படிப்பட்டவள்னு நான் தான் இத்தனை நாள் தெரியாமல் பழகிட்டேன் போல இருக்கு."

"அப்படி இல்ல குரு நீ தெரியாம பேசிக்கிட்டு இருக்கிற நான் சொல்ல வந்தது அது கிடையாது."

விலகிப்போனவனை தனது கைக்கொண்டு பிடித்து நிறுத்தி இருந்தாள்.பிடித்த கையை தட்டி விடவும் இல்லை நகர்ந்து செல்லவும் இல்லை அப்படியே நின்றிருந்தான்.

அழுகை நிறைய வந்தது நித்யஸ்ரீக்கு... அழுதபடியே அவனின் தோள் சாய்ந்து நின்றிருந்தாள்..

உனக்காக நான் இருக்கிறேன் என்று சொல்வது போல தோளோடு சாய்ந்தவளை இரு கைக்கொண்டு லேசாக அணைத்தபடி ஒரு கை கொண்டு முதுகை மெல்ல தடவிக் கொடுத்தான் குரு.

தேம்பல் குறையவெல்லாம் இல்லை அழுகை இன்னும் அதிகமானதே தவிர குறைவது போலத் தெரியவில்லை.

"வேற என்ன நித்து... அதையாவது சொல்லி தொலைடி.. நான் பைத்தியக்காரன் மாதிரி தினம் தினம் உன்ன பத்தி மட்டுமே யோசிச்சுக்கிட்டு இருக்கேன் வாழ்ந்தா உன்கூட மட்டும் தான் வாழனும்னு நினைச்சுட்டு இருக்கிறேன் ஆனால் நீ என்ன செஞ்சுகிட்டு இருக்க.."

"உன்ன பத்தி தப்பா எப்போதும் அப்படி யோசித்ததில்லை சொன்னா கேளு நான் அப்படி சொல்ல வரல.."

"வேற எப்படி சொல்ல வந்த.."

"குரு வீட்ல எல்லாருமே அழுதிட்டு இருக்கும்போது என்னால என்ன பத்தி யோசிக்கவே முடியாது புரியுதா..அண்ணி அண்ணாவை இழந்து தனியா நிக்கிறாங்க அம்மாவுக்கு... ஆறுதல் சொல்லாத நேரமே கிடையாது அப்படி இருக்கும்போது எப்படி நான் உன்னை பத்தி சொல்ல முடியும்.."

"முடிவா இப்போ என்ன தான் சொல்றா.."

"சுயநலமா என்னோட சந்தோசம் மட்டுமே முக்கியம்னு என்னால சொல்ல முடியாது உனக்கு அவசரம்னா நீ தாரளமா வேற கல்யாணம் பண்ணிக்கலாம் ஆனால் தயவு செய்து இனிமேல் என்னை பார்க்க வராதே."

"நித்து…"என்று கொஞ்சம் அதிர்ச்சியாக அவள் சொன்னதை கேட்டவன்..இன்னமும் கூட நகராமல் தோளில் சாய்ந்தபடி கூறியவளை நகர்த்தி விட்டு வந்து இருந்தான்.

கடைசியாக அப்போது போனவன் தான்... நிறைய நாட்கள் அவனை நினைத்து தலையணையை நனைத்து இருக்கிறாள். தன்னுடைய பேச்சு தவறு என்று நன்றாக தெரியும்.

ஆனால் அந்த நேரம் அவளை நகர்ந்து செல்வதற்கு வேறு வழி தெரியவில்லை.எந்த வார்த்தையை எடுத்தால் அவனுக்கு கோபம் வருமோ அந்த வார்த்தையைக் கூறி அவளை விலக்கி நிறுத்தி இருந்தாள். மறுபடியும் இன்று தான் பார்த்திருக்கிறாள் நித்யஸ்ரீ.

பழைய நிகழ்வுகளை யோசிக்க யோசிக்க இன்னும் தலைவலி அதிகமானதாக தோன்றியதே தவிர குறையவில்லை. நிச்சயமாக குருவை இழக்கும் எண்ணம் துளி கூட நித்யஸ்ரீக்கு கிடையாது.

ஆனால் அதேநேரம் சட்டென திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கும் அவளால் வர முடியவில்லை.

ஏனென்றால் அன்றிலிருந்து இன்று வரை யாருமே எதுவுமே மாறி இருக்கவில்லை இழந்தது இழந்ததாகவே இருந்தது.

இன்னமும் சொல்லப்போனால் அந்த நிமிடத்தை தாண்டி இவர்களது மொத்த குடும்பமும் இன்னமுமே வெளிவந்து இருக்கவில்லை.

லஷ்மி மட்டும் அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பார் .மகன் இறந்ததை ஒருவாறு மனதில் ஏற்றுக் கொண்டாலும்.. மகள் திருமண வாழ்க்கையை பற்றி பிடி கொடுக்காமல் இருப்பது சற்று கவலை அடையச் செய்தது.

அதனால் அடிக்கடி தன்னுடைய ஆற்றாமையை இப்படி பேசி தீர்த்துக் கொண்டிருந்தார்.

பூர்ணிமாவை பொறுத்த வரைக்கும் இங்கே இவர்களது வீட்டில் அவளை நல்லபடியாகவே பார்த்துக் கொண்டனர்.

எந்த குறையும் வைக்கவில்லை ஏதாவது ஒரு நேரம் மன ஆதங்கத்தில் லஷ்மி ஏதாவது பேசினால் உண்டு மற்றப்படி யாருமே அவளை எதுவும் சொல்வதில்லை.

அவள் தான் உண்டு தன்னுடைய குழந்தை உண்டு என்று குறுகிய வட்டத்தில் தன்னுடைய உலகத்தை சுருக்கிக் கொண்டாள்.

அதிகபட்சமாக பேசுவது நித்யாவிடம் மட்டுமே தன்னுடைய தாய் தந்தையிடம் கூட முன்பு போல பேசுவது எல்லாம் கிடையாது.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்ததே தவிர இழப்பின் வடுக்கள் யாருடைய மனதில் இருந்தும் மறையவில்லை.

ஒருவேளை இவர்கள் தான் மறக்க விட வில்லையோ என்று தோன்றும் அளவிற்கு இருந்தது நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும்..

நித்யஸ்ரீ தன்னுடைய அண்ணனின் கனவை ஓரளவிற்கு நிறைவேற்றி இருந்தாள்.

இப்போது அவளுடைய பேக்டரியில் ஐம்பது பேராக இருந்த வேலை ஆட்களை நூறு பேராக மாற்றியிருந்தாள்.

நிறைய ஆர்டர்கள் வந்து கொண்டிருந்தன. எப்போதுமே ஓயாத உழைப்பு ஆனால் எதுவுமே நிம்மதியை தரவில்லை.

ஒவ்வொரு வெற்றியின் போதுமே இவை எல்லாம் அண்ணன் இருந்து பார்த்து மகிழ்ச்சி அடைந்து இருக்க வேண்டியது. இப்படி.. தான் இருந்து கவனிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதே என்று வருத்தம் மட்டுமே மிஞ்சும்.

இதற்குமேல் தன்னுடைய அறையில் படுத்து இருக்க முடியாது என்று தோன்றவும் வேகமாக எழுந்து தலையை வாரிக்கொண்டு புறப்பட்டு வெளியே வந்தாள்.

அவளைப் பார்க்கவும் அவளுடைய தந்தை "என்னமா எங்கு புறப்பட்டுட்ட" என்று கேட்டார்.

"அப்பா ஆபீஸ்க்கு போறேன் பா" என்று அவருக்கு பதிலைச் சொல்ல..

நேரத்தை பார்த்தவர் "மணி ஏழு மணி ஆயிடுச்சு நித்யஸ்ரீ இந்நேரத்துக்கு அங்க போய் என்ன செய்யப் போற என்ன ஆச்சு..பேக்ட்டரில ஏதாவது பிரச்சனையா கட்டாயமா போகனுமா நானும் வேணும்னா கூட வரட்டுமா "என்று கேட்டார்..

இப்போதுதான் நித்யஸ்ரீயும் நேரத்தைப் பார்த்தாள். இன்னும் தாயார் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. இருந்த குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வழக்கம் போல வேகமாக ஆபீஸுக்கு புறப்பட்டு வந்து இருந்தாள் என்பது தெரிய வர எதுவுமே சொல்லாமல் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள் நித்யஸ்ரீ.

"ஒன்னும் இல்லப்பா சின்ன குழப்பம் படுத்தேன் இல்லையா ரெண்டு மணி நேரத்துல ஆபீஸ்க்கு போகனும்னு நினைச்சிட்டு படுத்தபடி தூங்கிட்டேன் போலிருக்கு. எனக்கு டைம் தெரியல நான் கவனிக்கவில்லை அதுதான்…" என்று சொன்னபடி அமர்ந்திருந்தாள்.

*ஏன் நித்து ரொம்ப சோர்வா தெரியற அங்கே ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா "என்ன என்று கேட்டார்.

"இல்லப்பா அங்க நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்குது என் மனசுல வேற ஒரு குழப்பம் அப்பா.. அதுதான் பரவால்ல பா சரியாகிவிடும் ."

நாளை குழந்தையின் பிறந்த நாள் மட்டுமல்ல இவளுடைய அண்ணனின் இறந்த நாளும் தானே.. அதனால் தான் சற்று வாட்டமாக தெரிகிறாள் என்று நினைத்தவர் ."சரிடா நைட்டுக்கு ஏதாவது சாப்பிட்டு மறுபடியும் தூங்கி எழு எல்லாம் சரியாகிடும் "என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அதே நேரம் அங்கே குருவின் வீட்டில் ஆரவாரமாக இவனை மகிழ்ச்சியோடு அமர வைத்து பேசிக்கொண்டிருந்தனர்.

காலையில் உறவினர்கள் அனைவருக்குமே துணி எடுக்க என்று கடைக்குச் சென்று வந்திருக்க..குடியைப் பற்றி உறவுகளைப்பற்றி என பேச்சு நீண்டு கொண்டே சென்றது.

"டேய் குரு நம்ம அபிநயாவை நீ தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு எதிர்பார்த்தேன் கடைசியில இப்படி சொல்லிட்ட.."

"அத்தை இங்க இருந்தா எங்க அபிநயாவை இவன் தலையில கட்டி வைத்து விடுவார்களோ என்ற பயத்தில் கூட மாமா பெங்களூருக்கு ஓடிப் போய் இருக்கலாம் தெரியுமா"... அபிநயாவின் தங்கை இவனைக் கிண்டல் செய்து கொண்டு இருந்தாள்.

"ஏது நான் இல்லாம உனக்கு குளிர் விட்டுப் போயிடுச்சு போல இருக்கு வாய் எல்லாம் நல்லாவே பேசுற" என்று திரும்பி கேட்டான்.

"பின்ன இல்லையா மாமா என் தலையில எப்ப பார்த்தாலும் கொட்டு வச்சுக்கிட்டு இருப்பீங்க இப்போ என்ன தலையில் கொட்ட யாருமே இல்ல தெரியுமா எல்லாரும் என்னை செல்லமா பார்த்துக்கறாங்க.."

"போனா போகட்டும் காலேஜ் போற பொண்ணு கை வைக்கக்கூடாது அப்படிங்கிறதுக்காகத்தான் உன்ன விட்டு வச்சு இருக்கிறேன். இல்லாட்டி முன்ன மாதிரியே நோட்டை எடுத்து வந்து உட்கார் டியூசன் எடுக்கறேன்னு சொல்லி உட்கார வைக்க மாட்டேனா.."

"நான்கூட எப்படா காலேஜ் போக போறேன்னு காத்துகிட்டு இருந்தேன் தெரியுமா. உங்க கிட்ட அடி வாங்க வேண்டிய வேலை இருக்காது இல்லையா அப்படி எல்லாம் யோசிக்கிறேன்"

"அந்த வாயாடி அப்படித்தான் பேசுவா டா உண்மையை சொல்லு நீ நெஜமாவே உன்னோட வேலையை விட்டுட்டு வந்துட்டே தானே... இல்ல நான் வருத்தப்படுவேன் அப்படி பொய் சொல்லுறியா.."

"அம்மா நெஜமாவே வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துட்டேன் இனிமே எங்கேயும் போறதா இல்ல இங்க தான் உங்க கூட இருப்பேன்.."

"அந்த வேலைக்கு போறேன்னு போயி உடம்பு சுத்தமா போயிடுச்சு குரு ஒல்லி ஆகிட்ட உன்னை பார்க்கும்போது எனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்குது பார்த்து பார்த்து ஆசையா சமைச்சு போடுவேன் இப்ப பாரு…."

"அம்மா இனிமே சமைச்சு போடுங்க பழைய மாதிரி உடம்பை தேத்தி விடலாம் போதுமா.."

"அத்தை இப்பதான் மாமா பார்க்க அழகாக இருக்கிறார்கள். இதுக்கு மேல உடம்பெல்லாம் தேவையில்லை "என்று
அனுசுயா கூறினாள்.

"நீ பேசாமல் இரு அனு...குரு உன்னை நம்பலாமா டா..இப்படித்தான் சொல்லிட்டு வேலைக்கு என்று புறப்பட்டுப் போன... போன பிறகு ஒரு தடவை தான் வந்துட்டு போன இந்த இடைப்பட்ட நாளில் நானும் நிறைய டைம் போன் பண்ணி உன்னை கூப்பிட்டேன்."

" நீ வரவே இல்ல ஒவ்வொரு தடவையும் என்னதான் வரசொல்லி அழைச்சுக்கிட்டு இருந்த..உண்மைய சொல்லு குரு என்கிட்ட பொய் சொல்லலதான அபிநயா கல்யாணம் முடியவும் கிளம்பி போயிடுவியா இல்லை நிஜமாவே இனிமே என் கூட தான் இருக்கப் போறியா.."

"அம்மா என் மேல பிராமிஸ்.. அபிநயா கல்யாணம் முடிஞ்ச பிறகு உங்க கூட தான் இருப்பேன் .வேற எங்கேயும் போகமாட்டேன்..வேலையும் நெஜமாவே ரிசைன் பண்ணியாச்சு இனிமே அப்பா கூட டிபார்ட்மெண்டல் ஸ்டோரை கவனிச்சுக்கிறேன் . அப்பாவுக்கு கூட நிறைய ரெஸ்ட் கொடுக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறேன்."

"போதும்டா இந்த வார்த்தை போதும் இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்குது."

தாய் சொன்னதை கேட்டு லேசாக புன்னகைத்து அவனுக்கு நினைவெல்லாம் நித்யஸ்ரீயையே சுற்றிக் கொண்டு இருந்தது.

ஆனால் குரு துணிக்கடையில் பார்த்ததோடு அப்படியே அவளை விட்டுவிடவில்லை அடுத்த நாள் காலையில் ஆபீசுக்கு வந்து இருந்தான் அதுவும் அதிரடியாக..



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”