காதல்_22

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_22

Post by Rajeswari.d »

22

அருகில் நெருங்கி பில்லை நீட்ட சட்டென நிமிர்ந்து பார்த்தான் குரு.

எதிரில் இவள் நின்றிருக்க முகத்தில் அத்தனை புன்னகை அவனுக்கு.."எத்தனை நாளா இங்கே வந்து கிட்டு இருக்கிற.." என்ற படியே அவளது பில்லை வாங்கி பார்த்தான் குரு.

"ரொம்ப நாளா வீட்டுக்குத் தேவையானதை இங்குதான் வாங்குறேன். வழக்கமா நான் தான் வருவேன். இன்றைக்கு தான் உன்னை இங்கே பார்க்கிறேன்".

"எதனால் இந்த முடிவு உனக்குதான் என்ன பிடிக்காது இல்லையா... நீ எப்படி இந்த கடையில் வந்து வாங்கற... சாரி தோணிச்சு கேட்டேன்.."

"ரொம்ப பேசாத சரியா இங்கே பொருட்கள் தரமாக இருக்கும் அதனால வந்து வாங்கிறன் வேற ஏதாவது தெரியனுமா.."

"நம்பிட்டேன் நம்பிட்டேன்" என்றபடியே அருகில் இருந்த ஒரு வேலை செய்பவனை அழைத்து இங்கே பார்த்துக்கோ.. பில்லீங்கை ரெண்டு நிமிஷம் கவனிச்சுக்கோ இப்ப வந்துடறேன் "என்றபடி நகர்ந்து வந்தான்.

"இது எதுக்கு நீ ஏன் இந்த பக்கம் வந்துட்டு இருக்குற உன்னோட வேலையை போய் கவனி குரு...பணத்தை வாங்கி போடுறவங்க ரொம்ப கவனமா இருக்கணும் தெரியுமா.."

"அப்படியா நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் எனக்கு இதுவரை தெரியாது இல்லையா "என்று நக்கலாக இவளுக்கு பதில் சொன்னபடியே கூடவே நடந்து வந்தான்..

"ப்ளீஸ் குரு கிண்டல் செய்யாத நான் சீரியசாதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. விளையாட்டு மாதிரி எடுத்துக்காதே…"

"நான் சீரியசாதான் உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன் வா" என்றபடி நடக்க அவள் வாங்கி பொருள்களை இன்னொரு வேலை செய்பவன் தூக்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தான்.

"மேடமோட வண்டி எங்க இருக்குன்னு பார்த்து இதையெல்லாம் அங்க வச்சிடு நீ என்கூட வா நித்யஸ்ரீ.." என்று சொன்னபடியே நகர்ந்தான் குரு.

"இப்ப எங்க கூப்பிடுற குரு நான் எங்கேயும் வரலை.. நேரமாச்சு நான் வீட்டுக்கு போகணும் .ஏற்கனவே சீக்கிரமா வீட்டுக்கு வருவதாய் சொல்லி இருக்கிறேன் அம்மா கிட்ட.."

சும்மா சொல்லாத நித்யஸ்ரீ... சின்ன புள்ள தனமா இருக்கு... சந்தைக்கு போகனும் ஆத்தா வையும் அப்படின்னு சொல்ற மாதிரி இருக்குது ...நீ சொல்றத பார்க்கும் போது ஒரு ஜூஸ் குடிக்க அதிகபட்சம் ஐந்து நிமிடம் ஆகும்னு நினைக்கிறேன் ப்ளீஸ் என் பின்னாடியே வா பேசிக்கிட்டு இருக்கிற நேரத்துக்கு ஜூஸ் குடித்து முடித்து விடலாம்" என்ன சொல்லற..

"நீ மாறவே போறது இல்ல உன்னோட பிடிவாத குணமும் மாறாது.. நட உன் பின்னாடியே வர்றேன்.. "என்ற படியே அவனோடு நகர்ந்து சென்றாள் நித்யஸ்ரீ.

"நீ தான் அப்படி சொல்லுற பிடிவாதம் பிடிச்சா மட்டும் என்ன நடந்திட போகுது எதுவுமே நடக்கலையே இன்றைக்கு வரைக்கும் இப்படியே தான் தனியா சுத்திக்கிட்டு இருக்கிறேன்".

"குரு நீ எதற்கும் எதற்கும் முடிச்சு போடுற.."பேசியபடியே அவனோடு சென்றாள்.

அவர்கள் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரில் ஒரு அங்கமாக பழங்களை ஜூஸ் போட்டு கொடுக்கும் இடமும் இருந்தது.

இவளுக்கு பிடித்த பிளேவரை கொண்டு வரச் சொல்லி விட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் குரு.அவனுக்கு எதிரில் அமர்ந்து அவளின் கண்கள் இங்கும் அங்குமாக அலைமோதிக் கொண்டிருந்தது.
தவறு செய்துவிட்டு மாட்டிக்கொண்ட குழந்தை போல அவளது முகம் அந்த நிமிடம் இருந்தது.

"ஏன் இப்படி திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருக்குற நித்யா தெரியாத்தனமா இன்றைக்கு வந்து இங்கே மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கு உன்னோட முகம்…"

"அப்படி இல்ல நீ இருப்பேன்னு எனக்கு தெரியாது…"

"தெரிஞ்சா வந்து இருக்க மாட்ட அப்படித்தான... நான்தான் அன்னைக்கே சொன்னேனே என்னுடைய ஆசைக்கு ரெண்டு வருஷம் வேலை செஞ்சுட்டு வந்தாச்சு. இனிமே அப்பா கூட இங்கே தான் இருக்கப் போறேன்னு இனிமேல் நீ அடிக்கடி என்ன பார்க்கலாம்."

அதற்குப் பிறகு ஒரு வார்த்தைகூட நித்யஸ்ரீ வாயைத் திறந்து பேசவில்லை அமைதியாக அமர்ந்திருந்தாள். கொடுத்து ஜூசை கூட எதோ யோசனையோடு மெதுவாக குடித்து முடித்தாள்.

"உன்ன பத்தி யோசிக்கும் போது நிறைய கோபம் வருத நித்யா.. ஆனா உன்னோட முகத்தை பார்க்கும் போது எனக்கு கோபமா எதுவுமே பேச தோண மாட்டேங்குது. என்னோட இயல்புக்கு நேர் மாறா உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன் எனக்கு தெரியுது ஆனா இந்த பொறுமை கூட எத்தனை நாளில் கூட இருக்குன்னு தெரியல.."

"ஐ ஆம் சாரி குரு.."

"தயவு செய்து இந்த வார்த்தையை சொல்லாதே...வாய மூடு.. இது மாதிரி உளறல் எப்பவுமே உன் கிட்ட இருந்து வரக் கூடாது. ஆனா உன்ன நெனச்சா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்குது. இந்த ரெண்டு வருஷத்துல உன்னோட ஃபேக்டரிய வேற அளவுக்கு கொண்டு வந்திருக்கிற.. நிறைய ஒர்க்கர்ஸ் புதுசா சேர்ந்து இருக்கிறார்கள்.. உன்னோட உழைப்பு அபரிதமானது நித்யஸ்ரீ."

"உன்னை பார்த்ததுல இருந்து அபிநயா உன்ன பத்தி தான் கேட்டுக்கிட்டு இருக்கறா கல்யாணத்துக்கு வருவதான ஏமாற்ற மாட்டே இல்லையா.."

"வரணும்னு தான் இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு ஆசை குரு ஆனால் கடைசி நேரம் என்ன முடிவு எடுப்பேன் எனக்கு தெரியாது."

"ஆனாலும் கெத்த விட்டு தரமாட்ட அப்படித்தானே பாக்குறேன் வராமல் எப்படி இருக்கிறேன்னு.."

"ஏன் என்ன செய்வ வராட்டி.. கடத்திட்டு வந்திடுவாயா என்ன.."

"கடைசில ஒரு நாள் அதுதான் நடக்கப் போகுது அது எனக்கே தெரியும்."

"ம்..அப்படியா அது என்னவோ இந்த ஜென்மத்திலும் நடக்குதுன்னு தோணுது…"என்ன பேசுவது என்று தெரியாமல் எதை எதையோ இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அரை மணி நேரம் இவ்வாறாக ஓடியிருந்தது..நித்யஸ்ரீ நேரத்தை பார்த்தவள் "டைமாச்சு குரு நான் கிளம்பறேன் "என்று எழுந்து கொண்டாள்.

"நான் இருக்கிறேன் என்கிற காரணத்துக்காக இங்கே வரக்கூடாதுன்னு நினைக்க எல்லாம் வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம் நிறைய நேரங்களில் நான் இருக்க மாட்டேன் நித்யஸ்ரீ. அண்ணா தான் இருப்பாங்க எனக்கு எப்பவுமே குடோனில் தான் வேலை இங்க கடைக்கு வர்றது ரொம்ப ரேர்.. சோ தயங்காம எப்ப வேணும்னாலும் வரலாம்.."

"உன்கிட்ட பேச எனக்கு எந்த தயக்கமும் கிடையாது குரு முதல்ல நீ என்னோட பிரண்ட்…. பிறகுதான் மத்தது எல்லாம்.உன்ன பார்த்தா அன்றைய நாள் எனக்கு அவ்வளவு சந்தோசமா போகும் இதை மறுக்க எல்லாம் மாட்டேன்"

"எனக்கும் தெரியும் நித்யஸ்ரீ..
கல்யாணம் நெருங்குவதால் வேலை நிறைய இருக்குது . வேற வேலை விஷயமா ரெண்டு அண்ணன்களும் வெளியே போய் இருக்கிறாங்க அதனால தான் இன்றைக்கு இங்க வந்தேன்."

குருவோடு இத்தனை பேசிக்கொண்டிருந்தது ஒருவித மன நிம்மதியை தந்தது நித்யஸ்ரீக்கு. நீண்ட நாள் கழித்து மனம் மிகவும் லேசானது போல தோன்றியது.

புறப்பட்டு வரும் வரைலுமே குருவின் முகத்தை மட்டுமே பார்த்தபடி வந்திருந்தாள்.எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது இந்த நிமிடம் வரைக்கும் இவளுக்கு தெரியாது.

ஆனால் அவனோடு இருக்கும் கொஞ்ச நேரம் கூட மனதில் இனம்புரியாத மகிழ்ச்சியை தந்திருந்தது அந்த நிறைவோடு படுக்கையில் விழுந்தாள்.

தூக்கம் கண்களை தழுவும் வரையிலுமே.ஆரம்பத்திலிருந்து குருவோடு பேசியது இப்படியாக.. நிறைய கலவையாக யோசித்துக் கொண்டிருந்தாள் . நீண்ட நேரம் கழித்து சிறு புன்னகையோடு கண்களை மூட உறக்கம் இவளை ஆட்கொண்டது. அன்றைய கனவில் கூட குருவே ஆட்சி செய்தான்.

அதுவும் சிறு வயதில் குரு அவளோடு பேசியது, சிரிப்பது, சண்டையிட்டது என்று எப்போதும் அவனைப் பற்றி யோசித்தால் வரும் கனவு இன்றைக்கும் கூட வந்து நின்றது.

அன்றைக்கு பார்த்த போது கடைசியாக குரு சொன்னதும் நியாபகம் இப்போதும் அந்த ஆழ்ந்த தூக்கத்திலும் லேசாக இருந்தது.

"கல்யாணத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்குது நித்யஸ்ரீ நான் உன்னை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பேன் இவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தபடியே கூறினான்."

அந்தப்பார்வை கனவிலும் கூட அவளை துரத்திக் கொண்டிருந்தது .ஏக்கமாக காதலாக இன்னும் அந்த பார்வையில் நிறைய இருந்தது.

அதனாலோ என்னவோ கனவில் கூட ஏதோ ஒரு திருமண வைபவம் போன்ற கனவு தான் இவளுக்கு வந்தது மணமகனாக அமர்ந்து கொண்டிருந்தது குரு தான்.

வாத்தியங்கள் முழங்க தலை நிறைய பூ வைத்து சகல அலங்காரத்தோடு தலைகுனிந்தபடி வந்து அவனுக்கு அருகே அமர்ந்து சாட்சாத் நித்யஸ்ரீ தான்.

இப்படி ஒரு கனவு வரவும் அதிர்ச்சியாக தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்திருந்தாள்.

விழித்த பிறகு கூட குருவை சுற்றியே யோசனைகள் எல்லாம் சுழன்று கொண்டிருந்தது.இனி வரும் நாட்களில் என்ன எல்லாம் நடக்கும் என்று அவளுக்கு துளிகூட தெரியாது.

ஆனால் இவனுடைய நினைவு மட்டும் எப்போதும் தன்னைதொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது மட்டும் புரிந்தது.

ஆனால் அன்றிலிருந்து இன்று வரைக்கும் குரு ஒரே மாதிரி தானே இருக்கிறான்.காதலைச் சொன்ன நாளில் இருந்து இவள் பின்னால் அவன் மட்டும் தான் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

ஏதோ ஒரு நொண்டி சாக்கு சொல்லி இன்று வரை அவளை தன்னிடம் நெருங்க விடாமல் வைத்துக் கொண்டு இருப்பது நித்யஸ்ரீ தானே..

எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு மிக மிக நல்லவன் தான் அதில் எந்த சந்தேகமும் இவளுக்கு கிடையாது.

ஆனால் வீட்டிலே இப்படி இருக்கும் போது எப்படி தான் மட்டும் கல்யாணம் முடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து வருவது.. நிச்சயமாக எந்த நாளிலும் இவளால் முடியாத ஒன்று..

கடைசியாக கண்களை மூடி இறைவனிடம் வேண்டிக்கொண்டாள்.என் தலையில என்ன எழுதி இருக்கீங்கன்னு எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் தெரியாது.எனக்கு குருவை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா இந்த கல்யாணம் நடக்குமா இல்லையா என்பது கூட எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் தெரியல...ஒரு வேளை அவனுக்கு பக்கத்துல என் பேரு எழுதி இருக்காது அப்படிங்கிற பட்சத்துல அவனுக்கு நல்ல வாழ்க்கையை நீங்கதான் அமைச்சு கொடுக்கணும் கடவுளே... இப்படி வேண்டிக் கொண்ட பிறகு சற்று மனம் நிம்மதி அடைந்தது.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”