காதல் - 23

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல் - 23

Post by Rajeswari.d »

23

அபிநயாவின் கல்யாணம் அன்றைக்கு காலையில் தான்..போக வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்தவள் தாய் தந்தை இரண்டு பேரிடமுமே அனுமதி கேட்டு இருந்தாள்.

லட்சுமி தான் வாய்க்குள்ளேயே" ஊர்ல இருக்குற பொண்ணுங்க எல்லாருக்கும் கல்யாணம் முடியுது... இங்கே நான் எதுக்கும் ஆசைப்படக்கூடாது இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே போக போகுதோ தெரியலை "என்று முனகியபடியே நகர்ந்து சென்றார்.

"நீ அவள் சொல்லறதை எல்லாம் பார்க்க வேண்டாம் மா புறப்பட்டு போயிட்டு வா உன் கூட படிச்ச பொண்ணா" என்று மேலும் விவரங்களை கேட்டுக் கொண்டார் இவனுடைய தந்தை.

அழகாக பட்டுடுத்து மெலிதான ஒரு தங்கச் சங்கிலியோடு தலை நிறைய பூ வைத்து பார்க்கவே தேவதை போல அழகாக இருந்தாள் நித்யஸ்ரீ.

முன்பு எல்லாம் சேலைக் கட்டிக்கொண்டு வந்து நின்றாள் பரத் இவளை கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவான் "பப்ளிமாஸ் மாதிரி இருக்கிற உனக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம் நீ எப்போதும் போல டிரஸ் போட வேண்டியதுதானே "என்று இவளை ஓட்டுவான்.

"அண்ணா வேண்டாம் இதுக்கு மேல ஏதாவது பேசினா என்ன பண்ணுவேன்னு தெரியாது .நீ என்ன என்ன கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கியா... எனக்கு எந்த டிரஸ் போடப் பிடிக்குதோ அதை போடுவேன் அதைப் பத்தி எல்லாம் யாரும் சொல்லக்கூடாது."

"அப்படியா அப்படியென்றால் எதற்காக நான் குண்டா தெரிகிறேனா அப்படின்னு நூறு தடவை சந்தேகம் கேட்கிற…"

"அது...உன் குட்டிமா சேலை கட்டுனா நீ தேவதை மாதிரி அழகா இருக்க அப்படின்னு சொல்லணும் அதுக்காக தான் உன்கிட்ட வந்து கேட்கிறது ஓகேவா.."

"அடடா இத்தனை நாள் எனக்கு தெரியாம போச்சுதே.. இனிமே மறக்கவே மாட்டேன் குட்டிமா.. எப்படி சேலை கட்டினாலும் ரொம்ப ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லிடறேன் அது பொய்யா இருந்தா கூட.."

"டேய் அண்ணா என்ன கடைசியில பஞ்ச் குடுக்குறியா ஒழுங்கா போய் விடு.." என்றது... இதெல்லாம் கண்முன்னால் வந்து சென்றது அவளுக்கு..

திருமண மண்டபத்திற்கு இவளுடைய காரில் செல்ல வாசலிலேயே அவளுக்காக காத்திருந்தான் குரு.

"ஷப்பா எப்படியோ வந்துட்ட நீ வராமல் போய் விடுவாயோன்னு பயந்து கிட்டே இருந்தேன். நம்ம காலேஜ்ல நிறைய ப்ரண்ட்ஸ் இங்கு வந்திருக்கிறார்கள் எல்லாருமே அந்தப் பக்கம் உட்கார்ந்து இருக்காங்க. அவங்க கூட உட்காந்து பேசிக்கிட்டு இரு .நான் அப்புறமா வந்து பார்க்கிறேன் என்ன .."என்று இவன் அவளிடம் பேசியபடியே அழைத்துச் சென்றான்.

அன்றைய நாளில் குரு கவனித்தானோ இல்லையோ நண்பர்கள் அனைவரும் அங்கே கூடி இருக்க மகிழ்ச்சியாக நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.

இடையிடையே குருவும் இவர்களிடம் வந்து பேசிக் கொண்டு நகர்ந்து சென்று கொண்டிருந்தான். நிறைய உறவினர்களை அழைத்து இருக்க கூட்டம் மண்டபம் முழுவதும் அலைமோதியது.

ஒரு ஓரத்தில் அமர்ந்து நிறைய நேரம் குருவை மட்டுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

நண்பர்கள் அனைவருமே கூடியிருந்தாலும் அவர்களுக்கு ஏற்றாற்போல பதிலை சொல்லிக் கொண்டிருந்தாலும் கண்களில் அவனைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.

இவளுடைய மனதை பற்றி யோசித்துப் பார்த்தால் இவளுக்கே என்ன என்று புரியவில்லை தன்னுடைய முடிவு சரியா தவறா என்பது கூட தெரியவில்லை.

கவனித்த வரையில் ஒரு விஷயம் மட்டும் அவளுக்கு தெளிவாக தெரிந்தது.

இனிமேல் முடிவெடுக்க வேண்டியது குரு கிடையாது. தான் மட்டும் தான் இவன் தனக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை தெளிவாக உடனே சொல்லிவிட வேண்டும்.

தனக்காக யாரையும் காத்திருக்க வைக்கக் கூடாது இப்படியாக தெளிவான முடிவை அந்த நிமிடம் எடுத்திருந்தாள்.

அந்த நிமிடம் அந்த முடிவு எடுத்த உடனேயே அதற்கு மேல் அங்கே அவளுக்கு இருக்க பிடிக்கவில்லை.

குருவை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவள் வேகமாக எழுந்து நகர்ந்து வெளியே சென்று விட்டாள்.குருவிற்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் நிச்சயமாக தான் அவனது கண்களுக்கு அடிக்கடி தென்படும் கூடாது... இதுதான் சரியான முடிவு என்று மனம் தீர்மானமாக சொல்ல.. தன்னுடைய காரை நோக்கி நகர ஆரம்பித்தாள்.

ஆபீசுக்கு வந்து ஒரு மணி நேரம் முடிந்திருந்தது இதுவரையிலும் குரு
பத்து முறைக்கு மேல் இவளுக்கு போனில் அழைப்பு விடுத்திருந்தான் இவள் எடுக்கவே இல்லை.

காலேஜில் படிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து இரண்டு பேருமே போன் நம்பரை மாற்றி இருக்கவில்லை.

கடைசியில் குருவை பார்த்தபோது இனிமேல் என்னை பார்க்க வராதே என்று சொல்லி இருக்க அவன் அந்தக் கோபத்தில் இது வரையிலும் இவளை அழைத்துப் பேசி இருக்கவில்லை.

இன்று திரும்பத் திரும்ப அவனது நம்பரில் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்க தலையில் கை வைத்தபடி அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நிச்சயமாக மண்டபத்திலிருந்து உடனே இவளை தேடி எல்லாம் வர மாட்டான் என்பது இவளுக்கு உன் நன்றாக தெரியும்.

போனை ஓரமாக எடுத்து வைத்தவள் பேக்டரியை பார்க்க எழுந்து வெளியேறினாள்.

அதற்குப் பிறகுஅங்கிருந்த வேலை அவளை உள்ளிழுத்துக் கொண்டது அதன்பிறகு குருவைப் பற்றிய யோசனை எங்குமே வரவில்லை.

மதியம் தாண்டிய நேரத்தில் பசி எடுக்க ஆரம்பிக்கும் போது தான் தெரிந்தது நேரமாகிவிட்டது நீண்ட நேரமாக இங்கேயே இருக்கிறோம் என்று..

நேரம் மூன்று மணியைத் தாண்டியிருந்தது இப்போது வீட்டிற்கு சென்றால் நிச்சயமாக இவ்வளவு தாயாரிடம் திட்டு விழுகும்.

ஏன் இத்தனை நேரம் சாப்பிடாம இருக்கிற நேரம் ஆகிக் கொண்டே இருக்குது. சாப்பிடாமல் இருந்து உடம்புக்கு எதையாவது இழுத்து வைக்கப் போறியா இது போல ஆயிரம் திட்டுக்கள் கட்டாயம் விழும்.

பியூனை அழைத்தவள் ஜூஸ் வாங்கிட்டு வாங்க ணா என்று பணத்தை கொடுத்து அனுப்பினாள்.

எப்படியும் குரு இரண்டு நாளில் தன்னை காண வருவான் வரும்போது தெளிவாகப் பேசி அனுப்பி வைத்துவிட வேண்டும்.

இனிமேல் எப்போதும் நேரில் பார்க்க கூடாது. இப்படி முடிவு செய்திருக்க அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் நித்யஸ்ரீ.

இவள் எதிர்பார்த்தது போலவே இரண்டு நாட்கள் தாண்டியவுடன் இவளைக் காண ஆபீஸிற்கே வந்து இருந்தான்..

முன்பு பியூன் இடம் கேட்டு காத்திருந்து வந்தவன் இப்போது யாருடைய பேச்சையும் கேட்காமல் நேராக இவளது அலுவலக அறையை தட்டி விட்டு உள்ளே கோபத்தோடு நுழைந்து இருந்தான்.

இவன் பின்னோடு வந்த பியூனை பார்த்தவள்" கொஞ்ச நேரம் வெளியே இருங்க எனக்கு தெரிஞ்சவங்க தான் நான் பேசி அனுப்புகிறேன் "என்று அவனை வெளியே அனுப்பி வைத்தாள்

"ஏன் உள்ளே வர சொல்லேன். என்ன அப்படி என்ன செஞ்சுட்டுவான்னு பார்க்கிறேன்.."

"குரு ப்ளீஸ் முதலில் உட்காரு அப்புறமா பேசலாம்.."

"நான் பேச வரல நித்யஸ்ரீ உன் மனசுல என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்கிற அத முதல்ல சொல்லு அத தெரிஞ்சுட்டு போக தான் வந்திருக்கிறேன்."

"நீயா வந்து பேசுறே... அப்புறம் நீயே மூஞ்சிய தூக்கிட்டு போற… கல்யாணத்துக்கு வந்த சரி.. ஏன் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போன அதுக்கு முதல்ல பதில் சொல்லு."

"இங்க ஆபீஸ்ல வேலை வந்துருச்சு குரு அதனாலதான் கிளம்பி வர வேண்டியது ஆயிடுச்சு.நீ பிஸியா இருந்த உன்னை தேடினேன் ..என் கண்களுக்கு தென்படாத அதனாலதான்".

"சும்மா கதை சொல்லாத நித்யஸ்ரீ எனக்கு நல்லா தெரியும். நீ ஏன் என்னை விட்டு விலகி போற அதுக்கு பதில் சொல்லு.."

"முன்னமே நிறைய தடவை உன்கிட்ட சொல்லிட்டேன் குரு.. ஒவ்வொரு தடவையும் உன்கிட்ட தனித்தனியா சொல்லிக்கிட்டு இருக்கணுமா.முதல் முறை சொன்னது தான் இப்பவும் சொல்றேன் நீ நினைக்கறது எதுவுமே நடக்காது.அப்படிங்கிறப்போ திரும்ப திரும்ப எதுக்காக நீ என்கிட்ட வந்து நிக்குற.."

"எங்க என்ன பாத்து என்னோட கண்ணை பார்த்து சொல்லு...நான் ஆசைப்படுற மாதிரி உன் மனசுலயும் எந்த ஒரு செகண்ட்ல கூட தோணினது இல்லையா என்ன..சொல்லு உனக்கு தோனலையா இல்லைன்னு சொல்லு இந்த நிமிஷம் நான் வெளியே போயிடறேன் அதற்கு பிறகு உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் நீ இருக்கிற திசைக்கே கூட வரமாட்டேன் ஐ ப்ராமிஸ்…"

"இல்ல இல்ல இல்ல அது மாதிரி என்னைக்கும் நான் கற்பனை கூட பண்ணி பார்த்தது கிடையாது .எனக்கு எதுவுமே தோண மாட்டேங்குது போதுமா இன்னும் ஏதாவது உனக்கு விளக்கம் வேணுமா..நீ மொதல்ல இங்க இருந்து போ குரு என்ன டென்ஷன் பண்ணாத.."

"யாரடி யாரு யாரு... யாரு டென்ஷன் பண்ணறது இந்த நிமிஷம் வரைக்கும் என்ன உயிரோட சாகடித்துக் கொண்டு இருக்கிறது நீ மட்டும் தான்" என்று கோபமாக அவளுக்கு அருகில் சென்றவன்..சற்றும் யோசிக்காமல் அவளது ஒரு கையை பிடித்து இழுத்து தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.

"என்ன உயிரோட கொன்னுடாதே நித்யஸ்ரீ .என்ன பைத்தியக்காரன் ஆக்கிடாதே "என்று கூறியபடியே அவளது தோளில் சாய்ந்து கொண்டான்.

இவன் பேசப்பேச அவளது கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது அது அவளது தோளில் துளியாய் விழ இன்னும் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.

" நித்யஸ்ரீ இனிமே இத பத்தி யோசிக்க வேண்டாம்.நாளைக்கு என்ன நடக்கிறது யாருக்குமே தெரியாது .நம்மளோட ஆசைகள் எல்லாத்தையுமே எதிர்காலத்தோட கையில் கொடுத்திடலாம் நடக்கிறது நடக்கட்டும்..

கொஞ்ச நாளைக்கு நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் நீ நிம்மதியா இரு நீ அழுவது என்னால பார்க்க முடியாது.

உன் கண்ணீரை பாக்க நான் வரலை.. இனிமே இதை பற்றி பேச மாட்டேன் ..ஏன் நீபுரிஞ்சிக்க மாட்டேங்கற எனக்கு தெரியல ஆனால் கட்டாயம் ஒரு நாள் நீ புரிஞ்சுக்கவ... அன்றைக்கு நீயே என்ன தேடி வருவ.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு இனிமே இப்ப மட்டும் இல்ல எப்பவுமே உன்னோட கண்களில் பட மாட்டேன்" என்று சொல்லி விட்டு வேகமாக வெளியேறினான் குரு.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”