காதல்_26

Post Reply
Rajeswari.d
Moderators
Posts: 29
Joined: Wed Jun 17, 2020 11:35 am
Been thanked: 2 times

காதல்_26

Post by Rajeswari.d »

26
கதிர் அண்ணா சப்ரைஸ் எனக்கு… நான் இன்றைக்கு உங்களை இங்கே எதிர்பார்க்கவே இல்ல ஆச்சரியமா இருக்கு உங்க தம்பி எப்படி வியாபாரம் செய்கிறான் என்று பார்க்க வந்தீங்களா…

"குடோனில் எல்லாம் கரெக்டா இறக்கி வைத்து அதெல்லாம் கரெக்டா மெயின்டெய்ன் பண்ணுறது எப்படி? கடையை பார்த்துக் கொண்டிருக்கிற.. இதையெல்லாம் பார்த்துட்டு வர சொல்லி உன்னோட அப்பா கேட்டாங்க அதுதான் இன்றைக்கு நேரா இங்க வந்துட்டேன்.."

"எப்படினா நான் பாஸ் ஆவேனா.. உங்கள் அளவுக்கு இல்லாட்டி கூட ஓரளவுக்கு ஒகே தான.."

"நூத்துக்கு நூறு மார்க்கு தரலாம் குரு அவ்வளவு அழகா மெயின்டன் பண்ணுற வேலை செய்யற ஒவ்வொருதரையும் அவ்வளவு அழகா வேலை வாங்கற… எனக்கு உன்னை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.."

"ரெண்டு வருஷம் தேவையில்லாம பெங்களூர்ல உன்னோட திறமையை வீணாக்கிட்டனு தோணுது குரு"..

"அண்ணா இதெல்லாம் ஓவர் பாராட்டு ...அப்படியெல்லாம் கிடையாது.ஆறு மாதம் டிரைவிங் எடுத்து இருக்கறேனே...நீங்க எல்லாம் என்ன செய்யறீங்க எப்படி வேலை செய்யறீங்க கூட இருந்து பார்த்ததுக்கு இந்த அளவு கூட நான் வேலை செய்யாட்டி அப்புறம் நான் படிச்ச படிப்புக்கு என்ன மரியாதை.."

"எல்லாத்துக்கும் திறமைன்னு ஒன்னு இருக்கு குரு அது உன்கிட்ட நிறைய இருக்குது. அத நீ ஒத்துகிட்டு தான் ஆகணும். நான் வீட்ல போய் அப்பாகிட்ட பெரியப்பாகிட்ட எல்லார்கிட்டயும் சொல்லப்போறேன் குரு அவ்வளவு அழகாக வேலை செய்யறான் அப்படினு…"

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நல்ல மாதிரி போயிட்டு இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதும் .ரொம்ப அதிகமா எல்லாம் எதுவும் சொல்லத் தேவையில்லை "என்று பேசியபடி இரவு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வீட்டுக்கும் பொள்ளாச்சிக்கும் ரொம்ப தூரம் இல்லையா குரு. காலையில் அங்க இருந்து அவசர அவசரமா போயிட்டு திரும்ப மறுபடியும் வீட்டுக்கு வர்றது ரொம்ப கஷ்டமா இருக்குதா.."

"அப்படியெல்லாம் எதுவும் இல்ல ணா இதுதான் ரொட்டின்கிற மாதிரி ஆகிடுச்சு..இப்ப பழகிடுச்சு பெருசா எந்த கஷ்டமும் தெரியல ஒருவேளை அப்பா மாதிரி வயதாகும்போது தோணுமா என்னவோ.."

இன்று டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் கொஞ்சம் அதிகமாக வேலை இருந்ததினால் சற்று லேட்டாக கடையை அடைத்துவிட்டு வந்திருந்தனர்.

இப்போது 11 மணியைத் தாண்டியிருந்தது.வண்டியில் ஏறிய உடனேயே வீட்டிற்கு அழைத்து கூறியிருந்தான்.

" அப்பா இங்க கொஞ்சம் கடையில வேலை அதிகமா இருந்தது கஸ்டமர் நிறைய பேர் வந்து கிட்டு இருந்தாங்க அதனால கடையை அடைக்க லேட் ஆகிடுச்சு இனிமே தான் இரண்டு பேரும் புறப்பட்டு வரணும் லேட்டாகிடுச்சுன்னு பதட்டப்பட வேண்டாம்" என்று கூறியிருந்தான்.

போனில் அழைத்து சொல்லியதால் வேகமாக எல்லாம் வரவில்லை நிதானமான வேகத்தோடு இருவருமே மாறி மாறி பேசியபடி வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.

அதே நேரம் அங்கே நித்யஸ்ரீ தன் தாயாரிடம் "அம்மா" என்று கத்திக்கொண்டு அருகில் சென்று இருந்தாள். .

தாயார் மயங்கிக் கிடப்பது நன்றாக தெரிந்தது வேகமாக அருகில் இருந்த ஜக்கில் இருந்து தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்து பார்த்தாள்.

எந்த அசைவும் இருக்கவில்லை ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தார் ."அம்மா அம்மா "என்று வேகமாக கண்ணத்தில் தட்டிப்பார்த்தாள். என்ன செய்வது என்று எதுவுமே அவளுக்கு புரியவில்லை.

அழுகை மட்டுமே பிரதானமாக வந்து கொண்டிருந்தது. வேகவேகமாக மறுபடியும் தன் தாயாரை அழைக்க எந்த அசைவும் இல்லை முதல் முதலாக பயம் தோன்ற ஆரம்பித்தது நித்யஸ்ரீக்கு..

பயம் அழுகை என்று மாறி மாறி போட்டி போட என்ன செய்வது என்று புரியாமல் வேகமாக தன்னுடைய மொபைலை எடுத்தவள் யாரை அழைப்பது என்று தெரியாமலேயே குருவின் நம்பருக்கு டயல் செய்து இருந்தாள்.

காரில் கதிர் அண்ணாவோடு பேசிக் கொண்டு வந்திருந்த குரு ..தன்னுடைய வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தயவன் உள்ளே சென்றான்.

இவனுக்காக அங்கே வீட்டில் அனைவருமே காத்திருந்தனர் அவர்களோடு சற்று நேரம் அமர்ந்து பேச ஆரம்பித்திருந்தான்.

கதிர் குருவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருக்க …

"அண்ணா ஓவரா எல்லாம் சொல்லாதீங்க' என்று சொல்ல…

" இல்ல அப்படி எல்லாம் எதுவும் இல்லை.உண்மையை தான் சொல்லறேன் பா "என்று கூறினான்.

"அண்ணா ஓவரா சொல்றான் நம்பாதிங்க பா"

"இவன் சும்மா சொல்றான் பா அங்கே அவ்வளவு பொறுப்பா நடந்துக்கறான். பார்க்கும் போது அவ்வளவு நல்லா இருக்குது இவனுக்கு நம்மளோட உதவி எல்லாம் தேவையே இல்ல அவனே பாத்துக்குவான்."

இப்படியாக பேசிக்கொண்டிருக்கும் போது தான் நித்யஸ்ரீயிடமிருந்து குருவிற்கு அழைப்பு வந்தது..

நித்யஸ்ரீயின் நம்பரில் இருந்து அழைப்பு வரவும் வேகமாக போனை அட்டென்ட் செய்தான்.

முதலில் கேட்டது இதைத்தான்…"நித்யஸ்ரீ சொல்லு அங்க என்ன பிரச்சனை.. இப்போ எங்க இருக்கிற" இன்று வேகமாக கேட்டான்.

"நான் வீட்ல இருக்கிறேன் குரு அம்மாவுக்கு... அம்மா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க... எனக்கு என்ன பண்ணனும்னு தெரியலை.". சற்று அழுகையோடு அவளது குரல் அவனது காதருகே வந்து விழுந்தது.

"எதுவும் இருக்காது நீ பயப்படாத.. நான் இன்னும் பத்து நிமிஷத்துல அங்க வந்து விடுவேன்" என்று சொல்லி விட்டு போனை வைத்தான்.

வீட்டில் இருந்த அனைவரிடமும்மே எதுவும் கூறாமல் வேகமாக கார் சாவியை எடுத்துக்கொண்டு ஓடினான் குரு.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் இவளது வீட்டு வாசலில் வந்து வண்டியை நிறுத்தியவன் வேகமாக உள்ளே சென்று இருந்தான்..

ஏற்கனவே இவனுக்காக வாசலில் காத்திருந்த நித்யஸ்ரீ வேகமாக அழைத்துக் கொண்டு தன் தாயாருக்கு அருகே செல்ல.. "தண்ணி தெளிச்சு பார்த்தியா ஏதாவது ஆசைவு தெரிந்ததா.."

"கூப்பிட்டா லேசா சத்தம் தராங்க... ஆனா கண்ண முழிச்சு பார்க்க மாட்டேங்குறாங்க…"

"பயப்படாத அவங்களுக்கு எதுவும் இருக்காது நம்ம டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் விடலாமா.."

"ம்...சரி..குரு.."என்று பதில் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவனுடைய தாயாருக்கு அருகே குரு சென்றிருந்தான்.

"அம்மா அம்மா" என்று அழைக்க எந்த அசைவும் அவரிடத்தில் இருந்து வரவில்லை..

"நேரத்தை கடந்த வேண்டாம்.அம்மாவை நான் தூக்கிட்டு வர்றேன்..சீக்கிரமா காரோட பின்னாடி கதவை ஓப்பன் பண்ணி வைய்" என்றபடி யோசிக்காமல் அவருடைய தாயார் தன்னுடைய கைகளில் தூக்கிக் கொண்டான்..

இது எல்லாமே அரை மயக்க நிலையிலும் கூட லஷ்மிக்கு புரிந்திருந்தது.

வேகமாக அருகில் இருந்து பெரிய ஹாஸ்பிடல் ஒன்றிற்கு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் குரு.

நித்யஸ்ரீ அழுது கொண்டிருக்க அவளுக்கு ஆறுதலாக அவ்வப்போது குரல் கொடுத்துக் கொண்டிருந்தான்.

"ஒன்னும் இருக்காது நித்து..காலையிலிருந்து சாப்பிடலைன்னு சொன்ன இல்லையா சுகர் லேவெல் ஏதாவது கொஞ்சம் கீழே போய் இருக்கலாம் அதனால் இந்த மயக்கம் வந்து இருக்கலாம் நீ பயப்படாத.."

அவளுடைய அழுகை ஒவ்வொன்றுமே குருவை ஒரு மாதிரியாக பாதிக்க அவனுடைய குரல் கூட கரகரத்து ஒலித்தது.

அடுத்த சில நிமிடங்களிலேயே ஹாஸ்பிடலுக்கு வண்டி செலுத்தியிருந்தான் வேகமாக லட்சுமிக்கு தேவையான முதல் உதவியைச் செய்ய ஆரம்பித்திருந்தனர்.

பார்த்த சில நிமிடங்களிலேயே சொல்லிவிட்டனர்.. லட்சுமிக்கு பிபி சற்று அதிகமாக இருக்கிறது என்று..

வேகமாக அதற்குரிய சிகிச்சையை தொடங்கியிருந்தனர்..கொஞ்சம் லேட் ஆக கூட்டிட்டு வந்து இருந்தா கூட அட்டாக் மாதிரி வேற ஏதாவது பிரச்சினையில் இழுத்து வைத்திருக்கும்..சரியான நேரத்துக்கு அழைச்சுட்டு வந்துட்டீங்க என்று தலைமை மருத்துவர் இவளிடம் கூறினார்.

கேட்ட நேரத்தில் இருந்து இன்னும் அழுகை வர தேம்பிக் கொண்டிருந்தாள் நித்யஸ்ரீ.

"நித்யஸ்ரீ அழக்கூடாது அதுதான் சரியான நேரத்திற்கு இங்கே அழைச்சிட்டு வந்து விட்டோம் இல்லையா அம்மாவுக்கு எதுவும் ஆகாது.."

"அப்பாவுக்கு போன்ல சொன்னியா..வழக்கமா அப்பா வீட்ல தானே இருப்பாங்க எங்க போயிருக்கிறார்கள்.. "பேச்சை மாற்றக் வேண்டி இப்படி கேட்டான் குரு.

"அண்ணி வீட்டுக்கு போய் இருக்கிறாங்க பாப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல பார்த்துட்டு வரேன்னு போனாங்க.. சட்டுனு எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல.. யாருக்குமே தகவல் சொல்லல.. அம்மாவுக்கு இப்படி ஆகவும் என்ன பண்றதுன்னு அந்த நிமிஷம் எனக்கு தெரியலை உன்னோட ஞாபகம் தான் முதலில் வந்தது நீ இங்க இருப்பியா.. இல்லையா எதுவுமே தெரியாது உனக்கு ஃபோன் பண்ணிட்டேன்."..

"பரவாயில்ல அத பத்தி இப்ப யோசிக்க வேண்டாம் முதல்ல உன்னோட அப்பாவுக்கு தகவல் சொல்லு...பயப்பட எதுவுமே இல்ல காலையில வந்தா போதுன்னு சொல்லு புரியுதா அவசர அவசரமா இந்த ராத்திரி நேரத்தில் புறப்பட்டு வர போறாங்க.."

சரி என்று சொன்னவள்... தன் தந்தைக்கு அழைப்பு விடுக்க இப்போதும் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே அழுகை முகத்தோடு நின்றிருந்தாள்.

"போனை குடு நானே அப்பாகிட்ட சொல்லிடறேன்" என்று வாங்கியவன் நம்பரில் ரீங் போய்க்கொண்டிருக்க நித்யஸ்ரீயின் தந்தை எடுக்கவும்…

"அங்கிள் குரு பேசுறேன் நித்யஸ்ரீ கூட படிச்சவன்.."

"சொல்லு தம்பி என்ன விஷயம் பா.. நித்யஸ்ரீ நம்பரிலிருந்து கூப்பிட்டுட்டு இருக்கிற.."

"ஆன்ட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை எனக்கு போன் பண்ணி அழைத்து இருந்தா... நாங்க ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு வந்து இருக்கிறோம் பயப்பட எதுவுமில்லை..

ஹாஸ்பிடல்ல தான் இருக்கிறோம்.. லேசா பிபி இருக்குன்னு அட்மிட் பண்ணி இருக்கிறார்கள். சாரி ஆங்கிள் நித்துவால பேச முடியல அழுதுட்டு இருக்கிறா.."

"எந்த ஹாஸ்பிடல் "என்று கேட்டவர்
உடனே நான் புறப்படறேன் நான் வரும் வரைக்கும் கொஞ்சம் பார்த்துக்கோ ப்பா" என்று கூறினார்.

"நைட் நேரத்துல வேண்டாம் காலையில வந்தால் கூட போதும் பயப்பட எதுவும் இல்லை என்று டாக்டர் சொல்லி இருக்கிறார்கள் ஆங்கிள்"..

"டிரைவர் இருக்கிறாங்க தம்பி வந்துடறேன்" என்று போனை வைத்தார்.

அவர் வந்து சேரும் வரையிலும் மட்டுமல்ல அடுத்த நாள் காலை வரையிலுமே நித்யஸ்ரீ அருகிலேயே இருந்தான் குரு.

நித்யஸ்ரீயின் தந்தை வந்த உடனேயே இவனை பார்க்கவும் தெரிந்துவிட்டது. முன்பும் இரண்டொரு முறை இவனை பார்த்திருக்கிறார். இவனோடு இயல்பாக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து இருந்தார்.

"என்ன செய்ற தம்பி இப்போ என்ன வேலை செய்றீங்க எங்க இருக்கிறீங்க" என்று பேச்சு கொடுக்க ஆரம்பித்திருந்தார்.

தன்னுடைய தாய் தந்தையர் பெயரை சொன்னவன்" டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருக்குதுங்க அதை பாத்துக்கிட்டு இருக்குறேன். வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல நித்துகிட்ட போன் வரவும் உடனே புறப்பட்டு வந்திட்டேன் வந்தும் கூட நல்லது தான் இங்கே உடனே கூட்டிட்டு வந்துட்டோம்.."

நன்றி பா..என்று கூறினார்.

"ஆங்கிள் அதெல்லாம் தேவை இல்லை. இது என்னோட கடமை...."

லஷ்மிக்கு பெரியதாக பிரச்சினை எதுவும் இருக்கவில்லை அடுத்த நாளே வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறியிருந்தனர்.

நிறைய டென்ஷன் எல்லாம் பட வேண்டாம் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க சொல்லுங்க கரெக்டா நேரத்துக்கு சாப்பிட சொல்லுங்க மாத்திரைகள் எழுதித் தரேன். கொஞ்ச நாளைக்கு போட வேண்டியதா இருக்கும் என்று தேவையான மாத்திரைகளை எழுதிக் கொடுத்து அனுப்பி இருந்தனர்.

அடுத்த சில நாட்கள் தொடர்ந்து பரபரப்பாக இருந்தாலும் அதற்கு பிறகு சற்று நிலைமை சீராக தொடங்கியிருந்தது.

பூர்ணிமா தன்னுடைய குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்து வந்து இருந்தாள்.இப்போது லட்சுமி கூட சற்றுத் தேறி இருந்தார்.



Post Reply

Return to “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி”