Page 1 of 1

நிலவே உந்தன் நிழல் நானே- கதைவிமர்சனம் by சேதுபதி விசுவநாதன்

Posted: Sun Mar 06, 2022 1:51 pm
by Madhumathi Bharath
#Review
#கதைவிமர்சனம்

இருமுனைபேனா போட்டியில் கலந்து கொண்டதற்கு பரிசாக கிடைத்த புத்தகம். மிக தாமதமாக படித்ததற்கு‌ மன்னிக்கவும். இன்றைய பேருந்து பயணத்தை சிறப்பாக மாற்றி நூல்.

புத்தகத்தின் பெயர்: நிலவே உந்தன் நிழல் நானே

ஆசிரியர்: மதுமதி பரத்

நாய்க்குட்டிளோடு கொஞ்சலும் அம்மாவின் திட்டும் கலந்தபடி தொடங்குகிறது மிதுலாவின் அறிமுகம்.

கதை முழுவதும் நம்மோடு பிணைந்து கொள்கிறாள் மிதுலா.

அழகாக செல்லும் கதையில் எதிர்பாராத திருப்பத்தை வைத்து சில நிமிடங்கள் நம்மை பதற வைத்தாலும் பிறகு ஆசுவாசப்படுத்துகிறார்‌ ஆசிரியர்.

கொடுமைக்காரனாகவும் முரடனாகவும் அறிமுகம் ஆகும் நம்ம கதையின் ஹீரோ வசீகரன் பல இடங்களில் நம்மை ரசிக்க வைக்கிறான்.

சுட்டி பெண் மிதுலா எதிர்பாராத விதமாக வசீகரனோடு திருமண பந்தத்தில் இணைந்து விட இருவருக்குமான நிகழ்வாக கதை முழுவதும் பயணிக்கிறது.

திருமணத்திற்கு பிறகு பிரிந்து கணவர் வீட்டுக்கு செல்லும் பெண் மற்றும் தாயின் உணர்வுகளை வெளிப்படுத்தும் போதும் நமக்கும் மனம் கனக்கிறது.

கோபம் சண்டை ஏக்கம் குழப்பம் அன்பு காதல் வெளிப்பாடு என்று ஒவ்வொரு நகர்வும் சிறப்பாக இருந்தது.

ரொமான்ஸ் பகுதி நம்மையும் ரசிக்க வைத்து புன்னகைக்க வைக்கிறது. (18+ எதிர்பார்த்து ஏமாந்து போகாதீர்கள்)

புரியாத புதிராய் இருந்த வசீகரனோடு பிரியும் காட்சியும் அவனின் பரிதவிப்பும் கூடுதல் பலம் கதைக்கு.

தெய்வானை காவேரி கங்காதரன் தங்கள் இடங்களில் சிறப்பாக இருக்கிறார்கள்.

சக்தி வர்ஷினி காதல் பகுதிகள் இன்னும் சற்று வைத்திருக்கலாம் என்று தோன்றியது.

நிவி வந்து செல்லும் பகுதி வேறு கோணத்தில் நம்மை சிந்திக்க வைக்கிறது.

இறுதியில் வைத்த டிவிஸ்ட் துளியும் எதிர்பார்க்காத ஒன்று.

ஈகோ என்ற ஒற்றை கரு அழகாக வடிவமைத்து உள்ளார்.
புருஷர்ர்ர்ர் என்று வரும் பகுதிகள் ரசிக்கும் படியாக உள்ளது.

இன்னும் பல கதைகள் எழுத ஆசிரியர் மதுமதி பரத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

*******

கடைசியில என்னையும் காதல் கதை படிக்க வச்சுட்டீங்களே அக்கா.