Page 1 of 1

மன்னவனின் மனையாளி

Posted: Mon Mar 01, 2021 8:50 pm
by முத்து சரஸ்வதி
கணவனின் காதலை மட்டுமே எதிர்பார்க்கும் அப்பாவி மனைவியின் மனவோட்டம் - சிறுபார்வை

வானுயுரம் எண்ணினாலும் வானத்தில்
பறந்தாலும் கணவனே உன் கைபிடித்து நடக்க ஆசை

மிக சிறந்த விருது பிரதம மந்திரி கையால் கிடைத்தாலும் என் பிரதான நாயகனான உன் கையால் வாங்கும் ஆசை

மேதை என்று பிறரால் அழைக்கப்படுவதைக் காட்டிலும் உன்னையன்றி ஒன்றும் அறியாத பேதையாக இருக்க ஆசை

புத்திசாலியாக இருந்து தனித்திருப்பதை காட்டிலும் உன்னை தவிர வேறொன்றும் அறியாதாவளாக இருக்க ஆசை

உன்னை பெற்றவள் பெண் எனினும் உன்னுடன் பிறந்தவள் பெண் எனினும் உனக்கு பிறந்தவள் பெண் எனினும் அவர்களிடையே நானே உனது இதயத்தில் முதலிடம் வகிக்க ஆசை

எக்காயம் நேரினும்
எவ்வளவு உடல் சோர்ந்தாலும் மருந்தின்றி உன் அன்பு வார்த்தையை மட்டுமே கேட்க ஆசை

எதிலும் எப்பொழுதும் உன் இதயத்தில் நானே முதலிடம் வகிக்க ஆசை

நேரம் போவது தெரியாமல் உன்னுடன் என் பள்ளி நினைவுகளை பேசிட ஆசை

நான் கூறும் சிறு விடயங்களும் உன் நினைவினில் நீங்கா இடம் பிடிக்க ஆசை

எனக்கும் ஓர் ஆசை உண்டு அதை நீ கவனிக்க ஆசை

மன்னவன் மார்பு என்று உரிமையாளர் துயில் கொள்ள ஆசை

உன்னை சார்ந்து நிழலாக வாழவே ஆசை .. அதன் சுகம் அனுபவிப்பர்களுக்கே தெரியும்

நான் பெறாத ஆண்மகனும் என்னுடன் பழகும் ஒரே ஆண் தோழனும் நீயே

என்னை பெற்றவர்களையும் நான் பெற்றெடுத்த மலர்களையும் விட மன்னவனே உன்னையே அதிகம்
விரும்பி கிறேன்

பள்ளியறை , பூஜையறை, சமையல் அறையிலும் என் நாயகன் நலம் ஒன்றே பெரிதாக தெரிகின்றது . நான் உன்னிடத்தில் அதே முதலிடம் எதிர்பார்ப்பது தவறு ஆகுமா ..

ஊரும் சாட்சியங்களும் அனைத்து ஆதாரங்களும் எனக்கு எதிராக இருப்பினும் என்னவளை நன்கு அறிந்தவன் நான் மட்டுமே என்று நீ உரைக்க ஆசை
.

ஆணாதிக்க சார்ந்த எண்ணம் என்று யார் உரைத்தாலும் நான் தொட்டும் பழகும் மாமன் இவன் ஒருவனே என்று உரைத்திட ஆசை

என்னாளும் என்னுள் உறையும் எண்ணம் நீயே உனது சிறு
வேறுபாடுகளும் அதனுடன் கூடிய மெளனமும் என் இறப்புக்கு சமானம்

என் மணாளனின் மனைவியாக இருப்பதில் பெறுமை கொள்கின்றேன் .


.





.

Re: கணவனின் காதலை மட்டுமே எதிர்பார்க்கும் அப்பாவி மனைவியின் மனவோட்டம் -சிறுபார்வை

Posted: Fri Mar 19, 2021 8:07 pm
by Madhumathi Bharath
ஒவ்வொரு பெண்களின் மனதில் இருக்கும் ஆசைகளை அழகான வார்த்தைகளாய் வடித்து இருக்கீங்க... வாழ்த்துகள்.

Re: கணவனின் காதலை மட்டுமே எதிர்பார்க்கும் அப்பாவி மனைவியின் மனவோட்டம் -சிறுபார்வை

Posted: Thu Apr 01, 2021 6:35 pm
by முத்து சரஸ்வதி
Thank you so much Akka