Page 1 of 1

அந்த இரவினில் ....

Posted: Fri Apr 30, 2021 12:39 am
by முத்து சரஸ்வதி
மாம் நான் என்ன சின்ன பிள்ளையா ?!. இன்னும் என்னைய நைட்டு தனியா விட்டுட்டு போக இவ்வளவு பயமா உங்களுக்கு ?! - ஆனந்தன்

ஆமாடா இப்போ எனக்குனு இருக்குற ஒரே சந்தோஷம் நீதான்டா .. உனக்கு ஏதாவது ஆச்சுனா என்னால கண்டிப்பா தாங்க முடியாது ..  - லட்சுமி

மாம் பீ கூல் மா .. நான் பத்திரமா இருக்கேன் போதுமா .. நிம்மதியா கல்யாணத்துக்கு போயிட்டு வாங்க .‌

நாரயணன் - லட்சுமி தம்பதிக்கு ஒரே மகன் ஆனந்தன் .. அவன் எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆனந்தன் என்று பெயர் வைத்தனர் .. நாராயணன் ஒரு பேங்க் ஊழியர் . நல்ல மனிதர் ‌‌. . ஆனந்தனின் சிறுவயதிலேயே தவறி விட்டார் அவனின் அப்பா.. சொந்தங்கள் அனைவரும் எங்க நமக்கு பாரமாக வந்து‌ உட்கார்ந்து  விடுவாளோ என்று ஒதுங்கி விட தனி ஆளாக போராடி ஆனந்தனை வளர்த்தார் லட்சுமி .. ஆனந்தன் போன வருடம் தான் கல்லூரி படிப்பை முடித்தான் ‌‌ .. வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறான் ‌‌ ..

ஒரே பையன் என்பதால் லட்சுமியிடம்  ஆனந்தனுக்கு பயங்கர செல்லம்  ‌‌ .. பயங்கர பாசம்.. இதுவரை அவனை தனியா விட்டதில்லை .. ஆனால் இப்போ கணவரின் அக்கா மகளின்  கல்யாணத்திற்கு போக வேண்டியுள்ளது .. போகமல் இருக்கலாம்தான் .‌ ஆனால் மனசு கேட்கவில்லை‌‌ .. அவளை மதித்து முதன் முதலில் அவர்கள்  அழைத்திருக்கிறார்கள்.. போகவில்லை என்றால் புருஷன் பென்சன் வருதுனு திமிரு ‌‌ இனிமே இவ ஒட்டு உறவே வேண்டாம் பழையபடி ஒதுக்கி வைச்சுட்டு போயிடுவாங்க . ‌‌ .‌ நாளைக்கு நம்ம ஆனந்தன் கல்யாணத்துக்கு எல்லாரும் வரணுமே என்று பெற்ற மனது தவித்தது‌‌ ... ஆனந்தனையும் உடன் வருமாறு அழைத்தாள் லட்சுமி .‌ ஆனால் ஆனந்தனுக்கு போக பிடிக்கவில்லை .. போனதும் முத கேள்வி எங்க வேலை பார்க்க தம்பி னு தா கேட்பாங்க ‌‌ .. அதுமட்டுமில்ல அப்பாவோட சாவுக்கு கூட வரல‌.. அவ்ளோ ரோஷ காரங்க வீட்டுக்கு போணுமா னு நீங்க மட்டும் போயிட்டு வாங்க மாம்னு சொல்லிட்டான் ..

அவனை தனியா விட்டு போறதுக்குதான் இவ்ளோ அலப்பறை ..‌ஒருவழியாக பைக்ல போயி அம்மாவ வழியனுப்பிட்டு வந்து கொண்டிருந்தான் ‌ஆனந்தன் ‌‌ ‌‌ .. வரும் வழியில் பிங்க மற்றும் வெள்ளை சுடியில் ஒரு இளம்பெண் நிற்பதை கண்டான்  .. அந்த பெண் லிப்ட் கேட்டு வண்டியை நிறுத்தினாள்..


எங்கம்மா போணும் - ஆனந்தன்‌

சார் என்னோட பஸ்ஸ மிஸ் பண்ணிட்டேன் ‌‌ சார் .. வீட்டிற்கு போணும் ..‌ ரொம்ப நேரமா வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன் எந்த பஸ்ஸும் வரல சார் ‌‌ ..

ஆமா உங்க வீடு எங்க இருக்கு .. - ஆனந்தன் ..

அவளின் வீட்டு அட்ரசை கேட்ட அரவிந்தன் இங்க பாரும்மா மணி இப்போவே பதினோன்று நாற்பது ‌‌ இதுக்கு மேல உங்க வீட்டுக்கு போனா லேட்டாய்டும் ‌‌ ..‌பேசாம 
என்கூட வந்து தங்கிட்டு போமா .. காலையில பஸ்ஸு ஏத்தி விடுறேன் ..


அவள் தயங்கவும் பயப்படா‌த மா.. . எங்க வீட்டுல நானும் அம்மாவும் மட்டும்தான் .. அம்மா‌ இப்போ வெளியூர் போயிருக்காங்க .. நான் மட்டும்தான் இருக்கேன் .. என்னை  நம்பி வரலாம் நீ  ..‌.பயப்படாத மா என்றவாறு அவளை அழைத்தான் ஆனந்தன் ..

பயமா எனக்கா என்றவாறு அவனை நோக்கி ஒரு அலட்சிய பார்வை உதிர்த்து விட்டு ஆனந்தனுடன் அவள் பைக்கில் ஏறி அமர்ந்தாள் அந்த பெண் ..

ஆமா உன் பேரு என்ன‌‌.. - ஆனந்தன் ..

பதிலில்லை அவளிடம் ..

அவன் கேட்கும் எல்லாம் கேள்விகளுக்கும் மெளனமே பதிலாக தந்து கொண்டிருந்தாள் அந்த பெண் ..பைக் மிரர் வழியாக அவளை பார்த்து கொண்டு வந்தான் ஆனந்தன் .. நேரம் ஆக ஆக அவள் முகம் ஜொலித்தது .. இரவு பனிரெண்டை தொடும் பொழுது முழுமதியே வந்தமர்ந்தது போல் இருந்தது அவளின் வதனத்தில்.. அதை கவனித்த படியே வந்தான்ஆனந்தன் .. ஆனால்   தாயின் ஒழுக்கமான வளர்ப்பு முறையால் அவனுள் எந்த சலனங்களும் இல்லை ‌‌ .. மேலும் அவனின் வயது மற்றும் சிறுவயதிலே கொண்ட மன உறுதியால் பயமும் இல்லை ..‌

ஆக அந்த பொண்ணை பார்த்து நம் நாயகனுக்கு பயமும் இல்லை .. ஆசையும் இல்லை .‌ கடமையே கண்ணாயிரமாக வண்டியை ஓட்டியபடியே வந்தான் ஆனந்தன் ..


ஆனால் பாவம் இரவில் கோட்டை மாரியம்மன் தெருவை தாண்டும் பொழுது அவளின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களை கவனிக்க தவறிவிட்டான்‌ ஆனந்தன் .. கவனித்தாலும் பிரம்மை என்றே முடிவு கட்டிருப்பான் ..

ஒருவழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.. 

அந்த ரூம்ல போய் பேஸ் வாஷ் பண்ணிக்கோமா .. என் அம்மா ரூம்தான் அது .‌ என்றவாறே அரவிந்தன் அவனது அறையில் சென்று குளித்துவிட்டு உடைமாற்றி வந்தான் ..

வந்தவன் அடுக்களைக்கு சென்று அம்மா செய்து வைத்திருந்த இட்லி மிளகாய் பொடியை தட்டில் வைத்து சூடா நாலு தோசைகளை வார்த்து அவளுக்கு சாப்பிட கொடுத்தான் ..

பொடி சூப்பரா இருக்கு ‌‌..- அவள்

ஹய்யா .. பாத்தியா நீ பேசிட்ட எங்கம்மாவோட கைவண்ணம் உன்னய பேச வைச்சிருச்சு தங்கச்சி ..  - ஆனந்தன்

என்ன சொன்னீங்க ..

எங்கம்மா செய்யுற சமையல் நல்லா இருக்கும் னு சொன்னேன் .. - ஆனந்தன்

ஹய்யோ அது இல்ல ..என்னய என்ன சொல்லி கூப்பிட்டிங்க ..

தங்கச்சி ன்னு சொன்னேன் என்றான் ஆனந்தன் ..

அவள் கண்கள் கலங்கியது‌‌.. நான் பேருந்தை தவிர விட்ட அந்த  இரவும் இந்த அண்ணனின் குணம்  போல் அந்த அயோக்கியனும் நல்ல மனம் படைத்திருந்தால் இன்று நான் என் கற்பையும் உயிரையும் தவற விட்டிருக்க மாட்டேனே .. நினைக்கும் பொழுதே அவள் கண்கள் சிவந்தது .. நெஞ்சம் துடித்தது ..

என்ன தங்கச்சி பீலிங்ஸா .. என்னை உன் சொந்த அண்ணன் போல நினைச்சுக்கோ .. எப்போ நாளும் இங்க வந்துட்டு போமா  ..

அவள் ம்ம் சரிண்ணா என்று மட்டுமே சொன்னாள் .. அப்பொழுது அவள் கையில் ஒரு கிப்ட் மினுமினுத்தது ..

என்னம்மா அது யாருக்கு கிப்ட் ..

அதுவா அது யாருக்கோ வாங்குனுது பட் நீங்க வைச்சுக்கோங்க ..‌

எப்டிம்மா யாருக்கோ வாங்குன கிப்ட் நான் வைச்சுக்க முடியும் ..

அது சும்மா போஃட்டா பிரேம் தான் அண்ணா . எனக்கு இவ்ளோ ஹெல்ப் பண்றீங்க .. உங்களுக்கு ஏதாவது கொடுக்கணும்னு தோணுச்சு .. பட் இப்போ ஓபன் பண்ணாதீங்க .. ப்ளீஸ் நான் இல்லாதப்ப ஓபன் பண்ணுங்க ப்ளீஸ் அண்ணா .


ஓகே கூல் மா  ‌‌ நான் இப்போ ஓபன் பண்ணல போதுமா‌‌ ....ரொம்ப லேட் நைட் ஆயிடுச்சு டையர்டா இருக்கு .. தூங்க போறேன்‌..‌நீ எங்கம்மா ரூம்ல படுத்துக்கோ தங்கச்சி குட்நைட் .. என்றவாறே  அவன் அறையை நோக்கி நடந்தான் ஆனந்தன் ..

அந்த கிப்ட் தான் அவளின் ஆயுதமே .. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இரவு பதினொன்று மணிக்கு மேல் அந்த இடத்தில் இருந்து கொண்டு அவள்   லிப்ட் கேட்டு நிற்பதும் , இவளின் அழகில் மயங்கி ரோட்டில் போகிறவர்கள் லிப்ட் கொடுப்பதும் வாடிக்கையான ஒன்று .. அப்படி வருகிறவர்கள் இவளை கண்ணாலேயே பிடிங்கி திங்க இவள் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்து அந்த போஃட்டோ பிரேமை கிப்டாக  கொடுப்பாள் .. அவர்களும் அசடு வழிய அந்த கிப்டை  பிரித்து பார்க்கும் பொழுது அவர்கள் சர்வநாடியும் நொடிங்கி போக ஒரே முத்தத்தில் ஓட்டை போட்டு இரத்தத்தை உறிஞ்சுவாள் அந்த அழகிய யுவதி ..‌ இதோடு 99 கொலைகள் இல்லை சம்ஹாரம் பண்ணியாச்சு .. அரவிந்தனோடு சேர்த்தால் வெற்றிகரமாக சதம்  அடித்து விடலாம் .

ஆனால் ஆனந்தனை அவளால் கொல்ல இயலவில்லை ... அவளின் கண்களை தவிர வேறு எங்கும் பார்க்காத குணமா இல்லை , அவனின் மனதை கவிழ்க்கவே வேண்டுமென்றே உள்ளாடையை தெரியும் படி விட்ட பொழுது தங்கச்சி டிரஸ் அட்ஜஸ் பண்ணிக்கோமா என்று நாசுக்காக கூறிய விதமா , ஏதோ ஒன்று ஆனந்தனை கொல்ல விடாமல் தடுத்திருந்தது அவளிடம் இருந்து  ..மொத்தத்தில் அவளை வெறும்  உடலாக அல்லாமல்  மனிதியாக பார்த்தவன் அவன் ஒருவனே... 

அவள்  தூங்காமல்  ஹாலில் இங்கும் அங்கும் நடமாடி கொண்டிருந்தாள் ..

அப்பொழுது தூரத்தில் நாய் ஊளையிடும் சத்தம் கேட்டது .. கனமழை வேறு பெய்ய தொடங்கியது ..பலத்த காற்று அதை தொடர்ந்து பெரும் நிசப்தம் .. ஆனால் ஆனந்தனோ செம்ம கிளைமேட் ‌‌ நல்லா தூங்கலாம் ஜாலியா ‌‌ ‌‌என்றவாறு மூடிய ஜன்னலை திறந்து விட்டு விட்டத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.. அப்பொழுதுதான் அவனின் ரூமில் அவனுக்கருகில் உள்ள நிலைகண்ணாடியை கவனித்தான் .. அந்த அழகான யுவதி தோட்டத்தில் நின்றவாறு விட்டத்தை பார்த்து கொண்டிருந்தாள் ..

இவள ரூம்ல தூங்க சொன்னா இங்க என்ன பண்றா ‌‌ . ஆமா ஏன் வாய் நிறைய லிப்ஸ்டிக் போட்டிருக்கு இந்த பொண்ணு .. எஏ லிப்ஸிடிக் இல்ல ரத்த ரத்தமா ஆஹா மாட்டிகிட்டோம் போல ‌‌ .. இன்னும் நான் ஒண்ணுமே பாக்கலேயே ஆண்டவா.. இந்த பேச்சுலருக்கு ஏன்‌ இந்த  சோதனை‌ கடவுளே காப்பாத்துன்னு மனசு எங்க எங்கையோ சுத்த , அதுக்குள்ள அந்த பொண்ணு அங்க இருந்து மாயமா மறைஞ்சுருச்சு .‌

அப்டியே விட்டிருக்கலாம் தான் .‌ ஆனா , அவனோ ஆர்வத்தில் கதவை திறந்து வெளியே வர அங்கே அதே லிப்ஸிடிக் முகத்தோடு அதாவது உதடுகளில் இருந்து ரத்தம் வடிய இவனையே முறைத்து பார்த்து கொண்டிருந்தாள் அந்த பெண் ..  என்ன அண்ணா இந்த தங்கச்சி யாருனு தெரிஞ்சுருச்சு போல என்று கத்தினாள்..

அவள் குரலில் இருந்த மாறுபாட்டை உணர்ந்தவன் அப்போ வீட்டை விட்டு வேகமா ஓடினவன்தான்‌ நேரா நிக்கமா ஓடிட்டே வந்து கடைசியில ஐயன் கோயிலில் வாசலிலே ஐயனே னு கத்திகிட்டே விழுந்துட்டான் .‌ அப்புறம் என்ன ஆச்சு ன்னு ஒண்ணுமே நியாபகம் இல்ல சாருக்கு ..


ஆனந்தா ஆனந்தா எந்திரிடா , என்றவாறே லட்சுமி அவனை எழுப்பினாள் .. அடச்சே கனவா .. ஒரு கணம் அம்மாகிட்ட இந்த கனவை சொல்லலாமா வேண்டாமா என்று நினைத்தவன் அந்த தப்ப மட்டும் பண்ண வேண்டாம்டா ஆனந்தா ..‌அப்புறம் இந்த அம்மா  50% ஓட்டியே சாகடிக்கும் மீதி 50% அட்வைஷ் இலவசமா கிடைக்கும் .. ஸோ  சொல்ல வேண்டாம்னு முடிவு பண்ணிட்டு என்னம்மா இரண்டு நாள் இருக்க போறேன்னு சொல்லிட்டு ஒரே நாள்ல வந்துட்டீங்க ..

ஆமாடா ஆனந்தா உன் நியாபகமாவே இருந்துச்சு டா அங்க  .. அவங்க எல்லாரும் என்னய தப்பா நினைச்சாலும் பரவாயில்லை என் பிள்ளை தான் எனக்கு முக்கியம் னு காலைல முகூர்த்தம் முடிஞ்சதும் சாப்பிட்டு கிளம்பிட்டேன் டா ‌ .. சரி போயி குளிச்சுட்டு வாடா .. அதுக்குள்ள சமையல பண்றேன் என்றவாறே அடுக்களைக்குள் நுழைந்தாள் லட்சுமி ‌‌ ..

அன்னிக்கு சொந்தம் முக்கியம் னு டயலாக் பேசுன அம்மாவ இது ‌‌ .. தாய்பாசம் எப்டில்லாம் பேச வைக்கு ‌‌ .‌ யூ ஆர் கிரேட் மம்மி .. லவ் யூ லட்சுமி என்று அன்னையை நினைத்து வியந்தவாறே பல் தேய்க்க போனான் ஆனந்தன் ..

அங்கே மேஜையில் ஒரு கிப்ட் பாக்ஸ் உட்கார்ந்து இருந்தது ‌‌ .. வேக வேகமாக அதை பிரிக்க தொடங்கினான் .. அதில் கனவில் வந்த அந்த அழகிய யுவதி ‌சிரித்து கொண்டிருந்தாள் .. அவள் போஃட்டாவிற்கு கீழே செல்வி. பூஜா தோற்றம் 20.10.1996 மறைவு 21.02.2021 போட்டிருந்துச்சு .. 

அதை அதிர்ச்சியுடன் கைகள் நடுங்க உள்ளம் உதற அவன் பார்த்து கொண்டிருக்கையில்  ஒரு லெட்டர் நழுவி கீழே விழுந்தது ... அதை நடுங்கும் கைகளுடன்‌ பிரித்து படித்தான் அரவிந்தன் ‌‌ ..
' டேய் அண்ணா  லவ் யூ டா ' பை பூஜா என்றவாறு ஒரு ரோஜா பூ சொருகி வைக்கப்பட்டிருந்தது ..

நேரே அவன் ஐயன் கோவிலில் உள்ள வாசலில் விழவும் அங்கே இவள் அவனை துரத்தி கொண்டு வரவும் சரியாக இருந்தது .. அப்பொழுது  ஐயனின் கண்ணில் இருந்து வந்த தீஜீவாலை அவளின் ஆன்மாவிற்கு முக்தியை அளித்தது .. ஆம் பூஜா ஐயனின் பாதத்திலே முக்தியடைந்து விட்டாள்.. ஒருவழியாக தனி மனிதியாக இல்லை தனி ஆவியாக அவள் நடத்திய கொலைகள் இல்லை வதங்கள் முடிவுக்கு வந்தது ‌. இதை ஆனந்தன் அறிய வாய்ப்பில்லை என்றாலும் ஐயனாலே நாம் காப்பாற்றபட்டோம் என்று அவன் மனம் நன்கு உணர்ந்தது .. 

அவளின் போஃட்டோ பிரேமே பார்த்து அவன் உதிர்த்த இரண்டு வார்த்தைகள்..

        லவ் யூ டூ டியர் தங்கச்சி ..
                    ஐயனே சரணம் ...
    
                        சுபம்

இது என்னோட‌ முதல் திகில் கதை பிரண்ட்ஸ் .. படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க பிரண்ட்ஸ் ..